பிறந்தநாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 47,004 
 

தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது..

அப்பாவிடம்…

“ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!”

“கபில்தேவ் பேட், அதோட ஒரு ஹீரோ பேனாவும்”

“இப்போ நல்லா ஓட்டுறேன். கால் நல்லா எட்டுது. ஒரு பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர் வாங்கித் தரலாமில்லே”

அம்மாவிடம்…

“கோயிலுக்கு நான் வரலை. பிரண்ட்ஸோட ஜெண்டில்மேன் பார்க்கப் போறேன்”

அப்பா அவருடைய அண்ணனிடம்…

“இவனும் என்னை மாதிரியே மாசக்கடைசியிலே பொறந்து தொலைச்சிட்டானே? இருந்தாலும் என்னத்தைப் பண்ணுறது? ஒரே புள்ளையா பொறந்துட்டான். எத கேட்டாலும் செஞ்சிதான் கொடுத்தாவணும்”

ஆசைகள் எதுவுமே நிராசை ஆனதில்லை. எனக்கு வாய்த்தவர் உலகின் தலைசிறந்த அப்பா.

நடுவில் – அதாவது சிறகு முளைத்துவிட்டதாக நானே நினைத்துக் கொண்டபோது..

கோபாலிடம்…

“இன்னைக்காவது அவகிட்டே பிரபோஸ் பண்ணிடனும்”

அவள்…

“தம்மு கூட அடிக்க மாட்டியா? ச்சே.. என்னடா ஆம்பளை நீ?”

ஜாஹிரிடம்…

“வெற்றிலே கட்டப் பஞ்சாயத்து ஓடுது. நக்மா ஒயின்ஸுலே ஆளுக்கொரு பீர் உட்டுட்டு அப்படியே போயிடலாமா இல்லைன்னா ஜோதியா?”

மெக்கானிக் தமிழ்…

“சில்வர் ப்ளஸ்ஸோட அழகே சில்வர் கலர்தான். நீ ஏண்டா ஃபுல்லா பிளாக் பெயிண்ட் அடிக்கணும்னு சொல்றே?”

பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவிடம்…

“சார் திக இளைஞரணி சார்புலே பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் நடத்தப் போறோம். உங்க கோயில் முன்னாடி மேடை போட்டுக்கறோம்”

யாரோ ஒருவர், ஆள் கூட நினைவில்லை…

“எதுவா இருந்தாலும் முதல்லே உனக்கு மீசை முளைக்கட்டுண்டா வெண்ணை”

நிறைய ஆசைகள் பேராசையாகி நிராசையாகிய பருவம்…

லேட்டஸ்டாக – அதாவது இப்போது…

இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம்…

“சார் ஜீவன் அன்மோல் போட்டுட்டேன். ஜீவன் ஆனந்தும் இருக்கு. வேற ஒரு ரெண்டு பாலிசியும் ஃபேமிலி மெம்பர்ஸ் பேருலே எடுத்துட்டேன். திடீருன்னு ஆக்சிடெண்ட் கீக்ஸிடெண்ட் ஆகி மண்டையப் போட்டுட்டோமுன்னா ஃபேமிலி சேஃப்புதான். இருந்தாலும் குழந்தை ஃப்யூச்சருக்கு ஏதாவது போட்டு வைக்கலாம்னு பார்க்குறேன். லோ ப்ரீயமுத்துலே நிறைய பெனிஃபிட் கிடைக்கிறமாதிரி பாலிசி ஏதாவது பார்த்து சொல்லுங்க சார்!”

பிறந்தநாள் கொண்டாட்டத் தன்மையை இழந்து பீதிநாளாகி வருகிறது 🙁

எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்?

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *