கடவுள் வசிக்குமிடம்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,821 
 

மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான்.

இருட்டி விடவே, இனிமேலும் பயணம் வேண்டாம் என்று முடிவு செய்து, அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.

மிகவும் பசியாக இருக்கிறதே என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு பஞ்சணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவுடன் பஞ்சு மெத்தையும் வந்தது.

அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.

உடனே இரண்டு பேர் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

இது ஒரு பூதத்தின் வேலையாகத்தான் இருக்கும், அது வந்து நம்மை விழுங்கப் போகிறது என்று நினைத்தான்.

அதன்படியே பூதம் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்…

– தேனி முருகேசன் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *