ஏறைக் கோன் குணம் எவர்க்கு வரும்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,281 
 

குற்றம் புரிந்த நண்பரைப் பொருத்தருள்வான் பிறருடைய வறுமையைக் கண்டு, நாணம் அடைவான் மூவேந்தர் அவைக்களத்தில் மேம்பட்டு நடப்பான்!
அவன் பெயர் ஏறைக்கோன்! அவன் எங்கட்குத் தலைவன்…

உங்கட்கும் தலைவர்கள் உண்டல்லவா? அவர்களின் பண்புகளைக் கூறுங்கள் பார்க்கலாம்! அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்பதை நன்கு அறிவேன்.

எங்கள் தலைவனைப் பற்றி இன்னும் கேளுங்கள். எங்கள் தலைவன் வில் தொழிலில் வல்லவன். அகன்ற மார்பினன். கொல்லும் வேலினன். காந்தள் கண்ணியன். அவன் மலையில் மேகம் தங்கும். கலைமான் பெண் மானை அழைக்கும். இதனை ஆண் புலி செவி தாழ்த்திக் கேட்கும். அம்மலை நாட்டுத் தலைவனுக்கு எல்லாம் தகும்.

இவ்வாறு இளவெயினி என்னும் குறமகள் குறவர் தலைவனான ஏறைக்கோனைப் பாடினாள்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *