கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 14,688 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Ambulimama_Tamil_1996_02_0025-picதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர நடு நிசியில் இப்படி சிரமப் படுவதைப் பார்த்தால் நீ யாருக்கோ ஏதோவாக்குறுதி கொடுத்திருக்கிறாய் என்பது தெரிகிறது. வாக்குறுதி கொடுப்பது எளிது. ஆனால் அதைக் காப்பது கடினம். இதை விளக்க உனக்கு ராணி ரத்தினாவளியின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பிததது.

மங்களபுர மன்னன் மந்தஹாசன். அவன் மனைவி ரத்தினாவளி. ரத் தினாவளி சிறு குழந்தையாக இருந்த போதிருந்தே மந்தஹாசனின் தாய் அவளைத் தன் மகளோடு சேர்த்து வளர்த்து வந்தாள். அவள் விருப்பம் ரத்தினாவளியை மந்தஹாசனுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்பதே.

மந்தஹாசனும் ரத்தினாவளியும் ஒன்றாகவே ஒருவர் மீது மற்றவர் அன்பு கொண்டு வளர்ந்து வந்தார்கள். அவர்கள் விவாக வயதை அடைந்த போது மந்தஹாசனின் தாயார் அவர்களது விவாகம் பற்றிப் பேச்சு எடுக்கவே, ரத்தினாவளி தயங்கினாள். ஏனென்றால் மந்தஹாசன் நன்கு வளர்ந்து மிக மிக அழகாக இருந்தான். ரத்தினாவளியோ அழகு குறைந்தும், நிறத்திலும் சற்று மட்டமாகவும் இருந்தாள். அதனால் அவள் தான் மந்தஹாசனைமணப்பது சரியா என்று யோசிக்கலானாள்.

ரத்தினாவளியை மந்தஹாசனுக்கு அவனது தாய் மணம் செய்து வைக்கப் போவதாக அவளது தோழிகள் அறிந்ததும் அவர்கள் அவளிடம் “ரத்தினா! இப்போது தன் தாயார் சொல்கிறாளே என்பதற்காக அவர் உன்னை மணந்து கொண்டு விடலாம். ஆனால் மிக அழகாக உள்ள உன் கணவரை இன் னொரு பெண்ணோ ஒரு கந்தர்வப் பெண்ணோ மணந்து கொள்ள மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?” என்று ஒரு பிரச்னையைக் கிளப்பினார்கள்.

இதைக் கேட்ட ரத்தினாவளியும் நன்கு யோசித்தாள். ஒருநாள் அவள் மந்தஹாசனிடம் “நான் உங்களை மணக்கக் தகுதி பெற்றவள் அல்ல. நீங்கள் உங்கள் அழகிற்கு ஏற்ப அழகிய பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்ளுங்கள்” என்று கூறி னாள்.

Ambulimama_Tamil_1996_02_0026-picமந்தஹாசனோ அதைக் கேட்டு பல மாகச் சிரித்து “ரத்தினா! வீணாக என் னென்னவோ எண்ணிமனதைக் குழப்பிக் கொள்ளாதே. நான் உன்னைத் தவிர யாரையும் மணக்கப் போவதில்லை. உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு மனைவியாகப் போவதில்லை” என்று கூறினான்.

அது கேட்டு ரத்தினாவளி மகிழ்ந்து போனாள். விரைவிலேயே அவர்களது திருமணமும் நடைபெற்றது.

அவர்களது இல்வாழ்க்கையும் ஆனந்த மாகக் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் மணமாகி சில ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்காததால் ரத்தினாவளி மிகவும் கவலைப்படலானாள்.

ஒரு பௌர்ணமி நிலவில் ரத்தினாவளி தன் கணவனுடன் ஆற்றில் ஒரு படகில் உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தாள். அச்சமயம் சந்திரகாந்தா என்ற கந்தர்வப் பெண் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் மந்தஹாசனையும் ரத்தினாவளியையும் பார்த்தாள்.

சந்திகாந்தா கந்தர்வலோகத்தில் மகா அழகி எனப் பெயர் பெற்றவள். அவள் கந்தர்வலோகத்தில் தான் மணக்கத் தக்கவன் யாருமே இல்லை எனக்கர்வமாகக்கூறி வந்தாள். அவள் மந்தஹாசனைக் கண்டதும் அவனைத் தன் கணவனாக அடைவது என்று எண்ணி அவ்விருவர் கண்களுக்குப் புலப்படாமல் அவர்களோடு இருந்து அவர்கள் தமக்குக் குழந்தை இல்லாத குறை பற்றிப் பேசிக் கொள்வதைக் கேட்டாள். அதன் பிறகு அவள் அப்போது கந்தர்வலோகத்திற்குச் சென்றாள்.

ஆனால் மறுநாள் மந்தஹாசன் தனிமையில் பூங்காவில் இருந்த போது சந்திரகாந்தா அவனைக்கண்டு “நான் கந்தர்வப் பெண். கந்தர்வலோகத்து அழகி என்று பெயர் பெற்றவள். என் அழகிற்கு ஏற்றவன் கந்தர்வலோகத்திலேயே இல்லை. நேற்று நீயும் உன் மனைவியும் படகில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னைக் கண்டது முதல் உன்னையே மணக்க என் மனம் துடிக்கிறது. எனவே என்னை நீ மணந்து கொள்” என்று வேண்டினாள். மந்தஹாசன் அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும் அவளது வேண்டுகோளை நிராகரித்து விட்டான்.

இதனால் சந்திரகாந்தா மனம் தளர்ந்து போய் விடவில்லை. அவள் தனிமையிலிருந்த ரத்தினாவளியைக் கண்டு மந்தஹாசன் தன்னை மணக்க மறுத்ததைக் கூறி “அவன் உன்னைத் தான் மிகவும் விரும்புகிறான். மிக அழகாக உள்ள கந்தர்வப் பெண்ணான நான் வேண்டியும் அவன் என்னை மணக்கச் சம்மதிக்கவில்லை. அழகு பற்றி ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லையே. இது பற்றியாவது நீ யோசித்துப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.

Ambulimama_Tamil_1996_02_0027-picஅது கேட்டு ரத்தினாவளி மனவருத்தப்பட்டாளாயினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஆமாம். இதையெல்லாம் நீ எதற்காக என்னிடம் கூறுகிறாய்?” என்று கேட்டாள்.

சந்திரகாந்தாவும் “எல்லாம் ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன். நீ உன் கணவன் சுகமாக இருக்க வேண்டுமென்று தன் நலம் கருதாமல் இருக்கிறாய் என்பது உண்மையானால் நீ உன் கணவனிடம் என்னை மணந்து கொள்ளும்படிக்கூற வேண்டும். ஒரே வருடத்துள் எனக்கும் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கும். அவர் என்னுடன் சுகமாக இருக்கலாம். என்னை அவர் மணந்து கொண்டாலும் அவர் உன்னை உதாசீனப்படுத்த மாட்டார். நீ சுயநலமில்லாமல் அவரது நலனையே கருதுவதற்காகவும் அவர் உன்னைப் பாராட்டுவார். இது பற்றி நன்கு யோசித்துப் பார்” என்றாள்.

ரத்தினாவளியும் சற்று யோசித்து விட்டு “இதற்கு ஒரு நிபந்தனையின் பேரில் நான் சம்மதிக்கிறேன். இன்று சித்திரை மாத கிருஷ்ண பட்சப் பஞ்சமி. இன்றிலிருந்து சரியாக ஒரு வருட கால அவகாசம் எனக்குக் கொடு. அடுத்த ஆண்டு சித்திரை மாத கிருஷ்ண பட்சப் பஞ்சமிக்குள் நான் தாயாக ஆகாவிட்டால் என் கணவர் உன்னை மணந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன். இது நான் கொடுக்கும் வாக்குறுதி” என்றாள்.

சந்திரகாந்தாவும் அதற்குச் சம்மதித்து விட்டு அங்கிருந்து சென்றாள். அதற்கு மறுநாள் ரத்தினாவளி கோவிலுக்குப் போய் அம்பிகையை தரிசித்து விட்டுத் திரும்பிவரும் போது அக்கோவிலில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு சாது அவளை தன்னருகே அழைத்து “பெண்ணே! நீ உனக்குத் குழந்தை பிறக்கவில்லையே என்று தானே கவலைப்படுகிறாய்?” என்று கேட்டார். அவளும் ‘ஆம்’ என்று கூறவே அவரும் “எங்கே , உன் கையைக் காட்டு” என்றார். அவளும் தன் இடது கையை நீட்டவே அவர் அதன் ரேகைகளைப் பார்த்து விட்டு “உன்கையில் சந்தானரேகை என்பதே இல்லையே. ஆனாலும் உன் எதிர் காலம் ஒளி மயமாக இருக்கும் நீ ஒரு வேலை செய்வாயா?” என்று கேட்டார்.

அவளும் “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கவே அவரும் “இந்நாட்டின் வடதிசையில் மந்தரமலைத் தொடர் உள்ளது. அதன் நடுவே செல்லும் கணவாய் வழியே போனால் மலையின் மறுபுறம் சிவபாதர் என்று மகானின் ஆசிரமம் உள்ளது. நீயும் உன் கணவரும் சித்திரா பெனர்ணமியன்று அதிகாலையில் அவரை கண்டு சிருங்கர் என்பவர் உங்களை அவரிடம் அனுப்பியதாகக் கூறினால் அவர் உங்களுக்கு எதாவது வழி கூறுவார்” என்றார்.

Ambulimama_Tamil_1996_02_0028-picஅவளும் “சுவாமி! தாங்கள் கூறிய படியே செய்கிறோம்” என்று கூறி அவரை வணங்கி விட்டுச்சென்றாள். அன்றிரவு ரத்தினாவளி தன் கணவனி டம் சாது கூறியதைச்சொல்லி. “இதையும் கடைசி முயற்சி என்று பார்த்து விடலாம். ஒருவேளை அந்த மகானின் அருளால் நமக்கு சந்தான பாக்கியம் கிடைத்தாலும் கிடைக்கலாம். எனக்காக நீங்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டும்” என்றாள். மந்தஹாசனும் “ரத்தினா! நாம் இருவரும் கணவன் மனைவியர். சுகதுக்கங்களைச் சமமாகப்பகிர்ந்து கொள்ள வேண்டியவர்கள். இதுவரை இப்படித்தான் இருந்தோம். இனியும் இப்படியே இருப்போம்” என்றான்.

சாது கூறியபடியே ரத்தினாவளியும் மந்தஹாசனும் மந்திர மலைக் கணவாய் வழியே சென்று சிவபாதரின் ஆசிரமத்தை அடைந்தார்கள். சித்திரா பௌர்ணமியன்று காலையில் அவர்கள் அவரை தரிசித்து சிருங்கர் என்பவர் அவர்களை அனுப்பியதாகக் கூறினார்கள்.

சிவபாதரும் அவர்களிடம் கனி வுடன் பேசி அவர்களது பிரச்னை யைத் தெரிந்து கொண்டார். பிறகு அவர் மந்தஹாசனிடம் அவனது வலது கையை நீட்டச்சொல்லி அதன் ரேகைகளைப் பார்த்தார். சற்று நேர மானதும் அவர் ”உன் கையிலும் சந் தான ரேகை என்பது இல்லை. அத னால் எதாவது ஒரு அற்புதம் நிகழ்ந் தால்தான் உங்களுக்குக் குழந்தை பிறக்க வழி உண்டு’ என்றார்.

அது கேட்டு ரத்தினாவளியும் மந்தஹாசனும் “அற்புதம் நிகழ வேண்டுமா? அது எப்படி?” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள் சிவபாதரும் “ஆமாம். நான் சொல்வதைக் கேளுங்கள். இங்கிருந்து மூன்று யோசனை தூரத்தில் மிகப் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. அதில் மிகப் பழைய மாமரம் ஒன்று இருக்கிறது.

Ambulimama_Tamil_1996_02_0029-picஅது ஒரு வருடத்திற்கு ஒரு பழம் தான் கொடுக்கும். பயபக்தியுடனும் அந்த ரங்கசுத்தியுடன் இருந்து ஒருவன்தான் அடைய வேண்டியதை நினைத்துக் கொண்டு அந்தப் பழத்தைத் தன் துண்டில் பிடித்துக் கொள்ள அந்த மரத்தின் கீழ் நிற்க வேண்டும். அவன் நேர்மையானவன் என்றால் அந்தப் பழம் அவன் பிடித்திருக்கும் துண்டில் தானே வந்து விழும். அவன் நேர்மையற்றவன் என்றால் பழம் தரையில் விழுந்து விடும். தரையில் விழுந்த அந்தப் பழத்தை எடுத்துத் தின்றால் எவ்விதப் பலனும் கிடைக்காது. துண்டில் விழுந்த பழத்தை எடுத்துச் சாப்பிட்டாலே மனதில் எண்ணியது நடக்கும். இன்றிரவு சந்திரோதயம் ஆகும் போது நீங்கள் அந்த மரத்தடியே போய் நில்லுங்கள். மந்தஹாசன் தன் அங்கவஸ் திரித்தை விரித்து நிற்கட்டும். ரத்தினாவளி தன் புடவையின் தலைப்பை விரித்து பிடித்துக் கொண்டு நிற்கட்டும். யாருக்குப் பழம் கிடைக்கிறதோ பார்க்கலாம்” என்றார்.

அப்போது ரத்தினாவளி “சுவாமி! நான் விரும்புவதெல்லாம் எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதே” என்றாள். அது கேட்டு சிவபாதர் “தர்ம சூட்சுமத்தை யார் அறிவார்? எல்லாம் அந்த பகவானின் செயல். அவன் இஷ்டப்படிதான் எதுவும் நடக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். ரத்தினாவளியும் மந்தஹாசனும் சிவபாதரிடம் விடை பெற்றுக் கொண்டு சந்திரோதயம் ஆவதற்கு முன் அந்த சிவாலயத்தை அடைந்தார்கள். அவர்கள் அங்கிருந்த பழைய மாமரத்தடியே நின்றார்கள். மந்தஹாசன்தன் அங்கவஸ்திரத்தை விரித்துப்பிடித்துக்கொண்டும் ரத்தினாவளி தன் புடவைத் தலைப்பை விரித்துப் பிடித்துக் கொண்டும் நின்றனர்.

சந்திரோதயம் ஆயிற்று மரத்தி லிருந்த மாம்பழம் மெதுவாகக் கீழே சாய்ந்து வரலாயிற்று. அது நேராக மந்தஹாசனின் அங்கவஸ்திரத்தில் வந்து விழுந்தது. அது கண்டு ரத்தினாவளி ஆச்சரியப்பட்டாள். அதன்பின் இருவரும் அந்தப் பழத்தைப் பகிர்ந்து தின்றார்கள். அதன் பின் ரத்தினாவளி “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு நின்றீர்கள்?” என்று கேட்டாள்.

Ambulimama_Tamil_1996_02_0030-picமந்தஹாசனும் “ரத்தினா! நான் சொல்லப்போவதைக் கேட்டு நீ மகிழ்வாய் என்றே நினைக்கிறேன். இந்தப் புனித மரத்தடியே நின்று தாம் கோருவது நியாயமானதாய் இருக்க வேண்டும். நமக்கு சந்தான பாக்கியம் இல்லை என்று விதிக்கப்பட்டது. அதை மீறி நமக்குக் குழந்தை வேண்டு மென்று விரும்புவது சரியா என்றுநான் சந்தேகப்பட்டேன்! முறையாக கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தை பிறக்க வேண்டும். வேறு எவ்வழியில் அது பிறந்தாலும் தர்ம நியாயமாகாது. எனவே நாம் இருவரும் வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்கும்படிச் செய்தாலே போதும் என நினைத்தேன். அவ்விதமே ஆசி கூறும்படி அந்த மரத்திடமும் வேண்டினேன்” என்றான்.

அது கேட்டு ரத்தினாவளி திகைத்தாலும் தனக்கு இப்படி உயர் நோக்கம் கொண்ட கணவன் கிடைத்ததற்காக மகிழ்ந்தாள். மறுநாளே அவர்கள் தலைநகருக்குத் திரும்பி வந்தார்கள். இதற்குப் பின் ஐந்தாவது நாள் கிருஷ்ண பட்சப் பஞ்சமி வந்தது. சந்திரகாந்தாவும் ரத்தினவளியைப் காண வந்தாள்.

ரத்தினாவளியும் அவளை வரவேற்று உட்கார வைத்து “சந்திர காந்தா! நான் கொடுத்த வாக்கின் படி நடக்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. என் கணவர் என்னைத் தவிரவேறு எந்தப் பெண்ணையும்தம் மனைவியாக ஏற்க முடியாது என்று கூறி விட்டார்” என்று கூறி எல்லாவற்றையும் விவரமாகக் கூறினாள்.

எல்லாவற்றையும் கேட்ட சந்திரகாந்தா “ரத்தினா! நீ மிகவும் கொடுத்து வைத்தவள். விரைவிலேயே உங்களுக்குக் குழந்தை பிறக்க ஆசிகூறுகிறேன்” எனக்கூறிவிட்டு மறைந்து போனாள். என்ன ஆச்சரியம்! விரைவிலேயே ரத்தினாவளி கர்ப்பவதியாகி அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதாளம் இக்கதையைக் கூறி “மன்னனே! ரத்தினாவளி சந்திரகாந்தாவிற்குத் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனதும் சந்தான ரேகையே இல்லாத ரத்தினாவளி குழந்தை பெற்றதும் சரியா? இக்கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

Ambulimama_Tamil_1996_02_0031-picவிக்கிரமனும் “ரத்தினாவளி தன் சுயநலம் காரணமாக வாக்குத் தவறவில்லை. அவளது கணவன் கூறிய விளக்கம் அவளுக்குச் சரியானது எனத் தோன்றியது. ஏனெனில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காது என விதி எழுதிவிட்டது. அதை மீறினால் தர்மத்திற்கு விரோதமாகும். எனவே இருக்கும் வாழ்நாளைச் சுகமாகக் கழிக்க மந்தஹாசன் எண்ணியது சரியே என அவள் எண்ணினாள். இப்படி இருவரும் எண்ணியது மிக உயர்ந்த நோக்கமாகும். இது நிறைவேற ஆசி கூறினாள் சந்திரகாந்தா. எனவே மந்தஹாசனின் உயர்ந்த நோக்கம் சந்திரகாந்தாவை மணக்க விடாமலும் ரத்தினாவளிக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தையும் அளித்தது” என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன்சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– பெப்ரவரி 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *