அவர் ஆடமாட்டார்…ஆனா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 42,034 
 

சென்னையை விட்டு வேலை மாற்றத்தால் நான் கொல்கத்தா வந்தேன்.

என் குழந்தைகள் சென்னையிலே படிக்க வேண்டும் என்று என் மணைவி ஆசை பட்டதால், நான் என் மணைவி குழந்தைகளை சென்னையில் விட்டு விட்டு கொல்கத்தாவுக்கு தனியாக வந்து தங்கி இருதேன்.

நான் சென்னையில் இருந்த போது லீவு நாட்களிலும்,ஞாயிற்றுக் கிழமைகளிலும் சீட்டாட் டத்தில் Bridge என்னும் சீட்டாடம் அடி வந்துக் கொண்டு இருந்தேன்.இந்த ஆட்டம் ஆட நான்கு பேர் வேண்டும்.எதிர் எதா¢ல் இருப்பவர்கள் ஒரு கட்சி.இந்த் ரெண்டு கட்சியும் 52 சீட்டுகள் போட்ட பிறகு,தங்களுக்கு வந்து இருக்கும் வலுவான சீட்டுகளைப் பொறுத்து, தன் கட்சிக்காரர் ஆதரவுடன் : “கேட்டு” ஜெயிக்க முயற்சி செய்வார்.

அவர்களுக்கு எதிரில் இருக்கும் கட்சியின் இருவரும்,அவர்களை ஜெயிக்க விடாமல் அவர்களி டம் இருக்கும் வலுவான சீட்டுகளை வைத்து தோற்கடிக்க முயற்சி செய்வார்கள்.

இந்த ஆட்டம் ஆடுவது என்றால் எனக்கு “மைசூர் பாக்கு” சாப்பிடுவது போல. மணிக்கணக் காக நான் இந்த ஆட்டத்தை நான் சென்னையில் இருந்த போது ஆடி வந்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் நான் இப்போது மாற்றலாகி வந்து இருக்கும் இடத்தில் இந்த சீட்டாட்டம் ஆட யாராவது கிடைப்பார்களா என்று தேடி வந்தேன்.

என்னுடன் வேலை செய்து வந்த சக ‘ஆபீஸர்’கள் ஒவ்வொரும் ஞாயிற்றுக் கிழமையும் என் னை அவர்கள் வீட்டுக்கு ‘லன்ச்சுக்கு’ அழைத்ததார்கள்.

தனியாக நான் இருந்ததால்,’இன்னைக்கு சமைக்க வேணாமே’என்று நினைத்து, நான் மறுக் காமல் அவர்கள் வீட்டுக்குப் போய் ‘லன்ச்’ சாப்பிட போய் வந்துக் கொண்டு இருந்தேன்.

‘லன்ச்’ சாப்பிட்டு விட்டு,நான் தங்கி இருந்த ‘ஆபீஸர் கெஸ்ட் ‘ஹவுஸ¤க்கு’ வந்து மீதி பொழுதை வீணாக கழித்து வந்தேன்.அப்போதெல்லாம் ‘நமக்கு யாராச்சும் கிடைச்சா ‘பிரிட்ஜ் சீட்டாடம்’ ஆட்டாம் ஆடி வரலாமே என்று ஏங்கி வந்துக் கொண்டு இருந்தேன்.

அன்று என்னை சாப்பிட அழைத்து இருந்தவர் ஒரு ‘பிரிட்ஜ் இன்ஜினீயர்’.அவர் பழைய பாலங்களை பழுது பார்ப்பது,புது பாலங்கள் கட்டுவது போண்ற வேலையில் ஒரு “இஞ்சினியராக’ வேலை பார்த்து வந்தார்.

என்னுடன் ‘லன்ச்’ சாப்பிட இன்னும் பல இஞ்சினியர்கள் அவர்கள் மணைவியுடன் ‘லன்ச் சாப்பிட அவர் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். வந்து இருந்த எல்லோரும் நல்ல ‘லன்ச்’ சாப்பிட்டோம்.

‘லன்ச்’ முடிஞ்சதும் நான்,’பிரிட்ஜ்’ ஆட்டம் ஆசை மேலிட அந்த ‘பிரிட்ஜ் இஞ்சினியரை’ப் பார்த்து “சார்,நீங்க சீட்டாடத்தில் “பிரிட்ஜ் கேம்” ஆடுவீங்களா.எனக்கு அந்த ‘பிரிட்ஜ் கேம்’ ஆட மிக வும் பிடிக்கும்.நான் சென்னையிலே இருந்தப்ப, நிறைய அந்த ஆட்டத்தை ஆடி இருக்கேன்” என்று ஆவலோடு கேட்டேன்.

ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது.

அந்த “பிரிட்ஜ் இஞ்சினியா¢ன்” மணைவி மிகவும் புத்தி கூர்மையான,அதே நேரத்தில் மிகவும் தமாஷாக பேசும் திறன் படைத்தவர்.

அந்த ‘ப்ரிட்ஜ் இஞ்சினியா¢ன்’ மணைவி சட்டென்று “அவர் ஒரு பெரிய ‘பிரிட்ஜ் இஞ்சினியர்’ தான்.நான் இல்லேன்னு சொல்லலே.அவர் ‘பிரிட்ஜ் கேம்’ ஆட மாட்டார்.ஆனா அவர் கட்டி இருக்கும் ‘பிரிட்ஜ்’ எல்லாம் நல்லா ஆடும்”என்று சொன்னதும் அங்கு இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

‘பிரிட்ஜ் இஞ்சினியர்’ முகத்தில் எண்ணை வழிந்து கொண்டு இருந்தது!!!!

நான் கேட்டதற்கு, சட்டென்று அந்த ‘பிரிட்ஜ்’ இஞ்சினியா¢ன் மணைவியின் சமயோசித தமாஷ் பதிலை கேட்டு அங்கு இருந்த எல்லோரும் மிகவும் ரசித்தார்கள்.

ஒரு பக்கம் நானும் சிரித்தாலும்,மறு பக்கம் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *