காந்தி இன்னும் சாகலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 6,364 
 

காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, சாகவாசமாடீநு செடீநுதித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் அனந்து. வராந்தாவை ஒட்டிய மாதிரியே தெரு. தெருவுக்கு அந்தப்பக்கம், எதிர்வீட்டு லலிதா தனது °கூட்டரை °டார்ட் செடீநுது, ஒரு பெரிய வட்டமடித்து, அனந்து வீட்டு வராந்தாவை ஒட்டிய படி வந்து, வண்டியை ஆஃப் பண்ணாமல் நியூட்ரலில் நிறுத்தினாள். °கூட்டர் சன்னமாடீநு உறுமிய படியே இருந்தது.

கவனமாடீநு செடீநுதி படித்துக் கொண்டிருந்த அனந்து, சத்தத்தால் திடுக்கிட்டு நிமிர்ந்தார். அழகிய நீர்யானை போல் சிரித்தாள் லலிதா. அனந்து பதிலுக்குச் சிரித்து, பேச ஆரம்பிப்தற்குள் லலிதா பொரிந்து தள்ளினாள். இன்றைய நவநாகரீக பெண்களுக்கு பொறுமை எள்ளவும் கிடையாது. படாபட் என்று காரியம் முடிய வேண்டும். “நம°தே அனந்துஜி! இன்னைக்கு நம்ப சௌம்யாவுக்கு பர்த்டே.. கொழந்தைகளை வரச் சொல்லுங்கோ.. ராத்திரி 7-யிலிருந்து 8-மணி வரைக்கும் பங்ஷன். நம்ப வீட்டுலேதான்.”

இதற்கு அர்த்தம், கொழந்தைகளை மட்டும்தான் அனுப்பி வைக்கணும், பெரியவர்கள் அங்கு
வந்துக் கொட்டம் அடிக்கக்கூடாது என்பதுதான்.

சரி என்று அனந்து சம்மதிக்கும் முன்னரே, நியுட்ரலில் இருந்து, இரண்டாம் கியருக்கு மாறிய °கூட்டர் மறைந்து விட்டது. சாயங்காலம் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செடீநுய வேண்டிய வேலைகள், தலைக்கு மேலே இருக்கும்.. அதுதான் இந்த அவசரம்!

லலிதாவுடையது கூட்டுக்குடும்பம்.. மாமனார், மாமியார், நாத்தனார், கணவர் மற்றும் குழந்தைகள் என்று குடும்பம் ரொம்ப பெரிசு. இருந்தாலும் குடும்பத்துக்கு வருமானமும் அதிகம். லலிதா நேதாஜி கல்லூரியில் நூலகராடீநு பணிபுரிகிறாள். கணவர் ஒரு உரக்கம்பெனியில் நிதித்துறை அதிகாரி.. நாத்தனார் ஒரு பள்ளியில் ஆசிரியை.

இதுத் தவிர்த்து, மாமனார் பென்சன் வருகிறது: அவரது பி.எஃப் பணம் பெருந்தொகையாடீநு வங்கியில் வளர்கிறது. இது போதாது என்று, கிராமத்து பூர்விகச் சொத்தில் இருந்து, கணிசமான ஒரு வருமானம் வருடா வருடம் வரும். மொத்தத்தில் அவர்கள் ஒரு மேல்மட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

அனந்துவுக்கு லலிதாவின் மாமனார் பாண்டேதான் ரொம்ப பழக்கம். அவர் பணிஓடீநுவுப் பெற்று, பதினைந்து வருடமாடீநு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். வீட்டில் சோம்பி இருப்பது, அவருக்குப் பிடிக்காது என்பதற்காக, அவர் தனது மனைவி மருகள் பெட்டிக்கோட்டில் இருந்து பேத்தியின் ஜிம்° வரை தோடீநுத்து, வெயிலில் காயப் போடுவது தேவையில்லைதான்.. இருந்தாலும் அவர் அவைகளை விடாப்பிடியாடீநு செடீநுகிறார்.

அவர் வீட்டு மாடியில் தொன்னூறு வயசு குஷம் கபூர் இருக்கிறாள். எங்க வீடு போல் இல்லாமல், பாண்டேஜி மற்றும் கபூர் வீடுகள் பிளாட் மாதிரி. ஒன்று மேல் ஒன்ற அடுக்கி வைத்த தீப்பெட்டி மாதிரி இருக்கும். குஷம் பாட்டியின் மகன் நிகில்.ஆர்.கபூர் பணிஓடீநுவுப் பெற்ற பொறியாளர். தற்போது இங்கே ஒரு கன்சல்டன்சி நடத்திக் கொண்டு, குஷம் பாட்டி எப்பச் சாவாள், ஈமக்கிரியை நடத்தலாம் எனக் காத்திருக்கிறார்.

கூடவே கபூருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடையாது. ஆதலால் வீட்டில் யாருக்கும் பொழுது போவதில்லை.

ஆகவே பொழுது புலர்ந்ததும், பொழுது போக குஷம் பாட்டிக்கும், நிகில்.ஆர்.கபூருக்கும் ஏதாவது
வாக்குவாதத்தில் இறங்கி வாடீநுக்கலப்பு ஆகும் வரை விஷயத்தை முற்ற விட்டு, சண்டையில் இறங்கி விடுவார்கள். பின்னர் தெருவே அலறும்.

சிக்கனம், கஞ்சத்தனம் என்பதின் எல்லைக்கோடு எது என்பதுதான் சச்சரவின் மூலவேராடீநு இருக்கும். அவர்கள் சண்டை ஒன்றுதான் அந்த தெருவில் உள்ளோருக்கு உள்ள ஒரே பொழுதுப்போக்கு. அண்டை வீட்டார் வீட்டில் பாடும் ரேடியோ, டி.வி., மின்விளக்கு என அனைத்தையும் அணைத்து விட்டு, காதைத் தீட்டி வைத்துக் கொண்டு, சண்டையை உன்னிப்பாடீநு கவனித்துக் கொண்டு இருப்பார்கள்.

“நிகில்.. நேற்று காடீநுகறிக்கு மட்டும் நமக்கு 85 ரூபாடீநு தண்டமாடீநு செலவாயிருக்குது..”
நிகில் பொறுமை இழந்து விடுவார்.. “தெட்° ஆல் ரைட், மம்.. பாரேன், நேற்று என் காருக்கு மட்டும் நான் 500-ரூபாயுக்கு டீசல் போட்டு இருக்கேன். இதை கம்பேர் பண்ணும் போது, இது நத்திங்..”

“அடப்பாவீ!! காடீநுகறிக்கு 85 ரூபாடீநு தண்டம் போட்டதோட நிக்காம, கார் டீசலுக்கு வேற 500 ரூபாடீநு
அழுதிருக்கீயா? சிட்.. எவிரிதிங் ஈ° சிட் ஹியர்,” என்று பாட்டி பொறுமை இழந்து கத்துவாள். கோபம்
ஏறி விட்டால், பாட்டி அதிகம் இங்கிலிஷ்தான் பேசுவாள்.

“இதோப் பாரு! நேத்து காடீநுகறிக்காரன்கிட்டே வாங்கின இதே காடீநுகறியை, காலையில் போடீநு, ரிங் ரோட்டு மார்க்கெட்டுலே வாங்கியிருந்தால், வெறும் 25 ரூபாடீநுதான் வந்திருக்கும். கூடவே எடையும் சுத்தமாடீநு இருக்கும்.”

அதற்குள் மருமகள் தலையிடுவாள். “நிகில்.. உங்க அம்மாவை சும்மா வாயைப் பொத்திட்டு இருக்கச்
சொல்லுங்கோ.. நமக்கு என்ன மார்க்கெட் போறதுதான் ஒரே வேலையா? வேற வேலை வெட்டி எதுவும்
இல்லையா?”

அவ்வளவுதான், குஷம் பாட்டி பெரிய ராட்சசியாடீநு மாறி விடுவாள்! “இதோ பாரும்மா! நீ சமைக்கிறது கூட இல்லை. சமையலுக்கு பரஞ்சோதி இருக்கான். இதைத்தவிர வீட்டைப் பெறுக்குறதுக்கு ஒரு ஆளு.

பாத்திரத்தை கழுவுறதுக்கு வேறோரு ஆளு. இவ்வளவு இருந்தும் கீடிநவீட்டு லலிதா மாதிரி கூட, நீ எந்த ஆபீ°லேயும் வேலை கூடப் பாக்கலை. நீ ஒரு ஒட்டுண்ணி.. பாரசைட்.. ரிங்ரோட்டு சப்ஜி மார்கெட்டுக்குப் பேனா, நீ ஒண்ணும் குறைஞ்சுட மாட்டே..” சண்டை, களை கட்டிவிடும. பிறகு ‘நீ வாயை மூடு, நான் வாயை மூடு’ எனப் பேச்சு ஆபாசமாடீநு போகும்.

“ம்ம்.. ப்ளீ° பேசாமல் இருங்க.. நாளையில் இருந்து என் காருக்கு நூறு ரூபாயுக்கு கூட டீசல் போட மாட்டேன்.

இது சத்தியம்.. பெட்ரோலில் மீறும் பணத்தை ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்துடறேன்.. சரியா?” என்று கடைசியாக கபூர்தான் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்.

இப்படி முழங்கும் தெருவில், கவனம் சிறிதும் சிதறாமல் அமைதியாடீநு செடீநுதித்தாள் படித்துக் கொண்டிருக்கும் ஒரே வ°து, நம்ப அனந்து மட்டும்தான். இன்று சண்டை முடிந்ததும், பால்கனியில் திருப்தி இல்லாமல் குஷம்பாட்டி பரபரவென உட்கார்ந்திருந்தாள். அப்போது தற்செயலாடீநு, எதிர்வீட்டு வராந்தாவில் இருந்து தேமே என்று செடீநுதித்தாள் படித்துக் கொண்டிருக்கும் அனந்துவைப் பார்த்து விட்டாள். “மி°டர் அனந்து,” என்று பாட்டிச் சத்தம் போட்டுக் கூவினாள். அனந்துவையும் போர்முகாமுக்குள் இழுக்கும் ராஜதந்திரம் இது.

“என்ன மாதாஜி?”

“பால்காரன் வரச்சிலே எனக்கும் சேர்ந்து, பேட்ல° மில்க் (குயவடநளள அடைம) ஒரு பௌச் வாங்கிடுங்கோ.. எங்க பரஞ்சோதி கார் துடைக்க கீழே வந்திருக்கான். அவன் மேலே வரச்சிலே, அதைக் கொடுத்து விட்டுருங்கோ.”

பாட்டிக்கு தன் சமையலை தானேதான் செடீநுயணும். அவள் துணியை அவளேதான் துவைச்சுக்கணும். அவள் பால் தனியே வாங்கி, தனியே டீப் போட்டுக் குடிப்பாள். எதற்கும் அவளுக்கு வேலையாள் தேவையில்லை.

அதுவும் இந்த 90 வயதிலும்!! கூடவே தன் பி.எஃப். பணம் மற்றும் சேமிப்பு எல்லாவற்றையும் தனியே
வைத்திருக்கிறாள். எதற்கும் அவள் தன் மகனிடம் கையேந்துவது இல்லை. “மை சன் ஈ° சேரிங் மை ஹவு° வித் மி, ஃபார் மை பிளசர்!” என்பாள் பெருமையாக. அந்த பேச்சின் உள்ளூர பொதிந்திருப்பது, மகன் வாலை ஆட்டினால் அதை ஒட்ட நறுக்கி வெளியேற்றி விடுவேன் என்ற கர்வம்தான். அதுவும் நாசூக்காடீநுதான் தெரியும்.

அனந்து பேச கிடைத்தால், அவ்வளவு எளிதில் குஷம்பாட்டி அந்த வாடீநுப்பை இழந்து விட மாட்டாள்.
அவளுக்கு தொடர்ந்து ஏதாவது அனந்துவுடன் பேச வேண்டும் போலிருக்கும். ஒரு பிரம்புச்சேரை தனது
பால்கனியில் வசதியாகப் போட்டுக் கொண்டு, சம்பாஷிக்க ஆரம்பித்து விட்டாள். குஷம் பாட்டியின்
பால்கனிக்கு கீழே தனது பால்கனியில் நின்று கொண்டு, அந்த சம்பாஷணைகளை கவனித்துக் கொண்டிருந்தார் பாண்டே. ‘வசமா கெழவிகிட்டே மாட்டிக்கிட்டியா?’ என்பது போல, அனந்துவைப்
பார்த்து, சத்தம் கேட்காத மாதிரி புன்னகைத்தார். பாட்டியால் இந்த ஆக்சன்களை எல்லாம் கவனிக்க முடியாது..

“பாட்டி ரொம்ப கஞ்சம்!! அதை மறைக்க பேட்ல° பாலாம்,” என உள்ளே இருந்து அனந்துவின் பத்தினியும்
ஏளனம் செடீநுதாள். கிரீம் மில்க் விலையை லிட்டர் இருபது ரூபாடீநு என்று கூட்டினதில் இருந்து, குஷம் பாட்டி ஐந்து ரூபாடீநு வெண்ணெடீநு இல்லாத பால் வாங்க ஆரம்பித்தது, ஊர் அறிந்த ரகசியம். ஆனால் வெளியே மினிக்கிக் கொண்டு பேட்ல° பால் என்கிறாள் பாட்டி.

“மி°டர் அனந்து, நம்ப பாண்டேஜி பேத்தி சௌமியாவுக்கு இன்னைக்குப் பிறந்தநாளாம். உங்க
குழந்தைகளையும் கூப்பிட்டு இருப்பாங்களே?” என்று விசாரித்தாள் பாட்டி. பாட்டி இப்படி வெட்ட வெளியில் பேச ஆரம்பித்ததும் அனந்துவுக்குத் தர்மச் சங்கடமாடீநு போடீநுவிட்டது. பேந்த பேந்த விழித்தார்.

“எளிமைதான் அழகு. சிம்பிளாடீநு பிறந்தநாளை கொண்டாடுனு லலிதாகிட்டே சொன்னேன். எங்க இந்த கிழம் சொல்றதை, அவக் கேக்கப் போறா? இந்த கொண்டாட்டத்திற்கு மட்டும் ஐயாயிரம் ரூபா செலவழிக்கிறாளாம். தி° ஈ° டூ மச்..”

“எளிமையைதான் நாம்ப காந்தியோட சேத்து, 1948லேயே பொதைச்சுட்டோமே, மாதாஜி!” என்று அனந்து
வேறு இடையில் விபரம் புரியாமல் புகுந்து உளறி வைத்தார். உளறாமல் இருக்கும் படி, அனந்துவின் பத்தினி சைகை காட்டினாள்.

“நீங்க எழுத்தாளர். இப்படி எதையாவது அழகா பேசுவீங்க.. அதான் உங்ககிட்டே பேசணும் போல தோணுது. அதுக்காக ஏதாவது பேசணுமே என்று, இந்த எங்க கீடிநவீட்டு கிழட்டுப் பாண்டேகிட்டே உக்காந்தா, நான் பேச முடியும்?” என்று குஷம் பாட்டி சொன்னதும், கீழே நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டேக்கு முகம் அஷ்டகோணலாடீநு போடீநு விட்டது. விளைவாடீநு பால்கனியில் இருந்து மாயமாடீநு மறைந்தார்.

நாளை வந்து பாண்டே எக்கச்சக்கமாடீநு குஷம் பாட்டி பற்றி குறை சொல்வார். குழந்தையில்லாத வீட்டில் இந்த குஷம் பாட்டி ‘தக்கத் தையா’ என குதிப்பதாக அவரும் குதிப்பார். அவர்கள் சௌம்யாவின் பிறந்த நாளை டாம்பீகமாடீநு கொண்டாடுவதில் பாட்டிக்கு பொறாமை என்பார். அதையும் பொறுமையாக கேட்க, அனந்துவுக்கும் முகாந்திரம் வேண்டுமானால், அனந்து ‘எளிமையை 1948ல் காந்தியோடு சேர்த்து நாம் புதைத்து விட்டதாக,’ இப்போது கதைத்து இருந்திருக்கக் கூடாது.

“இப்படி வெட்ட வெளியில் உக்காந்து, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசறதுக்கு, உங்களுக்கு பயமா இருக்கா, அனந்து? ஒருத்தனை பற்றிக் கோள் மூட்டும் போதுதான், ‘குசுகுசு’னு பேசணும். உண்மையைப் பேச எளிமையும் தைரியமும் மட்டுமே போதும்,” என்று கம்பீரமாடீநு சொன்னாள் பாட்டி.

அனந்துக்கோ பயம் கொடுத்து விட்டது. குஷம் பாட்டி எந்த உண்மையெல்லாம் இன்னும் பேசி, அங்கே ஒரு குருஷேத்திரத்தை உருவாக்க போகிறாளோ என நடுங்கிக் கொண்டிருந்தார்.

“பரிசுக் கொடுக்காமல், இப்பல்லாம் பிறந்தநாள் பார்ட்டி அட்டெண்ட் பண்ண முடியறது இல்லை.
சௌமியாவுக்கு என்ன பரிசுக் கொடுக்கப் போறீங்க?” அனந்துவும் இப்படி எக்குத்தப்பா, பாட்டி ஏதாவது கேட்டு மாட்டி வைக்கும் என்று எதிர்பார்த்துதான் இருந்தார். சமாளிக்க ஏற்கனவே ஒரு யுக்தி தயாராடீநு செடீநுது வைத்திருந்தார்.

“நாம்ப சாயங்காலம் சாவகாசமாடீநு இதைப்பற்றி பேசுவோமே, மாதாஜி! இப்ப நான் ஆபிசுக்கு போக,
தயாராகணும். பால்காரன் எங்க வீட்டுக்கு வந்ததும், உங்க பாலை பரஞ்ஜோதியிடம் (கபூரின் நேபாள
வேலைக்காரனின் பெயர்) கொடுத்து அனுப்பறேன்,” குஷம் பாட்டியின் பதிலுக்குக் கூட காத்திராமல், அனந்து காற்றாடீநு மறைந்தார்.

அனந்துவின் மகளும் மகனும் அவர் உள்ளே வந்ததும், தாங்கள் இருவரும் பிறந்தநாள் வைபோகத்துக்கு போவதில்லை என அறிவித்தார்கள். “ஏன்?” என அனந்து குழம்பிப் போடீநு கேட்டார்.
“பாருங்க.. நீங்க இருபது ரூபாயுக்கு ஒரு பரிசு வாங்கித் தருவீங்க. அதெல்லாம் அங்கே எடுபடாது. நூறு
ரூபாவுக்கு பரிசு வாங்கிட்டு வருகிறவர்களை ஒரு மாதிரியும், எங்களை மாதிரி இருபது ரூபாடீநுக்கு வாங்கிட்டு போறவங்களை வேற மாதிரியும் லலிதா ஆண்டி நடத்துவாங்க. எனக்கு இந்த மாதிரி விழாக்கள் என்றாலே ரொம்ப வெறுத்துப் போச்சு,” என்று மடார் அடியாடீநு அடித்தாள் மது. சிபியும் அதை ஆதரிப்பவன் போல்தான் நின்று கொண்டிருந்தான்.

சிபி சொன்னான். “போன தடவை சௌம்யா பிறந்த நாளுக்குப் போனப்ப, அவ எங்களைச் சீண்டி கூடப்
பாக்கலை. நாங்க சாதா இந்திய உடையில் போக, அங்கே வந்தவங்க எல்லாம் இறுக்கமான ஜீன்ஸிம்
°லீவ்வெல் ‘டாப்’பும் போட்டுட்டு, பேஷன் பரேடே நடத்திட்டாங்க. சௌம்யாவும் அந்த மாதிரி
ஆளுங்கட்டேதான் ஈஷிகிட்டு அலைந்தாள். எங்களைச் சீண்ட கூட இல்லை. எங்க ரெண்டுப் பேருக்கும்,
ஏண்டா போனோம்ங்கிற அளவுக்கு அவமானமாப் போச்சு. பலூன் கட்டித் தொங்கவிட்டு, அதை வெடித்து,
கேக்கில் மெழுகு ஏற்றி அணைத்து, பின்னர் வெட்டி அதை அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி எனக் கொடுப்பதாடீநு தமாஷ் பண்ணி, அவுங்க வர்க்க ஆட்களோட மட்டும் குலாவி, என்று மொத்தத்தில் எல்லாத்தையும் யோசித்துப் பார்த்தால், எனக்கு எல்லாம் அனர்த்தமாடீநு தெரியுது. அடிப்படையில் எல்லாம் வேஷம்!” அவன் வயதுக்கு அதிகமாடீநு பேசுகிறான் என்றாலும், அவன் யோசிக்கிறான் என்பது அனந்துவுக்கு சந்தோசமாடீநுதான் இருந்தது.

அனந்துவின் பத்தினியும் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டாள். “கடைசியில் பார்த்தால், ஒரு விருந்தாளிக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கிறது என்பதையும், அவர் மூலம் எவ்வளவு வருமானம் வந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த லாப-நஷ்ட அடிப்படையில்தான், ஒரு விருந்தாளியின் அந்த°து அங்கே நிர்ணயிக்கப் படுகிறது. இந்த மாதிரியான விழாக்கள் அனைத்துமே தங்கள் அந்த°தைக் காட்டி அலட்டிக் கொள்ளும் நோக்குடனேயே கொண்டாடப் படுகிறது. கூர்ந்து கவனித்தால், இது எளிதில் புரியும்.”

அனந்துவுக்கும் இந்தப் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் எல்லாம் எந்த நம்பிக்கையும் கிடையாது.

அவர் தனது மகன்-மகளுக்காக எப்போதுமே பிறந்தநாள் விழா கொண்டாடியதே இல்லை. இந்தக்
கொண்டாட்டங்கள் எல்லாம் சமூகத்தை சமீப காலங்களில் ஆக்கிரமித்தவை. சுதந்திரதினம் என்று எனத்
தெரியாதவன் கூட, இப்ப பிறந்தநாளை தவறாமல் கொண்டாட ஆரம்பித்து விட்டான். இது போதாது என்று, கூடவே அப்பா தினம், அம்மா தினம், காதலர் தினம், காதலி தினம், நண்பர்கள் தினம் என இப்படி
தேவையில்லாத பல கூத்துகள்.

இருந்தாலும் வீடு வந்து விழாவுக்கு அழைத்தவர்கள் நிகடிநச்சிக்கு போகாமல் எப்படி மறுக்க முடியும்? “வேணா ஒரு அம்பது ரூபாயுக்கு குறையாம பரிசு ஏதாச்சும் வாங்கிக்குங்க. அவங்க கூப்பிட்ட பிறகு, போகலைனா, நல்லா இருக்காது,” என்று அனந்து போகுமாறு பிள்ளைகளைக் கெஞ்சினார்

அன்று அனந்து ஆபிஸில் இருந்து வரும் போது, இரவு பத்து மணியாகி விட்டது. பிறந்தநாள் விழாவில் தனது குழந்தைகள் கலந்து கொண்டார்களா, பரிசு வாங்கிச் சென்றார்களா என்ற நினைவே உறுத்தாமல், இரவு வந்ததும் படுக்கையில் வீடிநந்தவர், பர்த்டே கொண்டாட்டத்தை பற்றி நினைத்தே பார்க்கவில்லை. அடுத்தநாள் காலையில் செடீநுதித்தாள் படிக்கும் போதுதான், எல்லாம் நினைவுக்கு வந்தது. “டேடீநு சிபி, சௌம்யாவுக்கு பர்த்டேக்கு என்ன கிஃப்ட் பிரசெண்ட் செடீநுதே?”

“மை எக்°பிரிமெண்ட் வித் ட்ரூத்.. மஹாத்மா எழுதின சத்திய சோதனைதான்.. வெறும் 20 ரூபாடீநுதான்..”

“அதைடீநுயா கொடுத்தே? இப்ப டைம் மாறிப் போச்சு! யார் அதைப் படிக்கப் போறாங்க?”

“இல்லப்பா.. இப்பதான் அதற்கு ரிலவன்சி அதிகமா ஆயிருக்குது,” மது சொன்னாள். அனந்துவுக்கு தன்
குழந்தைகள் மஹாத்மாவை படித்து இருக்கிறார்கள் என்பதில் பெருமைதான்..

மூன்று நாள் கழித்து..

பாண்டே அனந்துவிடம் சொன்னார்: “நான் உங்க பையன் கொடுத்த சத்தியசோதனையைப் படித்தேன். காந்தி பாவ காரியத்தில் இருந்து விடுபட முதலில் பாவ எண்ணத்தில் இருந்து, விமோசனம் பெறுவது மனுசாளுக்கு முக்கியம் என்கிறாரே, அதுதான் என்னை ரொம்ப நெகிழ வைத்து விட்டது.” அதோடு விட்டால் பரவாயில்லையே, தொடர்ந்து பாண்டே வேறு என்னன்னவோ பேசிக் கொண்டிருந்தார். பேசும் போது, அவர் குரல் தளதளத்தது. “பாவம் பண்ணிட்டு, பாவத்தை ஆண்டவரிடம் சொல்லி முறையிட்டு மன்னிப்புக் கேட்பதற்காகவா, மதமும் ஆண்டவரும் இருக்கிறார்கள்? இல்லை!!” என்றார் ஆக்ரோசமாடீநு..

“நீங்க சொல்றது சரிதான். ஆனால் பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவது என்பதை
நடைமுறைப் படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல,” அனந்து பொத்தாம் பொதுவாடீநுதான் பேசினார்.

“நம்ப அந்த°தை காட்டுவதற்காகக் கொண்டாடப் படும் விருந்துகளும் பாவ எண்ணம்தான். அதை
சுட்டிக் காட்டதானே, காந்தியின் சத்தியச் சோதனையை நீங்கள் பரிசளிக்க சொல்லி இருக்கீங்க?” அனந்துக்கு ‘சரக்’கென முள் தைத்தது போல் மனம் வலித்தது.

“இல்லை, பாண்டேஜி! அப்படி இல்லை.. 20 ரூபாயுக்கு பரிசாகக் கொடுப்பதில், மதிப்பு வாடீநுந்ததாக எனது பையனுக்கு காந்தியின் சத்தியச் சோதனைதான் பட்டிருக்கிறது.. அவ்வளவுதான். நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் இல்லை!!”

“நோ.. எனக்குத் தெரியும்.. உங்களுக்கு அந்த பிறந்த நாள் விழா குறித்து ரிசர்வேஷன் இருக்கிறது.
அதனால்தான் நீங்க உங்க குழந்தைகளுக்குப் பிறந்தநாள் விழா எதையும் கொண்டாடுறது இல்லை!! ஆமாம், எனக்குத் தெரியும்!!” என்றார். அனந்துவுக்கு ரொம்ப தர்மச்சங்கடமாடீநு போடீநு விட்டது.

“ஐயோ!! அப்படியில்லை, பாண்டேஜி!! பிறந்தநாள் கொண்டாட ஐயாயிரம் ரூபாடீநு செலவழிக்கும் நிலையில், நாங்களில்லை. அவ்வளவுதான்!” என்று அனந்து சொன்னதை, பாண்டே நம்பவே இல்லை..

“எனக்கு எல்லாம் தெரியும், மி°டர் அனந்து.. உங்களுக்கு இந்த பிறந்தநாள் விழாக் கொண்டாடுவதில்,
எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் வெளிப்படையா நாகரிகம் கருதி பேசாம சைலண்டா இருக்கீங்க! ஆனால் இங்கே இதைப் போன்ற விஷயங்களைக் குறித்து, ஓபனாடீநு விமர்சனம் செடீநுயும் தைரியம் நம்ப குஷம் பாட்டிக்கு மட்டுந்தான் இருக்குது!!” என்றார் பாண்டே.

அடுத்தநாள் பாண்டேக்கு காந்தி பைத்தியம் பிடித்து விட்டதாக அனந்துவின் மனைவி அனந்துவுக்கு இரவுச் செடீநுதியாக தெரிவித்தாள்.. “அதுக்கு காரணம் நம்ப சிபிதானு தெருவிலே எல்லோரும் பேசிக்கிறாங்க,” என்றாள் மிரட்சியாடீநு.

பரமவைரிகளான குஷம் பாட்டியும் பாண்டேயும், தொடர்ந்து மாலைநேரம் முழுவதும் சகோதர-சகோதரிகள் போல், சிக்கனம் மற்றும் எளிமையைப் பற்றி பேசி கொண்டே இருக்கிறார்களாம்.

மறுநாள் எதிர்த்த வீட்டு பால்கனியில் இருந்து குஷம்பாட்டி, ‘மி°டர் அனந்து!!’ என்று அன்பொழுக
அழைத்தாள். “பாத்தீங்களா! உங்கப் பையன் சிபி கில்லாடியா இருக்கான்.. ஒரு பு°தகத்தை போடீநு பரிசா
கொடுத்தான். பாண்டே எப்படி மாறிப் போயிட்டார் பாத்தீங்களா?”

“மாதாஜீ! நாங்க விரும்பி எளிமையா இல்லை.. எங்களால் நெனைச்சாக் கூட ஆடம்படரமா இருக்க முடியாது..நீங்களும் பாண்டேயும் அதைத் தப்பாப் புரிந்து கொண்டு,” என்றார் அனந்து பரிதாபமாடீநு..
“தப்பாப் புரிஞ்சுக்கலை! சரியாதான் புரிஞ்சி இருக்கோம்! நாங்க காந்தியின் கொள்கையை மக்களிடம்
கொண்டு போடீநு சேர்கணுங்கிறதுக்காக, நம்ப காலனியில் உள்ளவங்களுக்கு எல்லாம், சத்தியச்சோதனை
பு°தகத்தை இலவசமாடீநு வாங்கிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.”

அனந்து இதை உறுதியாடீநு மறுத்தார். “மாதாஜீ! எதையும் இலவசமா கொடுக்காதீங்க.. இலவச பொருட்கள் எப்போதுமே ஆடம்பர பொருளைப் போல்தான் கையாளப்படும். சத்திய சோதனை மலிவுப் பதிப்பு வெறும் இருபது ரூபாடீநுதானே? அந்தப் பணத்தை கொடுத்து வாங்கினாதான், வாங்கினவங்க அதைப் படிப்பாங்க. நீங்களும் பாண்டேயும், ‘அது படிப்பதற்கு ரொம்ப அவசியமான பு°தகம்’னு மட்டும் மத்தவங்களுக்கு புரிய வச்சாப் போதும்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்து தனக்குள்ளேயே யோசித்துப் பார்த்த குஷம் பாட்டி, “ஆமாம், மத்தங்களை புரிய வைப்பதுதான் முக்கியம்.. வெறும் சண்டை போட்டோ, இலவசமா பொருளைக் கொடுத்தோ, யாரும் யார் மேலேயும் எந்தக் கருத்தையும் திணித்து விட முடியாது!” என்றார். அனந்து யதார்த்தமாடீநு சொன்ன இந்த வார்த்தைகள், பாட்டிக்கு பல தளத்தில் புதிய தரிசனத்தை தந்திருக்க வேண்டும்.

இப்ப கபூர் வீட்டில் சண்டை நடப்பதில்லை. கபூர் கூட ரிங் ரோட்டு மார்கெட்டில், போடீநுதான்
காடீநுகறி வாங்குகிறார்.

அடுத்த வருடம் நடந்த சௌம்யாவின் பிறந்தநாளின் போது, யாரும் பரிசு வாங்கிக் கொண்டு வரக்கூடாது என்று முதலிலேயே உறுதியியாடீநு தெரிவித்து விட்டாள் லலிதா..

காந்தியை இந்த மண்ணில் இருந்து அவ்வளவு இலேசில் யாராலும் சாகடிக்க முடியாது போலிருக்குது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *