கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 5,456 
 

(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆற்றில் தண்ணீர் வற்றி மணல் நிறைந்திருந்தது. இருபக்கங்களிலும் சற்றே உயர்ந்த மணல் பரப்பு நடுவில் குறுகி பொடி மணல் நிறைந்திருந்தது. வண்டிகள் குறுக் காகச் சென்றதன் தடம் மணல் வெளியில் அழுந்தித் தெரிந்தது. அந்தத் தடத்திலேயே ராமு சென்று கொண்டிருந்தான், மணலில் காலை அழுத்தி அழுத்தி வைத்துச் சென்று கொண்டிருந்தான்.

அவன் தலையில் ஒரு வாழைச் சருகுக் கட்டு. நீட்டு வாக்கில் உலர்ந்த வாழை இலைகள் ஒன்றின் மீது ஒன்றக கவனத்தோடு அடுக்கி உருட்டிச் சுற்றி வாழைநார் கொண்டு அழுத் திக் கட்டிய கட்டு ஓர் உருளை மாதிரி அவன் தலையில் கனத்துக் கொண்டிருந்தது. தோளில் இரண்டு இள நீர்; பெரிய பச்சை இள நீர். ஒன்றின் நாரைக் கொஞ்சம் பிய்த்து இன்னொன்றோடு இணைத்துத் தோளில் மாட்டிக் கொண்டிருந்தான். கால் மணலில் பொதிந்து அழுந்தி மீண்டும் பெயர் கையில் இள நீர் மார்பிலும் தோளிலும் வேகமாக அடித்தது. இள நீர் மோதி ஏற்படும் வலியை விட, இப்படியே ஆடிக் கொண்டிருந்தால் நார் பிய்ந்து கொண்டே வந்து அக்கரை செல்வதற்குள் கீழே விழுந்து விடும் போல இவனுக்குத் தோன்றியது. வலது கையை வாழைச் சருகுக்கு இணக்கமாக வைத்துக் கொண்டு, இடது கையால் மார்பு பக்கத்து இள நீரைத் தாங்கிக் கொண்டு, கால்களை மணலில் ரொம் பவும் பதியாமல் எடுத்து வைத்தான். ஆனா லும் முதுகுப் பக்கத்து இள நீர் மோதி ஆடிக் கொண்டு நார் கிழிய, கீழே சென்றது. இவன் திடிரென்று கால்கள் நன்றாக அழுத்தி ஊன்றி நடக்க ஆரம்பித்தான், கால்கள் மணலில் பதிந்து பெயர்ந்தன, எலும்புத் துண்டொன்று மணலிலிருந்து லேசாகத் தலையைக் காட்டியது. இவன் பார்வை தாழ, அதன் மீது கால் வைத்து அழுத்தி மிதித்துக் கொண்டு சென்றான்.

நார் பிய்ந்து கொண்டே வந்த இள நீர் பின் பகுதியில் கொஞ்சம் இறுக்கத்தோடு இருந்தது. இப்படியே இருந்தால் அக்கரைக்குச் சென்று விடலாம் என்று இவனுக்குப்பட்டது. சிறிது தூரம் நடந்தான், மணல் பொதியாகி வேகத்தைக் குறைத்தது; நடை தடைப் பட்டது. கால்கள் மணலில் பதித்த படி இருக்க, தலையைப் பின்னால் திருப்பிப் பார்த்தான். ஆறு வெறும் மணலாக இருந்தது. கரையையொட்டி ஒரு எருமை மேய்ந்து கொண்டிருந்தது. இவன் பார்வை மெல்ல திரும்பி எதிர் கரைக்குச் சென்றது. ஒரு பருந்து, இவன் செல்லும் திசையில் நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது. இவன் அதையே பார்த்துக் கொண்டு இருந்தான், அதன் வேகம் வர வர குறைந்து கொண்டு வருவதுபோல் இவனுக்குப்பட்டது. கிட்டத் தட்ட அது தன்னை விட்டுப் போய் விட்டது போல இவனுக்கு இருந்தது.

தடைப்பட்டிருந்த கால்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தன. ஆற்று மணலில், அவன் சிறுபா தங்கள் சுவடுகளைப் பதித்துச் சென்றன. இவன் நடக்க நடக்க மணல் மாறிக் கொண்டே வந்தது. பொடி மணல் மாறி பெருமணல், சிறு கற்கள், எலும்புத் துண்டுகள், கோரைப் புல், இவன் சறு லான கரையில் கால் வைத்தாள், கால்கள் பதியாவிட்டாலும் நடப்பது கஷ்டமாக இருந்தது. வண்டிகள் ஏறியும் இறங்கியும் பாதை சறுகலாக இருந்தது. ஒவ் வொரு அடியையும் வெகு கவனத்தோடும் திதானத்தோடும் எடுத்து வைத்தான், மேலே செல்லச் செல்ல முதுகுப் பக்கத்து இள நீரின் நார் பிய்ந்து கொண்டு வந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கரை வந்து விடும். கரையில் உட்கார்ந்து இள நீரை மீண்டும் கோர்த்துக் கொள்ளலாம்.

இவன் இன்னுமொரு அடி எடுத்து வைத்தான். இன நீர் அறுந்து உருண்டது. இவன் தடுமாறிப் போனான். முட்டிப் போட்டு கால்களை மடித்து, கைகளை மான்றி ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டான். ஒரு பக்கமாகச் சரிந்த வாழைச் சருகுக் கட்டை நேர் செய்து கொண்டான். இவன் பார்வை இளநீரை நோக்கித் திரும்பியது. இரண்டு இளநீர்களும் பத்தடி இடைவெளிக்கு ஒன்றாய் கிடந்தன. தலையிலிருந்து சருகுக் கட்டை இறக்கிக் கக்கத்தில் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு ஒரு துள்ளலோடு மீண்டும் ஆற்றுக்குள் இறங்கினான்.

சருகுக் கட்டை மணலில் போட்டு விட்டு ஒரு இள நீரையெடுத்து வந்து மற்ருென்றின் பக்கத்தில் போட்டுக் கொண்டாள். மணலில் நன்ருகக் கால்களைப் பரப்பி உட்கார்ந்து கொண்டு ஒரு இளநீரை யெடுத்து தலையைச் சாய்த்து நுனிபல்லால் கொஞ்சம் ஆழமாகக் கடித்து நாரைக் கிழித்தான், கொஞ்சம் நார் வந்தது. பிறகு கால்களை முட்டிப் போட்டுக் கொண்டு இரு கைகளாலும் இள நீரை ஏந்திப் பற்றிக் கொண்டு துணிப் பல்லால் நரை இடுக்கிக் கொண்டு, இள நீரை கீழே இழுத்தான். பட்டையாக, கத்தியால் குத்திக் கிழித்தது போல் நார் வந்தது. ஒரு தரம் பார்த்துக் கொண்டான். இது போதும் போல் தோன்றியது. இரண்டாவது இள நீரைக் கையில் எடுத்துக் கொண்டு பார்த்தான், அதில் நார் இருந்தது கட்டினால் தாங்கும். இவன் மீண்டும் இளநீரை ஒன்று கப் பிணைத்தான், முடிச்சைப் பல்லால் கடித்து இறக்கினான். இப்போது, முனீஸ்வரன் மரம் வரையில் தாராளமாகப் போகலாம் என்று பட்டது.

மாமா சொன்னதைக் கேட்டிருந்தால், தன்னந்தனியாக ஆற்றில் நின்று கொண்டு இருக்க வேண்டியதில்லை. சீனியிடம் இள நீரையும் வாழைச் சருகுக் கட்டையும் கொடுத்துவிட்டு கைவீசிக் கொண்டு வந்திருக்கலாம். அதில் இவனுக்கு இஷ்டமில்லை. தானே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம். மாமா சொன்ன சொல்லைத் தட்டி விட்டு எடுத்துக் கொண்டான்.

இளநீரைக் கீழே போட்டு உட்கார்ந்து கொண்டான். கஷ்டத்திலும் சிரிப்பு வந்தது. இப்போது தான் நினைவுக்கு வந்தது மாதிரி பையில் கையை விட்டுப் பார்த்தான். ஒரு கட்டு சுருட்டு கிடா மார்க் சுருட்டு. எத்தனைச் சுருட்டுக்கள் இருக்கும். இவன் எண்ண வில்லை. ஆனாலும் பத்துப் பன்னிரண்டு இருக்கும்போல் தோன்றியது. பையில் கவனமாகச் சுருட்டைத் திணித்துக் கொண்டான், தான் சீக்கிரம் போகவேண்டும் – எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரமாகப் போகவேண்டும் என்று இவனுள் ஒரு பரபரப்பு மூண்டது.

சருகுக்கட்டை ஒரு கையால் பற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். கால்கள் மணலில் பதிய நடையின் வேகம் குறைந்தது. ஒவ்வொரு அடியையும் வெகு நிதானமாக எடுத்து வைத்தான், மேலே போகப்போக முழுபாரமும் கையில் இறங்குவது போல் இருந்தது. சருகுக்கட்டையை வாயில் கவ்வி இடது கைக்கு இளநீரை மாற்றிக் கொண்டான். இன்னும் கொஞ்ச தூரந்தான்…

இந்த மேட்டை ஏறிவிட்டால் ஒரு இறக்கம். நல்ல இறக்கம். கீழே போவது கஷ்ட மில்லை. கால்கள் தானாகவே ஓடும். இவனுக்கு அந்த ஓட்டம் பிடிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அப்படித்தான் சறுக்கி ஆடுவான், இப்போது அம்மா திரி சறுக்கிக் கொண்டு செல்ல முடியாது. இரண்டு கைகளிலும் பாரம் இருக்கிறது. வரும் போது ஒன்றாக ஓடிவந்து சறுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இவன் கால்களை நன்றாக ஊன்றி இடுப்பை வளைத்து மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்துக் கரைக்கு வந்தான். மூச்சு வாங்கியது. இள நீரைக் சீழே வைத்தான், அதன் மேல் சருகுக்கட்டு, கையை மாறி மாறி உதறிக் கொண்டான். ஒரு கையால் இன்னொரு கையைப்பிடித்து விட்டுக் கொண்டான். இப்போது தன் கையிலிருந்து வலி இறங்கி எங்கோ செல்வது போல் இவனுக்குக் தோன்றியது. புன் சிரிப்பு இதழ்களில் அரும்ப-பார்வை ஆற்றங்கரையில் விழுந்தது. ஒரு தயிர்க்காரி சென்று கொண்டிருந்தாள், அவள் ஊருக்குள் சென்று கொண்டிருக்கிறாள். இவனோ ஊரின் எல்லைக்குச் செல்லவேண்டும்.

இவன் பார்வை இந்தப் பக்கமாகத் திரும்பிய போது, சுடுகாட்டு அரசமரத்தில் ஒரு கழுகு-பழுப்பு நிறக்கழுகு- கழுத்தை நீட்டி இவனையே பார்ப்பது மாதிரி உட்கார்ந்திருந்தது. இவன் மனத்தில் இனந் தெரியாத உணர்ச்சி பரவியது. இவள் பார்வை கழுகு மீதிருந்து அகன்று ஆற்றுப் பக்கம் சென்றது. மணல் நிறைந்த ஆற்றில் தயிர்க்காரி ஒரு கை அலைய அலைய நடந்து சென்று கொண்டிருந்தாள். இவன் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு காற்று கிளம்பி மணலையும் தழைகளையும் வாரிக் கொண்டு சுழன்று சுழன்று மேலே சென்றது.

‘-க்கீ’ என்று கத்திக் கொண்டு கழுகு சிறகுகளை அடித்துக் கொண்டு பறக்க ஆரம் பித்தது. இவன் மிகுந்த விசித்திரத்தோடு கழுகு போவதையே பார்த்துக் கொண்டிருந்தன. இவன் செல்லும் பாதையிலேயே சுடுகாட்டை யொட்டியே கழுகும் சென்று கொண்டிருந்தது. இவன் கொஞ்ச நேரம் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தான். நீளமாகப் பயணத்தைத் துவக்கிய அது, தன்னை மாற்றிக் கொண்டு மேலே போவது போல் இவனுக்குத் தோன்றியது. சந்தோஷ முற்று, புன்னகை பூத்தான். கைகளை உதறிக் கொண்டு சருகுக் கட்டையெடுத்துத் தலயில் வைத்துக் கொண்டு – இளநீரைத் தோளில் மாட்டிக் கொண்டே சாலையில் இறங்கி நடக்கலானான். குறுகலான சாலையை நொச்சியும் கல்யாண முருங்கையும் அடைத்துக் கொண்டிருந்தன. கல்யாண முருங்கையின் செந்நிறப் பூக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு வெள்ளாடு இவனைக் கண்டதும் மெல்ல கத்திக் கொண்டு சுடுகாட்டை நோக்கி வேகமாக நடைபோட்டது.

சுடுகாட்டைப் பார்க்காமல் நடக்க இவன் மனம் விரும்பியது. ஆனாலும் பார்வை இவனை யும் அறியாமல் அந்தப் பக்கம் சென்றது. பார்ப்பான் சுடுகாட்டில் பிணம் வேகுவது போல் இருந்தது. சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். இவன் நடை தரித மாயிற்று. அநேகமாக ஓடுவது மாதிரி மார் பிலும் தோளிலும் இளநீர்கள் இடிக்க இடிக்கச் சென்றான்.

கொஞ்ச தூரம் சென்றதும் அடி வயிறு வலிப்பது போல் இருந்தது: நடையின் வேகம் குறைந்தது. நின்று இளைப்பாறிக் கொண்டான். மீண்டும் நடக்க ஆரம்பித்தபோது பாதை நீண்டு கொண்டே போவது போல இருந்தது. வண்டியிலே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சுகமாக வந்திருக்கலாம் என்ற நினைப்பு வந்ததும் சிரி சதுக் கொண்டான். இளநீரைக் கொஞ்சம் மேலாக இழுத்து போட்டுக் கொண்டான். குறுக்காக ஒற்றையடிப் பாதையில் ஏறி மாங்கனளயும் செடிகளையும் சுற்றிக் கொண்டு சென்றான். ஒரு எருமை மந்தை தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மேய்ந்தபடி இருந்தது. அவைகளை அதட்டி ஓட்டிக் கொண்டு நடத்தான், தன் சப்தமே தனக்குத் தெம்பு தருவது போல் இருந்தது. இன்னும் உரத்தக் குரலில் மாடுகளை விரட்டிக் கொண்டு சென்றான். குறுக்கு வழி முடிந்ததுமே புளியமரங்களுக்குப் பின் நல் தன்னுடைய ஜனங்கள் நிற்பது இவனுக்குத் தெரிந் தது. இவன் நடையில் ஒரு துள்ளல் உண்டாயிற்று. வலது தோளிலிருந்து இடது தோளுக்கு இளநீரை மாற்றிக் கொண்டான். புளியமரத்தைத் தாண்டி மண் நிறைந்த சாலைக்கு வந்தான்.

சாலையோடு சென்று கொண்டிருந்த ஒருத்தி இவனைப் பார்த்ததும் அடையாளங் கண்டு கொண்ட பெருமிதத்தோடு “இங்க அதை கொடு குழந்தே” என்று கைகளை நீட்டினாள்.

இவள், “ஹம்” என்று மறுத்துரைத்து வேகமாக நடைபோட்டான். கொஞ்ச தூரத் தில் தண்ணீர் குடத்துடன் அக்கா சென்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க இவன் தடை துரிதமாயிற்று. இவன் நெருங்க நெருங்க முனீஸ்வரன் மரத்தடியில் இருந்து வர்கள் எல்லோரும் நன்றாகத் தெரிய ஆரம் பித்தார்கள், பெண்கள் ஒரு பக்கத்தில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தை எல்லோருக்கும் பூ கொடுக்கிறாள், பூஜைக்கு வேண்டிய காரியங்கள் தொடங்கி விட்டனபோல் இருந்தது. தடை மிகவும் வேகமாக – இவனுக்கே ஆச்சரியமளிக்கும் விதத்திலும் விழுந்தது.

அழகு குளத்து முகப்பில் இவளைக் கண் டதும், “நீயா இதையெல்லாம் தூக்கியாறே. வேற ஆளு இல்ல” என்று கேட்டார்.

இவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“இங்க கொண்டா”

“வேண்டாம் தாத்தா”

“என்ன வாணாம்”

அவர் கை இவன் பக்கம் நீண்டது.

இவன் உடலை நெளித்து முன்னால் சென்று, “இன்னும் வண்டி வர்லீயா தாத்த ?” என்று கேட்டான்,

“அசத்தானே பாத்துக்கிட்டு இருக்கேன்; நீ வண்டியில வரேன்னு உங்க ஆயா சொன்னா. என்னாடான்னா நடந்து வர்றே”

இவன் ஆச்சரியமுற்றான். இவனுக்கு முன் னே புறப்பட்ட வண்டி, இன்னும் வந்து சேரவில்லை. இவன் நடந்து வந்து விட்டான். இப்போது இளநீரும் வாழைச்சருகும் கனமே இல்லாமல் இருப்பது மாதிரி இவனுக்குத் தோன்றியது.

“எல, அந்த எலக்கட்ட இப்படிக்கொடு” அழகு கரம் நீண்டு எடுத்துக் கொண்டது. இவன் திரும்பி அவரைப் பார்த்தான். பெரிய பற்கள் தெரியச் சிரித்தார். அவர் பல்லை பெரிய கல்லால் உடைக்கவேண்டும் போல் இவனுக்கு இருந்தது. கூடவே இள நீரையும் பிடுங்கிக் கொண்டு விடுவாரோ என்ற பயமும் உண்டாயிற்று. இவன் வேகமாக ஓடுவது மாதிரியே சென்றான்.

குளித்துவிட்டு கரை ஏறிய பெரியம்மா, “வாடா, நீயா இதைத் தூக்கியாறே. வேற ஆளு இல்ல” என்று கேட்டாள்.

இவன் பெருமிதத்துடன் தலையசைத்தான்.

“கனமே இல்ல பெரியம்மா

“உம்” அவள் புன்னகை பூத்தாள்.

இவன் தலை குனிந்து கொண்டான்.

“இங்க கொடு” இள நீரை எடுத்துக் கொண்டு “மாமா உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. அதோ இருக்காங்க பாரு” என்று கையைக் காட்டினாள். இவன் தலை அசைத்தன், மாமா பக்கமாக நடந்தான்.

மாமா நீல ஜமக்காளம் விரித்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார், அவர் பக்கத்தில் இப்படியும் அப்படியுமாக ஒரு பத்துப் பன்னிரண்டு பேர்கள், நடு வில் ஒரு பெரிய வெற்றிலைத் தட்டு, வெள்ளித் தட்டு. அதில் வெற்றிலையும் சீவலும் நிரம்பி வழிந்தன.

ஆண்டி கை நிறைய சீவலை அள்ளிக் கொண்டே, “வாங்க மாப்பிள, எங்க காணால -” இவனைப் பார்த்து கண்களைச் சிமிட்டினார்.

எல்லோருடைய பார்வையும் இவன் மீது விழுந்தது. இவனுக்கு வெட்கமாகப் போய் விட்டது. கணகளத் தாழ்த்தி மாமாவைப் பார்த்தான், கீழ் உதட்டில் வெற்றிலை எச்சில் வழிய வழிய இவனைப் பார்த்துத் தலையசைத்து புன்னகை பூத்தார். இவன் மெல்ல பின்னுக்கு நகர்ந்தான்.

ஆண்டி இவன் கையைப் பிடித்திழுத்து, “மாப்பிளக்கு வெக்கம் வந்துடுச்சு. நீ இப் படிக் குத்து மாப்பிள” என்று தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார். அவர் கை இவன் தலையை வருடியது. இவன் அவர் கையில் சறுக்கிப்போகும் தங்கக் காப்பையே பார்த்துக் கொண்டிருந்தான்,

“அத்தான், சுருட்டு இருக்கா” இவன் மாமா கேட்டார்.

“மாப்பிளக்கு இல்லாமலா” சாமிக்கண்ணு துணிப் பையை மடியிலிருந்து எடுத்து தரையில் வைத்துப் பிரித்து, ஒரு சுருட்டை யெடுத்துக் கொடுத்தார்.

இவன் மாமா பக்கம் நகர்ந்து, தன் பையிலிருந்து ஒரு கட்டு சுருட்டை எடுத்து முன்னே வைத்தான்.

“பத்தரமா வச்சுக்கோ, அது சாமிக்கு”

சுருட்டுக் கட்டை யெடுத்து மீண்டும் பையில் வைத்துக் கொண்டான்.

“மாப்பிளக்கு அத்தான் சாடை அப்படியே இருக்கில்ல” என்றார் அழகு.

இவன் மாமா பதிலொன்றும் சொல்ல வில்லை, அவர் பார்வை திரும்பி இவன் முகத்தில் விழுந்தது. ஒரு பெருமித சிரிப்பு-அவர் உதடுகளில் புரண்டு மறைந்தது.

“சாடை என்ன? அவுங்கதான் தம்பி, காது கண்ணு, மூக்கு-எல்லாம் அப்படியே இருக்கு”

எல்லோருடைய பார்வையும் இவன் மீது திரும்பியது. இவன் தலை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவர்கள் பேச்சு யுத்த முனையில் மரணமுற்ற இவன் தகப்பனாரைப் பற்றிச் சென்றது. இவனால் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை, மெல்ல ஜமக் காளத்தில் கையூன்றி எழுந்தான். யாரையும் பார்க்காமல் பின்னால் நகர்த்து ஓட ஆரம்பித் தான், மாமா சொன்னது வெறும் சப்தமாக இவன் காதில் விழுந்தது. இவன் துள்ளித் துள்ளி நொண்டி ஆடுவது போல குதித்துக் கொண்டு அத்தை இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவள் எதிரே வந்து கொண்டு இருந்தாள். அவளைச் சுற்றி ஒரு கூட்டம், கையில் பானைகளும் தட்டுக்களும் கூடைகளுமாக.

வண்டி ஒரு பக்கத்தில் அவிழ்த்துக் கிடந்தது. இவன் அத்தையோடு போய் ஒட்டிக் கொண்டான். அவள் வர்ணப் பூச்சுக்கள் நிறைந்த ஒரு பானையை இவனிடம் கொடுத்தாள். இவன் பானையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான்.

இவர்கள் நடக்க நடக்க ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று கொண்டார்கள். பெண்கள் நடக்க ஆண்கள் பின்னால் வர எல்லோரும் முனீஸ்வரன் மரததை நோக்கி மௌனமாக நடந்தார்கள். முன்னே செல்லச் செல்ல நடையில் தொய்வு ஏற்பட்டு நிற்பது போல் இருந்தது. எப்போதோ கூவும் பறவையின் ஒலியோடு இவர்கள் மெல்ல அடியெடுத்துவைத்தார்கள். மரத்தின் அருகே சென்றதும், திடீரென்று ஒரு பெருங்காற்று கிளம்பி மரத்தை உலுக்கி, கிளைகளுக்குத் தாவி தழைகளை உதிர்ததுக் கொண்டு சென்றது.

“ஐயாவே”

“அப்பனே, முனியாண்டி”

பட்டை பட்டையாகத் திரு நீறு பூசிக் கொண்டு ஈரவேட்டியை மடித்து கோவண மாகக் கட்டிக்கொண்டு மார்பில் குறுக்காக மாலை போட்டுக் கொண்டு முனிஸ்வரன் சூலத்தின் முன்னே நின்று கொண்டிருந்த பூசாரி, “ஆ” என்று துள்ளிக் குதித்தான். கைகளைத் தரையில் ஊன்றி ஒரு சுற்றி வந்தான். குறுக்குமாலை கையில் சிக்கிக் கொண்டது. கையை உதறிக் கொண்டான். இரண்டடி பின்னே வந்து நின்று விழிகளை மூடாமல் மரத் தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை அப்படியே நிலைத்திருந்தது. எல்லோரும் பானகளையும் கூடைகளையும் கீழே வைத்து விட்டு அண்ணாந்து பார்த்தபடியே இருந்தார்கள்.

“முனி வந்துடுச்சு”

பூசாரி ஒரு மிடுக்குடன் திரும்பி சூலத்தின் கீழே சடெரென்று விழுந்து கை கூப்பித் தொழுதான்,

இவன் ஒன்று, இரண்டு, மூன்று என்று மனத்துக்குள்ளே எண்ணிக்கொண்டே இருந்தான். பூசாரி கால்களை இணைத்து நீட்டிய படியே கிடந்தான். இவன் பதினைந்து என்று எண்ணும்போது அவன் எழுந்தான். இவன் கொண்டுவந்து வைத்த பானையை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாகக் குளக்கரைகுச் சென்றான்.

ஒரு குடம் தண்ணீர் கொண்டு வந்து சூலத்தில் ஊற்றினான். நீர் சூலத்தில் விழுந்து நாலாபக்கமும் சிதறித் தரையில் இழிந்து ஒரு வாய்க்காலாய் உருப்பெற்று காலைநோக்கி ஓடி வந்தது. இவள் மெல்ல தன் காலைத் தூக்கி அதில் வைக்கப் போனான். மாமா தலையசைத் துத் தன் பக்கமாக இவனை இழுத்துக்கொண் டார். இவன் பார்வை சூலத்திலிருந்து விலகி எதிர்ப்பக்கம் சென்றது. மாடு மேய்க்கும் சிறுவர்களும் சாணி பொறுக்கும் சிறுமிகளும் மிகுந்த அடக்கத்துடன் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். ஒரு கருத்த பையன் எருமை மாட்டின் மீது சவாரி செய்து கொண்டு வந்தான்.

மிகுந்த அதார்கள். ஒரு காது கொண்டு

பூசாரி சூலத்திற்கு ஒரு பெரிய மாலையை எடுத்துச் சாத்தினான். மாலை சூலத்திலிருந்து தரையில் புரண்டு கொண்டிருத்தது. தன் உயரத்திற்கு மேலே மாலை இருக்குமென்று இவள் நினைத்துக் கொண்டான், தான் இந்த மாலையைப் போட்டுக் கொண்டால்கூட தரை யில் கொஞ்சம் புரளும் என்று சொல்லிக் கொண்டான். தரையில் புரண்ட மாலையை எடுத்துச் செங்கல் மேல் வைத்துவிட்டு, பெரிய முனிக்கு எதிரே உள்ள பனைமரத்தடியில் இருக்கும் சின்ன முனியின் கீழ் ஒரு புதிய செங்கல்லை நட்டு திரு நீலும், சந்தனமும், குங்கு மமும் பூசினானான், அவனுடைய ஒவ்வொரு செயலையும் இவன் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான், பூசாரியின் வாய் இடை விடாது முணு முணுத்துக் கொண்டிருந்தது. அதில் அவ்வளவும் இவனுக்குக் கேட்கா விட்டாலும் சில கணங்களில், எங்கள் குலம் தழைக்க வந்த முனியே … ஆதிமுனியே ஐயாவே…அப்பனே…’ என்ற வார்த்தைகள் கடல் அலையைப் போல் தோன்றி சீறிக் கொண்டு வந்தன .

பூசாரி நடக்காமல் ஓடுவதையும் பேசாமல் பொறுமுவதையும் இவன் ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தான். இவனுடைய தாழ்த்த பார்வை தன் கூட்டத்தில் படர்ந்தது. ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட தன்னை மறந்த நிலையில் முனியின் பக்தியில் அமிழ்ந்து கொண்டிருப்பது போல இருந்தது.

சூலமும் பூமாலையும் முனிமரமும் குளமும் மனத்திலிருந்து மறைய, இந்த நேரம் வகுப்பில் என்ன நடக்கும் என்ற நினைப்பு இவனுக்கு வந்தது. மணவாள ஐயங்கார் கணக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருப்பார். வேலுசாமி கணக்குத் தப்பாகப் போடுவான். ராமு, அவனுக்கு ஒண்ணு கொடுத்து கணக்கச் சொல்லு” என்பார். இவன் மெதுவாகக் குட்டுவான். அவர், ‘இங்க வா’ என் பார். சிரித்துக் கொண்டே அருகில் செல்லுவான். ‘குட்டச் சொன்ன தடவியா கொடுக்கற’ அவர் பிரம்பு இவன் முதுகில் மெல்ல அடிக்கும். சங்கரன் குதித்துச் சிரிப்பான். ‘இப்படித்தான் சார், அவனும் குட்டினான்-‘ என்பான், அவனைத் தொடர்ந்து ராஜா, பிச்சைக்குட்டி. சற்றைக்கெல்லாம் கணக்கு வகுப்பு சிரிப்பில் மிதத்து, மறுபடியும் சம நிலைக்கு வரும். மணவாள ஐயங்கார் பிரம்பை மேசையில் தட்டி, கணக்கைச் சொல்லுவார்…

“அண்ட சராசரம் காக்கும் ஆதி முனியே
வால் முனியே.
அப்பனே.
முனியாண்டி…”

பெரும் முழக்கத்தோடு பூசாரி நீண்ட வாழை இலையை எடுத்து விரித் தான். பெரிய இலை நீளம் மாதிரியே அகல மாகவும் இருந்தது. கிழிசல் ஏதும் இல்லா மலும் இருந்தது.

இவள் நினைவின் இழைகள் அற, கனவுலகம் போன்ற காட்சி மறைய தன் முன்னே நடப்பதைப் பார்க்கலானான். ஒரு பானை சோற்றையெடுத்துக் கொட்டி உயர்ந்ததைத் தன் கையால் கிளறி விட்டான். ஆட்டுக்கறி குழம்பை அதில் கொட்டினான். ஒரு தொடை முழுதாகக் கிடந்தது. ஒரு சட்டியில் ஆட்டு ரத்தம், அந்தப் பக்கம் பரங்கிக்காய் கூட்டு முருங்கை இலைப் பொறியல்: இத்தப் பக்கம் கோழி; சேவல் கோழி, பெரிய கோழி, தங்கத்தினுடையது. இவன் தான் பிடித்துக் கொண்டு வந்தான். பிடித்து மார்போடு அணைத்துக் கொண்டு வந்தபோது புரண்டு கீறி கேவிக் கொண்டோடிய கோழி கறியாகி விட்டது. ஒரு சின்ன கலயத்தில்கள், தென்னங்கள்.

பூசாரி கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு இலையை நோட்டமிட்டான். தலையைக் கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு ஒவ் வொன்முகப் பார்த்தான். ஏதோ குறைவது போல் அவனுக்கு இருந்தது. என்ன வென்று சட்டென்று நினைவுக்கு வராதவன் போல தவித்தான். ஒரு முறை இலையைச் சுற்றி வந்தான். பின்பு திடிரென்று மாமா பக்கம் திரும்பி, “எங்க, சுருட்டு” என்றான்.

அவன் குரல் ரொம்பவும் மாறி, வழக்கம் போல் இல்லாது இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. என்ன மாறுதல் என்று தெரியவில்லை. ஆனால் மாறி இருப்பதாகத் தோன்றியது.

மாமா அத்தையை அந்தக் கூட்டத்தில் தேடினார். அவள், “கொடுத்து அனுப்பினேனே, ஆண்டியைக் கேளுங்க” என்று சொல்லிக் கொண்டே முன்னே வந்தாள்.

“வரட்டும்” ஒரு அதட்டல் போட்டுக் கொண்டு, குனிந்து உடுக்கையை எடுத்து கணீரென்று ஒரு சப்தத்தை உண்டாக்கினான் பூசாரி, திடீரென்று உடுக்கையிலிருந்து எழுந்த சப்தத்தில் அனைவரும் இனங்கண்டு கொள்ள முடியாத ஒரு தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

மாமாவின் கையிலிருந்து நழுவி இரண்டடி முன்னே சென்று பூசாரியிடம் சுருட்டுக் கட்டைக் கொடுத்தான, இவனை, அவன் ரொம்பவும் விசித்திரமாகப் பார்த்தான். கறுத்து வியர்வை வடியும் அவன் முகத்திலி குந்து ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. இவனிடமிருந்து சுருட்டை வாங்கிக்கொண்டு, உடுக்கையை ஒரு குலுக்குக் குலுக்கி இவன் காதருகில் ஒரு தட்டுத் தட்டிப் பெரிதாகச் சிரித்தான், அவனுடைய சிரிப்பு, இவன் மனத்தினுள் இடி மாதிரி சென்று பாய்ந்தது. அங்கிருந்து சரசரவென்று கீழே கால்கள் வழியே இறங்குவது மாதிரி இருந்தது. கைகளை நெஞ்சில் குறுக்காக வைத்துக் கொண்டு மாமாவுக்குப்பின் மறைந்து கொண்டான்.

வால் முனிக்கு சுருட்டை வைத்துவிட்டு, ஒரு சுருட்டை எடுத்துக்கொண்டு சின்ன முனிக்கு வைக்க பூசாரி கூட்டத்தைப் பிளந்து கொண்டு சென்றான். சென்ற அதே வேகத்தில் கால்களில் சலங்கையொலிக்க, கையில் உடுக்கை முழங்க வாயில் முனியின் நாதம் ஒலிக்க, மாலைப் பூக்கள் உதிர மெல்ல ஆடிக் கொண்டு வந்தான். இவன் மாமாவின் பின்னே இருந்து பார்த்தான், தன்னை அவன் இழந்து கொண்டு வருவதுபோல் இருந்தது.

பூசாரி முனியின் முன்னே நின்று தனக்குத் தானே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய மௌனம் எங்கும் பரவி அனை வரையும் பேச்சின்றி இருக்கவைத்தது. ஒவ்வொருவர் பார்வையும் அவன் மீது பாதியாகவும், முனீஸ்வரன் மீது பாதியாகவும் படித்திருந்தது.

அவன் இருந்தாற் போல இருந்து, “ஹா… ஹா…” என்று ஒருமுறை துள்ளிக் குதித்து, கைகளை வீசி, ஒரு சுற்று சுற்றி உடுக் கையைத் தட்டினான். அவன் கூக்குரலிலும், உடுக்கையின் சப்தத்திலும் சுற்றுப்புறம் விசித்திரமாக மாறியது. புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த காகங்கள் ஒன்றாக எழுந்து தங்களை மறந்து கத்திக்கொண்டு சென்றான். பின்னால் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் தங்களை அறியாமலேயே பின்னுக்கு இன்னும் நகர்ந்து கொண்டனர் ஆண்களை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த பெண்கள் ஒருவிதமான பயத்துடன் ஆண்கள் பக்கம் சேர்த்து கொண்டார்கள். இவன் மாமா கையை இறுகப் பற்றிக் கொண்டான், அவர் குனிந்து இவனப் பார்த்துப் புன்னகை பூத்தார். அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த மகிழ்ச்சியும் உற்சகமும் கலவரத்தில் மங்கிக்கொண்டு வரு து போல் இருந்தது. கண்களை இறுக மூடிக்கொள்ளலாம் போல் இருந்தது. முகம் சுளிக்கக் கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் பூசாரி மால்கள் குலுங்க ஆடுவதும், உடுக்கை சப்தத்தை அலையாகக் பெருக்குவதும் இன்னும் சமீபத்தில் கேட்பதுபோல் இருந்தது, இந்தச் சூழலே விசித்திரமான கலவை பின் தோய்வாக மாறிக்கொண்டு வருவது போலிருந்தது. மெல்ல தலையை உயர்த்திப் பாதி கண்களைத் திறந்து மாமாவைப் பார்த் தான். கண்களை மூடிக்கொண்டு, கரம் கூப்பியபடி இருந்தார். இவன் பார்வை மாமா மேலிருந்து இறங்கி, ஒவ்வொருவர் மேலும் படர்ந்தது. தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முனியில் தோய்ந்து கொண்டு வருவதுபோல இவனுக்குப் பட்டது.

ஓரடி முன்னே வந்து, கண்களை நன்முகத் திறந்து பார்த்தான். பூசாரி முன்னே வந்து விழுந்த குறுக்கு மாலையைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு,

“முனியே, வால் முனியே
ஆதி முனியே எங்க அப்பனே
ஐயாவே எங்கள் குல நாயகரே
எலந்த மரம் விட்டு இறங்கி வரவேணும்
ஒதிய மரம் விட்டு ஓடி வர வேணும்
பனை மரம் விட்டு பாய்ந்து வரவேணும்
இலுப்பை மரம் விட்டு இங்க வரவேணும்
இப்ப வரவேணும் சாமி.. இப்ப
வரவேணும்
இங்க வரவேணும் சாமி இங்க வரவேணும்
காத்திருக்கும் பிள்ளைகளைக் காக்க
வரவேணும்..”

அவள் ஹா… ஹா… என்று அலற, உடுக்கு பீம் என்று முழங்கியது. பூமியிலிருந்து எழும்பிக் குதித்து, தலையை வேகமாக அசைத்தான். ஒரே ஓட்டமாக சின்ன முனிவரையில் ஓடினான். பல்லைக் கடித்துக் கொண்டு பிதுங்கிய விழிகள் வெளியே வருவது போல் தோன்ற, “- என்ன இடக்கு… வழியை மறிக்குதா ஐயா-” என்று பீம் பீம் என்று அடித்தான், இடியாய் பெருகி எங்கும் நிறைந்த சப்தம் திடீரென்று நின்றது. அவன் உடுக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு நிமிஷம் தெற்கு முனையையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் ஏறிவன், திடீரென்று முன்னே பாய்ந்து முனீஸ்வரன் எலுமிச்சைப் பழத்தையெடுத்துத் தலையைச் சுற்றி, “துரையை துஷ்டன் மறிக்கிறானா?” என்று வீசியெறிந்தான்.

பூசாரி திரும்பி வந்தான். இவன் பார்வை அவன் மீது விழுந்தது. இப்போது அவனே முனீஸ்வரன் மா திரி இவனுக்குத் தோன்றியது. அத்தை முன்னிரவில் கதைகளில் சொன்ன முனி போலவே தலைமுடி கலைந்து பறக்க கால் தரையில் பாவாமல் சலங்கை ஒலிக்க தாவிக்கொண்டிருந்தான். அவன் கை நீளுகையில் தன்னைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொள்ளுவான் போல் இவனுக்குத் தோன்றியது. மெதுவாக – ஒவ்வொரு அடியாகப் பின்னுக்கு எடுத்துவைத்து நகர்ந்தான். பின்னுக்குச் செல்லச் செல்ல உடுக்கையின் சப்தமும் பூசாரியின் வேண்டுதலும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சப்தம் கனத்து செவியில் இறங்கி, மனத்தில் பாய்ந்து தடுமாற வைப்பது போல் இருந்தது. இவன் கால்கள் இன்னும் இன்னுமென்று பின்னுக்குச் சென்றன. தனக்கு மட்டுமே கேட்பது மாதிரி உடுக்கை கேட்டுக் கொண் டிருந்தது.

இவன் திரும்பி, குளத்துப் பக்கம் சென்சான், சேரித் துறையில் இரு பெண்கள் துணி இல்லாமல் குளிப்பது தெளிவில்லாமல் தெரிந்தது. குளத்தில் இவன் இறங்கினான். ஒரு கெண்டை மீன் துள்ளித் தாவியது. அதன் சப்தத்தில் நீர்கோழி வேகமாக மூழ்கியது. இவன் கொஞ்சம் நகர்ந்தான். பூத்த செவ்வல்லி கூம்பிக் கொண்டிருத்தது. ஒரு கையால் தண்ணீரைத் தள்ளிப் பூவை இழுத்துச் சொடுக்கிப்பிடுங்கினான். செவ்வல்லி நீண்ட தண்டுடன் வந்தது. அதைத் தோளில் மாலையாகப் போட்டுக் கொண்டுத் திரும்பிய போது தூரத்தில் ரயில் ஓசை கேட்டது. இன்னும் சற்றைக் கெல்லாம் ரயில் தெரியும் என்று நினைத்துக் கொண்டு கரைக்கு வந்தான். இவன் பார்வை வளைந்து செல்லும் தண்ட வாளத்தின் மீது பதிந்தது. இவன் பார்த்துக் கொண்டே இருக்கையில் கருப்பாக ரயில் எஞ்சின் மட்டும் புகையை விட்டுக்கொண்டே சென்றது. இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பையில் கையை விட்டான், சுருட்டு தட்டுப் பட்டது. உடனே முனியின் நினைவு படர்ந்தது. முன் நோக்கி நடந்தான்.

“-வாரும், சீக்கரமாக வாரும், ஐயாவே வாரும்… ஹூம்” ஆடிய அவன் கால்கள் நின் றன, தலையைச் சாய்த்துக் கொண்டு, விழிகள் குத்திட இவனைப் பார்த்தான். இவன், அவன் பார்வையில் பட அஞ்சியவன் மாதிரி தலையைத் தாழ்த்தி அத்தையைப் பார்த்தான். அவள் ஆடிக் கொண்டிருந்தாள். கடைவாயில் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. அவள் கூட அஞ்சலை தலைவிரி கோலமாக உருண்டு கொண்டு இருந்தாள். அவள் உருண்டு இவன் காலடிக்கு வந்தாள். கை இவன் காலைத் தீண்டுவது போல் இருந்தது. இவன் திடுக்கிட்டுப் போனான்.

ஆறு தாண் அதிராம் பட்டினம்
தாண்டி
காடு தாண்டி காவேரிப் பட்டினம்
தாண்டி
கூந்தபனை விட்டு
கொடிக்கால் தாண்டி
ஆறு கடந்து, ஆகாச குதிரையில்
வேட்டை நாய் தொடர
சேவகர்கள் தொடர்ந்து வர
சலங்கையொலிக்க ஜாதிமுத்து மணக்க
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒண்ணாய்
வீராதி வீரர்; ராஜாதி ராஜா-“

அவன் இவனை நோக்கி நடந்தவாறு உடுக்கையின் கயிற்றை இறுகப்பற்றித் தூரித கதியில் உடுக்கையை அடித்தான். இவன் இனந் தெரியாத கலவரத்தோடு அத்தையையும் பூசாரியையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். திடீரென்று இவன் பார்வை மாமாவைத் தேடியது. தன் கால்கள் தரையில் பாவாமல் மேலே போவது போல தோன்றியது. யாரோ ஒருவர், மாமனுக்கு ஆகாதே என்று அவசரமாக இவன் கழுத்திலிருந்த அல்லிக் கொடியை எடுத்தெறிந்தார்கள், கால்களை ஓங்கித் தரையில் உதைத்தான். தன்னைச் சுற்றி உள்ள அனைத்தும் கவிந்து வரும் இருளில் மெல்ல அமிழ்வது போல இருந்தது. எதையும் தீர்மானிக்க இயலவில்லை. சூழ்ந்து வரும் இருளிலும் ஒரு வெள்ளைக் கழுகு வானி விருந்து நேராகக் கீழே இறங்குவதின் நிழல் தன் மேல்படர்வது போல் இருந்தது. இவன் மேனி சிலிர்த்து. நடுங்குவது போல் இருந்தது. ஒரு துள்ளலுடன் “மாமா” என்றான். இவன் குரலொலியை மிஞ்சிக் கொண்டு உடுக்கையின் சப்தம் எங்கும் பரவியது.

இவன் நடுங்கிக் கொண்டே கீழே சாய்ந்தான். நீண்ட இவன் காம் முனீஸ்வரன் சூலத்தைப் பற்றியது.

– கசடதபற -25 (அக்டோபர் 1972)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *