கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

570 கதைகள் கிடைத்துள்ளன.

நாட்டுப்பற்று

 

 முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார். அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக்


முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

 

 எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. http://www.sitevip.net/gifs/donkey/2259_animado.gif “நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை


தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி

 

 சிறிய வயதில் _ பெரிய வயதினர் வேடமணிந்து… வழக்கொன்றிற்கு தீர்ப்பளித்தான் மன்னன் கரிகால் சோழன். அம்மன்னனைப் போன்று சிறிய வயதில்… பெரிய வயதினர் போன்று சிறைச் சாலைக்கு ஜாமீன் எடுக்கச் சென்றவர் தான் வீரவல்லி `ரங்க நாத சாஸ்திரி…’ ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே களாமூரில் 1819_ம் ஆண்டில் பிறந்தவர் ரங்கநாதன். பன்னிரண்டு வயதாக இருக்கும்போது… நிலவரி கட்டாத காரணத்திற்காக அக்கால வழக்கப்படி அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் தாத்தாவுக்கு திதி நாள் வந்தது.


நாவடக்கம் இல்லாத அரசன்

 

 சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு. இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர். ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

 

 பறக்கும் தங்கக்குதிரையானது இராமநாதனை சுமந்துக் கொண்டு மஞ்சள் ஆற்றைக் கடந்து, பட்டு தேசத்தின் எல்லையில் நுழைந்தது. ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே தெரியவில்லை, நேராக அரண்மனை அருகில் இறங்கி உள்ளே சென்றார், எப்படியும் அரசரை சந்தித்து கொடிய மந்திரவாதி கடம்பனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும். அதன்படி மந்திரவாதியை வெல்ல வேண்டும் என்பது அவரது திட்டம். அரண்மனையில் பயங்கர நிசப்தம் நிலவியது, உள்ளே சென்ற இராமநாதன் கண்ட காட்சி அவரது திட்டத்தை பொடிபொடியாக்கியது. உள்ளே அரசர்


நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்

 

 இராமநாதனின் சாகசகங்கள் (தொடர்கதை-3) தந்தையின் ஆசைப்படி மருத்துவம் படிக்க பனிப்படர் தேசம் சென்ற இராமநாதனின் பயணம் தடைப்பட்டு சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டதை நாம் அறிந்தோம். மயக்கநிலையிலிருந்து மீண்ட இராமநாதன் எதிரே மூன்று சித்திரக்குள்ளர்கள் நின்றார்கள். அதுவும் எப்படி? 2 அடி உயரமே இருந்தார்கள், கொழுக்கு மொழுக்கு என்று கொழுத்து போயிருந்தார்கள், அவர்கள் கழுத்தில் பெரிய மண்டையோடும், இடுப்பில் ஆடையாக எலும்புக்கூடுகளும் இருந்தன, கையில் பெரிய எலும்புத்துண்டை ஆயுதமாக ஏந்திருந்தார்கள். மூக்கு சப்பையாகவும், ஆட்டுக்கு இருக்கும் தாடி போல்


தக தக தங்க குதிரை இராமநாதன்

 

 (முன்கதை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும்


தக தக தங்க குதிரை

 

 (முன்கதை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

 

 தஞ்சாவூருக்கு அருகில் மூனூறு என்ற கிராமத்தில் மூன்றாவது தெருவில் இராமநாதன் என்ற இளைஞர் வசித்து வந்தார். இராமநாதன் அழகான இளம் வாலிபர், அடிக்கடி தலை முடியை கோதி விட்டதால் முன்பக்க தலை முடி ஏறி பார்க்க அழகாக இருக்கும், அவரது சிறப்பான குணங்கள் என்ன என்றால் யார் என்ன என்று எல்லாம் பார்க்காமல் உடனே ஓடி போய் உதவி செய்வார். பள்ளியில் படிக்கும் போது புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு இவரே கட்டுரைகள், பாடங்கள் எழுதி


நேர்மையான பிச்சைக்காரர்

 

 ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். http://z.about.com/d/politicalhumor/…lar_beggar.jpg பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.