Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

581 கதைகள் கிடைத்துள்ளன.

புனல்பெருவழி

 

 செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. செல்வியின் மகளுக்கு என்னைத் தெரியாது, உறவுமுறை சொன்னால், ஓ! என்று கேட்டுக்கொள்ளலாம். என்ன செய்வது என்று தெரியாமல், வரும்போது முக்கில் பார்த்த டீக்கடை ஞாபகம் வந்தது, ஒரு டீயும், சிகரெட்டும், சில நிமடங்களை சாம்பலாய் உதிர்க்கும்


கடிவாளம்

 

 சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன்! ஆமா! என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் போட்டவாறே வெளம் வந்தது போல கத்தினாள் மிளகி. வந்துடுதேன்… புள்ள! சோலியா போகையில… மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்… முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம்? என்று இழுத்தவாறே, கைலியில் சுற்றி


அரிசி தின்னும் மயிலிறகு

 

 பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை அவளுக்காகவே காத்திருந்து பெய்கிற மாதிரி தோன்றியது, கைபிடித்து வீடு வரை விட்டபிறகு பெய்ய ஆரம்பித்தது மாதிரியும் தோன்றியது. நெற்றியில் வழிந்த ஒற்றைத் துளி வழிந்து கண் இமையில் நின்று சொட்டியது. பைக்கட்டை, உள்ளறையில் இருக்கும் மேசை மீது வைத்து விட்டு, துப்பட்டாவை நீவி சரிசெய்து கொண்டு மழையைப் பார்க்கலாம் என்று தோன்றியவுடன், அடுப்படியில் கிடந்த முக்காலியை எடுத்துக்கொண்டு


அவம்பொழுது

 

 மரநிழலில் நீண்டிருந்த தெருவில் உதிர்ந்து கிடந்த சருகுகள் அவனின் காலுக்கு கீழே மொரமொரத்து நொறுங்கின. அது காலுக்கு கீழே நொறுங்கியதில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாயும், சுவாரசியமாயும் இருந்திருக்க வேண்டும். செருப்பில்லாமல் காலங்காலமாய் நடந்து பாலம்பாலமாய் விரிசல் விட்டிருந்த பாதங்களில் இந்த கூச்சம் அவனுக்கு ஒருவிதமான குதூகலத்தை கொடுத்திருக்க வேண்டும். இதில் சத்தமில்லாமல் நடக்க முயற்சி செய்வது போல பாசாங்கு செய்தவன், பாதகமில்லை என்பது போல குதித்து நடக்கத் தொடங்கினான். கர்ரக், கர்ரக் என்ற சப்தம் இப்போது அவனை


கண்ணாடித்தேர்

 

 மகளுக்குக் கல்யாணம் என்று சரோஜா டெய்லர் வந்து பத்திரிக்கைக் கொடுத்தபோது, கல்யாணத்திற்கு போகவேண்டாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் மனைவி கல்யாணத்திற்கு போயே ஆகவேண்டும் என்று அடம் பிடித்ததில் ஒப்புக் கொள்ள வேண்டியாதாயிற்று. வீடு வந்து பத்திரிக்கை வைத்தவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு எப்படிப் போகாமல் இருப்பது? என்று கேட்கிறாள் இவன் மனைவி. ஆண்டாள் கோவிலில் கல்யாணம், வடக்குரத வீதி பப்புச்செட்டி கல்யாணமண்டபத்தில் சாப்பாடு என்று சொல்லியிருந்தார்கள். மாப்பிள்ளை அழைப்பும் வைத்திருந்தார்கள், அதுக்கே போயிட்டு வந்துட்டா போதும். விடியக்காலைல


மழைவில்

 

 பொழுது விழுந்து கொண்டிருந்தது. இன்னும் என்ன இந்த சாரதியக் காணோம்? என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு விளக்கை எடுத்து மாடக்குழிக்குள் வைத்தாள். வெளிச்சம் வாசப்படியைத் தாண்டவில்லை. இன்றைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது என்று தோன்றியது மதுரவல்லிக்கு. மார்கழி மாதம் என்றாலே சரக்கென்று பொழுது விழுந்து விடுவது இயல்பு தான் என்றாலும், அவளுக்கு அப்படித் தோன்றியதற்கு காரணம், சாரதி இன்னும் வீட்டுக்கு வராதது தான். வாசலில் இருந்து திரும்பவும் வீட்டுக்குள் பார்த்தவள், விளக்கை ஏற்றுவதற்கு உள்ளே திரும்பினாள்.


அற்றது பற்றெனின்

 

 வீட்டை வந்து அடைந்த போது இருட்டிவிட்டது. கதவைத் திறந்து வீட்டினுள் நுழைய எதுவோ குறுக்கே ஓடுவது போல இருந்தது. அனேகமாய் எலியாய் இருக்கும். உடன் வாழ்வது ஏன் இன்னும் பழகாமல் இருக்கு என்று தோன்றும் அவருக்கு. கதவின் பின்னால் இருந்த ஸ்விட்சை போட்டவர், வெளிச்சத்தில் கண்களை சுருக்கி, வைத்தது வைத்த மாதிரி இருக்கா என்று பார்வையிட்டார். எல்லாம் அப்படியப்படியே இருந்தது. எதை தேடி ஓடியிருக்கும் இந்த எலி என்று யோசித்துக் கொண்டே சட்டையைக் கழட்டினார், அங்கிருந்த ஆணியில்


பெருமழைக்காடு

 

 அதெல்லாம் ஒத்துவராது புள்ள! அத்துவிட்டுப்புடலாம், நாலு பேரக்கூட்டி செய்யமுடியாதுன்னு நினைச்சேன்னா, இவ வீட்டோடவே இருந்துட்டு போகட்டும்!” என்ற அப்பாவின் குரலில் இருந்த கோபமும், ஆதங்கமும் சுசீலாவுக்கு நன்றாகவே தெரிந்தது. வேண்டாம் இந்த உறவு என்பதில் அவளுக்கும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை இருந்தாலும், குணங்கெட்டவனின் செயல்கள் அதன் பின் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது. சுசீலாவின் யூகங்களும் ஒரு வரையறைக்குட்பட்டது, அவன் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் யாரும் எதிர்பாராதது போலவே இருக்கும் எப்போதும். சுசீலாவின் அம்மா ஒன்றும்


வால் நட்சத்திரம்

 

 பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு. மார்கழி மாதத்தின் பிரத்யேக அடையாளங்களாய் தெருவை அடைத்த கோலங்களும், சானிப் பிள்ளையாரும் பூசனிப்பூக்களும் நிரம்பி இருந்தது, சாயங்காலம் ஆகியிருந்தும், கோலங்கள் அப்படியே இருந்தது போல பட்டது. இந்தத் தெருவுக்கு கிருஷ்ணவேணி வந்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். சென்னையில் பணியில் சேர்வதற்கு முன்னால், கௌசல்யாவிடம் சொல்லிவிட்டு போவதற்காய் வந்திருந்தாள். அதுவும் ஒரு மார்கழி மாதம் தான். மனசுக்கு நெருக்கமான சினேகிதி,


பழுத்த இலைக்காடு

 

 அம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான். இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு. எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை.