கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 12,829 
 

ஸ்ரீதரிடம் சம்பளம் வாங்கிட்டு தயக்கமாக நின்றார் ஆறுமுகம்.

“ம்ம்ம்… என்னங்கய்யா சொல்லுங்க”

“ஐயா… நான் ஊருக்கே கிளம்பீர்லாம்னு இருக்கங்க”

“ஏன் என்னாச்சு? திடீர்னு சொல்றீங்க”

“அதுவந்துங்.. உடம்பு சரியில்லைங்க ராவெல்லாம் தூக்க முழிக்கறது நம்ம உடம்புக்கு ஒத்துக்கலைங்க”

“அப்படியா… என்னாச்சு உடம்புக்கு”

“காலை எந்திரிச்ச தலை சுத்துதுங்க மதியன வெய்யநேர கண்ண கட்டி இருட்டாயிருது”

“அப்படியா.. அதுக்கு எதாவது டாக்டரகீது பாத்து உடம்ப சரிபண்ணிட்டு வேலைய பாக்கலாமல்ல ஏன்ஒரேடியா வேலையே வேணானுட்டு போறீங்க?

இல்லைங்கய்யா ஊரைவிட்டு வந்து ஆறு வருஷமாச்சு வெறும் பொங்கலுக்கும், தீபாவளிக்கும், ஊருக்கு போயி மனைவி குழந்தைகள பாக்க மனசு கஷ்டமா இருக்கு நல்லதோ கெட்டதோ ஊருக்கே போயி கொஞ்சோண்டு இருக்குற நிலத்த உழுது பொழச்சுக்கிலாமுனு இருக்கேன் பையன் பெருசாயிட்டான் பள்ளிகோடமெல்லாம் சரிய போகம ஊருசுத்தரானாம் அப்பன்கார பக்கத்துல இருந்தாலே இந்த காலத்துல உருப்படாத பசங்க வெளியில இருந்த உருப்படியாகுமா. அதுஇல்லாம அங்க உருக்குல்ல நல்ல பொழப்பு ஒன்னுகிடையாது நான் போயி அவனுக்கு சோறு போடற விவசாயத்தையாவது கத்துகூடுக்கலாமுனு இருக்கேன்.”

“நிலம் இருக்குது சரி விவசாயத்துக்கு தண்ணியெல்லாம் கிடைக்குதா?”

“அது… கிணறு இருக்கு அதுல ஒரு போகமும் வாய்கால வர தண்ணில ஒரு போகமு பண்ண வேண்டியதுதான்.”

“அப்படி பண்ணி என்ன மிச்சமாக போகுது அதுக்கு இங்க இருந்த ஏதோ நாலு காசு மிச்சமாச்சுனா பொட்டபுள்ளக்கு சேத்து வெச்ச பிரயோஜன மாகுமல்ல.”

“அது சரிதாங்க நான் ஊரவிட்டு வரும்போது கடனாளியாயி நிலத்தோட பத்தரத்த பண்ணையாருட்ட அடமான வெச்சு அதுக்கு வட்டிக்கு பதில என் பொண்ஜாதியும் காளைமாடுகளையும் பண்ணயத்து வேலைக்கு விட்டு வந்தேன் ஏதோ நாலு காசு மிச்ச பண்ணி பண்ணையாரு கடன கட்டிட்டேன்.

இருந்தாலும் ஊருக்குள்ள நல்ல விவசாயிய இருந்துட்டு இங்க காவக்கார வேலைபாக்கறது கஷ்டமா இருக்குது அதுக்காக இந்த பொழப்ப கொற சொல்லுல உங்கமாரி மொதலாளி கடச்ச இந்த பொழப்பும் ஒன்னும் குறை இல்ல. அதுஇல்லாம பொண்ஜாதியும் பண்ண வேல பாக்க முடியலங்கற பள்ளிகோட லீவு அன்னைக்கு புள்ளையையும் கூட்டிட்டுவானு புள்ளைகிட்டையும் வேலவாங்கறாங்களாம பண்ணையாரம்மா ஒத்த புள்ளய செல்லம வளத்து அது அடுத்தவுட்டு வேலை செய்றத பாக்க முடியலங்கற அத அவ சொல்றத என்னாலையும் கேட்க முடியல அதாங்க என்னாலும் சரி கூலே குடிச்சாலும் இனிமே கடனும்வாங்கம வெளியுரு வேலைக்கு வராம ஊருக்குள்ளேயே இருந்தராலம்னுதான் கிளம்பரேன்ங்கரேன்.”

ம்ம்.. அப்போ உறுதிய ஊருக்கு போற முடிவுலதான் நீங்க இருக்கீங்க என்ன… நீங்க இல்லைன்னா இந்த செடி மரம் எல்லாம் அழுதே அழுகிடும்”.

உள்ளே இருந்து வந்த ஸ்ரீதரின் மனைவி

“என்னங்கய்யா…?”

“அதான்மா நான் ஊருக்கே போறேங்கறத ஐயாகிட்ட…சொன்னேன்.”

“ஏங்க பாவம் ஐயா நல்ல மனுசர் எதோ கால சூழ்நில இந்த வேலைக்கு வந்திருக்காரு அவருக்கும் குடும்த்தோட இருக்க ஆச இருக்கும்ல இன்னும் கொஞ்சநாள்ல புள்ள பெரிய மனிசி ஆயிருவ அதுஇல்லாம ஊருக்கு போயி விவசாயமே பாக்கறேங்கறாரு அவரு இந்த மண்ணுமேலையும் செடிகொடிக மேலையும் உள்ள பாசம்தான் நாம பாக்கரம்ல அவர சந்தோஷம அனுப்புங்க அவரு ஊருக்கு போயி குடும்பத்தோட சந்தோஷம இருக்கட்டும்”

“அட அதில்லமா ஆறு வருஷத்துக்கப்புறம் இப்பதான் அப்பா வரார். நாமும் பொங்கலூக்கு உங்கப்பா வீட்டுக்கு போயிருவோம் அவருக்கு துணையா இவராவது இங்க இருந்த நல்லூயிருக்கும், அதான் யோசிக்கிறேன்”.

“ஏங்க அது நம்ம பிரச்சனை.. மாமா வந்த ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் பாவம்.. ஐயாவ ஊருக்கு அனுப்புங்க..”

சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

“சரிங்கய்யா எப்ப கிளம்பறீங்க”

“ஐயா….13 தேதி கிளம்பரேனுங்”

“அப்படியா!..சரி எனக்கு வேலைக்கு இருக்கு நான் கிளம்பறேன் நீங்களும் வேலையை பாருங்க! 11ஆம் தேதி ஊருக்கு போறதா பத்தி கொஞ்சம் ஞாயபகபடுத்துங்க”

11-ஆம் தேதி காலை 9.40 ஸ்ரீதரின் கார் வெளியே வர காம்பவுண்ட் கதவை திறந்து விட்டு இன்னைக்கு ஞாபகப்படுனும்னு பார்த்த கார் வேகமாக வெளியே போயிருச்சு.

அன்னைக்கு முழுசும் இரவாகியும் மொதலாளி வரல கொஞ்ச கவலை எப்போதும் ராவில வரலைனா என்ட்ட சொல்லிட்டுத் தானே போவார் இன்னக்கு இவ்வளோ நேரமாகியும் வரலயே?

அடுத்தநாள் இரவாகியும் முதலாளி வரவில்லை. தயக்கத்துடனே வீட்டின் உள்ளே பார்த்த மொதலாளிமா யார்ட்டையோ சரிங்க சரிங்க ராத்திரிக்கா சரிங்கனு போன் பேசிட்டு இருந்தாங்க போயி முதலாளி எப்ப வருவார்னு கேட்கலாமா ஏன்ன அவர் வந்தாதானே பணம் கிடைக்கும். அவர் இல்லாமல் எப்படி ஊருக்கு போவது யோசிச்சுகிட்டே கண்ணயர்ந்தார்.

இரவு இரண்டு மணி வீட்டை ஒரு ரவுண்டு வந்துட்டு அறைக்கு சென்று யோசிச்சுகிட்டிருக்க. முதலாளியின் கார் ஹாரன் ஒலி கேட்டு அப்பாடனு பெருமூச்சு விட்டு கதவை திறந்தார். வெளியே போனமாரியே கார் வேகமாக உள்ளேபோனது. மொதலாளி வீட்டுக்குள்ள சென்று விட்டார். கேட்டை சாத்தி அறையிலே லேச கண்ணயர்ந்தார்.

காலை ஆறுமணிக்கு

“ஐயா.. ஐயா…” முதலாளி கூப்பிட

“இதோ வரேன்ங்க”

மொகம் கழுவி தொடைச்சுட்டு வாசல் போய்நின்னு

“ஐயா….”

“வாங்க உள்ள வாங்க.”

“வாங்க இங்கே வாங்க”

முதலாளி எதிரில் போய் நிக்க

“ஐயா இதுல உங்களுக்கும்,உங்க மனைவிக்கும் துணி இருக்கு”.

500 ரூபாய்தாள்கள் எவ்வளவுனு தெரியல மடித்து கையில் வைத்துவிட்டு இதவெச்சு ஊருக்கு போயி நல்ல இருங்க ஏதாவது உதவி தேவைனா எனக்கு ஒருபோன் பண்ணிட்டு வாங்க என்னாலான உதவி பன்றேன் சரிங்கள சந்தோஷம ஊருக்கு போயி பொண்ஜாதி பையன் புள்ளையோட நல்ல விவசாயம் பண்ணுங்க”.

“சரிங்கய்யா…” ஐயா நான் போயிட்ட இங்க வேற ஆள் வராங்களா..

“இல்ல இப்பதிக்கு போட முடியாது பொங்கலெல்லாம் முடிஞ்சவுடனே அப்பறம் பாத்துகலாம்”

அப்படிங்களா….

சரிங்கய்யா.. சந்தோஷம

நிறைஞ்ச மனசோட சொல்றேன் உங்களுக்கும் உங்கமனைவி குழந்தைக்கும் நோய்நொடி இல்லா சந்தோஷமான வாழ்க்கை இறைவன் அருளனும்,

அப்போ..நான் ஊருக்கு கிளம்புகிறேன்”.

“சரி கிளம்புங்க”

சந்தோஷத்துடன் அறைக்கு வந்து குளித்து ரெடியாகி துணிகளை எடுத்து அடுக்கி வெச்சிக்கிட்டுருக்கையில்,

“ஐயா.. ”

“மா தா வரேன்ங்க..”

“ஐயா ரெடியாய்டிங்களா..”

“ஆமங்கமா”

“இந்தாங்க இதுல 2000 ருபா இருக்கு இதுல உங்க புள்ளைகளுக்கு நீங்களே கடைக்கு கூட்டிட்டு போயி ஏதாவது வாங்கிகுடுங்க”

“ஐயா கூடுத்திருக்காருமா…”

“ஐயா கூடுத்தாரு எனக்கும் தெரியும்,

அது உங்களுக்கும் உங்க மனைவிக்கும். மகன்மகளுக்கும் அவுங்க பொக்குனு போயிருவாங்கல்ல… அப்பா என்ன வாங்கிட்டு வருவாரு எதிர்பாக்குமல்ல…”

“சரிங்கம்மானு” பணத்த வாங்க..

“ஐயா… ஊருக்கு வெறும் வயத்துல கிளம்பிறாதிங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”

கண்ணில் நீர் கதகதங்க “சரிங்கம்மா” தொண்டைல வார்த்தை வரதனால தலையை ஆட்டி..

பேக்கையும் புதுதுணி பையையும் வெச்சுட்டு காலை உணவை சாப்பிட்டுட்டு குழந்தைய கொஞ்சிட்டு… சொல்லிட்டு வெளியே வந்து பையை எடுத்துக்கிட்டு ரோட்டின் திருப்பத்தில் நின்ற ஆட்டோவில் ஏறி “ரயில்வே ஸ்டேஷன் போப்பா.” னுட்டு

மொதலாளி கொடுத்த 500 ரூபா தாள்களை எண்ணி பார்த்தா 30தாயிரம் ரூபா இருந்தது சந்தோசம ரயில்வே ஸ்டேஷன் போயி டிக்கெட் எடுத்து ட்ரெயின் ஏறி அமர்ந்திருந்தான்.

ட்ரெயினில் அவ்வளவா கூட்டம் இல்ல ஆறுமுகம் உட்காட்ந்திருந்தார்.ட்ரெயின் கிளம்பி பயணிக்க ஆறுமுகத்தின் நினைவுகளும் மனைவி மகன் மகளோடு பயணிக்க மாலையில் ட்ரெயின் கோவைவந்து அங்கிருந்து பேருந்தின் மூலம் பொள்ளாச்சி வந்து இரவு 10 மணிக்கு விட்டை அடைந்தான். ஆனால் வீட்டில் யாருமில்லை சிறுது நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு யாரும் வரவில்லை சரி நாமலே ஒரு எட்டு பண்ணையார் வீட்டுக்கே போயி பண்ணையாரையும் பாத்துட்டு மனைவிமகளையும் கூட்டிட்டு வரலாம்னு பண்ணையாரின் வீட்டை நோக்கி நடந்தான்.

மேகத்தின் அரைநிலவு வெளிச்சத்தில் செம்மை பசுமையும் நிறைந்த நிறங்களுகிடையே கருப்பு பாதை மண்வாசம் ஆங்காங்கே வரும் பசுமை நிறம் கொண்ட செடி கொடி மரம் சில்வண்டுகளின் ஒலி தவளையின் கணைப்பு மெலிதான காற்று செயற்க்கை ஒலிஇல்லாத அமைதி என இரவு நேரத்து இயக்கையை ரசித்தவானாக மனதில் என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான் என்ற நினைப்போடு சொர்க்கமே என்றாலும் அதுநம்மூர போலவருமா என்ற இசைஞானியின் படலை பாடியவாறு நடக்க சிறுது தூரம் சென்றவுடன் லேசாக துர்வாடை மற்றும் ரத்தவாடை வர என்னது இப்படி நாற்றம் என யோசிக்க எதிரில் மனைவியும் பொண்ணும் மகளை கண்டவுடன் மனம்நிறைந்த மகழ்வுடன் துள்ளிகுதித்து “கவிக்குட்டி”னு ஒட மகளும் “அப்பானு” வர இருவம் அனைத்துகொண்டு மகளின் நெற்றியில் முத்தமிட்டு கண்களில் ஆனந்த கண்ணீருடன் மனைவியை பார்த்து “லட்சுமி”ங்க அவன் குரல் முடிவதற்க்குள் அவளும் அவனை தழுவிக்கொள்ள சில நொடிக்குபின் லட்சுமி

“எப்பங்க வந்தீங்க”

“இப்பதான்

காலைல கிளம்பி சாயங்காலம் கோயமுத்தூர் வந்தேன் அங்கிருந்து பஸ் ஏறி ஊருக்கு வந்து விட்டுக்கு வந்தேன் வீடுபூட்டி இருந்தது சரி நீங்க பண்ணையார் வீட்லதானா இருப்பீங்க அங்க வந்து உங்கலயும் பார்த்துட்டு நம்ம காளையனையும் பார்த்திட்டு வழியில ஊரையும் பார்கலாம்னு நடந்து வந்தேன் நீங்களே எதிர்ல வந்துட்டீங்க”

“சரி வாங்க வீட்டுக்கே போலாம் காலைல பண்ணையார் வீட்டுக்கு போலாம் ”

“இல்ல லட்சுமி உங்கள பாத்துட்டேன் அப்படியே ஒர எட்டு நம்ம மாடுகளையும் பாத்துட்டு வந்தரனே அதுக கண்ணுகுள்ளயே இருக்கு”

இன்னரத்துலயா அங்க எல்லாம் படுத்துடாங்க பண்ணையார்வீட்டு கொல்லபுரம் வேற பின்னாடி நீங்க எப்படி போயி பாப்பீங்க அதுவும் அதுக உங்கள பாத்துட்ட கத்த ஆரம்புச்சுரும் அப்புறம் விடிய விடிய தூங்காம கத்துங்க அங்கயாரும் தூங்கமுடியாது அதனால காலையில பாக்கலாம் வாங்க”

“இல்ல லட்சுமி”

“ஏங்க இவ்வளவுநாள் பொருத்து இருந்தீங்க இன்னும் கொஞ்ச நேரம்தான பேசாம வாங்க”

“சரி வாங்க”

“ஆமா சாப்பிடிங்களா”

“இல்லனு” சொல்லும் போது குரல் கவ்வ

“ஏங்க”

“இல்ல லட்சுமி இந்த வார்த்த கேட்டு எவ்வளவு நாளாச்சு… “னுட்டு கவிதாவ பாத்து

“ஆமா ஏன்னமா இப்படி எளச்சு போயிட்ட நல்ல சாப்பிடறய இல்லயானு” கேட்க

“நல்லதான் சாப்பிடறேன்ப்பா”னு சிரிச்சு கிட்டே சொல்ல அதற்க்குள் லட்சுமி

“எங்க அவ திங்கர அர வயத்து சோத்துக்கு பண்ணையார்வீட்ல ஒருநாள் வேலவாங்கராங்க பள்ளிகோடமும் போயிட்டு அங்கவந்து வீட்டு வேலையும் செஞ்ச எங்க உடம்பு தேறும்”

“சரிவிடு அதான் நான் வந்துட்டன்ல இனிபுள்ளய வேலைக்கெல்லாம் அனுப்ப வேண்டாம் பள்ளிக்கோடம் வீடுனு இருக்கட்டும். ஆமா சங்கரன் எங்க”

“அவன் பண்ணையரோட மருமக ஒரு ஆஸ்பிட்டல் கட்டியிருக்கு அவன் ராவான அங்க போயி அங்கயே தங்கிட்டு காலையிலதான் வருவான் காலையில வந்து கிளம்பி ஸ்கூலுக்கு போறான்”

“பண்ணையரோட மருமக ஹஸ்பிடல அங்க எதுக்கு அங்க என்ன பண்றான்”

” ம்ம் இதுல்லாம் ரோட்டல நின்னு இங்கயே பேசவேண்டாம் வாங்க மொதல்ல வீட்டுக்கு போயி சாப்பிட்டு நிதானமா பேசலாம்” னு நடக்க

“ம் சரி போலம்னு மக தோளுமேல கை போட்டுட்டு ஏமா கவி நீ எப்படி படிக்கற அண்ண எப்படி படிக்கிறான்” கேட்டு பேசிகிட்டே வீடு வந்தார்கள்.

வீடு வந்ததும் லட்சுமி அவசர அவசரமாக ஆறுமுகத்துக்கு பிடித்த கொத்தமல்லி சட்னிசெய்து தோசைசுட்டு கொடுக்கு ருசித்து சாப்பிட்டு கொண்டே மகமனைவியுன் தன் பார்த்த வாட்சுமேன் வேலை ஸ்ரீதர் குடும்பம் சென்னைனு பேச கவிதாவும் தூங்க சென்றாள்.

ஆறுமுகம் சாப்பிட்டு முடித்து வெளிவாசலில் அமர்ந்து ஒர்பீடியை குடித்துகொண்டிருக்க லட்சுமி வெளியே வந்து

“இதென்ன பழக்க புதூசா”

” இதுவா இது இந்த ரெண்டு வருஷமாதான், போனமுற ஊருக்கு வந்துட்டு போயிதான்… எப்பயாவது மனசு சரியில்லனா குழந்தைக ஞயாபகம் வந்த ஒரு பீடி கும்பப்பேன்”

“இது மட்டுதானா வேறெதுவும் இருக்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல…ஆமா பையன் எதுக்கு ஹாஸ்பிடல் போறான் ராத்திரிக்கு அதுவும் அங்கயே தங்கிகிறான்”

” அது பண்ணையரோட மருமக ஹாஸ்பிடல் அங்க இராத்திரி போயி சுத்தம்பண்ணி காலைல மோட்டர் போடறது செடிக்கு தண்ணிவிடறது எல்லா வேலையும் பாத்துட்டு வந்து காலைல ஸ்கூலுக்கு போறான் அவனுக்கு துணையா ஒருஆயாவும் தங்குது”

“அது சரி எதுக்கு அவனை வேல வாங்கறாங்க புள்ளையும் வேலைசெய்யற”

“ம்ம்…அந்த பண்ணயரம்மா இன்னும் நம்ம ஊட்ல வேற யாரிந்தாலும் வேலைக்கு வரச்சொல்லும் எல்லாம் காலகொடும எப்பதான் அந்த கடன முடிச்சு பத்திரத்த திருப்புவமோனு இருக்கு”

“ஏன் எதுக்கு நாமதான் பணத்ததான கட்டியாச்சல்ல இன்னும் 1,00,000 ருபா கட்டினா அவ்வளவுதானா”

“நாம கட்டறது அசல்தான வட்டிக்கு”

“வட்டிக்குதான நிலத்தலவிளச்சல் பண்ணிக்கிறேன் பேச்சு அதுக்கு தானே மாட்டையும் ஒலவோட்டிக்கிறேன் சொன்னாங்க”

“நல்ல சொன்னாங்க அது நீ போன மொற ஊருக்கு வந்தவுடனே போயிட்ட அதவும் நீ வரும்போதே வேதனைய இருந்த அதனால இதையும் ஏன் சொல்லலும்னு மறச்சுட்டேன் அவங்க நம்ம இடத்துல ஒலவெல்லாம் ஓட்டல சும்மாதான் கிடக்குது அதனால வட்டிக்கு நான் புள்ள பையன் நம்ம மாடுனு எல்லாத்தையும் வேலவாங்கறாங்க பாவம் நம்ம புள்ளய நம்ம வீட்டுலகூட அப்படிவேல வாங்க மாட்டோம் பாத்திரத்தில இருந்து பாத்ரும் வரைக்கும் கழுவ சொல்வாங்க செய்யலனா புள்ளய அப்படி திட்டறாங்க பையான் ஒருநாள் இராத்திரி போகுலைனா திட்டறாங்க நம்ம மாட நாம எப்படி புள்ளயாட்ட பாத்துகிட்டோ அவங்க வண்டிக்கு புட்டி அடிக்கிறது தீனி சரியா போடறது இல்ல அதுலயே அது வத்திபோயி எலும்பு தோலுமா இருக்கு பாவம் எப்படியோ நாளைக்கு பணத்த கொடுத்த பத்தரம் மாடுனு எல்லாத்தையும் மீட்டுட்டு அவங்க ஊட்டு வேல செய்யறதுக்கு பதில நம்ம நிலதுல நாமே குடும்பமா வேலசெஞ்சு போலச்சுக்கலாம் இந்த அடிமை வாழ்க்க போதுமடசாமி. ஏங்க……நாளை கூடுக்க பணம் இருக்கல்ல”

“இருக்கு ஆனா கொஞ்சம் பத்தாது”

“கொஞ்சம் பத்தாதுனா? எவளோங்க”

“ஊர்ல ஸ்ரீதர் ஐயா கூடுத்தது நான் சேத்துனதுனு 85,000 ருபா தான் இருக்கு இதுல கடனை கட்டி நிலத்துல வெளச்சல் செலவுக்கெல்லாம் பத்தாது பாக்கலாம் இரண்டு நாள் வேற எங்கயாவது கடன வாங்கி மொதல்ல பத்திரத்த மீட்ரனும்”

“மறுபடியும் கடனா வேண்டாங்க வேண்டவே வேண்டாம் போதும் நாம கடனவாங்கி பட்ட கஷ்டமெல்லாம் போதும் பணம் பத்தாதுக்கு புள்ள காதுல இருக்கிற தோட்டையும் என்னோட மூக்குத்தியும் தரேன் அதவித்து கடன அடச்சு விளச்சல கடன் வாங்காம செய்ங்க”

“சரி பாக்கலாம் போ.. தூங்கு பொண்டாட்டி புள்ளைகளோட படுத்து தூங்கி எத்தவருஷமாச்சு அது வாட்மேன் வேல பாத்து ராவான தூக்கம் வேற வரமாட்டேங்குது”

அதிகாலைலயே எந்திரிச்சு எல்லாம் குளிச்சு சாமி கும்பிட சங்கரும் வந்துட்டான். வந்தவுடன் அப்பாவ பாத்து “அப்பானு” ஒடி வந்து கட்டிபிடிக்க ஆறுமுகமும் அவனை சங்கரானு அனைக்க சங்ரன் மேல ஒரேபினாயில் வாட

“என்னாட இது பெனாயில் நாற்றம்” “அதுவாப்ப அது ஹாஸ்பிடல பினாயில் போட்டு தொடக்கிறது அதுதான்”

“கையெல்லாம் பிசுபிசுக்க இதென்னபா அதுவும் ஹாஸ்பிடலோ வேஸ்டுபா இரத்தம் தொடச்ச பஞ்சு, ஊசி, மருந்துபாட்டல், காலி குளுகோஸ்டப்பானு எல்லா வேஷ்டயும் அள்ளிபோட்டு வெளிய போயி கொட்டுவேன் அதுதான் கை இப்படி இருக்கு ”

“எல்லாம் நம்ம நேரம் தலயெழத்து போ போயி குளி குளிச்சிட்டு வா மொதல்ல இந்த வேலைக்கு ஒருமுடிவுகட்டணும்”

“சரிங்கப்பா தா பத்து நிமிசத்துல வந்தறேன” அதற்குள் கவிதா வந்து “அப்பா இன்னை ஸ்கூலுக்கு போறதா வேண்டாமா”

“வேண்டாமா நீயும் அண்ணும் லீவு போடுங்க நாம எல்லாம் டவுனுக்கு போயி பொங்கலுக்கு துணி எடுத்துட்டு வரலாம்”

“துணி எடுக்கவா அம்மா நகவிக்கனாங்க நீங்க துணிஎடுக்கங்கிறீங்க”

“இல்லமா துணி எடுக்க ஊர்ல மொதலாளியம்மா பணம் கூடுத்தாங்க அதுல துணி எடுத்துட்டு அப்படியே நகய வித்துட்டு வரலாம். தங்க…ம் நீ தோடு கழட்டி கூடுகுறோம்னு கவலை படதே விளச்சல் போட்டு சீக்கரமே அப்பா தோடு வாங்கி தந்தறேன்”

“சரிங்கப்பா” னுட்டு சென்றாள்.

” லட்சுமி நீங்க ரெடியாகுங்க நான் ஒரு எட்டு பண்ணையார் வீட்டுக்கு போயி பத்தரவேணுங்கற விஷயத்த சொல்லிட்டு நம்ம மாடுகள பாத்திட்டு வந்தரேன்”

” சரிங்க சீக்கறம மாடபாத்திட்டு சட்டுபுட்டு வாங்க உங்கள பார்த்த உடனே பண்ணையார் எதாவது வேல சொல்வர் மாட்டேன் சொல்லிட்டு வாங்க காலைல எல்லாம் ஒன்னா உக்காந்து டிபன் சாப்பிட்டலாம் உங்களுக்கு புடிச்ச பூரி கிழங்கு செஞ்சிருக்கேன்.”

” சரினு”ட்டு சங்கர் வந்த சைக்கள எடுத்துட்டு பண்ணையார் வீட்டுக்கு சென்று பண்ணையார பார்த்து

“ஐயா வணக்கங்க”

“வணக்கம் ஆறுமுகம் வாபா வா எப்ப ஊர்ல இருந்து வந்த”

“நேத்த ராத்திரி வந்தேங்க”

“அப்படிய சரி… பொங்கக லீவுக்கு வந்தியா”

” ஐயா இல்லைங்க இனி ஊருக்கு போறத இல்லைங்க உங்கிட்ட இருக்குற பத்திரத்த மீட்டுட்டு இங்கேயே விவசாயமே பண்ணலாம் இருக்கேங்க”

“ஒ சரி சரி அதுல மீதி ஏதோ வரணுமே”

“ஆமங்கய்யா இன்னும் ஒருலட்சம் தருனுங். ஐயா பொழுதோட ஊர்ல இருக்கீங்களா”

“இன்னைக்கபா”

“ஆமங்கய்யா”

“இன்னைக்கு ஊர்லதான் “இருப்பேன்என்ன விஷய சொல்லு”

“இல்லீங் பொழுதோட வந்து ருபாய கூடுத்துட்டு பத்திரத்த வாங்கிட்டு மாடையும் ஒட்டிட்டு போலம் இருக்கேனுங்”

“சரி சரி வா வாங்கிக்கலாம் காபிதண்ணி கூடிக்கிறயா மோரா”

“ஐயா இல்லைங்க வேண்டாங் இப்பதான் ஊட்ல குடிச்சேனுங்”

“ஊட்ல குடுச்ச என்ன இங்கயும் ஒரு மொடக்கு குடி”னுட்டு “விசாலம்… விசாலம்”னு பண்ணையார் மனைவிய கூப்பிட பண்ணையரம்மா வந்து

“ஏனுங்க”ங்க

“தாரு வந்திருக்கா பாரு”

“அட நம்ம ஆறுமுக எப்ப வந்த”

“நேத்து ராத்திரிங்க”

“நல்லா இருக்கிறியா ”

” நல்லா இருக்கேங்க”

“அதேன் பாத்தாவ தெரியுதே நல்ல நிழல்ல இருந்தே நிறம் மாரி உடம்பு பொசு பொசுனு தெரியுதே இங்க இருக்கும்போது நிலத்தலு விவசாயத்த பண்ணி வெயில காஞ்சு கருப்பா கிடந்த”

“அவனுக்கு காபி தண்ணி கொண்டா”

“சரிங்க.. ஏப்பா மாட்டு! பாலா எருமை பாலா!”

“மாட்டு பாலு காபியே கூடுங்க”

“தா கொண்டறேனு” அவுங்க உள்ளே போக

“ஐயா மாடு எங்கீங் கொல்லலே இருக்குங்களா”

“மாடா இல்லபா விடியாலயே முருகன் வண்டிலபூட்டி தேங்கமட்ட முட்டைய நம்ம ரைஸ்மில்லுக்கு போட போனான் ஏபா மாட பாக்கனுமா”

“ஆமாங்க”

“தா இரு”னுட்டு போன எடுத்து டயல் பண்ணி

“டே முருக எங்கிருக்க”

……..

“சரி சரி முட்டய பாய்லர்டதானே போட்ட”

…….

“சரி கொஞ்ச வெரசா வா தா ஆறுமுக வந்திருக்கா அவன் மாடா பாக்குனுமா கொஞ்ச வெரசா வா அப்படியே வரும்போது மெயின்ரோட்டல சிவாகடையில நாலு சிமென்ட் மூட்டய தூக்கி போட்டுட்டு வா வெரசா வா வெச்சுருட்டா”

“தா வந்திட்டு இருக்கான். அது என்னடா மட்ட ஒலவு ஒட்டறேனுட்டு வண்டிய புட்டிடேனு நினைக்காத உன் மாடு ஒரு வேலைக்கு லாயிக்கில்ல நல்ல தீனிதிங்கும் நோஞ்சானாட்ட படுத்துக்கும் அதான் ஒலவோட்டுனது போக வண்டில பூட்ட சொன்னேன் அப்பதான துருதுருனு இருக்கு. நீ வாங்கன காசுக்கு வட்டிக்கு பதில நிலத்தல விளச்சலும் மாட்ட ஒலவோட்டிக்க சொன்ன ஆன உன் எடத்துல விளச்சல போடுல மாடு வேனா ஒலவோட்டுச்சு அப்படி பாத்த வட்டிக்கு கட்டாது இருந்தாலும் பரவாயில்ல உடு நி யாரு நம்ம பய”ங்க அதற்க்குள் காபி வர

“இந்தாபா” அந்தம்மா நீட்ட பண்ணையாரு

“விசாலம் இந்த ஆறுமுத்தோட பத்தரம் கல்லபொட்டியில இருக்கு அப்புறமா அத எடுத்து வெச்சுரு பொழுதோட வந்த வாங்கிறாப்பலா”

“சரிங்க பத்திரத்த மீட்றாப்பலயா”

“ஆமா”

“இன்னும் கொஞ்ச பணம் வருனும்ல”

“ஆமா அதான் சாயங்கால கொடுத்துட்டு பத்திரத்த வாங்கிட்டு மாட்டயும் ஒட்டிட்டு போறாப்பல”

“ஏன் ஆறு…. நிலத்த என்ன பன்ற”

“அம்மா விவசாயம்தா பண்ணலாம்னு”

“விவசாயம இப்ப இருக்கிற நிலமையில மழைய நம்பி நிலத்துல பயிரசெஞ்சு ஒன்னும் பிரியோஜனம் இல்ல பேசாம இப்ப பாக்கிற பட்டணத்து பொலப்ப பாரு உம் பொண்டாட்டி ஏதோ இங்க அங்க வேல செஞ்சு நாலு காசு மிச்சம் பண்ணி புள்ளய கரை சேத்த பாரு மறுபடியும் விவசாயம் பன்றேன் அதாபன்றேன் இதபன்றேன்னு கடன்காரனாயிடாதே”

“ஏ கழுத நீ போ உள்ள அவன் ஏதோ பாக்குட்டும் அவனுக்கு தெரியாதா ஏதோ கடவுள் இனி அவனுக்கு நல்ல விளச்சல் கொடுத்து நல்ல இருப்பானு நாலு வார்த்த சொல்லுவியா அபசகுணமா பேசிட்டு போ உள்ள போ”

“ம்க்ம் நான் பேசினா உங்களுக்கு பொருக்கதே என்னமோ பண்ணுங்க நான் உள்ள போறேன் அப்படியே அவன்கிட்ட அவன் இடத்துல போட்ட குப்பய அள்ளிக்க சொல்லி கொஞ்ச காதுல போட்டிருங்க”னுட்டு அந்தம்மா உள்ளே போக

“ஆமாப்பா சொல்லனும்னு நினைச்ச நம்ம மருமக ஊருக்குள்ள ஹாஸ்பிட்டல் கட்டியிருக்கு தெரியும்ல”

“ஆமங் தெரியும்”

“அதுலதான் உன் மவன ராவான பாத்துக்க சொல்லி ஆஸ்பத்திரிய காலைல சுத்தம்பண்ணி அந்த குப்பயெல்லாம் ஊருக்கு வெளிய கொண்டு போய் கொட்ட சொன்னேன் ஆன உன் மவன் ஊருக்கு வெளியே ரொம்ப தூரம் போயி போட முடியல நான் எங்க எடுத்துலயே போட்டறேனு போட்டுட்டிருக்கான் அத அப்படியே ஒரு டிராக்டர வெச்சு வெளிய எங்கயாவது தூரமா கொண்டு போயி கொட்டிரு”

“சரிங்கய்யா”

“காப்பி குடுச்சிட்டியா”

“குடுச்சுட்டேன்”

“சரி நான் உள்ற போறேன் முருக வருவா மாட்டு வண்டி ஒட்டிட்டு வந்தான மாட்ட பாத்திட்டு போ அதுவரைக்கு அப்படியே அந்த தோட்டத்துக்கு கொஞ்ச நண்ணி காட்டு அப்புறம் பொழுதோட வா பேசிக்கலாம் நான் வரேன்”னுட்டு பண்ணையார் உள்ளே செல்ல மாடு வரும் தடம் பார்த்து கொண்டே தோட்டத்துக்கு நீர்பாச்சி முடிக்க மாட்டு வண்டி உள்ளே வர மாட்ட பாத்தவுடனே எந்தரிச்சு ஒடறத்துகுள்ள மாடுகள் ஆறுமுகத்த பார்த்த உடனே ம்மா…னு கத்திகிட்டு வண்டியோட வேகமா ஒடி வர ஆறுமுகமும் மாடுகளை நோக்கி ஒடி சென்று அருகில் நிக்க வண்டியில இருந்து அவக்கிறகுள்ள ஆறுமுகத்த முகந்து முகந்து நக்கி நக்கி ம்மா..னு கத்தி பாசத்த காட்ட முருகன்

“ஆறு எப்ப வந்த ”

“காலையில”

“அங்க பாரு உன்ன பாத்தவுடனே என்ன பாசம் மொந்து மொந்து பாக்கிறத” ஆமானுட்டே ஆறுமுகம் மாட்டின் முகத்தை கட்டி அனைத்தவாறு சில நிமிடம் நின்று வயத்து பகுதியில் தெரிந்த எலும்புகளை தடவியவாறு அழுதான். சிறுது நேரம் நின்று விட்டு “முருகா பொழுதோட நான் வந்து மாட்ட ஒட்டிட்டு போயிருவேன் அதனால அப்புறமா மாட்ட கொஞ்சம் சுத்தமா கழுவி வை”

“எது இதுகளையா கழுவரதா எனக்கு உட்காந்து சாப்பிடறக்கே நேரம் பத்தாது இதுல இதுகள எங்க கழுவரது அதான் நீ சாயங்காலம் ஒட்டிட்டு போறயில்ல நாளைக்கு உன் விட்டில நீயே கழுவிக்கோ” னுட்டு கொல்லபுரம் போக மாட்ட இழக்க அதுக அசையம அங்கயே நின்னு கத்த “ஆறு நீ கொஞ்ச கிளம்பு நி போகலை இதுக இங்கேயே நின்னு கத்தும்” னு முருகன் சொல்ல

“சரி பொழுதோட வரேன்” அவன்ட்ட சொல்லிட்டு மாட்ட தடவிட்டு நகர அவன் போவத பாத்த மாடு கத்த அந்த சத்தம் ஆறுமுகம் தெருவின் எல்லை செல்லும் வரை காதில் கேட்டது. மனம் தாங்காத துக்கத்துடன் மகனை பிரியும் தந்தையை போல் பொருத்து கொண்டு வந்தான் வரும் வழியில் அப்படியே நிலத்தையும் ஒருஎட்டு பாத்துட்டு போலாம்னு போயி பார்த்தால் செம்மண்ணா இருந்த நிலத்துல பாதி நிலத்துல குப்ப இவ்வளவு குப்பயா இத எடுக்க எவ்வளவு செலவு பன்றது பேசாம அப்படியே கொழுத்திரலாம் குப்பையும் எரிஞ்சுரும் நிலத்துக்கு உரமாவும் ஆகும்னு எண்ணி பரவிகடந்த குப்பய ஒன்னுபண்ணி பத்தவைக்க தீப்பட்டி இல்லாமா ரோட்டல யார்ட்டையாவது வாங்கலாம்னு நிக்கயல உரக்கட ராமசாமி பையன்தான் வந்தான்

“அண்ணா நல்லா இருக்கீங்களா எப்ப வந்தீங்க”

“நல்லா இருக்கேன் நேத்துதான் வந்தேன் அப்பா எப்படி இருக்கார்”

“நல்ல இருக்கார் எங்க இங்க நிலத்த பாக்கவா”

“ஆமப்பா ஊரவிட்டு போயி பொலப்பு பாக்கிறதெல்லாம் வேண்டாம் பேசாம விவசாயமே பாக்கலாம்னு வந்துட்டேன்”

“நல்லதுங்கண்ணா ஆனா இடத்தபத்தர பண்ணையார்ட்டனு ஏதோ கேள்வி பட்டேன்”

“ஆமப்பா ஆனா அத இன்னைக்கு திருப்பிருவேன்”

” பத்திரத்த திருப்பிருவீங்க சரி வாய்க்க மடையே இல்ல மடையவே பண்ணையாரு அடச்சுட்டாரு அதனால தண்ணி இல்லாம நில காஞ்சு போயசிருந்துச்சு சுத்தியும் பண்ணையார் நிலத்துல பன்ற வெள்ளாமையாலும் இரண்டு நாள் மழையாலையும் பூமி ஈரமா கிடக்குது நீங்க ஊர்ல வாட்ச்மேன் வேல பாக்கிறீங்க நீங்க பத்திரத்த மீட்ட மாட்டிங்கனு இந்த குப்பய வேற இங்க கொட்டறாங்க அதுவும் உங்க பையன் கையலயே யாரும் எதுவும் கேட்க முடியாதபடி இந்தபக்கம் வந்தாலே நாத்தம் குடல புடுங்குது இதனால ஊருக்காரங்க இந்த பக்கம் வந்தாலே திட்டி தீப்பாங்க நிலம்தான் உங்களுது ஆனா குப்பய கொட்டுனது அவுங்க ஆன திட்டறது உங்கள என்ன பன்றது எல்லாம் நேரம் சரி நான் வரங்கண்ணா”

“தம்பி உங்கிட்ட வத்திபெட்டி இருக்கு”

“வத்திபெட்டிய இல்லன நமக்கு பீடி சிகரெட் பழக்கமெல்லாம் கிடையாது ஆமா உங்களுக்கு கிடையாதே எதுக்கு வத்தி பெட்டி”

“தா அந்த குப்பைய எரிக்க எரிச்ச நாத்தமும் போயிரும் அள்ளர கூலியும் மிச்சம் நிலத்துக்கு கரிஉரமு கிடைச்சுருமல்லா அதுக்குதான்”

“அண்ணா இந்த குப்பையாவ அண்ணா இத இங்கயேஎல்லாம் எரிச்சு நிலத்த நாசமாக்காதீங்க இதுலலெல்லாம் கெமிக்கல் பிளாஷ்டிக்கா இருக்கு இத இங்கயே எரிச்சீங்க நிலத்துல புல்லுகூட வராது நிலம்கெட்டு போயிரும் பேசமா இரண்டு டிப்பரும் ஒரு ஜேசிபியும் வரசொல்லி அல்லிபோட்டு வேற எங்கயாவது காட்டுல கொண்டு போயி கொட்டுங்க அதுதான் நல்லது தீ வெச்சுட்டு வெல்லாமபண்ணிண விளையாது அவ்வளவுதான் சொல்லிட்டேன்”

“தம்பி என்ன சொல்றீங்க”

“ஆமண்ணே தீயெல்லாம் வைக்காதிங்க தீ வெச்சிங்க நில பாலா போயிரும் பேசாம குப்பய அள்ளி கொட்டுங்க என்ன ஜேஸிபி இரண்டு டிப்பர்ல நாலுநட வாடகைனு பாத்த ஒரு நாப்பதாயிரத்தல இருந்து ஐம்பதாயிரத்துக்குள்ள செலவு அவ்வளவுதான் நிலம் சுத்தமாகும் அப்புறம் வாய்க்க மடவெட்டியோ போர் போட்டு வெளச்சல பண்ணுங்க அதான் நல்லது”

“அப்படியா தம்பி”

” ஆமண்ணே எரிச்சு போடாதீங்க சொல்லிட்டேன் அவ்வளவுதான்… நா வரங்கண்ணா அண்ணே வெல்லாம செஞ்ச உரம் எதும் வேணும்னா நம்ம கடைக்கு வாங்கண்ணா வரட்டுங்களா”

அவன் சென்றதும் மீண்டும் தன் நிலத்து அருகில் சென்றான் நாத்தம் தாங்கமுடியாம மூக்க புடிச்சுகிட்ட வாய்க்கமடைக்கு போனா அங்க வாய்க மட இருந்த இடமே தெரியல பக்கத்துல பண்ணையாரு நிலத்துல நல்ல தண்ணி பாஞ்சு நல்ல வெளஞ்சிருந்தது சுத்தியும் பாத்துவிட்டு மீண்டும் வெளிய வரயில நாத்தம் தாங்க முடியாம தன் மகனையே பரதேசி நாயி கொஞ்சகூட பொறுபில்லாம நம்ம இடத்துல அவங்க குப்பய கொட்டி நிலத்த வீணாக்கி வெச்சிருக்கான் நாயி, இப்ப இத சரி பண்ணி, வாய்க்கமட வெட்டி, போர்போட்டு,ஒலவோட்டி, வித நெல்லு, உரம் வாங்கி,கூலினு பாத்த மூனு லட்சம் வேணும் பண்ணையாருக்கு கூடுக்கவே பொண்டாட்டி புள்ள நகைய வாங்கியாச்சு இதுக்க என்ன பண்ண….

யோசனையில வீடு வந்து லட்சுமி

“ஏங்க மணி என்ன ஏன் இவ்வளவு நேரம் நான் தான் சொன்னேன்னல்ல சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்னு வாங்க சாப்பிடுங்க”

“இல்ல லட்சுமி பசிக்கில வேண்டாம்”

“என்னது பசிக்கலய ஏன் பண்ணையார்வீட்ல எதுவும் சாப்டீங்களா”

“இல்லம வேணாம் பசிக்கல”

“ஏங்க எப்படியோ இருக்கீங்க பண்ணையார் எதும் திட்டினாரா இல்ல மாடுகள பாத்த ஏக்கமா என்னாச்சுங்க”

“இல்லமா ஒன்னு இல்லன விடே”

“சரி அப்டீனா சாப்பிட வாங்க நீங்க வருவீங்கனு பாவம் புள்ளைகளும் சாப்பிடாமா அப்பா வந்தா ஒன்ன சாப்பிடலானு காத்து கடக்குதுக”

“அதுக இன்னும் சாப்பிடலயா இத மொதல்லயே சொல்லலாமல்ல போ போயி எடுத்து வை கை அழம்பிட்டுவரேன்”

கை அழம்பிட்டு புள்ளைகளோட சாப்பிட உட்கார்ந்து தட்டில் பூரி மாசல் வைத்து சாப்பிட கை வைக்கும் போது

“லட்சுமி நான் பேசாம ஊருக்கு போயி வாட்மேன் வேலயே பாக்கறேன்மா என்றான் கண்ணில் நீர் வடியா..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *