யானையின் வஞ்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 4,011 
 

பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் நுட்பமான அறிவு படைத்தவை.!, மனிதனுக்கும் அந்த திறமைகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பல்வேறு உபகரணங்களை துணைக்கு கையாள வைத்துக்கொண்டதால் இந்த திறமைகள் அவனிடம் மங்க ஆரம்பித்துவிட்டன.

அந்த நுட்பமான திறமைகள் என்னவென்றால் நுகரும் சக்தி, கூர்ந்து கவனித்தல், மெல்லிய அசைவை கூட உணர்ந்து கொள்ளுதல்,மற்றும் அதனுக்கு துன்பம் கொடுப்பதாக தெரிந்தால் எதிர்த்து தாக்குதல், இந்த திறமைகள் மிருகங்களுடன் அதனுடன்வசிக்கும் காட்டுவாசிகளிடையேயும் காணப்படுகிறது.

அப்படிப்பட்ட காடுகளின் அருகில் அமைந்துள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த கதை இது.

ராக்கப்பன் சேவல் கூவும் சத்தம் கேட்டு விழித்தவன் உள்ளே யாரும் இல்லாததால் ஏ…செல்லம்மா, செல்லம்மா, என்று கூப்பிட்டு பார்த்தான். இவன் சத்தம் கேட்டு வெளியில் பள்ளிக்கு இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து போய் படிக்க இப்பொழுதே எழுந்து முகம் கை கால் கழுவிக்கொண்டிருந்த அவன் பெண் பவானி அம்மா அப்பவே மாட்டை பத்திகிட்டு காட்டுக்கு கிளம்பிடுச்சு,உன்னைய சீக்கிரமா வரச்சொல்லுச்சு, புளி தட்டோனுமாம், சட்டியில சோறு வச்சிருக்கு சாப்பிட்டுட்டு வரச்சொல்லுச்சு, என்று பதில் சொன்னாள். ‘க்கும்’..இவளொருத்தி என்று முணங்கியவாறு வெளியில் வந்தான் ராக்கப்பன்.

இருள் மெல்ல வர ஆரம்பிக்க சீக்கிரம் மாட்டை பத்திட்டு வா ! “யானை வாசம் வீசுது” இங்கன பக்கத்துல தான் இருக்கனும், தன் மனைவியை விரட்டிக்கொண்டு வேக வேகமாக ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தனர், ராக்கப்பனும், செல்லம்மாளும். புளிதட்டிவிட்டு தோட்டத்தில் கடலை பறித்துக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியாததால் நேரம் ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரத்தில் யானைகளும் வர ஆரம்பித்து விடும்.

அப்பாடி என்று ஊர் எல்லையை தொட்டவுடம் பெருமூச்சு விட்டனர் இருவரும், வீட்டுக்குள் நுழையும் போது பவானி உலை வைத்திருந்தாள், அடுப்பில் §ச்¡ள அரிசி வெந்து கொண்டிருந்தது.

இவர்கள் கிராமத்தைப்போலவே நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்த மற்றொரு கிராமத்தில் பக்கத்து பக்கத்து குடிசையை சேர்ந்த மணியும்,ராசுவும், பாலனும், இரண்டு வாரங்களாக வருமானமில்லாமல் காய்ந்து கொண்டிருப்பதைப்பற்றி கவலையுடன் விவாதித்துக்கொண்டிருந்தனர்.இந்த மிருகங்களுக்கு பயந்திட்டு மாட்டை இப்பவெல்லாம் மேய்ச்சலுக்கு வெளிய விடமாட்டேங்கிறாங்க, ஒரு மாசமாச்சு ஒரு மாடு கூட மாட்ட மாட்டேங்குது அலுத்துக்கொண்டனர்.

காட்டை ஒட்டி மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை நோட்டம் பார்த்து அங்கேயே அருகில ஒரு தொட்டியை அமைத்து அதில் வடித்த கஞ்சியை ஊற்றி அதில் மருந்தையும் கலக்கி வைத்து விடுவர்.எப்படியும் மேய்ச்சலுக்கு இருக்கும் மாடுகள் தண்ணீர் தேடி வரும்போது கஞ்சி வாசத்துக்கு இங்கு வந்து கஞ்சி குடிக்கும், குடித்தபின் ஒரு வித மயக்க நிலைக்கு சென்றுவிடும், அதன்பின் இவர்கள் அதனை மெல்ல விரட்டிக்கொண்டு பக்கத்து டவுனுகளுக்கு கொண்டு சென்று அடி மாட்டுக்கு விற்று விடுவர். நல்ல கன்று குட்டி சிக்கினால் கொழுத்த லாபத்துடன் வளர்ப்புக்கு விற்று விடுவர். ஊர்க்காரர்கள் கொஞ்ச நாள் மாட்டை தேடி, அதன் பின் புலியோ,சிறுத்தையோ, காட்டு நாயோ அடித்து தின்று விட்டது என்று முடிவு கட்டிவிடுவர்.
இது இவர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.

காலையில் ஒரு தொட்டியில் கஞ்சியை ஊற்றி அதில் மருந்தை கலக்கிக்கொண்டிருந்த ராசு, நிறைய மாடுகள் மேயுது எப்படியும் ஒண்ணு இரண்டு மாட்டும்னு நினைக்கிறேன், சொல்லியவாறு கையை அதிலேயே கழுவிக்கொண்டு சரி வா மணி மதியம் வந்து பாக்கலாம் என்றவாறு மணியை அழைத்துச்சென்றான்.

அவர்கள் நேரமோ என்னவோ தெரியவில்லை, அன்று மாலை முழுவதும் ஒரு மாடு கூட அவர்கள் வைத்த தொட்டி பக்கம் வரவில்லை. ராசு சலித்துக்கொண்டான், நேமாச்சு மணி வா ஊருக்கு போகலாம் எப்படியும் நாளக்காவது ஒண்ணு மாட்டாமாயா போய்டும்? அவர்கள் போய் அரை மணி நேரத்தில் மெல்ல இருள் பரவ ஆரம்பித்துவிட்டது.

காலை தொட்டியில் சுத்தமாக கஞ்சி குடிக்கப்பட்டிருந்தது, திகைத்து சுற்று முற்றும் பார்த்தனர், ஒன்றும் தென்படவில்லை, கீழே குனிந்து பார்த்த்பொழுது யானைத்தடம் தெரிந்தது, போச்சு ‘ராசு’ யானை குடிச்சுட்டு போயிடுச்சு போல கண்டிப்பா இங்க எங்கேயாவது நின்னுக்கிட்டிருக்கும், ஓடு சீக்கிரம் இரண்டு பேரும் தலைதெறிக்க ஊர்ப்பக்கம் ஓட ஆரம்பித்தனர்.

மறு நாள் காலை அந்த ஊர் மக்கள் காலைக்கடன் கழிக்க செல்லும் பாதையில் ராசுவும், மணியும் யானையால் மிதிபட்டு இறந்திருந்தனர்.அது மட்டுமல்ல அவர்கள் உடலை சிதைத்திருந்த யானை அந்த ஊர் எல்லையிலேயே மாலை வரை நின்று கொண்டு கோபத்துடன் பிளிறிக்கொண்டிருந்தது.இருள் மெதுவாக வர வர அப்பொழுதுதான் தன் இடத்தைவிட்டு நகர ஆரம்பித்த்து.ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு இறந்தவர்கள் உடலை எடுத்துச்சென்றனர்.

வனத்துறை பாலனை பிடித்து விசாரிக்கும்பொழுதான் இவர்கள் மாடு பிடித்து விற்கும் விசயம் வெளி வந்தது, அன்று இரவு இவர்கள் வைத்திருந்த கஞ்சியை குடித்த யானை இரவு முழுவதும் வேதனையில் துடித்திருக்கிறது, அதற்கு பழி வாங்கவே அந்த இடத்துக்கு வந்து அவர்களின் வாசனையை வைத்து தேடிக்கண்டுபிடித்து கொன்றிருக்கிறது.

காரணம் எப்பொழுதும் அவர்களுடனே சுற்றித்திரியும் பாலன் அன்று ஏதொவொரு வேலையாக கஞ்சி கலக்கும் இடத்துக்கு செல்லவில்லை, ஆனால் காலைக்கடன் கழிக்க இவர்கள் மூவரும் ஒன்றாகச் சென்றிக்கின்றனர், அதில் அவர்கள் இருவரை மட்டுமே பிடித்து மிதித்திருக்கிறது, இவனுடைய நல்ல நேரம் அது இவனை சட்டை செய்யவில்லை.!

இதை நம்ப மறுப்பவர்கள் பலர், இருந்தாலும் விலங்குகள் ஒவ்வொரு வாசனையையும் மனதில் பதியவைத்துக்கொள்ளும் என்பது அனுபவபட்டவர்களிடம் கேட்டுத்தெரிந்த உண்மை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *