கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 6,214 
 

“என்ன இருந்தாலும் ஆண்டவன் நம்ம பக்கம் தாண்டா இருக்கான்!……….இன்னைக்கு பேப்பரைப் பார்த்தாயா?…..””

“பார்த்தேன்!………தங்கம் பவுன் விலை இருபத்தி நாலாயிரத்தைத் தொட்டு விட்டது!…படிக்கப் படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது!………..”.”

“பவுன் விலை இருபதாயிரத்தையெல்லாம் தாண்டும் என்று நான் எந்த காலத்திலும் நெனைச்சுக்கூடப் பார்த்ததில்லை!……..தங்கம் விலை ஏற ஏற நமக்குத்தாண்டா சந்தோஷம்!…..””

“பின்னே என்ன தங்கம்…….விலை ஏற ஏற நம்ம வருமானமும் ஏறுமில்லே?”

“இனி நாம முன்பு மாதிரி ரொம்பக் கஷ்டப்படத் தேவையில்லே!……சுலபமா தொழில் நடத்தலாம்!…”.”

“அந்தக் காலத்திலே மாசம் பூரா ஒழைச்சாலும் வருமானம் பத்தாது…….இப்ப பாரு……..மாசத்திற்கு ரண்டு நா வேலை செஞ்சாக் கூடப் போதும்!……””

“அது மட்டுமில்லேடா……நான் சொந்த வீடு கூட வாங்கிட்டேன்!…..”.”

“அப்படியா!…..ரொம்ப சந்தோஷம்…..நான் கூட அந்த எண்ணத்தில் தான் இருக்கேன்!…..அதற்காக பாங்கில் பணம் போட்டு வருகிறேன்…..சீக்கிரம் நானும் சொந்த வீடு வாங்கிடுவேன்!……””

“எல்லாம் நம்ம குல தெய்வத்தின் ஆசி தான்!….நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம குல தெய்வத்திற்கு ஒரு அபிஷேகம் செய்யலாம்!…”.”

“ அதற்கென்ன …..பேஷா செய்திட்டாப் போச்சு!….””

பைக்கில் போய் வாங்கிங் போகும் பெண்களின் கழுத்துச் செயினை அறுப்பதில் கில்லாடியான மாடசாமியும், பூட்டியிருக்கும் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடுவதில் கை தேர்ந்த முனுசாமி ஆகிய அந்த இரண்டு ‘ரிஸ்க் தொழிலாளி’களும் சேர்ந்து பேசி முடிவு எடுத்தனர்!

– பொதிகைச் சாரல் மே 2013 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *