கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

570 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமிக்கு ஆயில் தண்டனை

 

 அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார் என்று வீசினார். பலனில்லை. இரண்டாம் சுற்றில் சின்னஞ்சிறு தரமான கற்களைப் பொறுக்கி ஏவினார். ஊஹ¥ம். இலக்கை அவை அடையவில்லை. மூன்றாவது சுற்றில் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து வந்து காருக்கடியில் கொடுத்து நாலா திசைகளிலும் லொட லொட செய்தார். காருக்கடியில் இருந்து ‘உர்ர்ர்’ என்று ஓர் உறுமல் மட்டுமே வந்தது. கை எட்டின மட்டும் விட்டு வாக்கிங்


அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

 

 அப்புசாமி உறிஞ்சிப் பார்த்தார், அட்டைப் பெட்டிகளின் மணத்தை. தூக்கிப் பார்த்தார் கனத்தை. நொந்து கொண்டார் தலை எழுத்தை. வெறுத்தார் மனைவியின் அராஜகத்தை. விரும்பவில்லை அவளுடைய சிக்கனத்தை. ஸ்வீட்டுகளின் நறுமணம் கமகமவென்று அவர் நாசியில் புகுந்து சரளி வாசித்தது. மெட்ரோ வாட்டர் டாங்க் கன்னாபின்னாவென்று கசிவது போல எச்சில் தளும்பி வழிந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பஞ்ச காலத்தில் கேட்டது போல அவர் யாசித்தது, நேசித்தது ஒரே ஒரு ஸ்வீட் பெட்டியை, ஈவிரக்கமில்லாமல் சீதாப்பாட்டி மறுத்து விட்டாள். “நத்திங்


ஒரு ஆக்ரோஷமான மோதல்

 

 சீதா பாட்டிக்கு ரத்தம் கொதித்தது. அப்புசாமியோ அவள் எதிரே அமைதியாக நின்று கை கட்டிக்கொண்டு, “தப்பென்ன?” என்றார். “ஆர் யூ நாட் அஷேம்ட் – முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் போய்ச் சப்பாத்தி சாப்பிட?” “அந்தக் கிழவியைத்தான் எனக்குத் தெரியாதே தவிர, அவள் பேரனை எனக்குத் தெரியுமே. அவன்தான் கையைப் பிடித்து இழுக்காத குறையாக டிபன் சாப்பிட்டுப் போகணும் சார் என்று கட்டாயப்படுத்தினான். சாப்பிட்டேன்.” “வாட் பிஸினஸ் உங்களுக்கு, அந்த வீட்டுப் படி ஏற?” “பூ! பூ பிஸினஸ்தான்.


வளவளா வைரஸ்

 

 “டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி. “சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது. அதைக் குடிக்கிறப்போ உடம்பும், உள்ளமும் தெம்பாயிருக்கு. எப்போ நம்ம உடம்பும் மனசும் தெம்பா இருக்குதோ அப்போது நாம செய்யற காரியமும் நல்ல விதமாக இருக்கும்கிற உண்மையை யார் மறுக்க முடியும்? ஓட்டலிலே கட்டைவிரல் உயரத்துக்கு ஒரு டம்ளர்லே காப்பி தர்ரான். ஆறு ரூபா விலை. வீட்டுக் காப்பின்னா விலை மலிவு. அளவும் அதிகம். வீட்டுக் காப்பிலேயும்


கிராப் மகோத்ஸவம்

 

 “சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அப்புசாமியை எழுப்பினாள், “எழுந்திருங்கள். அவர் வந்திருக்கிறார்…குட் காட்! ஒன் ஆப்டர் ஒன்னாக எத்தனை போர்வை? சீக்கீரம் எழுந்து முகம் கழுவிக்கொண்டு போய் உட்காருங்கள்,” என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமியின் தூக்கமும் துப்பட்டியும் உயிரும் உடம்பும் போல. ஒன்று இல்லையேல், மற்றொன்று இயங்க முடியாது. ஆகவே முனகலுடன் துப்பட்டியை மீண்டும் தேடினார். “ஹி இஸ் வெய்ட்டிங் ஐ ஸே!”


பிரியமான கடிதம்

 

 பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா? சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி


கூழுக்கொரு கும்பிடு

 

 ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள். ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி. விடியற்காலையிலே ஒலிபெருக்கி மூலம் எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, வீரமணி ஜூனியர், மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, தேவி போன்றவர்களின் பக்திப்பாடல்கள் ‘ரொய்ங்ங்ங் ‘ என்று காதில் பாயும். ‘கூழு ஊத்தறோம்’ என்று கையில் ரசீது புத்தகத்துடன் கோஷ்டி கோஷ்டியாக வந்து கொண்டிருப்பார்கள். ‘ஒன்றே அம்மன், ஒருவனே வசூலிப்பவன்’ என்றிருந்தால் பரவாயில்லை, ஒரே அம்மனுக்குப் பற்பல கோஷ்டிகள், பற்பல


வாய்வா? தாய்வா?

 

 அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு. தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர் என்று எங்கோ சென்றது. மீண்டும் வடகிழக்காக அது திரும்பி, கிழமேற்காக மையம் கொண்டது. அப்புசாமிக்கு நன்றாகத் தெரிந்தது, நிச்சயம் அது வாய்வுதான் என்று. கொஞ்ச நாளாக அவர் உடம்புக்குள் ஏதோ ஒரு வாய்வு. மந்திரி மாதிரி அடிக்கடிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தது. ‘கடற்கரைக்கு நான் காற்று வாங்க வந்தால், கூடவே இந்த ‘வாயு’வும் காற்று வாங்க


ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

 

 அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்! பெரிசு! வூட்டிலே சொல்லிகிணு வந்திட்டியாய்யா. சாவு கிராக்கி!’ என்று மாமூல் வாசகங்களைச் சொல்லி ஆட்டோக்காரன் முறைத்தான். இன்ன எண்ணுக்கு இன்ன வாழ்த்துத் தந்தி என்பது போல வாகன ஓட்டிகளுக்குச் சில திட்டுக்கள் உண்டு. அப்புசாமி இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்குத் தானே காத்திருந்தார். என்னென்ன எதிர் வசனம் பேச வேண்டும் என்பதை எல்லாம் முன்கூட்டியே அவரும் செட்டப் செய்து


சீதே ஜே.பி.

 

 “என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன இருந்தாலும் ஒரு கெளரவ மாஜிஸ்திரேட்டோட கணவரில்லையா? புதுப் பெருமையினால் பழைய சினேகிதர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை…” என்று பெருமூச்செறிந்தான் ரசகுண்டு. “என்னது? கெளரவ மாஜிஸ்ட்ரேட்டோட புருஷனா? என்னடாப்பா பேத்தறே?” அப்புசாமி திகைத்தார். “சரிதான், உங்களுக்கே தெரியாதா? பாட்டிக்கு இப்போ கெளரவ மாஜிஸ்திரேட் பதவி கிடைத்திருக்கிறதாமே. பாட்டி உங்களை மதித்து எப்போதாவது, ஏதாவது சொல்லியிருந்தால்தானே தெரியும்? பேப்பர்லே கூடச்