வானத்தை வெல்பவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 9,519 
 

கண்ணாடி முன் நின் சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கு இழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பை படரவிட்டான்.

தம்பி சிங்காரம்! நீ சாமானிணன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் புரிய வந்தவன். வானமே எல்லை. அதை எட்டிப் பிடிப்பதல்ல உன் நோக்கம். அதை வெல்வதே நம் குறிக்கோள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இப்படி தன்னம்பிக்கை ஊட்டிக்கொள்வது தான் ஒவ்வொரு நாளும் சிங்காரம் செய்கி முதல் வேலை ஆகும்.

சிங்காரம் தோற்த்திலே சாதாரணன் தான். ஆனால் அவன் மனம் மற்வர்களினின்றும் மாறுபட்டது. எல்லோரையும் விடத் தான் தனித் தன்மை உடையவன் என்று அவன் எண்ணினான். மற்வர்களை விட நான் உயர்ந்தவன் என்று அவன் மனம் மந்திரம் உச்சரிப்பதுபோல் எப்பவும் முனகிக் கொண்டேயிருக்கும்.

அவன் ஒரு லூஸ், அரைக் கிறுக்கு, ஒருமாதிரிப் பேர்வழி என்று மற்வர்கள் அவனை மதிப்பிட்டார்கள். அவனை பரிகசிக்கவும் செய்தார்கள். சந்தர்ப்பம் வாய்ந்த போதெல்லாம் மட்டம் தட்டி மகிழ்ந்தார்கள்.

மடையர்கள், மண்ணாந்தைகள், மக்குப் பிளாஸ்திரிகள், மழுங்கடிக்கப்பட்டவர்கள் என்று மற்வர்களை மனசுக்குள் திட்டி திருப்திகொள்வான் சிங்காரம்.

ஒரு நாள் வரும். அப்போது இவர்கள் தெரிந்துகொள்வார்கள் இந்த சிங்காரம் யார் என்பதை! இதுவும் அவன் தனக்குத் தானே உரம் ஏற்றிக் கொள்வது தான்.

எப்படியாவது ஏதாவது சாதனைகள் செய்து, மாமனிதன் என்று தன் பெயரை நிலை நிறுத்திவிட வேண்டும் என்பதே சிங்காரத்தின் எண்ணமாய், ஆசையாய், பெரும் கனவாய் இருந்தது.

ஒரு நாள் பாருங்க, இந்த சிங்காரம் திடீர் பிரபலஸ்தன் ஆகியிருப்பான். பத்திரிகைகளில் எல்லாம் அவன் பெயர், படம், பேட்டிகள் வரும். ரேடியோ சிங்காரத்தின் பெருமைகளை ஒலிபரப்பும். தொலைக்காட்சி சிங்காரத்தின் சாதனையை ஒளிþஒலி பரப்பும். அப்ப தெரிந்து கொள்வீங்க, நம்ம சிங்காரம் உண்மையிலேயே பெரிய ஆள் தான் என்பதை!

சிங்காரம் “தன் நெஞ்சொடு கிளத்தி’ மகிழ்கி தனி மொழிதான் இதுவும், அபூர்வமாக ஒன்றிரண்டு பேரிடம் இதை சொல்லவும் செய்தான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதை சொன்னார்கள். வானத்தை வெல்லப் போகிவன் என்று சிலர் குறிப்பிட்டார்கள். வானத்தை வளைக்கப் போகிவன் என்று சிலர் குறிப்பிட்டார்கள். வானத்தை வளைக்கப் போகிவன் என்றும், வானத்தை அளப்பவன் என்றும் கேலியாக சொல்லிக்கொண்டார்கள். கடைசியில் “அது வானம் பார்த்தான்’ என் பெயராக ஒட்டிக்கொண்டது சிங்காரத்தின் மீது.

“அப்படி என்ன தான் செய்யப்போú? என்று சிலர் அவனிடமே கேட்டார்கள். “அதுக்காக என்ன ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிú?’ என்றும் விசாரித்தார்கள்.

“காலத்துக்காகக் காத்திருக்கிúன்’ என்ான் அவன். இப்ப நான் எதுவும் செய்யவில்லை. சமயம் வருகிபோது என் ஆற்ல் வெளிப்படும்’ என்ான்.

“சரியான லூசு!’ என்று மற்வர்கள் கருதினார்கள். “மகைழன்று விட்டது. கூடிய சீக்கிரம் முழுசாகக் கழன்று போகும். அன்று சிங்காரம் மனநலமருத்துவமனையில் இருக்க நேரிடும்’ என்ார்கள்.

சிங்காரம் பைத்தியம் மாதிரிதான் நடந்து கொண்டான். கண்ணாடி முன் நின்று பேசுவது போலலே, தெருவில் நடந்து போகிபோது சட்டென நின்று “இப்படிச் செய்தால் என்ன?’ என்று கேட்பான். “இதை செய்யலாமா?’ என்பான். அடிக்கடி உரத்தகுரலில் வெளிப்பட்டுவிடும் அவன் சிந்தனை.

யார்யாரோ எப்படி எப்படி எல்லாமோ செயல்புரிந்து சாதனைப் பட்டியலில் இம் பெற்று விடுகிார்கள். மற்வர்களை விட அதிகம் தும்மியவன். ஒரு மணி நேரத்தில் மிக அதிகமான கொட்டாவி விட்டவன். ஒருநாள் முழுவதும் தன்கை இரண்டையும் தட்டிக்கொண்டே இருந்தவர், இத்தனை ஆயிரம் தடவைகள் தட்டினார். மூன்று நாட்கள் ஓயாது பேசிக்கொண்டே இருந்தார். விடாது சைக்கிள் ஓட்டினார். எண்ணிக்கையில் மிக அதிகமான இட்டிலிகளை தின்று தீர்த்தனர். ஓயாது நாட்கணக்கில் சிரித்தார் þ இவ்விதம் சாதனை படைத்தவர்கள் விவரம் அவ்வப்போது பத்திரிகைகளில் வருவதை சிங்காரம் படித்திருக்கிான்.

நாமும் இதுபோல் ஏதாவது சாதனை புரிந்துகாட்ட வேண்டும் என்று சிங்காரம் ஆசைப்பாட்டான். ஆராய்ச்சி என்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தான்.

“நாய்க்கு வேலையும் இல்லை, நிற்க நேரமும் இல்லை என்பது பழமொழி. அப்படி ஒரு நாய் மேலை எதுவும் இல்லாமலே ஒரு நாளில் எங்கு எங்கெல்லாம் போகிது, எப்ப எப்ப ஓடுகிது, எப்போ நிற்கிது என்று ஆராயவேண்டும் என்று எண்ணினான் சிங்காரம். “பளாபளா! இது அருமையான அய்டியா!’ என்று ஆரவாரித்து அவன் மனம்.

இதை சிங்காரம் ஒரு நண்பனிடம் கூறினான். அவன் இவனுக்கு அண்ணன்! வேலை மெனக்கெட்டு பழம் பத்திரிகைகளில் வருகி துணுக்குச் செய்திகளை எல்லாம் சேகரித்து வகைப்படுத்தி, வெவ்வேறு ஃபைல் போட்டு பாதுகாக்கிவன். அதை அரும்பெரும் சாதனையாகக் கருதுகிவன்.

அவன் சொன்னான் : “இது புது ஐடியா ஒண்ணுமில்லே. இங்கிலாந்திலே லண்டன் மாநகர் அருகே ஒரு இடத்தில் ஒருவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு நாளில் ஒரு பசுமாடு காலையில் இருந்து என்ன செய்யுது, எங்கெங்க போகுது, எத்தனை தடவை படுக்குது, அப்பும் எழுந்து எப்படி எங்கெலர்ம் திரிந்து இரை தேடித்தின்து அசை போடுதுக்காக எத்தனை தடவை வாயை அசைக்குது என்று ஆராய்ச்சி நோக்கில் ஸ்டடி பண்ணி, விரிவாக எழுதி வைத்தான். அவன் பசுமாட்டின் செயல்பாடுகளை ஆராய்ந்தான். நீ ஒரு நாயின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய ஆசைப்படுகிாய். அவ்வளவு தான்!’

சீ என்ாகி விட்டது சிங்காரத்துக்கு. புரட்சிகரமாக ஏதாவது பண்ணவேணும் என்ான்.

“டிரசை அவுத்துப் போட்டு விட்டு ஊர்நெடுக சுத்து. அதுவும் ஒரு புரட்சி தான்!’ என்று கிண்டல் செய்தான் நண்பன்.

கைகளை ஊன்றி தலைகீழாக நடந்தவன், முதுகுகாட்டி (பின்னெக் காட்டி) நடந்து முன்னேறியவன், உருண்டு உருண்டே ஊர்வழி போனவர்கள், தாவித் தாவி நடந்தவர்கள் பற்றி எல்லாம் தகவல்கள் இருக்கின்ன என்று நண்பன் தெரிவித்தான்.

“சே, என்ன செய்வது? வானமே எல்லை, அதை வென்ாக வேண்டுமே!’ என்று சிங்காரம் ஏக்கத்தோடு பேசினான்.

“ஒண்ணு செய்யி. கோபுரத்து மேலே ஏறி நின்று, ஏவானமே, உன்னை விட்டேனா பார் என்று கூவிக்கொண்டு மேல்நோக்கிப் பாய்ந்து பார்!’ என்று கெண்டை பண்ணினான் நண்பன்.

சிங்காரம் பேசாமல் அவனை விட்டுப் பிரிந்தான். என்ன செய்வது? பெரிதாக என்னவாவது செய்தாக வேண்டுமே! என்ன தான் பண்ணுவது? இதுவே அவனது மனக்குமைச்சலாக இருந்தது எந்நேரமும்.

இதே நினைப்பாக ரோடில் நடந்து கொண்டிருந்தான் சிங்காரம்.

அபூர்வமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது அப்போது.

ஒரு குதிரை வெறி பிடித்தது போல் நடுரோட்டில் வேகமாக ஓடி வந்தது. யாருடைய குதிரையோ கட்டிலிருந்து விடுபட்டு, தலைதெறிக்கி வேகம் என்பார்களே அப்படி, வந்தது. லாடம் கட்டிய அதன் குளம்புகள் கற்களில் பட்டு தீப்பொறி கிளப்பின.

ஜனங்கள் மிரண்டு பயந்து ஓரங்களில் ஒதுங்கினார்கள். “ஏஏய், வெளி புடிச்ச குதிரை… வழிவிட்டு விலகி நில்லுங்க’ என்று கத்தினார்கள் பலர். குதிரையை மடக்கிப் பிடிக்க பின்னே சிலர் ஓடிவந்தார்கள்.

சிங்காரத்தினுள் உற்சாகம் கரை புரண்டது. இந்தக் குதிரையோடு போட்டி போட்டு ஓடனும், குதிரையை விட வேகமாக ஓடிக்காட்டணும் என் எண்ணம் அவனுள் கிளர்ந்து புரண்டது.

குபீரெனப் பாய்ந்து குதிரையின் பக்கத்திலேயே ஓடலானான் சிங்காரம். மூச்சுப் பிடித்து வேகமாக ஓடிக்கொண்டேயிருந்தான்.

இது மற்வர்களுக்கு நல்ல வேடிக்கைக் காட்சி ஆயிற்று. ஓஓ எனக் கூச்சலிட்டும் கைதட்டியும், வாயினால் சீட்டி அடித்தும், கைககை வீசியும் அவரவர் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் குதிரைக்கு மிரட்சி ஏற்பட்டது. பக்கத்தில் ஓடி வருபவன் தன்னை அடக்கிப் பிடிக்கவே வருகிான் என்று அதற்குத் தோன்றியிருக்க வேண்டும். அது வெகுண்டு திரும்பு சிங்காரத்தைத் தாக்கியது. காலால் ஓங்கி எற்றியது.

அப்பாவி சிங்காரம் அதிர்ச்சியோடு கீழே விழுந்தான். அவனை மிதித்துக் கொண்டு திரும்பிய குதிரை வந்த வழியே திரும்பலயிற்று.

“பாவம் பைத்தியக்காரன்!’ என சிங்காரத்துக்காக இரங்கல் தெரிவித்தார்கள் ரோடு ஓரங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள்.

– அக்டோபர் 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *