சால்வையின் விலை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 6,933 
 

“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார்.

”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும், ஒங்களைக் காட்டிக் கொடுத்திட மாட்டேன்”

“ ரொம்பவும் நன்றி தம்பி! அப்புறம் நான் கொடுத்து வைச்ச அத்தனை மூட்டையும் மாத்தியாச்சா! பத்திரமா இருக்கா” என்ன பன்றதா உத்தேசம்”

”அதுவா! ஒண்ணும் புரியலே”

”ஒங்களுக்குத்தான் செல்வாக்கு இருக்குதே”

”ரெய்டு வர்ற மாதிரி இருந்தா ஒரு க்ளு கொடுங்க, சுதாரிச்சிடலாம்”

”விளையாட்டில்ல தம்பி…. மாட்டிக்கிட்டா என் பதவியே காணாம போயிடும். ஒரு பைய மதிக்க மாட்டாங்க..இப்பவே என்னையக் காலி பண்ணிட்டு… வேற அவுக ஆளுங்கள கொண்டுவர ஒரு கூட்டம் திரிஞ்சுகிட்டிருக்குது.

”அண்ணே” எதுக்குன்னே கவலைப்படறீங்க…அத்தனை மூட்டையும் பத்திரமாத்தான் இருக்கு”

”இல்லீங்க தம்பி, எனக்கு பயமாத்தான் இருக்கு… மேலிடத்துல இருந்து பிரஷர் மேல பிரஷர்… அடுத்து என்னையத்தான் குறி வைச்சுருக்கிறதா இப்பத்தான் நம்பகமான தகவல்… தம்பி பார்த்துக்கப்பா”

”பயப்படாதீங்கண்ணே”!

”இல்லே தம்பி” எதுக்கும்…கொஞ்சம் ஜாக்கிரதையா…..

”டேய், ஒரு தடவ சொன்னா ஒனக்கு புரியாதா? நீயெல்லாம் எப்படிடா, இந்த பெரிய பதவிக்கு வந்தே…. நீயும்…. ஒன் முட்டையும்“““ போடா டேய்…. நீ இப்ப பேசினத யாரோ ஒட்டுக்கேட்டிருங்காப்பாங்களோ என்னவோ?

எனக்கும் இப்பத்தான் தகவல் வந்த்து.

அத்தனை மூட்டைகளையும் யாரோ என் குடோன் கதவை உடைச்சி….. ஒரு லாரில ஏத்திகிட்டு போய்ட்டாங்களாம். அத்தோட என்னோட தட்டுமுட்டு சாமான்களையும் ஏத்திகிட்டு போய்ட்டாங்களாம். ஒண்ணால நான் கெட்டேன்”

”நீ கேட்டியா? நான் அப்பவே சொன்னேன், நான் வெறும் சாதாரண ஆளு, ஒன்னைப்போல தைகிரியமும்…. தெனாவட்டும் கிடையாதுன்னா…நீ கேட்டாத்தானே. எல்லாம் நான் பார்த்துக்கறேன் சொன்னே” அதை நம்பி நீ கொடுத்த பழைய ஆயிரமும் ஐநூறு நோட்டுக்களை மாத்தறதுக்கு கொடுத்தே… மாத்தறதுக்கு நா பட்ட பாடு எனக்குல்ல தெரியும். அதிலும் பாதித்தான் தேறிச்சு… மீதியை மாத்தறதுக்குள்ள விஷயம் தெரிஞ்சவங்க லவட்டிக்கிட்டு போய்டாங்க.

”ஒனக்குத்தான் போலிஸ்ல…. பெரிய்ய…..பெரிய்ய ஆளெல்லாம் தெரியுமே. ஒரு கம்ளையண்ட் கொடேன், பிடிச்சுட மாட்டாங்களா? என்ன”

”தம்பி, பெரியவங்க எதிலேயும் கூட்டு வைச்சுக்க கூடாது, அதுவும் திருட்டுத்தனத்துல சுத்தமா அது ஒதவாதுன்னு சொல்லி வைச்சிருக்காங்க. நாந்தான் அதையெல்லாம் சுத்த உறம்பக்-ன்னு அவங்கள கேலி பண்ணிட்டு…ஒங்கிட்ட களவாணித்தனத்துக்கு கூட்டு வைச்சதற்கு..

”முதல்ல மரியாதையா, தலைவரே”ன்னு சொன்னே”

அப்புறம்,.. கொஞ்சம் இறங்கி….”அண்ணே”ன்னு சொன்னே”

” நான் கெஞ்ச…கெஞ்ச… கடைசில ”டேய் வரைக்கும் வந்துட்டே… இதுல போலிஸ் கம்ப்ளையிண்ட் கொடுத்து அங்கேயும் அசிங்கப்படணுமா, வேண்டாம் விட்டுடு…. நான் ஒன்கிட்ட எந்த மூட்டையும் கொடுத்து வைக்கல மறந்துடறேன் என்று குரல் கம்ம…கம்ம… அலைபேசியை துண்டித்தார் தலைவர்.

”அப்பாடா ! விட்டதுடா சனி”

ஊரையெல்லாம் கொள்ளையடிச்சு…. கட்டுக்கட்டாக பணத்தைப் பதுக்கி வைச்சு….. நீயும் அனுபவிக்காம….ஏழைகளுக்கும் உதவி செய்யாம…சேர்த்து வைச்ச பணத்துக்கு இப்பத்தான் விடிவுகாலம் பிறந்திடுச்சு” என்ற தனக்குத்தானே மகிழ்ச்சியானான்.

ஆறு மாதங்கள் கழித்து….” தலைவா!, ஒரு சின்ன வேண்டுகோள்…. நான் ஒரு ஆதரவற்றோர்களுக்கான அமைப்பு உருவாக்கியிருக்கேன். அதுக்கான பில்டிங் வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு. நாளைக்கு திறப்பு விழா.

”நீங்கதான் வந்து திறந்து வைக்க வேணும்” என்று

டேய் என்று மரியாதையில்லாமல் பேசியவன் கோரிக்கை வைக்க….

”ஒண்ணுமில்லாத வெறும்பய…. இவ்வளவு பெரிய பில்டிங்க எப்படி கட்டியிருப்பான். ஒருவேளை எல்லாம் நம்ம கொடுத்து வைச்ச பணமாயிருக்குமோ… தேள் கொட்டிய திருடனாய் …. பில்டிங்கை திறப்பு விழா செய்துவிட்டு அவன் போர்த்திய சால்வையும் ரோஜா மாலை கழுத்துமாய் வீட்டுக்கு திரும்பினார் தலைவர்.

வீட்டிற்குள் சால்வையை மடித்து வைக்கும் போது தலைவரின் கண்களில் பட்டது ஸ்டிக்கர் அதில் ”விலை ரூபாய் நானூற்று இருபது”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *