கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 17, 2012

18 கதைகள் கிடைத்துள்ளன.

பூச்சி

 

  கதை ஆசிரியர்: சந்திரா. அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை விலக்கிக்கொண்டு போயின. அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தான். ஒரு கையில் மணியடித்துக்கொண்டே, இன்னொரு கையில் ஹேன்டில் பாரைப் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்வது கடினமாகத்தான் இருந்தது. மிக இருட்டான கீழ்முக்குத் தெரு வந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொடர்ந்து மணியடித்துக்கொண்டிருந்தான். அந்த இருட்டு அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. யார் முகத்தையும் அவன் பார்க்க விரும்பவில்லை. அதேபோல்


எண்கள் தேவையற்ற உரையாடல்கள்

 

 ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை அடையாளம் சொன்னார். அவர் போட்டு இருந்த வெள்ளை பனியனில் அச்சடிக்கப்பட்டு இருந்த தேயிலை விளம்பரத்தின் சிவப்பு எழுத்துக்களை ஞாபகம் இருக்கிறது. நசுங்கின கரும்பைத் தட்டையாக உருவி, மறுபடியும் பிழிவதற்காக மடக்கி உள்ளே கொடுத்தபடி, ‘இப்படியே நேரா அங்க இங்க திரும்பாமப் போய்க்கிட்டே இருந்தா, குறுக்கே தென்வடலா ஒரு தெருவு வரும். அதை விட்டிரணும். விட்டுட்டு அப்படியே


கசப்பாக ஒரு வாசனை

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச் சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது. என்னைப் பார்த்ததில் இருந்து பாலாவின் வாய் ஓயவே இல்லை. சித்தி, சித்தி என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தான். பழைய புத்தகக் கடையில் ஒன்றரை ரூபாய்க்கு வாங்கிய கபில் படத்தை மேஜைக்கு நேரே ஒட்டியிருந்தான். ‘மேலே வா சித்தி ‘ ‘ என்று கையைப் பிடித்துக்கொண்டு


மிதிபட….

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக் கலரில் பெயிண்ட் அடித்த ஒரு கதவு சாத்தியிருக்க, கையில் சற்றுக் கனமாகத் தொங்குகிற பையுடனும் இன்னொரு கையில் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கிற மண்ணெண்ணெய் ஸ்டவ்வுடனும் உள் நுழையச் சாத்தியமற்று அவள் வெளியிலேயே நிற்கும்படி ஆயிற்று. தனியாய் இருட்டோடு


போர்த்திக் கொள்ளுதல்

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும். ஆனால்


நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். பிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும். கூரையில் குறுக்கு வாட்டாகக் குத்தியிருந்த நீளமான உத்தரக்கட்டைகளில், இவன் கீழே படுத்துக் கொண்டு பார்த்தால் நேர் எதிரே, முறுகித் தொங்கிக் கொண்டிருக்கிற பல்பிற்கு ரெண்டு ஜான் தள்ளின தூரத்தில் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் கோமாளி முகம் மாதிரி ஒன்று தெரியும். விழுந்து விழுந்து சிரிக்கும். வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும். வயிற்றுக்குக் கீழே திபுதிபுவென்று


நிலை

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘தேர் எங்கே ஆச்சி வருது?’ ‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள். ’வாகையடி முக்குத் திரும்பிட்டுதாம். பார்த்திட்டு வந்திருதோம். நீ எங்கியும் விளையாட்டுப் போக்கில் வெளியே போயிராத, என்ன?’ அழிக்கதவைச் சாத்திவிட்டு எல்லோரும் வெளியே போனபோது கோமு அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து, தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக, இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. தெருவைப்


தனுமை

 

 இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு


ஒருத்தருக்கு ஒருத்தர்

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால் மறந்துவிட முடியுமா என்ன. முத்துலட்சுமியும், சுந்தரியும் ஒல்லி. சுந்தரியின் அண்ணன் மேல் காலெல்லாம் பாலுண்ணியாக இருக்கும். மிஞ்சியது ஒயர்மேன் சின்னையாவுடைய பெண் தங்கம்மாதான். சின்னையா என்பது அவருடைய பெயரல்ல. எல்லோரும் சின்னையா சின்னையா என்று கூப்பிட்டதால் அப்படி.


ஒட்டுதல்

 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது. துவைத்த உடைகளையும் வாளியையும் வைத்த கையோடு எப்போதும்போல அடுக்களையின் ஒரு பகுதியாக இருக்கிற பூஜை அலமாரியின் பக்கம் வந்து