கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

570 கதைகள் கிடைத்துள்ளன.

பின்னல் இழைகள்

 

 சரியாக ராயபுரத்திற்குள் நுழையும்போது கரண்ட் கட்டானது. ஹோவென்று கத்தும் குழந்தைகளை கடக்கும்போது தோன்றியது… நாம் எப்போது கடந்தோம் இந்த பருவத்தை…எங்கு தவறவிட்டோம் இந்த உற்சாகத்தை… கரண்ட் வந்தாலும் போனாலும் இந்த சிறுவர்களின் உற்சாகத்தில் ஒரு துளியாவது போதும்… இந்த கரண்ட் இல்லாத புழுக்கத்திலும் நிம்மதியாய் உறங்கமுடியும் என்று தோன்றியது ரமேஷுக்கு. பழனிச்சாமி அண்ணன் கடையில் ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸ் பாக்கெட்டும் வாங்கி கொண்டான், விகடனும் ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸும் இருந்தால் கக்கூஸிலேயே


கோடையின் ஆற்றுப்படுகை

 

 எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு… என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா. இருக்கிற சோலிக்கழுதய விட்டுப்போட்டு…ஊரு சுத்திக்கிட்டுத் திரியற… மடத்தாயோளி! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா ஆருலே பதில் சொல்லுதது… அரைக்காசு புத்தியாவது இருக்காலே… என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்தப்பக்கம் பொயிருப்ப… அதுலயும் சோடி போட்டுக்கிட்டு… சோடி… தீப்பெட்டி ஆபீஸ்க்காரரு மகனோட… அதல்லாம் ஒரு பிள்ளையா, அவென் செம்பட்டத் தலையும் ஆளும், அதப்பாத்தாலே தெரிய வாணாம்… வீட்டுக்கு அடங்காத


ரௌத்ரம் ரௌத்ராத்மகம்

 

 ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை… நல்லா கழுவி, புதிது போல சுன்னாம்பு அடித்து வைத்திருந்தாலும், யாராவது மெதுவாய் சாய அல்லது கை வைக்க பொல பொலவென தோலுதிர்த்து, உள்ளே இருக்கும் பிசுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது. அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு


திருப்பதி ஆசாரியின் குடை

 

 குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி… கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ குடையை விரிக்கவே மாட்டார், வெயில் இருக்கும் போது பெரும்பாலும் சுனக்கமில்லாமல் நடந்து விடுவார் எவ்வளவு தூரமா இருந்தாலும், மழை வந்தால் மட்டும் ஏதாவது ஒரு தார்சாலா பாத்தோ இல்ல ஓட்டு சாப்பு இருக்கிற இடத்திலோ ஒதுங்கி கொள்வார். பிறகு எதற்கு குடையை வைத்திருக்கிறார் என்பது பரம ரகசியம் இன்று வரை… அவருடைய மனைவி பையம்மாவுக்கே தெரியாத


சிம்மேந்திர மத்யமம், ஒரு குறியீடு

 

 இது போல தான் எப்போதும் நேர்கிறது…ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை தள்ளி வைக்கவும் முடியாது அல்லது சந்தோஷத்தை கொண்டாடவும் முடியாது போய் விடுகிறது… ஷெனாயில் வழிந்து உருக்கும் இசை, அப்படியே டோலக்குடன் சேர்ந்து தடக்கென்று மங்கல இசையாய் மாற ஏற்படும் சில ஸ்வர வரிசை மாற்றங்களுக்குள் சிக்கிக்கொள்ளும், அவஸ்தை படும் காற்று, மூச்சு திணறிப்போகும். அன்றும் அது போல தான் நேர்ந்தது, எனக்கு மறக்கமுடியாத ஒரு உயிர் சந்திப்பு


இறைமை

 

 என் ப்ரிய சிநேகிதி எழுதிய ’டெம்பிள் எகய்ன்’ என்ற அவளின் அனுபவத்தின் தமிழாக்கம் இது, அவள் எழுதிய ஆங்கில வடிவத்தின் வீச்சுக்கு இது ஈடுகொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை… அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்… படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்… என் இஷ்டத்திற்கு நிறைய மாற்றியிருக்கிறேன், இது மொழிமாற்றம் இல்லை என்பது அவளுக்கும் உடண்பாடு என்று தான் நினைக்கிறேன்… “கடந்தமுறை மதுரை சென்றிருந்த போது என் நண்பர்களையும், பந்துக்களையும் பார்த்த பிறகு இந்த முறை தவறாமல்


திணைமயக்கம்

 

 தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை அடையும் போது. அழைப்பு மணியை அழுத்த தயக்கமாய் இருந்தது, வீட்டின் முகப்பு திண்ணையில் அமர்ந்து கொண்டேன், தண்ணீரில் செய்தது போல தண்ணென்று இருந்தது திண்ணை. காற்றின் தங்கு பைகளில் நிறைந்து வழியும் குரல் மெல்ல அறையெங்கும் நிறைந்து வெளியே வந்திருக்க வேண்டும், வீட்டினுள் நுழைந்தால் மனசெங்கும் அப்பி கொள்ளும் என்று தோன்றியது ஒரு சுகந்த பரிமள


பலகனியின் தொட்டிவிருட்சம்

 

 லெட்டர் வந்திருக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து… என்ற அனன்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தொற்றிக் கொண்டது கடிதத்தை படித்தவுடன்… அம்பிகாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவனிடம் தனியாக பேசியபோது தன்னை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லி பிறகும் அவர்களின் சம்மதம், இவளுக்கு நம்பும் படியாக இல்லை. தனது அறையில் இருந்து கூடத்தில் கடித்ததை கையில் வைத்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளிடம் இருந்து பிடுங்கிய கடிதத்தின் வாசகங்கள் அவளால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அம்மாவை


அம்மா அறிந்த பாத்திரம்

 

 வயித்த வலிக்கி என்று கைகளைத் தாங்கி மடங்கி உட்காருகிறாள், தோட்டிச்சி சோனையம்மாவின் பேத்தி, வயசுக்கு வந்திருப்பாளா இருக்கும் என்ற என் அம்மா கரிசனையில் விசாரித்ததில் பதினோரு வயதே என்றாள். காலையில இருந்து ஒன்னும் தின்னாம கிடக்கா முட்டாச்சிறுக்கி! என் கூட வந்தா இங்க கொடுக்கிற பழையதுல, ஏதாவது பலகாரம் கிடைக்காதான்னு தான் என்கூடவே ஒட்டிட்டு இருக்கா… எம்மா நேத்து வச்ச இட்லி தோச ஏதாவது இருந்தா கொடும்மா இவளுக்கு.. கொஞ்சம் பூசனம் பிடித்திருந்தாலும் பரவாயில்ல என்றாள்… காலையில


அம்மோனியம் பாஸ்ஃபேட்

 

 நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட், உள்ளே பசுமைப் பண்ணை,. காற்றில் பயிர்களின் பலவிதப் பச்சைகள். மஞ்சள் பச்சை, எமரால்ட் பச்சை, பாட்டில் பச்சை, கண்மட்டத்துக்கு உயர்ந்த கதிர்கள், ஃபர்லாங் பாதையின் S-Z ஓட்டம். அதோ வீடு. வீட்டின் நிழல், மரங்களின் நிழல், நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் டிராக்டர்கள். சங்கிலிக் கட்டுப்பாட்டை மீறி ஒருவித தற்கொலை இயக்கத்துடன் எம்பிக் குரைக்கும் ஆக்ரோஷ நாய்கள். ஒரு