கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 14,032 
 

Ambulimama_Tamil_1996_01_0009-picரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில் போய் வேட்டையாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருமுறை தன் பரிவாரங்களோடு காட்டிற்கு வேட்டையாட அவன் சென்றான். அவன் சில மிருகங்களை வேட்டையாடி விட்டு ஒரு மரத் தடியே தங்கினான். ஓரிரு நிமிடங் களுக்குப் பின் அந்த மரத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு புதரில் ஏதோ சந்தடி ஏற்பட்டது. அவன் என்ன வென்று திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு புலி அவனை நோக்கிப் பாய வந்தது. |

ரத்தினசேனன் சட்டெனத் தன் கேடயத்தால் தன்மீது பாய வந்த புலி யைத் தடுத்துத் தள்ளினான். அது எழுந்து மீண்டும் தாக்க வருவதற்குள் அவன் தன் இடைவாளை உருவிக் கொண்டு அதன் கழுத்தை ஒரே வெட் டில் வெட்டினான். அது பலமாக அலறிக் கத்தியவாறே சுருண்டு விழுந்து இறந்தது.

இதைக் கண்டு மன்னனோடு வந்த வீரர்கள் அவனது துணிச்சலைதம் மன திற்குள்ளேயே பாராட்டிக் கொண் டார்கள். அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புலியைப் பார்க்க அதை சுற்றி நின்றார்கள். அப்போது புதரில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

ரத்தினசேனன் கையில் பிடித் திருந்த வாளுடன் அப்புதரருகே சென் றான். அப்போது ஒரு புலிக் குட்டி அங்கிருந்து ஓடி வந்து ஒரு வீரனின் மீது விழுந்து அவனைப் பிராண்டி யது. அது பிறந்து ஒரு மாதம் கூட ஆகி இருக்காது என்றே யாவருக்கும் தோன்றியது.

Ambulimama_Tamil_1996_01_0010-picபுலிக்குட்டி கீழே இறந்து கிடக்கும் புலியைச் சுற்றி சுற்றி வந்து முனக லாயிற்று. இதைக் கண்டு ரத்தின சேனனின் மனம் இளகி விட்டது. அவன் மெதுவாகப் போய் அதைப் பிடித்துத் தன் கையில் எடுத்துக் கொண்டு தடவிக் கொடுத்தான். அது வும் அவன் கையைப் பரிவுடன் நக்கி யது.

அவன் அப்புலிக் குட்டியிடம் ‘கோபப்படாதே. என்னைக் காத்துக் கொள்ளத்தான் உன் தாயைக் கொல்ல நேர்ந்தது” என்று கூறினான். பிறகு அவன் வேட்டையை முடித்துக் கொண்டு புலிக் குட்டியுடன் அரண் மனைக்குச் சென்றான். அங்கு தன் மனைவி ரமாதேவியிடம் அப்புலிக் குட்டியைக் காட்டவே, அவளும் ”இது புலிக் குட்டி. என்னதான் இதற் குப் பால் கொடுத்து வளர்த்து வந்தா லும் இதன் இயற்கையான புலிக் குணம் போய்விடாது. இது வளர்ந்து பெரிய புலியானால் நம்மையே அடித் துக் கொன்று விடுமே. இதை அரண் மனையில் வளர்ப்பது பற்றி நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்” என் றாள்.

அப்போது ரத்திசேனன் பெருமூச்சு விட்டு காட்டில் நடந்ததை அவளிடம் விவரமாகக் கூறி ”இது தன் தாயை இழந்து கத்திக் கொண்டிருந்தது பரி தாபமாக இருந்தது. அதனால் இதனை எடுத்து வந்தேன். இதனை இப்போது முதலே நாம் இங்கு வளர்த்து வந்தால் இதன் கொடிய குணம் போய்விடும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை பெரிதானதும் காட்டுப்புலி போலக் கொடியதாக இருந்தால் இதனைக் காட்டில் கொண்டு போய் விட்டு விடலாம்” என்றான்.

அன்று முதல் மூன்று வேளைகளி லும் ரத்தினசேனனே அந்தப் புலிக் குட்டிக்கு பாலை வைத்து குடிக்கச் செய்து வந்தான். ஒரு மாதகாலத்தில் அது எல்லோரிடமும் நன்கு பழகி விட்டது. பூனைக் குட்டி போல அந்தப்புரம் முழுவதும் திரிந்து வந் தது. ராணியின் மடியில் படுத்துத் தூங்கி வந்தது. ஒரு வருடம் கழியவே அது நன்கு வளர்ந்து பெரிய புலியாக ஆகியது.

புலிக்குட்டியாக இருந்து புலியான தும் அது மாமிச உணவை உண்டு வந்தது. ஆனால் அது அந்தப்புரத்தி லுள்ள மனிதர்களுக்கோ, பிராணி களுக்கோ எவ்விதத் தீங்கும் இழைக்க வில்லை . அது ஒரு வளர்ப்பு வீட்டு மிருகம் போலச் சாதுவாக இருந்து வந்தது. |

Ambulimama_Tamil_1996_01_0011-picஇப்படி இருக்கையில் திடீரென அந்தப் புலியின் முதுகில் ஒரு கட்டி தோன்றியது. அது ஒரு வாரத்தில் பெரி தாய் வீங்கி விடவே மிருக வைத்தி யரை அழைத்துவந்து காட்டினார்கள். அவரும் அதனைப் பரீட்சித்துப் பார்த்து விட்டு மன்னனிடம் ”அரசே இது புலிக்கு வரும் அபூர்வ ராஜ பிளவை. சாதாரண மருந்துகளால் இதை குணப்படுத்த முடியாது. இதை குணப்படுத்த ஒரு களிம்பை பனி ரெண்டு மூலிகைகள் கொண்டு தயா ரிக்க வேண்டும். பதினோறு மூலிகை கள் என்னிடம் உள்ளன. சிந்தூர சுதா மலர் என்பதுதான் பனிரெண்டாவது. அது மூன்றடி உயரச் செடியில் வருடத் திற்கு ஒருமுறை தான் மலர்வது. அது வேறு எங்கும் கிடைக்காது மரகதபுரி மன்னன் மாணிக்கசேனனின் பூங்கா வில் இருக்கிறது” என்றார்.

மாணிக்கசேனனின் பெயரைக் கேட்டதும் ரத்தினசேனனுக்குக் கோபம் வந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவனுக்கு நினைவிற்கு வந்தது. – கனகபுரி இளவரசி காஞ்சனாவின் சுயம்வரத்திற்கு எல்லா அரசகுமாரர் களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப் போது ரத்தினசேனன் இளைஞன். அவன் சுயம்வரத்திற்குப் போயிருந் தான். சுயம்வரத்தின் போது அவன் மரகதபுரி இளவரசன் மாணிக்க சேனனின் அருகில்தான் உட்கார்ந்தி ருந்தான்.

காஞ்சனா கையில் மாலையுடன் வந்தவள் எந்த இளவரசனையும் பாரா மல் நேராக மாணிக்கசேனன் அமர்ந் திருந்த இடத்திற்குப் போய் அவன் கழுத்தில் மாலையைப் போட்டாள். அப்போது அவன் ரத்தினசேனனை ஏதோ போரில் வென்று விட்டவன் போலப் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு சிரித்தான்.

ரத்தினசேனனுக்கு ஆத்திரமும் கோபமும் வந்துவிட்டது. அவன் உடனே மாணிக்கசேனனைப் பார்த்து ”அற்பனே! ஒரு பெண் உன்கழுத்தில் மாலையைப் போட்டு விட்டால் நீ வீராதி வீரன் ஆகிவிட்டாய் என்ப தல்ல. சுத்த வீரனின் லட்சணம் அவன் பிறருடன் போர் புரிந்து தானே சிறந்த வன் என்று நிரூபிக்க வேண்டும். நீ இப்போது என்னுடன் வாட்போர் புரிவதற்குத் தயாரா?” என்று சவால் விட்டான்.மாணிக்கசேனனும் வாளை உருவிக் கொண்டு ”இதோ பார். வெறும் வாட்போர் புரிவதால் என்ன பயன்? உன் நாட்டிற்கும் என் நாட்டிற்கும் முத்துக் கோட்டம் என்ற பகுதி பற்றிய தகராறு நிலவி வரு கிறது. இந்த வாட்போரில் நான் வெற்றி பெற்றால் அது என் நாட்டிற் குச் சொந்தம் என்றும் நீ வெற்றி பெற் றால் அதை நீ உன் நாட்டோடு சேர்த் துக் கொள்ளலாம் என்று பந்தயம் வைத்துக் கொள்வோம். இதற்குச் சம்மதிக்கிறாயா?” என்று கேட்டான்.

Ambulimama_Tamil_1996_01_0012-picரத்தினசேனனும் சம்மதிக்கவே சுயம்வரமண்டபம் அப்போதே வாட் போர் மேடையாக மாறியது. ரத்தின சேனனுக்குத்தன்னையாராலும் வாட் போரில் வென்றுவிடமுடியாது என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே வாளை உருவிக் கொண்டு மாணிக்கசேனனை எதிர்க்க நின்றான்.

போட்டி ஆரம்பமாகியது. இரு வரும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் அல்ல. தாக்குதல் வெகு நேரத் திற்கு நடந்து கொண்டிருந்தது. மாணிக்கவர்மன் களைத்துப் போய் விட்டான். அவன் தோற்றுப் போய் விடுவான் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. அப்போது ரத்தினசேனன் தன் வலது கையிலிருந்த வாளால் மாணிக்கசேனனை பலமாகத் தாக்க ஒரு வீச்சு வீசினான்.

ஆனால் மாணிக்கசேனன் அதிலி ருந்து தப்பச் சட்டென விலகி விட் டான். அதனால் ரத்தினசேனனின் வலது கைவாள் அவனது இடது கையில் பலமாகப்பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்தியது. ரத்தின சேனன் வலி பொறுக்க முடியாமல் தன் வாளை நழுவ விட்டான். இவ்வாறு ரத்தினசேனன் தன்னைத் தாக் கிக் கொண்டு அந்தப் போட்டியில் தோற்றுப் போனான். இது எதிரியின் சாமர்த்தியத்தால் அல்ல, தன் துர திர்ஷ்டத்தால் தான் என்று அவன் மனம் தேறினாலும் ஒப்பந்தப்படி தோல்வியை ஒப்புக்கொண்டு முத்துக் கோட்டத்தை மாணிக்கசேனனுக்குக் கொடுத்து விட்டு அவமானத்துடன் ரத்தினபுரிக்குத் திரும்பினான். அன்று முதல் மாணிக்க சேனனைத் தன் ஜென்ம விரோதியாகக்கருதி வந்தான்.

தன் கணவனின் மன நிலையைப் புரிந்து கொண்ட ரமாதேவி ”இது பகைமையையும் பிடிவாதத்தையும் காட்டும் நேரமல்ல. எப்படியாவது மாணிக்கசேனனின் பூங்காவிலுள்ள சிந்தூர சுதாமலரைக் கொண்டுவந்து புலியைக் காப்பாற்றியே தீர வேண் டும்” என்றான்.

Ambulimama_Tamil_1996_01_0013-picரத்தினசேனனும் ”அப்படியா னால் மரகதபுரி மீது படை எடுத்துப் போய் அதைக் கொண்டுவர வேண்டி யதுதான்” என்றான். அப்போது ரமா தேவி ”நன்றாக யோசித்துப் பாருங் கள். அந்த மலருக்காக ஒரு நாட்டுடன் போர் புரிவது சரியா? நீங்கள் போர் புரிந்து அதை அடைய முடியும் என் பது என்ன நிச்சயம்? மாணிக்கசேனன் அந்த செடியையே அழித்து விட்டால் என்ன ஆகும்? இதில் உங்கள் பெயர் தான் கெடும்’ என்றாள்.

ரத்தினசேனனும் ”சரி. அப்படி யானால் புலியை எப்படிக்காப்பாற்று வது?” என்று கேட்கவே, ரமாதேவி யும் ‘நான் சொல்வதைச் சற்று பொறு மையுடன் கேளுங்கள். நம் மகனும் மாணிச்சசேனன் மகள் மஞ்சுளாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார் கள். அவர்களது திருமணம் நடந்தால் பிரச்னை தீரும்” என்றாள்.

ரத்தினசேனனோ ”என் பகைவ னின் மகளைப் என் மருமகளாக நான் ஏற்பதா! முடியாது” எனக் கத்தவே ரமாதேவியும் அமைதியுடன் பாருங் கள்! காட்டின் புலிக்குட்டி மனிதர் களிடையே வளர்ந்து தன் வெறியை யும் கொடூர குணத்தையும் விட்டு விட்டது. மனிதர்களாகிய நாம் கோபத்தையும் பகைமையையும் விட்டுவிட முடியாதா? இன்னமும் மாணிக்கவர்சேனனின் மீது ஏன் வெறுப்பு? இதே புலி நீங்கள் அதன் தாயைக் கொன்று விட்டீர்கள் என்ப தற்காக உங்கள் மீது வெறுப்பு கொண்டுள்ளதா? இல்லையே. உங் களிடம் அன்புடன்தானேபழகுகிறது. ஒரு கொடூர குண மிருகமே முற்றி லும் மாறும்போது மனிதன் தன் கோப தாபங்களை விட்டு விட்டு பகை மையை மறந்து அன்புடன் எல்லோ ரிடமும் பழகக் கூடாதா?” என்று கூறினாள்.

Ambulimama_Tamil_1996_01_0014-picரத்தினசேனனும் ரமாதேவி கூறி யதை கேட்டு சற்று யோசித்து ”ஆமாம். நீ கூறுவது சரிதான்” மாணிக்கசேனனுக்கு நம்முடன் சம் மந்தம் செய்து கொள்ள ஆட்சேபணை இல்லையென்றால் எனக்கும் இத் திருமணத்தில் சம்மதமே. ஆனால் முதலில் நாம் மரகதபுரியிலிருந்து அந்த மலரைக் கொண்டு வந்தால் தானே நம் புலியைக் காப்பாற்ற முடியும்?” என்றான். அப்போது அங்கு வந்த மிருக வைத்தியர் மன்னனை வணங்கி “அரசே! என்னை மன்னியுங்கள். களிம்பு தயாரிக்க சிந்தூர சுதா மலர் ஒன்றும் தேவையில்லை. என்னிட முள்ள சில மூலிகைகளே போதும். உங்கள் மனதை மாற்றவே மகாராணி யார் கூறியபடி சிந்தூர சுதா மலர் பிரச்னையைக் கிளப்பி விட்டேன். பிரச்னை தீர்ந்து அது இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது” என்றார்.

இதைக் கேட்ட ரத்தினசேனன் புன்னகை புரிந்து ”ஓஹோ ! விஷயம் இப்படியா போகிறது? நீங்கள் மிருக வைத்தியர் மட்டுமல்ல, மன இயல் மருத்துவரும் கூட எனவே உங்களுக் குப் பரிசுகள் அளிக்க வேண்டும். இருநாடுகளின் பகை மறையவும் என் மகனின் திருமணத்திற்கும் வழி செய்த உங்களுக்கு இந்த முத்து மாலையைப் பரிசாக அளிக்கிறேன்” எனக் கூறித் தான் அணிந்திருந்த முத்துமாலை யைக் கழற்றி அந்த வைத்தியருக்கு அணிவித்தான்.

– ஜனவரி 1996

Print Friendly, PDF & Email

1 thought on “புலியால் புதுமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *