கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

582 கதைகள் கிடைத்துள்ளன.

பேராசை பெரும் நஷ்டம்

 

 சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் சுப்பன் என்ற விவ சாயி வாழ்ந்து வந்தான். கிராமத்து விவசாயிகள் எல்லோரும் நிலத்தில் பயிர் வைக்கும்போது தான் சுப்பனும் பயிர் வைப்பான். ஆனால் மற்ற விவ சாயிகளின் நிலத்தில் விளைவதை விட அதிக விளைச்சல் சுப்பனின் நிலத்தில் ஏற்பட்டது. உணவு தானியங்களை விற்பனை செய்தபோது அவனுக்கு அதிக வருமானம் கிடைத்தது. மற்ற விவசாயிகள் எல்லோரும் சுப்பனைக் கண்டு மனம் புழுங்கினர். அவன் போடுகின்ற உரங்களைத்தானே நாமும் போடுகிறோம். நமக்கு மட்டும் ஏன் அவன்


தியாகம்

 

 சதுரங்க பட்டணத்தை சுந்தரபாண்டி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு கதம்பா என்னும் அழகிய பெண் இருந்தாள். மந்திரி மகாதேவனுக்கு நிலவழகன் என்னும் மகன் இருந்தான். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள், இருவரும் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினர். பெரியவர்கள் ஆனதும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். ஒருநாள் திடிரென்று பக்கத்து நாட்டு அரசன் பகை கொண்டு, இவர்கள் நாட்டை பிடித்து விட்டான், அவனிடம் இருந்து தம்பி ஓடிய நிலவழகன், கர்பமுற்ற கதம்பா இருவரும் காட்டுக்குள் சென்று கால்போன


எத்தனுக்கு எத்தன்

 

 பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக் கொண்டு வருவான். சுருதி அதை வாங்கி நிம்மதியாகச் சாப்பிடுவான். உள்ளூரில் பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் சென்று வியாபாரம் செய்து பிழைக்க இருவரும் முடிவு செய்தனர். இருவரும் குதிரையில் ஏறிக் கொண்டு பல ஊர்களையும் கடந்து ஏமலுõர் என்ற ஊரை அடைந்தனர். ஊர் எல்லையில் உள்ள சத்திரம் ஒன்றில் தங்கினர்.


மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்

 

 காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான். அந்த வாலிபன் மிகவும் நல்லவன்; ஒழுக்கமானவன். ஆசிரமத்தில் இருந்த அத்தனை குழந்தைகளின் மீதும் அன்பு கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த வாலிபன் ஒரு ஆசிரமச் சிறுமியுடன் சபர்மதி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது கையில், ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. அந்த எலுமிச்சம் பழத்தை அந்தச் சிறுமியிடம் துõக்கிப் போட்டு அவள் பிடிப்பதற்குள் அவன் அதைப் பிடித்து, அவள்


புதிர்கதை – ஏன் மணக்கவில்லை

 

 சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர். பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர். அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, “”நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை


நன்றி மறந்த சிங்கம்

 

 முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன். “”மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை


பூதம் சொன்ன கதை

 

 முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண


பீர்பால் – ஏமாற்றாதே, ஏமாறாதே

 

 கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர். அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத


புதுச்செருப்பு!

 

 ஒரு நாள் முல்லா, தான் வாங்கிய புத்தம் புதுக் காலணிகளை அணிந்து பெருமிதத்தோடு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். ஆலமரத்து நிழலில் ஒரு சிறுவர் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் முல்லா அணிந்து வந்த புதிய செருப்புக்களைப் பார்த்து விட்டான். “டேய் நம்ம முல்லாஜி போட்டு வரும் செருப்பைப் பாருங்க எவ்வளவு அழகு” என்றான். அடேங்கப்பா! என்ன பளபளப்பு! அதில் முகம் பார்க்கலாமே. அதோடு ரசம் பூசப்பட்ட கண்ணாடிச் சில்லுகளைப் பதித்து இருக்கின்றனர். அதில் சூரிய


சீலனின் தந்திரம்!

 

 வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன் பர்வதனனின் ஆருயிர் நண்பன். பொக்கிஷத்தில் பணக்குறைவு ஏற்பட்ட போதெல்லாம் மன்னனுக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்வான் சீலன். அப்படி கிடைத்த வட்டிப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி வந்தான் சீலன். ஓவியக் கலையில் கைதேர்ந்தவன் சீலன். மற்ற கலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அழகான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், வேலைப்பாடுடன்