குரங்கு மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 4,495 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு குடும்பத்ல, புருச – பொஞ்சாதி ரெண்டு வேருக்கும் ஒரு மக இருந்தா. அது ஏளக் குடும்பம். மகள வீட்ல விட்டுட்டு தாயும் தகப்பனும் ஏலமலக்கிப் போயிட்டாங்க. போகயில, காப்டி நெல்லக் குடுத்து, நாங்க வர்ற வரைக்கும் இத ஒண்ணொண்ணா கொறிச்சுக்கிட்டு இருண்டு சொல்லிட்டுப் போயிட்டாங்க. இந்தப் பிள்ள, ஒரு நெல்லக் கொறிக்குறது – இம்புட்டுத் தண்ணிக் குடிச்சுக்கிறது. இப்டியுமா இருக்கா.

இருக்கயில, அங்கிட்டிருந்து, ஒருத்த பூசணிக்கா வித்துக்கிட்டு வந்தா. வரவும், பூசணிக்கா என்னா வெலண்டு கேட்டா. கேக்கவும், அவ், காப்டி நெல்லுண்டு சொன்னார். சொல்லவும், காப்டி நெல்லக் குடுத்திட்டுப் பூசணிக்காய வாங்கிக்கிட்டா.

பூசணிக்காய வேக வச்சுத் திம்போம்ண்ட்டு , அறுவாமணய எடுத்து வச்சு அறுத்தா. அறுக்கவும் -, அதுக்குள்ள இருந்து கொரங்கு வந்திருச்சு. காப்டி நெல்லு போச்சேண்டு வருத்தமா ஒக்காந்திருக்கா. அப்ப: கொரங்கு, என்னாக்கா? இப்டி ஒக்காந்திருக்கண்டு கேட்டுச்சு. கேக்கவும் -, எங் – காப்டி நெல்லு இருந்தாலும் ஒண்ணொண்ணா கொறிச்சு, தண்ணி குடிப்பே. இப்ப: இப்டி மோசம் போனனேண்டு கொரங்குகிட்டச் சொன்னா. சொல்லவும், கொரங்கு, ஒரு சாக்குக் குடுக்காண்டு கேட்டுச்சு. குடுக்கவும், வாங்கிட்டுப் போயி; நெல்லக் கொண்டு வந்து, வீட்ட நெறச்சிருச்சு.

சவுளிக்கடைக்குப் போயி; கடக்காரங்ககிட்ட, ஒம்பிள்ள செத்துப் போச்சுண்டு கொரங்கு சொல்லுச்சு, அவ அலறியடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடுனர். ஓடவும், நல்ல சீலைகள அள்ளிக்கிட்டு கொரங்கு வீட்டுக்கு வருது. வந்து, வீட்ல வச்சிட்டு மறுநா,

நகைக்கடைக்குப் போகுது. போயி, ஒம்பொண்டாட்டி செத்துப் போனாண்டு சொல்லுச்சு. அவ் – விழுந்தடிச்சு வீட்டுக்கு ஓடுனர். ஓடவும், நல்ல நகைகளா எடுத்துக்கிட்டு வந்திருச்சு. கொண்டு வந்து குடுத்திட்டு, நா-ஞ் செத்தா என்னா செய்வேண்டு கொரங்கு கேட்டுச்சு, அதுக்கு, நீ செத்தா கொட்டுக் கொட்டி, தேருக்கட்டி, அமர்க்களமா எடுத்துப் போடுவேண்டு சொல்றா.

சொல்லவும், கேட்டுக்கிட்டுப் பேசாம இருந்துகிருச்சு. இருக்கயில, ஒருநா, செத்தது மாதிரி படுத்துக்கிருச்சு. கொரங்கு செத்துப் போச்சுண்ட்டு, அங்கிட்டுருக்ற பயகளக் கூப்ட்டு, இந்தக் கொரங்க இழுத்திட்டு போயி; ஓடயில் போடுங்கடாண்டு சொன்னா. சொல்லவும், கொரங்கு எந்திரிச்சிருச்சு. எந்திரிச்சு, ஒக்காந்துகிட்டு, ஏனுக்கா! நா-ஞ் செத்தா, கொட்டுக் கொட்டி, தேருக்கட்டி, டம்பக்கமா எடுத்துப் போடுவேண்டு சொன்னயே, இப்ப; இழுத்துட்டுப் போயி, ஓடயில போடுங்கடாண்டு சொல்றியேண்டு கொரங்கு கேட்டுச்சு.

அவ விக்குனவளும்ல்ல – வெறச்சவளுமல்ல. அப்ப: கொரங்கு, அக்கா! நர் குடுத்ததப் பூராம் நிய்யி வச்சுக்க, வச்சுப் பொளச்சுக்க. நர் போயி, எங்கூட்டத்தோட சேந்துக்கறேண்டு சொல்லிட்டுப் போயிருச்சு.

போகவும் -, இவளப் புடுச்சு எல்லாரும் வைராங்க. வசவ வாங்கிக்கிட்டு, கொரங்கு குடுத்த பொருள்கள வச்சு நல்லாப் பொளச்சாளாம். இதுனாலதா! எனத்துக்கு உதவுணும். எனத்தோடதா சேரணுமிங்றது.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *