ரிக்க்ஷாக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 6,561 
 

20 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில் கொழும்பில் போக்கு வரத்துக்கு கார்கள் மிகக் குறைவு. குதிரை வண்டியும் ரிக்க்ஷாவையும் அனேக உயர் வர்க்கத்து வெள்ளையர்கள் பாவித்தார்கள் . அரசில் உயர் பதவியிலிருந்த மைக்கல் என்பவர் சொந்தத்தில் ஒரு ரிக்க்ஷா வைத்திருந்தார் . கார் டிரைவரை போல் தன் ரிக்க்ஷாவை இழுக்கு ஒருஇந்திய வம்சாவளி வந்த வேலு என்ற ரிக்க்ஷாக்காரன். ஒருவனை வைத்திருந்தார். மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம். அவர் வீட்டுத் தொட்டத்தையும் அவன் கவனித்தான் கடையில் பொய் சில்வியா நோனாவுக்கு சாமான் வாங்கி வருவான் தினமும் இரு மைல்கள் ஆபிசுக்கு மைக்கலை ரிக்ஷோவில் வைத்து வியர்வை சொட்டக் கொதிக்கும் தார் ரோட்டில் காலில் காலணி இல்லாமல் வேலு இழுத்துச் செல்வான். அது பிரிட்டிஷ் ஆட்சியின் போது இலங்கையில் அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு.

வேலை முடிந்து மைக்கலை . திரும்பவும் ரிக்க்ஷோவில் வைத்து வீட்டுக்கு வேலு இழுத்து செல்வான் . இரண்டு மைல் ரிக்க்ஷா பயணத்தின் போது மைக்கல் பைப் புகைத்த படியே இருப்பார். மணி அடித்தபடியே அடியே வேலு ரிக்க்ஷவை இழுத்துச் செல்வான்.

ஒருநாள் மைக்கலுக்கு ஒரு விபரீத யோசனை வந்தது.

மைக்கலுக்கு உடலில் கொழுப்பு கூடி விட்டது . அதனால் உடலில் வியர்த்தல் கொழுப்பு குறியும் என்று டாக்டர் சொன்னார்.

மைக்கல் வியர்வை சிந்தி ரிக்க்ஷோ இழுக்கும் வேலுவை பார்த்தார்.

இவனுக்கு இப்படி வியர்க்கிறதே . நான் ஒரு ஒரு ஒதுக்குப் புற பகுதியில் எவரும் காணாத வாறு இவனை ரிக்க்ஷோவில் வைத்து நான் இழுத்தால் என்ன ? என் உடலும் இவனைப் போல் வியர்க்கும் தானே ?

தன் விருப்பத்தை வேலுவிடம் மைக்கல் சொன்னார்

“ஐயோ வேண்டாம் சேர் போலீஸ் கண்டால் எனக்கு ஆபத்து”

“டேய் வேலுநீ பயப்படாதே போலீஸ் உன்னைக் கைது செய்யாமல் நான் கவனிக்கிறேன் நீ வா, ஒதுக்கு புரத்துக்குப் போய் நீ ரிக்க்ஷோவில் இரு . உன்னை வைத்து கொஞ்சத் தூராம் என் உடலில் வியர்வை வரும் மட்டும் நான் இழுக்கிறான் என்று அவனைக் கட்டாயப் படுத்தினார் எஜமானுக்கு வேலுவால் மறுப்பு சொல்ல முடியவில்லை வேண்டா வெறுப்பாக ரிக்க்ஷோவில் கூச்சத்தோடு ஏறினான்.

வேலுவை ரிக்க்ஷாவில் வைத்து மைக்கல் இழுத்தார். ரிக்க்ஷோவின் மணி அடித்தார். அந்த அனுபவத்தை தனக்குள் ரசித்தார் . அரை மைல் தூரம் ரிக்க்ஷோ சென்றதும் அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. உடலில் சற்று வியர்வை மட்டுமே தெரிந்தது தன்னிலும் நிறம் குறைந்த ஒருவனை ரிக்க்ஷோவில் வைத்து ஒரு வெள்ளையன் இழுத்த காட்சி ஒளித்திருந்து ஒருவன் படம் எடுத்ததை மைக்கலும், வேலுவும் கவனிக்கவில்லை .

சில நாட்களின் பின் ஆங்கில பத்திரிகையின் முதல் பக்கத்தில் தான் வேலுவை வைத்து ரிக்க்ஷோ இழுக்கும் படம், “கொழும்பில் எட்டாவது அதிசயம்” என்ற தலைப்பில் செய்தி வந்திருந்ததை மைக்கல் கண்டார் . தன் மனைவி சில்வியா படத்தை காணமுன் பத்திரிகையை எரித்து விட்டார் .

அடுத்த நாள் சில்வியா, “என்ன டியர் நீங்கள் வேலுவை வைத்து ரிக்க்ஷோ இழுக்கும் படம் பேப்பரில் வந்திருக்கு என்று என் சினேகிதி மேரி சொன்னாள் உண்மையா”?

அது நானாக இருக்க முடியாது என்று சொல்லி தன் அறைக்குள் மைக்கல் போய் விட்டார் :

சில்வியா வேலுவை தேடி சென்று உண்மை அறிய முயற்ச்சித்த போது வேலு இருந்த இடத்தில புது ரிக்க்ஷோகாரன் இருப்பதை சில்வியா கண்டாள்.

( யாவுமைத்ம் புனைவு)

அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *