தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,226 
 

குருகுல மாணவர்களுக்கு உத்தமன், மத்திமன், அதமன் ஆகியோரின் தன்மைகளைப் போதிக்க நினைத்தார் ஒரு குரு.

அச்சு அசலாக மூன்று மாணவப் பொம்மைகளைக் காட்டி, அவற்றின் காது மற்றும் வாய் ஆகியவற்றில் நுண்ணிய துவாரம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பின்னர் –

ஒரு பொம்மையின் காது வழியே ஒரு சிறு குச்சியை நுழைத்தார். அது பொம்மையின் வாய் வழியே வெளிப்பட்டு வந்துவிட்டது.

குரு சொன்னார்: “”இவன்தான் அதமன். தன் காதால் கேட்டவற்றையெல்லாம் கண்டவர்களிடமும் தனது வாயால் சொல்லி விடுவான்.”

அடுத்த பொம்மையின் காதிலும் குச்சியை நுழைத்தார். அந்தக் குச்சி மற்றொரு காதின் வழியே வெளியே வந்தது. இப்போது குரு சொன்னார்: “”இவன்தான் மத்திமன். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே விட்டுவிடுவான். இவனால் நன்மையும் கிடையாது; தீமையும் கிடையாது.”

மூன்றாவது பொம்மைக்கு வந்தார். அதன் காதிலும் குச்சியை நுழைத்தார். அது உள்ளேயே நின்றுவிட்டது.

குரு சொன்னார்: “”இவன்தான் உத்தமன். நல்லவற்றை வாழ்வில் முன்னேறப் பயன்படுத்துவான். கெட்டவற்றை மனத்திலேயே புதைத்து விடுவான். நீங்களும் இந்த உத்தமனைப் போன்று கவனமாகக் கேட்டு நல்லவற்றைப் பயன்படுத்தினால் முன்னேறலாம்!”

– செ.சத்தியசீலன், கிழவன் ஏரி (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *