நீலத்தங்கமும் – காதலனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2013
பார்வையிட்டோர்: 7,385 
 

எனது பைக் 98 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது என்று ஸ்பீடோ மீட்டர் காட்டியது. அது ஒரு முன்னிரவுப் பொழுது, ரம்யமான இருள் எங்கும் பரவிகிடந்தது. நான் என்.ஹெச்(தேசிய நெடுஞ்சாலை) 7 பயணித்துக் கொண்டு இருந்தேன், நான் இவ்வளவு வேகமாக செல்வதற்கு ஒரே ஒரு காரணம் என் தேவதை. இது போன்று வேகத்தில் நான் பலமுறை சென்றிருக்கிறேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை விதனா உடன் சென்றிருக்கிறேன். அது வாழ்வின் சந்தோஷ தருணங்கள். இப்போது செல்வது எனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள. இவ்வளவு வேகத்திலும் எனது மனம் என்னை கடந்த காலம் நோக்கி இழுத்து செல்கிறது.

***

சில பிரச்சனைகள் மற்றும் சில மகிழ்ச்சிகளுடன் சரி சமமாக ஒரு சம நிலையில் இருந்தது என் கடந்தகாலம். அந்த சம நிலையை மாறிவிடக்கூடாது என்றுதான் நான் இப்படி விரைந்து கொண்டிருக்கிறேன். என்பது இப்போது தான் எனக்கு புரிகிறது.நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்? நான் முன்பு போலவே இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாமே? இந்த நிகழ்வுகளுக்கு காரணம்???.

தனது ஒற்றை பார்வையால் என்னை தடம் மாற்றியவள், மாறக்கூடாது என்று முடிவெடுத்தும் மாறினேன், அனிச்சையாக. தேவதையை நான் சந்தித்தது ஒரு சாலை விபத்தில், அவளது இரு சக்கரவாகனத்தை நான் தெரியாமல் இடித்து விட்டேன். அதில் பாதிப்பு ஏதுமே இல்லை. இருந்தும் அவள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தாள்.

அழகான பச்சை நிற சுடிதாரில், தீர்கமான பார்வையுடன் என்னிடம் வாதிட்டுக் கொண்டு இருந்தாள். அவள் பேசுகையில் ஏனோ கோபம் வரவேயில்லை. அவள் விழிகளில் உள்ள ஒளி என்னை அசைவற்று கட்டி போட்டது. அவள் பேசுகையில் ஏதோ இசை ஒலிப்பது போன்ற உணர்வு. நானோ தன்னிலையற்று நின்றிருந்தேன்.

ஒரு வழிகாக என்னுடன் வந்த நண்பன் அவளை சமாதான படுத்தி அனுப்பிவைத்து விட்டான். இன்னும் கொஞ்ச நேரம் அவள் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது எனக்கு.

இருந்தும் அவசர வேலை இருந்ததால் நான் விரைவாக செல்ல வேண்டிய சூழ் நிலை, அவளை பின் தொடராமல் விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவளை சாலையில் பார்த்தேன். ஆனால் இது சிக்னலில். அவள் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை. நானோ அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சில வாரங்கள் கழிந்தன எனது நண்பன் ஒருவனுக்கு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஒர் நாள் அவனை பார்க்க அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அவளை மீண்டும் பார்த்தேன். அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் எனது நண்பன்.

இதற்கு தானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா” – இது என் மனதின் குரல்.

பிறகென்ன அடிக்கடி அவனது அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். அவளை பார்ப்பதற்காக மட்டுமே. அப்படி ஒரு நாள் செல்கையில் விதனா என்னிடம் கேட்டாள்.

“என்ன சார் உங்களுக்கு வேலை எதும் இல்லையா? இங்க அடிக்கடி வந்துட்டு போய்ட்டு இருக்கீங்க”

“ஆமா மேடம், நிங்கவேனா ஒரு வேலை வாங்கி தாங்க” என்றேன். முறைத்து பார்த்தாள். கண்களில் கோபமில்லை. அதனால் துணிந்து,

“இதான் என் நம்பர், எதும் வேலை இருந்தா சொல்லுங்க என்று அலைபேசி நம்பரை அவளிடம் குடுத்தேன்”. வாங்க மாட்டாள் என்று நினைத்தேன்.ஆனால் உடனே ஒரு தவறிய அழைப்பு மூலம் அவளது நம்பரை எனக்கு தெரியப் படுத்தினாள்.

அடுத்த 5 நிமிடத்திற்கு தரையில் கால் பட்டதாகவே தோன்றவில்லை. ஏதோ பறப்பது போலவே தோன்றியது. ஆசை பட்டது நடந்தால் மிகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ விதனா சொல்லுங்க” என்றேன்.

“வேலை கேட்டது நீங்க தானே” என்றாள்.

“ஆமா”

“அப்போ நான் சொல்ற இடத்துக்கு வாங்க” என்று விலாசத்தை சொன்னாள்.

நானும் அவசரமாக நேர்காணலுக்கு செல்வது போல் சென்றேன். அந்த காபி ஷாப் வாசலில் அவள் மட்டுமே நின்று கொண்டுருந்தாள். என்னை பார்த்ததும் உள்ளே சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன். இருவருக்கும் அவளே ஆர்டர் செய்தாள். குடித்து முடித்தபின் அவளே பில் செட்டில் செய்து விட்டு வந்தாள்.

“மேடம் ஏதொ வேலை விசயமானு கூப்டீங்க” என்றேன்

“ஆமா இப்ப நீ பார்த்துட்டு இருக்குறதே வேலைதான் எனக்கு பாடிகார்ட்(Body Guard)-ஆ உன்ன வேலைக்கு சேர்த்திருக்கிறேன்” என்று சொல்லி சிரித்தாள். அப்படியே “நீதான் எனக்கு டிரைவரும் என்ன வீட்டுல கொண்டு போய் டிராப் பண்ணனும்” என்றாள்.

சரி என்று வீட்டிற்கு சென்றேன், அவளை இறக்கி விட்டுவிட்டு நான் மீண்டும் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தேன். அதற்கும் அவளை விட்டு பிரிய மனம் இல்லையோ என்னவோ??. ஸ்டார்ட் ஆகா மறுத்தது. அதற்குள் அவளே என்னை வீட்டிற்குள்ளே அழைத்தாள், முதலில் மறுத்தாலும் பின்பு சென்றேன். அவளது அம்மவிடம் என்னை அவளது நண்பன் என்று அறிமுக படுத்தினாள். அங்கே இருக்க எனக்கு என்னவோ போல் இருந்தது. சிறிதுநேரத்தில், “நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

பின் அவ்வப்போது குறுந்தகவல் பரிமாற்றம், எப்போதாவது அலைபேசி அழைப்பு என்று மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்தது. அவள் “இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்-ஆக (investigative journalist) இருக்கிறாள். அதனால் எப்போதும் பரபரப்புடனே இருப்பாள். அப்படி இருந்தும் அவள் எனக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் இருப்பாள், எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள், நான் பதில் பேசாத போதும். எனக்கு அது பிடித்திருந்தது.

எப்படியோ ஒர் நாள் தைரியமாக அவளிடம், எனது காதலை சொன்னேன். அலை விளையாடும் கடற்ரையில் வைத்து. அவளிடம் இருந்து பதிலாக லேசான புன்முறுவல் மட்டுமே. 8 நிமிடம் ஏதுவுமே பேசவில்லை. பின்னர் என்னை பார்த்து,

“இதை சொல்ல இவ்வளவு நாளா?” என்றாள்..

“வேறு நல்ல பொண்ணு கிடைகாப்பாங்களானு பார்த்தேன் யாரும் கிடைக்கல. அதான் இப்ப சொல்லிட்டேன்” என்றேன் விளையாட்டாக.

அவள் என்னை அடிக்க வந்துவிட்டாள். ஒரு வழியாக சமாதானமும் படுத்தி சந்தோஷமாக வீடு திரும்பினோம். அதன் பின் நாட்கள் சந்தோஷமாக கடந்தன. இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இல்லை. எனக்கு வேலை கிடைக்கவில்லை அது மட்டும் தான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். நான் இதை நினைத்து சோகமாக இருந்தால் “நமக்குனு நேரம் வரும்டா கவலபடாத” என்று விதனா என்னை தேற்றுவாள்.

வேலை வெட்டி இல்லாததால் தினமும் செய்திதாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பதும் எனக்கு முக்கிய பொழுது போக்காக இருந்தது. அதில் கடந்த சில வாரங்களாக முக்கிய விசயமாக பட்டது தென்மாவட்டங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு. இது மட்டும் எனக்கு உறுத்தலாக பட நான் விதனாவை அழைத்து தண்ணீர் தட்டுப்பாட்டை பற்றி இன்வெஸ்டிகேட் செய்து செய்தி வெளியிடலாம் நானும் உதவுகிறேன் என்றேன்.

எனக்கு வேறு ஒரு அசைன்மெண்ட் வந்திருக்குடா..இதுவும் சென்சிடிவான விசயம் தான். அதுவும் தென்மாவட்டம் தான் என்று என்னையும் உடன் அழைத்தாள். பின்னர் விளக்கமாக சொன்னாள். அது தமிழகத்தில் தற்போது நடந்து வரும் மணல் கொள்ளையை பற்றி செய்தி சேகரிக்க வேண்டும் என்றும். அந்த இடம் கோவில்பட்டியிலிருந்து, திருநெல்வேலி செல்லும் வழியில். நாலட்டினம்புத்தூர் என்கிற இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளில் ஆறுகளே கிடையாது. இருந்தும் அங்கே டன் கணக்கில் ஆற்று மணல் கொட்டப்பட்டு இருக்கிறது. அதை பற்றி செய்தி சேகரிக்கவே நாம் செல்கிறோம் என்றாள்.

செய்தி என்றால் அவர்களிடம் போய் நேரடியாக “சார் நீங்க எப்படி இவ்வளவு மணலை கொள்ளை அடுச்சு வச்சிருக்கிங்கன்னு” கேட்கவா முடியும். அதனால் சும்மா அந்த வழியாக போவது போல் இரண்டு நாடகள் அந்த பகுதியை இருவரும் எனது பைக்கில் பார்வையிட்டோம், வெவ்வேறு பொழுதுகளில். அந்த இடம் தேசிய நெடுஞ்சலை 7 க்கு மிக அருகில் தான் உள்ளது. அதனால் பார்வையிட மிகவும் சிரமப்பட தேவை யில்லை.

அந்த குறிப்பிட்ட இடத்திற்கு நேர் பின்னால் நகராட்ச்சியின் குப்பை கொட்டும் இடம் அமைந்துள்ளது. அதனால் அந்த வழியாக குப்பை லாரிகளும் கழிவு நீர் ஏற்றி செல்லும் லாரிகளும் செல்வது வழக்கம். மூன்றாம் நாள் நான் மட்டும் தனியாக சென்றேன். அப்போது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கழிவு நீர் ஏற்றிச்செல்லும் லாரிகள் அந்த மணல் குடோன் இருக்கும் இடத்திற்குள் சென்றன. நான் இது பற்றி அருகில் உள்ள ஒரு தேனீர் கடையில் விசாரித்தேன் ஏன் இந்த லாரிகள் இங்கே செல்கிறது என்று. குப்பை கிடங்கிற்கு செல்லும் பாதை சேதம் அடைந்திருப்பதால் இந்த மாற்றுப் பாதையில் செல்கிறது என்றார். எனக்கு இதி்ல் நம்பிக்கை இல்லை, அவர் சொன்னது சரியா என்று சோதிக்க ஒரே ஒரு வழி மட்டும் இருந்தது. மணல் குடோனுக்கு அருகில் ஒரு மேம்பாலம் இருக்கிறது அதிலிருந்து பார்த்தால் லாரிகள் செல்வதை பார்கலாம் என்று முடிவு செய்து அங்கே சென்றேன்.

நேராக உள்ளே சென்ற கழிவு நீர் லாரிகள் மணல் மேடுகளுக்கு நடுவிலேயே ஓர் இடத்தில் பூமிக்கு அடியில் செல்லும் ஒரு பைப்புடன்(pipe) இணைக்கப்பட்டது. இதை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மழை பொழிய துவங்கியதால், நான் ஹோட்டல் அறைக்கு திரும்பிவிட்டேன்.

இப்போது என்னிடம் ஒரு கேள்வி இருந்தது “ஏன் லாரிகள் இங்கே செல்ல வேண்டும்??“ அதை பற்றி யோசிப்பதற்குள் தான் மழை வந்து விட்டதே. நனைந்து கொண்டே வந்து சேர்ந்து விட்டேன். இதை நான் விதனாவிடம் தெரிய படுத்தவில்லை.

இருவரும் எப்படி உள்ளே சென்று பார்ப்பது என்று யோசிக்களானோம். நான் போலீஸின் உதவியை நாடலாம் என்றேன். இந்த ஏரியா போலீஸ் எப்படியும் அவங்களுக்கு சாதகமாகத்தான் இருப்பார்கள், வேண்டாம் என்றாள். இதை கேட்டவுடன் சில வாரங்கள் முன் செய்திதாளில் வெளியான செய்தி ஒன்று நினைவிற்கு வந்தது “புதிதாக நேர்மையான தாசில்தார் ஒருவர் கோவில்ப்பட்டிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார்”. முக்கியாமாக அவர் மதுரையில் மணல் கடத்தலை தடுததவர் என்பதும் நினைவுக்கு வந்தது. இதை கேட்ட விதனா, “சரி, அவரிடம் சென்று நாளை பேசுவோம்” என்றாள்.

காலை விடிந்தது 7.30 மணிக்கே(எனக்கு அதிகாலை) என்னை எழுப்பிவிட்டாள். நானாக சீக்கிரம் எழுந்திரிக்காததால் போனஸாக காலையிலேயே சண்டை வேறு. அந்த காலையிலும் குழித்து விட்டு நீல நிற சுடிதார் அணிந்து புதிதாக பூத்த மலர் போல பளிச்சென இருந்தாள். அவளை பார்த்த எனக்கு கண்ணிமைக்க கூட தோன்றவில்லை. “சைட் அடுச்சது போதும் போய் குழுச்சு கிழம்புற வழியபாரு” என்று கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை என்மீது எறிந்தால்.

நேரம் காலை 11 மணி இடம் தாசிலதார் அலுவலகம். அவரது பெயர் சிவபாலன் என்று பெயர் பலகை பளிச்சென காட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் வருவது பற்றி அவரிடம் நேற்று இரவே தொலைபேசியில் பேசியிருந்தோம். 11.15க்கு இருவரும் உள்ளே அழைக்கப்பட்டோம். அவரிடம் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு பேசத் துவங்கினோம்.
எங்களோட திட்டத்தை நான் விழக்கி சொல்ல துவங்கினேன்.சார் நீங்க மணல் குடோனை சோதனையிட போவது போல். இரவு 7.30 மணிக்கு அங்கே வாருங்கள். நாங்கள் உங்களுக்கு முன்னமே குப்பை கிடங்கு வழியாக உள்ளே சென்று மறைவான பகுதியில் ஒழிந்து கொள்கிறோம்.

அங்கு நடப்பதை காமிராவில் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அதை சாட்சியக வைத்து அவர்களை கைது செய்யலாம் என்று மொத்த திட்டத்தையும் சொல்லி விட்டேன்.
சிவபாலன் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் இது பற்றி உள்ளூர் காவல் துறைக்கு ஏதும் செல்ல வேண்டாம், ஏதேனும் அவசர தேவை எனில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கானிப்பு அலுவலகத்தை தெடர்பு கொள்ளுங்கள் என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

சரி சார் மாலை சந்திக்கலாம் என்று அங்கிருந்து விடைபெற்றோம்.

எனக்கு இதில் விதனாவை ஈடுபடுத்த மனம் வரவில்லை அதை அவளிடமும் செல்லிவிட்டேன். நீ மாலை என்னுடன் வர வேண்டாம் இங்கேயே இரு என்றேன்.முடியவே முடியாது என்று சண்டை போட துவங்கினாள் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் கேட்க்கவே இல்லை. இறுதியாக சரி வா என்றேன். அவ்வளவு நேரம் இருந்த கோபத்தை விட்டு விட்டு கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்தாள். “இப்படி சண்டையின் இறுதியில் முத்தம் கிடைக்கும் என்றால் , தினமும் சண்டை போடலாமே” என்று நினைத்துக்கொண்டேன்

நேரம் 6 மணி இருவரும் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்பினோம். நேராக நகராட்ச்சியின் குப்பை கொட்டும் இடத்திற்கு சென்றோம். துர்நாற்றம் வீசத்தான் செய்தது
இருந்தும் வேறு வழியில்லை. போக ஆக வேண்டிய கட்டாயம். ஒரு வழியாக மணல் குடோனை நெருங்கியதும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இருட்டுவதற்காக காத்திருந்தோம். அப்போது தானே அவர்களின் கண்களில் படாமல் நாங்கள் உள்ளே செல்ல முடியும்.

நேரம் 7 மணி இருட்டிவிட்டது இருவரும் மெதுவாக உள்ளே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அடிமேல் அடிவைத்து சென்றோம்.அங்கே ஒரு மணல் மேட்டிற்கு அருகே பழைய பழுதடைந்த லாரிகள் நின்றன. இருவரும் அதற்கு பின் சென்று ஒழிந்து கொண்டோம். நேரம் 7.30 ஆகியும் சிவபாலன் வராததால் அவரை தொடர்புகொள்ள முடிவு செய்தேன் ஆனால் அந்த இடம் அமைதியாக இருந்ததால், அழைக்காமல் குறுந்தகவல் மட்டும் அனுப்பினேன்.அவரது கார் பழுதடைந்துவிட்டதால் கொஞ்சம் தாமதமாக வருவதாக பதில் வந்தது.

சரி அவர் வரும் வரை ஏதும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்கிறதா என்று பார்க்க துவங்கினேன். அப்போது தான் கழுவு நீர் லாரிகளின் ஞாபகம் வந்தது. அந்த இடத்தை மேம்பாலத்தில் இருந்து பார்த்ததால், அங்கே சென்று பார்க்க முடிவு செய்தேன்.

விதனாவிடம் இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு நான் மட்டும் அந்த குழாய் இருக்கும் இடத்திற்கு மெதுவாக மறைவாக வந்தேன். அப்போது தான் ஒரு லாரி அந்த இடத்தை விட்டு சென்றது. நானும் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன், அதே நொடி எனது அலைபேசி அதிர்ந்தது “சிவபாலனிடம் இருந்து குறுந்தகவல் அவர் வந்து விட்டதை எனக்கு தெரிவித்தது”. நான் என்னிடம் இருந்த காமிராவை அந்த குழாயின் அருகில் வைத்தேன் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று எனது உள்மனம் சொல்லியது. எப்போதுமே எனது மனதின் குரலுக்கு செவிசாய்ப்பேன் அதனால் தானே எனக்கு காதலியாக விதனா கிடைத்தால்.

பின்னர் மெதுவாக இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன் , விதனாவிடன் இருந்த காமிராவை வாங்கி அங்கே நடப்பதை பதிவு செய்ய துவங்கினேன்.

அங்கே ஜீன்ஸ், காட்டன் சட்டை கையில் ஐ-பேட் (i-pad) சகிதம் அந்த இடத்திற்கு சம்பந்தமே இல்லாத உடைகளோடு ஒருவன் மணல் குவியல்களை பார்வையிட்டுக் கொண்டுயிருந்தான். பின்னர் அங்கு இருக்கும் சிறிய அறைக்குள் சென்றான் அங்கு இருக்கும் கணிணியை பார்வையிட்டான். பின் அவன் வெளியில் வருவதற்கும் சிவபாலன் வருவதற்கும் சரியாக இருந்தது.

இருவரும் சந்தித்து கொண்டார்கள்,

“வணக்கம் மிஸ்டர் சிவபாலன், நல்ல இருக்கீங்களா?”

முதலில் மிடுக்குடன் இருந்த தாசில்தார்,பின்னர்…

“டேய் ராஜேஸ், நீ இருக்கும் போது எனக்கு என்னடா கவலை. நீ அள்ள வேண்டியத அள்ளீட்டு எனக்கும் குடுக்க வேண்டியத கரக்டா குடுக்குற அப்புறம் என்ன பிரச்சனை.. இதுல எனக்கு ஜெண்டில்மேன் இமேஜ் வேற எங்க போனாலும் நல்ல மரியாதைதான்”.

“அதேப்படி நீ மட்டு் நல்லவனு காட்டிக்குற???”

“அது ரொம்ப சிம்பிள் நான் எந்த ஊருக்கு போனாலும் உன்னையும் அங்க வரசொல்லிருக்கேன் அது ஏன்னு தெரியுமா??”

“தெரியாது… நீயே சொல்லு”

நான் மாற்றலாகி போகிற ஊர்ல ஏற்கனவே ஒருத்தன் கடத்தல்ல இருப்பான் நான் அவன மட்டும் புடிப்பேன். ஆனா கடத்தல் எப்பவும் போல நடக்கும் உன் மூலமா
இது அந்த ஊர் மக்களுக்கு தெரியாது இதான் என் இமேஜ்க்கு காரணம்.

இப்போ அந்த இமேஜ்க்கு ஒரு பிரச்சனை இரண்டு பேர் என் கிட்டயே வந்து இந்த கடத்தல் பத்தி கம்ப்ளைண்ட்(complaint) பண்றாங்க. நானும் அவங்கட்ட பேசி இங்க வர சொல்லிடேன் அனேகமா நாம இப்ப பேசுர எல்லாத்தையும் அவன் கேட்டுட்டு தான் இருப்பான்னு நினைக்கிறேன். என்று செல்லி விட்டு செல்போனை எடுத்து டயல் செய்தார் எனது அலைபேசி அதிர்ந்தது. நான் எடுத்து பேசினேன்.

“ஹலோ” – என்றேன்

“டேய் நீ எங்க பதுங்கியிருந்தாலும் என் முன்னாடி உடனே உன் காமிராவோடு வா. நீயா வந்துட்டா பிரச்சனையில்லை நானா உன்னை கண்டு பிடிச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.

தாசில்தாருக்கு விதனா இங்கே இருப்பது தெரியாது. நான் மாலை நான்கு மணிக்கு அவரை தொடர்பு கொண்டு நான் மட்டும் தான் இரவு வருவதாக பொய் சொல்லி வைத்தேன் அது இப்போது அவளை காப்பாற்றியிருக்கிறது.

விதனாவை அவர்கள் பார்த்து விடக்கூடாது, அவளிடம் எவ்வள்வு நேரம் ஆனாலும் இங்கேயே இரு நான் வருவேன் என்று சென்னேன். அவளுக்கு என்னை பிரிய மனமில்லை இருந்தும் வேறு வழியில்லை. அவளது பிறை நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு நானாக அவர்கள் முன் சென்றேன்.

“என்னடா நேத்து நல்லவன் மாதிரி பேசுனான். இன்னைக்கு இப்படி இருக்கானேனு பாக்குறியா.. யோக்கியனா இருந்தா வாழவே முடியாது. அதுக்கு உதாரணம் நீதான். இப்போ இங்கயே சாக போரடா”.

அவன கொல்தற்கு முன்னாடி கையில இருக்கிற காமிராவ எடுத்துருங்கடா என்று செல்லிக்கொண்டே அவனது அடியாட்களை பார்த்து கைகளை காட்டினார் அவர்கள் என் அருகில் வருவதற்கும் மின்சாரம் தடைபடுவதர்க்கும் சரியாக இருந்தது.

வாழ்கையில் முதல் முறையாக மின்சாரம் தடைபட்டதற்கு சந்தோஷ பட்டேன். லேசான நிலவொளி இருந்தது. அந்த வெளிசத்தில் தட்டு தடுமாறி வண்டியயை நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். எப்போது புது பிரச்சனை நான் உள்ளே ஒழிந்திருப்பதாக நினைத்து என்னை அங்கே தேடினால் விதனா மாட்டிக் கொள்வாள். அதானால் சிவபாலனுக்கு போன் செய்தேன்

நான் திருநெல்வேலி செல்வதாகவும், நான் அங்கே போவதற்குள் முடிந்தால் பிடித்து கொள்ளும் படியும் சவால் விட்டேன். இப்போது கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் பிரச்சனை முடியவில்லை.

***

திருநெல்வேலிக்கு இன்னும் 10 கிலோ மீட்டர் என்று ஒரு சாலையோர பலகை ஆறுதல் சொல்லியது.எனது வண்டியின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினேன். ஒரு வழியாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தை சென்றடைந்து நடந்தவற்றை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தேன். அங்கே இருந்த எஸ்.பி ஒரு சாயலுக்கு அன்புச்செல்வனை நினைவுபடுத்தினார்.

தூத்துக்குடி கண்காணிப்பு அறைக்கு தகவல் சொல்லி சிவபாலனை கைது செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து சிறப்பு போலீஸ் பாதுகாப்பு படையுடன் எஸ்.பி கிழம்பினார் நான் அவர்களுக்கு முன் எனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் என்னுடன் ஒரு போலீஸ்காரரும் வந்தார் எதிரிகள் என்னை தாக்கிவிட கூடாது என்பதாற்காக.
நாங்கள் மணல் குடோனுக்கு வந்து சேரவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது. அங்கே சிவபாலன் இல்லை ராஜேஸ் மட்டுமே இருந்தான் அவனிடம் எந்த விசாரனையும் இல்லாமல் கைது செய்தார்கள், அங்கிருந்த மற்ற அடியாட்களும் கைது செய்யபட்டார்கள்.
நான் முன்னமே அவர்களிடம் அந்த காமிரா பதிவை காட்டியிருந்தேன்.

நான் பதட்டமாக நான் மறைந்திருந்த இடத்திற்கு சென்றேன் விதனாவை தேடி, அவளது பெயரை செல்லிக்கொண்டே தான் அங்கே ஓடினேன். என்னை கண்டதும் ஓடு வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.

எஸ்.பி என்னிடம் வந்து அந்த வீடியோ ஆதாரம் அவருக்கும் வேண்டும் என்றார் நான் மற்றொரு காப்பி எடுத்து தருவதாக சென்னேன். அவர் என்னிடம் இப்படி கேட்டதும் நான் குழாய் அருகினில் வைத்த காமிரா எனக்கு நியாபகம் வந்தது. உடனே அங்கே சென்று அதனை எடுத்து வந்தேன்.

போலீஸ் கைதிகளுடன் செல்ல , நான் என் தேவதையுடன் அறைக்கு திரும்பினேன்.
அழுதாலும் அவளது அழகு ஒன்றும் குறையவில்லை. வந்ததே சரி என்று , காமிராவில் என்ன பதிவாகிருக்கிறது என்று பார்க்க துவங்கினேன்.

மின்சாரம் தடை பட்டதால் காட்சி ஏதும் கிடைக்கவில்லை ஆனால் இருவரின் குரல் பதிவுகள் அங்கே கிடைத்தன. அது ஓடிப்போனவன் தங்கத்தப்பத்தி கண்டுபிடிக்க வந்திருப்பானோ?? – முதலாமவன் ம்ம்ம்ம் இருக்கலாம்.. தங்கத்தட்டுப்பாடு தான இப்போ ஊருல முக்கியபிரச்சனையா இருக்கு- இரண்டாமவனின் பதில்

நான் தங்கம் என்றால் மணலைத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன் மீண்டும் அவர்களது உரையாடல் தொடர்ந்தது நான் நினைத்தது தவறு என்று எனக்கு சொல்லியது.

நம்ம அண்ணனோட யோசனையே தனிடா…

எப்படி சொல்ற.??

ஆமா , பின்ன கழிவு நீர் லாரிய வச்சுதான் தங்கத்த கட்த்துறாரு. அந்த லாரிமேல யாருக்கும் சந்தேகம் வராதுல்ல..

“அட இங்கே நிஜமாவே தங்கத்தையும் கடத்துராங்க போல” என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனாலும் தொழில் சுத்தம்டா லாரிக்கு வெளில கழிவு நீர்னு எழுதியிருந்தாலும் உள்ள என்னமா சுத்தமா வச்சுருகாறு.. சுத்தமா இருந்தாதான கொண்டு வற்ற நீலத்தங்கத்துக்கு ஏதும் ஆகாது என்றான்.

என் மூலையில் மின்னல் பளிச்சிட்டது அட அவர்கள் “நீலத்தங்கம்” -ன்னு சென்னது தண்னீரை என்று. நான் கண்டு பிடித்த இந்த விசத்தை தூங்கி கொண்டிருக்கும் விதனாவை கஷ்டப்பட்டு எழுப்பி அவளிடம் சென்னேன். ஒரு செய்திக்காக இங்கே வர இப்போது போனஸாக மற்றொன்றும் கிடைத்ததில் இருவருக்கும் மகிழ்ச்சியே.

இன்னும் வேலை ஏதும் கிடைக்காததால் நடந்தவற்றை ஒரு கதையாக எழுதலாம் என்று முடிவு செய்து எழுதியும் முடித்து விட்டேன். முக்கியமான விசயம் இன்னும் விதனா விடம் கதை எழுதியதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.
எழுதி முடித்த நொடி.

என் செல்போன் அதிர்ந்தது அழைத்தது விதனா..!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *