தேறுதல் மந்திரவாதி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,946 
 

வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை அழைத்துக் கொண்டுபோக எஸ்கார்ட்டாக வந்து நின்றது போன்ற பிரமை!

‘‘இன்னிக்கு ராவுலே அண்ணே! சுடுகாட்டுக்குக் கௌக்காலே ஒரு பாளடைஞ்ச ஊடு இருக்கே…அங்கே தான்! நடு ஜாமம் பன்னன்டு மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன். வந்து அளைச்சுட்டுப் போறேன். ஊட்ல அம்மாவும் வருவாங்களா?’’

‘‘வேணாம்டா! சுடுகாட்ல இருக்கிற பிசாசுங்க அவளைப் பார்த்துபயந்துக் கும். நாம போவோம். ஒளுங்கா சொல்வாரா?’’

‘‘இன்னாதான் சொல்றார்னு பாக்கலாமேண்ணே? பத்திரிகைக் காரங்கதான் கருத்துக் கணிப்பு அது இதுன்னு பீலா வுட்டு நமக்கு எதிரா பர்சன்டேஜ் போட்டிருக்காங்க.’’

‘‘ம்… சரி! இதுக்கு முன்னே இரிஞ்சாலக்குடா மலையாள ஜோஸ்யக்காரரு கிட்டே போய் வந்தியே, அவரு இன்னா சொன்னாரு?’’

‘‘அத்த விடுங்க… வாணாம்!’’

‘‘ஏண்டா, எதுனா எசகுபெசகா சொன்னாரா?’’

‘‘செயிக்கிறது கஷ்டம்னாருங்க.’’

‘‘சோழியக் குலுக்கிப் போட்டுப்பாத்து தானேடா சொன்னாரு?’’

‘‘ஆமாங்க.’’

‘‘வயசாளி ஆச்சே! கண்ணு அவுட் ஆயிருக்குமே? சரியா எண்ணினாரா?’’

‘‘நம்ம பூத் ஏஜென்ட்டு மாரிகூட சோழிய ரீ&கவுன்ட் பண்ணச் சொன் னாருங்க.’’

‘‘இன்னாடா இது… ஓட்டுங்களத்தான் ரீ& கவுன்ட் பண்ணச் சொல்லுவாங்க. சோழியுமா?’’

‘‘அத வுடுங்க! குடுகுடுப்பைக்காரன் நேத்து வாசலுக்கு வந்து, ‘நல்ல காலம் வருது’ன்னு சொல்லி, கிழிஞ்ச துணி ரெண்டு வாங்கிட்டுப் போனான்ங்க.’’

‘‘கிழிஞ்சுது போ! அவன் யாருக்குதான் நல்ல காலம் வருதுன்னு சொல்லாம இருக்கான்? போகட்டும், கடேசியா இந்த மந்திரவாதியையும் பாத்துடுவோம். ஆமா, இவர் எப்பிடிச் சொல்வாராண்டா? மந்திரக்கோல் ஏதாவது வெச்சிருக்காரா? இல்லே காளி, பாதாள பைரவினு யார் கிட்டேயாச்சும் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கேப்பாரா?’’

‘‘மை போட்டுப் பார்ப்பார்னு நம்ம தவளை தாமுதான் சொல்லிக்கினு இருந்தான். ‘நாகலாபுரத்திலேந்து ஒரு மந்திரவாதி வந்திருக்காப்ல. கரீக்ட்டா சொல்றாரு. நம்ம தலைவரை வேணா போய்க் கண்டுக்கினு வரச் சொல்லு’னு அவன்தாங்க சொன்னான்… அதோ, அம்மாவே வராங்க!’’

‘‘இன்னா… நாகலாபுரம் மந்திரவாதியப் பார்க்கப் போறீங்களா? ஒண்ணும் பாக்கத் தாவல!’’

‘‘இன்னாடி நீ? அவுரு கரெக்டா மை போட்டுப் பாத்துச் சொல்வாராமே!’’

‘‘நல்லாச் சொல்வாரே! நம்ம கதை என்னவாகும்னு தெரிஞ்சிக்கலாம்கிற ஆசையில நான் நேத்திக்கே தாமுவை அளைச்சுக்கிட்டு அவர்கிட்டே போய்க் கேட்டேன்…’’

‘‘இன்னா சொன்னாரு… மை போட்டுப் பாத்துதான் சொல்ல முடியும்னுட்டாரா?’’

‘‘அதையேங் கேக்குறீங்க… எலெக்ஷன் அன்னிக்கு வெரல்ல மை போட்டுப் பாத்துதான் சொல்ல முடியும்னுட்டாரு!’’

வெளியான தேதி: 07 மே 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *