ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,316 
 

ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்…

தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம் என்று அவன் அப்பா சொல்லுவார்….அவனுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்வரப்போகிறது என்று அவனுக்குத் அப்போது தெரியாது..பாவம் ராஜாராமன் அவனுக்கு எப்பபவும் எதுவும்
தெரியாதுதான்…….

” தம்பி….இந்த விலாசம் எங்கேன்னு சொல்லமுடியுமா……”

தமிழ் நாட்டின் அடிப்படைக் கலாச்சாரமே விலாசம் சொல்லுவது என்ற நாகரீகம் தெரியாதவனா நம்ம ஆள்..தவிர விலாவரியாக விலாசம் சொல்லாதவன் தலை கீழாக நரகம் போவான் என்று சாலமன் பாப்பய்யா சொன்னதாக ஒருத்தன் சொன்னது வேற
ஞாபகம் வர சந்தோஷமாக அந்த ஆளின் பக்கம் திரும்பினான் நம்ம பையன்….

திடுக்கென்று வந்து எதிரில் தோன்றி விலாசம் கேட்ட ஆளைப்பார்த்தான் ராஜா அந்தாளுக்கு முப்பது வயசிருக்குமா முன்னூறு வயசாயிருக்குமா புரியவில்லை…அவன் போட்டிருந்த்து ஜிப்பாவா நீளமான நைட்டியா என்ற சந்தேகம் வேற வந்தது. தலை முடி
பரட்டை முடிஅல்லது ஜடாமுடி…எந்த தேசத்தவன் என்று சீனா இல்லே ஆப்பிரிக்கா அதுவும் அத்துப்படியாய்த் தெரியவில்லை….பல்லைப்பார்த்தால் பாம்புக்கறி தின்கிறவன் என்கிற யோசனை கூட வந்த்து…..

நம்ம பயல் வெகு கம்பீரமாய் அந்த ஆள் நீட்டின துண்டுச்சீட்டை வாங்கிக்கொண்டு ரஜனிகாந்த் ஸ்டைலில் கண்ணாடியை மேல் மூக்கில் செட் செய்து கொண்டான்…பாவம் ராஜாராமன்…அந்தச்சீட்டு உலகத்தின் அவ்வளவு வில்லங்கத்தையும் அடக்கியிருக்கும்
அப்போது அவன் எதிர் பார்த்திருக்கவில்லை…..

சீட்டை வாங்கி நோட்டம் விட்டபோதுதான் சுனாமியை விடக்கொடியது துண்டு சீட்டுப்படிப்பது என்ற ஞானம் வந்த்து………பாவி மனுஷா இத்தனை நீள கடற்கரையில் இதப்படிக்க உனக்கு நான்தானா கிடைத்தேன்….டேய் ..ராஜா நீ இன்னைக்கு நரி முகத்ததில் விழிக்ககலைடா… எந்த சொறி முகத்திலோ முழிச்சிருக்கே….

‘என்ன தம்பி பாக்கறீங்க …உங்களுக்குத்தமிழ் படிக்க வருமில்லைங்களா….’

‘ நான் சுத்தத் தமிழன்யா…..’

‘ சந்தோசங்க…தமிழன் எல்லாரும் ரொம்ப சுத்தங்க…அத விடுங்க ..உங்களுக்கு தமிழ் படிக்க வருமில்லீங்களா……’

‘ தமிழன் தமிழ் படிக்காம இத்தாலியா படிப்பான்….பாருங்க நான் தலை கீழாத்தமிழ் படிப்பேன்’

‘ சரியாச்சொன்னீங்க தம்பி….சீட்டைக்கூட தலைகீழாத்தான்..வச்சிருக்கீங்க….’

சுறுக்கென்றது ராஜாராமனுக்கு.அப்போதுதான் சீட்டைத்தைகீழாக வைத்திருக்கிறோம் என்ற ஞானோதயம் வந்த்து.
சுதாரித்து சீட்டைத்திருப்பிப் பாரத்தபோது பிள்ளையார் பெரும் குழப்பத்துக்கு சுழி போட்டது தெரிந்தது….அந்த சீட்டு என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றே தெரியவில்லை..சௌராஷ்ட்ரமா…மகாராஷ்ட்ரமா..’.பெருமாளே..இது உனக்கு அடுக்குமா நான் காத்து வாங்க்த்தானே வந்தேன்….காசு பணம் கூடக்கேக்கலியே….’

‘ இது எதுலே எழுதியிருக்காங்க தெரியில்லையே’

‘பேனாவிலே தம்பி’

‘யோவ் ‘ என்று ஆங்காரமாய் எழுந்த குரலை அடக்கினான் ராஜாராமன்..’.முதல்லே சீட்டப்படிக்கிறேன்’ அப்புறமாகாட்டி உன்னை வச்சக்கிறேன்….’

‘சீட்டைப்பாரக்கப்பார்க்க அழுகை வந்தது….இது என்ன பாஷைங்க….’

‘நான் கண்ணாடி கொண்டு வர மறந்திட்டேன் தம்பி…’

‘சட்டை மாத்திரம் பதிமூனு மீட்டர்லே போட்டுக்கோ…. ஏழு ஜேப்பு வச்சி.’..என்று முனகிக்கொண்டான் நம்மாள்….’.ஏங்க இத எழுதினவருக்கு தமிழ் தெரியுங்களா…. ‘

‘நீங்க வேற…அந்த ஆளுக்கு இருபத்து நாலு பாஷை தெரியுங்க…ஒரு வேளை கல்வெட்டு மொழியிலே எழுதியிருப்பாரோ….’

ஆப்பைச்சுட்டு அடியிலே சொறுகினமாதிரி இருந்த்து..ஆனால் வெறும் ரோஷம் உதவாது..படிக்கனும். உடனடியா துண்டுச்சீட்டப்படிக்கனும்..’பிள்ளையாரப்பா இவன் அந்தப்பக்கம் திரும்பி சிரிக்கிறான் போலத் தெரியுதே….கடங்காரா கல்வெட்டு மொழின்னு சொல்லி காயடிக்கிறயே…உன் பொண்டாட்டி ஓடிப்போவாடா….நீ அவளைத்தேடிப்போவே…..நீ நாசமாப்போயி எனக்கென்ன….வந்தாரை வாழ வைக்கிற தமிழகமே சொந்தக்காரனை இப்பிடிச்சாடிக்கிறயே….இந்த யூனிவர்சிடி கட்டிடத்தை சுனாமி கொண்டு போகாதா…இப்பிடி நடு பீச்லே ஜட்டியிழந்த ராவணன் மாதிரி நிக்க வச்ச’ வாத்திப்பசங்களை ‘ சென்னை வெள்ளம் கொண்டு போகட்டும்….

ராஜாராமன் சக்கல பாஷைளில் (கெட்ட வாரத்தையில்) புலம்பியபோது அந்த ஆள் வந்தார்..நீளமாய்க்குல்லாய்…வெகு நீளமாய் ஜிப்பா.. ..அவரே கூட ரொம்ப நீளம்தான் தாடி வைத்திருந்தார்..கையிலே ஒரு தடி கூட இருந்த்து….’.ஜிப்பா வாரம்’ என்று சன் டி.வியில் சொன்னானோ..அத விடு….அட்ரஸ் மேட்டரை முடி ராஜாராமா…..

‘ பாய்…இந்த விலாசம் உருதுலே இருக்கு…கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்….”அது சரி..தமிழ் தெரியுமா…படிச்சிருக்கயா……’

இப்போது ராஜாராமன் அவரைத்தூக்கி கடலில் எறிகிற கோபத்துக்கு ஆளாகியிருந்தான்…

‘எம் .டெக் படிச்சிருக்கேன்னு சொல்ரனில்லே…அப்புறம் தமிழ் படிச்சயான்னு கேட்டா எப்பிடி……’

‘அரே…நீ எம்டெக் படி..கலக்டருக்குப்படி….தமிழ் தெரியுமா படிச்சிருக்கியா….’

‘அதெல்லாம் உங்களுக்குத்தெரியவேண்டியதல்லே…விலாசம் உருதுலே இருக்கு…உங்களுக்கு உருது தெரியுமா…அதான் கேள்வி…..’

‘எனக்கு உருது தெரியுமாவா…எனக்கு இருபத்து நாலு பாஷை தெரியும்..உருது லே பெரிய எழுத்தாளன்…ஆமா என்னைப்பாத்தா உனக்கு கோமாளி மாதிரி தெரியுதா…எலேய் உங்கப்பன் பேரு என்னடா…..

தமிழ் நாட்டில் சக்கல ஜனங்களுக்கும் ஹிந்தி தவிர இருபத்திநாலு பாஷை தெரிகிறது என்பது இப்போதுதான் ராஜாராமனுக்குப்புரிந்த்து…அந்த பாய் தன்னை’ டா’ போட்டு அழைத்ததில் ராஜாராமன் வெகுண்டு போயிருந்தான் …அப்பா பேர் வேற கேட்கிறாரே இந்த ஆள்…ஒரு சின்னச்சீட்டு தன் பூர்வோத்திரம் உள்பட எல்லாம் கேட்கும் என்று அவன் எப்பொதும் நினைத்ததில்லை….கவலைப்படாதே ராஜாராமா பொறுமை…பொறுமை..அது சாந்தோம் பீச்சை விட பெரிசு…….ஒரு சின்னச்சீட்டு ராஜாராமனை என்ன செய்து விடும்…..உன் அப்பன் பேரைச்சொல்ல சொத்தையா விற்கப்போற..சும்மா ..சொல்லு..யோவ் பாயி என்ன நினைச்சே நான் சாதாரண ஆளில்லை…’எங்க அப்பா சாரங்கபாணி கோவந்தராஜன் ரிசர்வ் பேங்குலே……’

‘அட….அந்த நோட்டு மாத்தர முட்டக்கண்ணனா……’

‘தா..பாருங்க எங்க அப்பா நோட்டு மாத்தர ஆசாமியெல்லாம் கெடையாது பெரிய அதிகாரி…’

‘எல்லாம் தெரியும்டா ஸ்ரீவில்லிபுத்தூர் ஓடிப்போய் அந்த அப்பாவி புள்ளையைக் கல்யாணம் செஞ்சுகிட்டான்….ப்ராடுப்பய…தாயாரு தான உங்கம்மா பேரு…அவ நல்லபுள்ள ஆமா…உங்கம்மா தாயாரா இல்லே….அந்த மிஸ்…குசலகுமாரியா…’

‘அய்யோ..என அலறினான் நம்மாள்….தாயாரு ஒன்னுதான் எங்கம்மா…..மிஸ் குசலகுமாரின்னா அவங்க எப்படி அம்மாவா ஆவாங்க அதும் எனக்கு….’

‘நியாயமான கேள்விதான் …..அத உங்கப்பகிட்ட போய்க்கேளு….ஆமா அந்த ஒடுகாலிப்பய நல்லாப்படிப்பானே..உனக்குத் தமிழே தடுமாறுதே….அவன் மகனா நீ’

‘நல்ல நேரம் பார்த்து காத்து வாங்கவந்தேன்டா….இந்த ஜிப்பா பாயி என் அம்மா அப்பாவையே மாத்தராரே…நான் ராவணன் மகனா தசரதன் மகனா புரியல்லியே.. பெருமாளேகொஞ்சம் சாந்தோம் வந்துட்டு சந்தேகம் தர்த்துட்டுப்போகப்படாதா…..சரி ததுண்டு சீட்டுக்காரன் மின்னாலே நம் மானம் போக விடப்படாது….டேய் சூனிக்காரா..

சீட்டைக்காமிச்சி காவு வாங்கிட்டயேடா … காத்து வாங்க வந்தேன்.இந்த .பாயி மானத்தவாங்கராரே…..இருக்கட்டும்…கோவிந்தா நீ குளோஸ்யா…வந்து வச்சிக்கறேன்…மவனே…’

‘என்னடா பயலே புலம்பரியா….இதெல்லாம் சகஜம் …எனக்குப்பாரேன்….ரெண்டு சம்சாரம்…ஒருத்தி ஒங்க அத்தை ‘

‘ஐயோ..என்று அலறியே விட்டான் ராஜா…

‘அட..உங்க அத்தை கூட ஜட்ஜ்ன்னு சொல்ல வந்தேன்….சரியா….

‘பாயி தப்புன்னு சொன்னா நீ டைவர்ஸா பண்ணப்போற …பாவி மனுஷா….எங்கம்மா ஒத்தப்பொண்ட்டின்னு நெனைச்சனே….எங்கம்மாவை சொத்தப்பொண்ட்டாட்டி ஆக்கிட்டியே….. ‘

‘சரிடா…எப்படி இருந்தாலும் நீ நம்ம பய …விடு…பாரு ..நீ..பெரிய இடத்தப்பையன்..சரி..ஆனா தமிழ் படிக்காம இருக்கலாமா..அடுத்த ஞாயத்துகிழமை லேர்ந்து வாரா வாரம் நம்ம பாய் கிட்ட தமிழ் படிக்க வர்ரே…’

நம்ம பாய் யாரு…..என்றான் ராஜாராமன்…

அரே.. நான்தாண்டா..இந்தாய்யா…அய்யகாரு இது கீழ்ப்பாக்கம் விலாசம் சுத்த தமிழ்ழே இருக்கு ….ஆளைப்பாத்து விலாசம் கேக்கனும்….இப்ப பசங்களுக்கு தமிழும் தெரியமாட்டேங்கது..இங்கிலீசும் வர மாட்டேங்குது..ரெண்டையும் சாகடிக்கறாங்க இவன்
வெளிநாட்லே படிச்ச பையன்யா….தமிழ் அவனுக்கு வராது…’

பாய் சொல்லிக்கொண்டே போக ராஜஸராமன் அய்யகாருவிடம் திரும்பினான்…..

‘கீழ்ப்பாக்கமாம் …..சரிங்களா…..அய்யகாரு….’

‘இப்படிப்போனா கீழ்ப்பாக்கம் போகலாங்களா……’

‘டோக்கியோ கூடப்போகலாம்…’என்றாம் ராஜாராமன்….

‘அப்ப நேராப்போனா நியூயார்க் போலாமா தம்பி…….’

ராஜாராமன் அகிம்சையே உயிர் என்ற கொள்கையுடையவன்…ஆதலால் அந்த அய்யகாரு தப்பித்தான் எனக்கொள்க…….

வினாடியில் அய்யகாரு காணாமல் போக ராஜாராம் ஒரு வீர சபதம் கொண்டான்….யோவ்….கோவிந்தா….இந்த இந்து மகா சமுத்திரத்தின் மேலே ஆணை மிஸ்.குசல குமாரி யார்னு கண்டு பிடிச்சி எங்கம்மாவோட பெருமையை மீட்பேன்….என்
தாயை பழித்தவனை தமிழ் பழித்தாலும் விடேன்..விடேன்…விடேன்…

அப்புறம் ஒரு சந்தேகம் வந்தது….ஆமாம்…இது என்னகடல் இந்து மகா சமுத்திரமா.. கருங்கடல்…ம்..அரபிக்கடல்…இல்லே…நாசமாபோன கடல்…அம்மாவைக் காப்பாத்துடா..ராஜாராமா…

‘ தம்பி…மூத்திரம் அவசரம்னா அப்பிடி ஓரமாப்போய் விடு….விடேன் விடேன்னு அத்தனை சத்தியம் எதுக்கு..ஆம்பிளைக்கு என்னய்யா….கணக்கு’

ராஜாராமனுக்கு துக்கம் கடல் மாதிரி பொங்கியது..’..அம்மாவுக்காக சபதம் போட்றது கூட தப்புங்களா…..ஏ..தாழ்ந்த தமிழகமே…நீ உயர்வது எப்போ…’ சுற்றி நாலைந்து கிரிக்கட் பசங்கள் விசித்திரமாகப் பார்க்க சடென்று விலகினான்…..

‘பாரு கண்ணா பாய் சொன்னா பரமேஸ்வரனே சொன்ன மாதிரி…ஏண்டா ஒரு அட்ரஸ் படிக்க மாட்டே..மானம் போகுதுடா…மரியாதயா கிளாஸக்குப்போயிடு…’

‘ பாரு ராஜாக்கண்ணா அவரு உன்னை அடிக்காம பாத்தக்கறது என் பொறுப்பு நம்ம ஜட்ஜுக்கு சினேகிதர்…ரொம்ப பெரிய மனுஷன்…உனக்கு சொல்லிக்கொடுக்க ஒத்துட்டதே பெரிய விஷயம்…பச்சியப்ப முதலியாருக்கே அவருதான்டா குரு…என்றாள் அத்தை…

‘ முதலியாரு யாரு அக்கா….’ என்று தாயாரு குறுக்கிட அத்தை கடுத்தாள்…..

‘என்னடி கேள்வி முதலியாரு முதலியாருதான்…நாய்க்கரு நாய்க்கருதான் பச்சியப்ப முதலியாரை உனக்குத்தெரியாது….நம்ம ஜட்ஜ் ப்ரெண்டு இல்லே…’

‘ஓ ‘ …….எனக்க அது தேரியில்லே…..’ என்றாள் தாயாரு….

‘ பாரு மலரு…தப்பு பண்ணுனா முட்டி போடனும்….’

‘அடேய் ….. முட்டி போடறதே தப்புன்னாங்க……’ மலர் கமுக்கமாய்ச்சிரித்தாள்….

‘கன்ப்யூஸ் பண்ணாத மலரு….மாமா..டேய் …பரகாலா…இங்க வாடா….’

இருவரும் வந்தார்கள்.’.இப்ப இங்..என்ன சப்ஜெக்ட் ஓடுதுடா..மாப்ளே….,,,,’

‘நீங்களே கேளுஙு்க மாமா என்றாள் மலர்.. வஷயத்தை எடுத்து உடு ராஜாக்கண்ணா…’

நம்ம பயல் வெகு கம்பீரமாய் ஆரம்பித்தான்….’மாமா…தப்பு பண்ணா முட்டி போடனும்னு நான் சொல்றேன்….முட்டி போடறதே தப்புன்னு இவ சொல்றா …நீங்க ஸீனியர்…கரெக்டா சொல்லுங்க மாமா….’

‘அம்சமான சப்ஜெக்ட் கண்ணா….பட்டி மன்றம் வச்சிடலாம்…..ஏம்மா …வம்புக்கு உனக்கு வேற ஆளே கெடக்கில்லியா ……

‘மலரு பாய் பெரிய ஆளு…பச்சியப்ப முதலியாருக்கே இவருதான் குருவாம்….’

‘யாரு கண்ணா சொன்னாங்க..’.என்றாள் மலர்…..

‘அக்காவும் அத்தையும்….அவங்க ரொம்ப சரியா சொல்லுவாங்க……’

‘பச்சியப்ப முதலியாரே பதறிப்போவாருடா இதக்கேட்டா….’

இப்படித்தான்…காண்டாமிருகம் நடு ராத்திரியிலே முட்டை போடும் என்று அவன் அக்கா சொல்லிவிட்டு போக ராஜாராமன் நடு ராத்திரியொன்றில் வண்டலூர் ஜூவுக்குப் போய் கதவைத்திறக்க கலாட்டா செய்தானாம்….பெரிய பிரச்சினை ஆகி விட்டதாக
ஒரு சரித்திரம் உண்டு…

அந்த ஜூ வாட்ச்மேன் படு புத்திசாலி..’..ஏய் இது ஆம்பிளை காண்டாமிருகம் இது எப்பிடிய்யா முட்டை போடும்…பொம்பிளை காண்டாமிருகம்தான் முட்ட போடும்…அது அஸ்ஸாம் போயிருக்கு..உனக்கு தெரியாம வந்திருக்கே….அடுத்த மாசம் வா அது
முட்டைபோடறதை..சானி போடறதை எல்லாம் காட்டறேன்…..’

‘அத்தை…ராஜாத்தம்பி சட்டைப்பையிலே உங்க கண்ணாடி …….’

திக்கென்றது பிரியாவுக்கும் கிழவிக்கும்…’..ஆமாண்டி என் கண்ணாடி…அவன் பிரேம்ல என் கண்ணாடி போட்டேனில்லே…மாத்திப் போட்டுட்டுப் போயிருக்காண்டி அதான் பயலுக்கு அன்னிக்கு சீட்டைப்படிக்க முடியல்லே….’

‘அத்தே விஷயம் அவனுக்கு தெரிஞ்சா நாம பஜ்ஜிமான்…..’

‘பஜ்ஜியில்லே…. தக்காளி கொத்ஸு…..என்னடி செய்யறது…..மறைச்சிடுவோம்….’

பிரியா ‘சரி’ சொல்லி திரும்பியபோது பின்னாலே அம்மா…..

‘வந்துட்டாடி குசல குமாரி…..’

டக்கென்று உள்ளே நுழைந்தான் ராஜா’..அம்மா பாய் என்னை பாஸ் சொல்லிட்டார்..’

‘ஒரு நாள்ளே எப்படிடா….’

‘மூச்சு விடாம ஆண்டாள் பாசுரம் முப்பதும் சொன்னேனிலே…..பாய் மயங்கிட்டாரு…நீ புடவ கட்டாத ஆண்டாள்டா…என்ன ஸ்பஸ்டமான உச்சரிப்பு நீ தமிழ்ழே டாக்டர் தமிழ் பாய் பட்டம் கொடுத்தாச்சு போடான்னுட்டா்….’

‘என் தங்கம் என்னைக்கும் சோடை போகாது ‘என்று பிரியா அவனை அணத்துக்கொண்டாள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *