கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 27,436 
 

”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ ! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில் வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்? லக்கேஜ்லாம் பத்திரமா இருக்கா?” அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் அவனுக்கு மேலும் மூச்சு வாங்கியது.

”எல்லாம் கரெக்டா இருக்கும் செல்லம்! ஆனா இந்த வை-பை-தான் கனெக்ட் ஆக மாட்டேங்குது”

மறுமுனையிலிருந்து ”ஏன்டா ! நான் ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கறப்ப அங்க ஒனக்கு வைப் கனெக்ட் ஆக மாட்டேங்குதா” மவனே அங்கேயே இரு.. நீ ஒண்ணும் வெளியூர் போக வேணாம், இதோ நான் அரை மணி நேரத்துல ந்துடறேன்”

மீண்டும் ” மவனே நீ இடத்தைக் காலி பண்ணே, அம்புட்டுதான் என் அப்பன் யாருன்னு தெரியும்ல” குரலொலித்துக் கொண்டிருக்கும் போதே… டிரெயின் பிளாட்பாரத்தை விட்டு புறப்பட்டு விட்டது.

அடுத்த அரைமணி நேரத்தில்… ஆவேசமாக… பிக்பாஸ் ஐஸ்வர்யா போல வந்த நித்யா ”எங்கேடா ? என் சக்களத்தி? ஓடிட்டாளா ? இல்லே நீ அனுப்பி விட்டுட்டியா? காட்டுக்கத்தலில் பிளாட்பாரமே சற்று அதிர்ந்த து.

“ஐயோ ! செல்லம் நான் நான் ”வை-பை” கனெக்ஷன் ரெயில்வேயில் இலவசமா தர்றாங்க” நான் அதைச் சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிகிட்டே”

”அப்ப, கவர்ன்மென்டே கனெக்ஷன் கொடுக்கறாங்களா? என்ன அநியாயம் இது? நீ கட்டின தாலியை காலையிலேயும் இராத்திரியிலேயும் கண்ணுல ஒத்தி கும்பிட்டு வர்ற எனக்கே இந்த அநியாயமா? ” தேம்பி..தேம்பி அழதாள் நித்யா.

நித்யாவின் அழுகையைப் பார்த்த தும் .. ரெயில் பிளாட்பாரத்தில் உள்ளவர்கள் ” என்னப்பா ஆச்சு பொம்பளை பிள்ளைய அழ வைக்கிற! ஒன்னை போலிஸ்ல பிடிச்சுக் குடுக்கணும்” என்று கூட்டமாக சேர்ந்து நித்யாவிற்கு வக்காலத்து வாங்கினார்கள்

அ வர்களுக்கு விளக்கம் சொல்லி..சொல்லி அலுத்து போன பின். ”ஐயோ ! அப்பவே எங்கம்மா ”படிக்காத கிராமத்து பொண்ணைக் கட்டிக்காத, புரிஞ்சுக்க நாளாகும்ன்னு சொன்னாங்க! நாந்தான் கிராமத்து பொண்ணை கட்டிகிட்டேன்” புலம்பினான்.

”அப்ப கிராமத்து பொண்ணுன்னா இளக்களாரமா?” நாங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யலைன்னா ஐயா சோத்துக்கு எங்கன போவாரு? இரு! இரு எங்க அப்பாவிற்கு தகவல் சொல்லடறேன்“ கிராமத்து ஆளை என் புருஷன் தப்பா சொல்றாருன்னு சொன்னா அம்புட்டுதான. ஒன் கதை காலி.

”என்னடி ! ரொம்பத்தான் மிரட்டுற! முடிஞ்சத பாரு”

அடுத்த விநாடி ”அவ்வளுவு ஆயிடுச்சா! ”அலைபேசியில் அப்பா நான் நித்யா பேசறேன், நீ கட்டி வைச்சிய ஆள் ரெயில்வே ஸ்டேஷன்ல ”வைப்” கனெக்ஷன் தேடுறான்.கேட்டா கிராமத்து ஆளுங்கள மட்டமா பேசறான், சுருக்க வந்துடு”

மறுநாள் அதிகாலை… பாலாஜி வீட்டு வாசலில்ல் டாடா சுமோக்கள் அணி வகுத்து நின்றிருந்தன.

தெரு முழுக்க கிராமத்து ஆட்கள் கூட்டமாக ”டே பாலாஜி வெளியேட வாடா” குரல்கள் முரட்டுத்தனமாக இருந்தன.

“அம்மா ! தாயி நான் என்ன தப்பு செஞ்சேன்! ரெயில்வே ஸ்டேஷனில் வை-பை கனெக்ஷன் கிடைக்லேன்னு சொன்னது தப்பா” கெஞ்சிக் கொண்டிருந்தான்.

”நித்யா ! நித்யா ! எங்கேம்மா அந்த களவாணிப் பய ஒளிஞ்சிகிட்டானா டேய் வெளியே வாடா !

”மாமா ஒங்க பொண்ணுதான் புரிஞ்சுக்காமா சண்டை போடுறாள்ன்னா நீங்களுமா?”

”என்னடா புரியல! நான் கஷ்டப்பட்டு வளர்த்து கல்யாணம் கட்டிக் கொடுத்தா நீ வேற ஆளுக்கு கனெக்ஷன் தேடுறீயா? நான் அவ்வளவு விவரம் இல்லாத ஆளா இரண்டு நாளைக்கு முன்னதான் ஜோஸ்யர் ”மாப்பிள்ளைக்கு புதிய தொடர்பு கிடைக்கும்” உஷாரா இருங்கன்னு” சொன்னார். சரியாயிடுச்சு”

”ஒன்னைய கையை ஓங்கும் போது…”சம்பந்தி பொறுங்க என் பையனை அடிச்சிடாதீங்க” மறித்தார்.

”யோவ் நீயும் ஒன் பையனுக்கு கூட்டா?”

”இல்லே சம்பந்தி முதல்ல ஒக்காருங்க., நித்யா அப்பாவுக்கு முதல்ல தண்ணி கொடு” என்று மருமகளிடம் சொன்னார்.

தண்ணீர் குடித்தவுடன்… இதோ பாருங்க சம்பந்தி என் கையில இருக்கிற ஸ்மார்ட் போன்ல ஓரமா ஒரு சிம்பிள் இருக்கு பாருங்க அது வை-பை கனெக்ஷன் அது இன்டர்நெட் பயன்படுத்துறதுக்கு பொது இடங்கள்ல போகும் போது அரசாங்கமே இலவசமாக இந்த கனெக்ஷன தருவாங்க ஆதனால நமக்கு செலவு மிசமாகும் மற்ற என் பை அப்படிப்பட்ட ஆளில்லே”

”அப்படியா சம்பந்தி நானும் மாப்பிள்ளை தப்பான வழிக்கு போறார்ன்னு சந்தேகப்பட்டுட்டேன்”

”நித்யா ! அறிவு கெட்டவளே படிக்க ஸ்கூல் அனுப்பிச்சா…புளியமரம், மாமரம் பக்கமா போய் புளியங்காய் மாங்கா அடிச்சு தின்னுட்டு படிப்பைக் கோட்டை விட்டுட்டே இப்ப பாரு புருஷன் சொல்றதக் கூட உன்னால புரிஞ்சுக்க முடியல”

”மாமா! கவலைப்படாதீங்க ஒங்க பொண்ணை நான் படிக்க வைக்கிறேன்” என்று உறுதியளித்தான் பாலாஜி.

டாடா சுமோக்கள் தெருவைக் காலி செய்தன.

அன்றிரவு ”இன்னாங்க ஒங்க மேல எவ்வளுவு ஆசை வைச்சிருக்கேங்கறதுக்கு இதுதாங்க ஆதாரம் ….இச்…இச்..இச்”சென்று முத்தங்களாக பதித்தாள் நித்யா.

மனதிற்குள்ளாகவே ”இதெல்லாம் யாராச்சிலும் சொல்லிக் கொடுத்தாங்களா?” என்று நினைத்துக் கொண்டே இரவை இனிமையாய் கழித்தான் பாலாஜி.

Print Friendly, PDF & Email

1 thought on “வை-பை

  1. அலைபேசியில் பேசுவாள் டாடா சுமோவில் வருவார்கள் wifi
    தெரியாது! கதைக்காக இஷ்டம்போல் கதை விடக்கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *