காதரின் கசாப்புக் கடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,071 
 

நானும் என் மனைவி ஜானகியும் யாழ்ப்பாணக் குடாநாட்டை பிறப்பிடமாக கொண்ட அறிவியல் பட்டதாரி அசிரியர்கள் இருவரும் புத்தளத்தில் சஹிரா க்ல்லூரியிலும் பாத்திமா மகளிர் கல்லூரியிலும் படிப்பித்தவர்கள் . புத்தளம் ம் கொழும்பில் மேற்க்கு கரையோரமாகா A3 பெரும்பாதில்யில் வடக்கே 82 மைல் தூரத்தில் உள்ள நகரம். ஊப்பு விளையும் பூமி புத்தளத்தின் மாக்கள் தொகையில் சுமார் 330,000 பௌத்தர்கள் 165,000 இஸ்லாமியர்ககள் 30,000 இந்துக்கள் ஏனையோர் சிங்கள. தமிழ் கத்தொலிக்கர்கள். புத்தளம் நகரத்தில் வாழபவர்கள் ஆனேகர் இஸ்லாமியர்களும் தமிழரும். இரு இனமும் சரளமாக தமிழ் பேசக் கூடியவர்கள். புத்தளத்தைச் சுற்றியுள்ள சேனைக்குடி இருப்பு, சிறாம்பியடி , பாலாவி, மதுரங்குளி ,மணல் தீவு நுரைச்சோலை எல்லாம் தமிழ் பெயர்களைக் கொண்டவை. புத்தளத்து சூழல் பிடித்த படியால் அவ்வூரில் காணி வாங்கி, வீடு கட்டி வாழத் தொடங்கினோம் அங்கு எங்களின் இரு மகன்களும் பிறந்து, படித்து, பட்டம் பெற்று கொழும்பில் அரச திணைக்களங்களில் அதிகாரிகளாக வேலை. இருவரும் கொழும்பில தெஹிவலவிலும் வெள்ளவத்தையிலும் குடும்பத்தோடு வாழ்பவர்கள். ஓய்வு பெற்ற எங்கள் இருவருக்கும் கிடைக்கும் பென்சனோடு, ஊர் பிள்ளைகளுக்கு கணிதமும் அறிவியலும் டியூஷன் சொந்த வீட்டில் வைத்து சொல்லிக் கொடுத்து வரும் பணத்தோடு வசதியாக வாழ்ந்து வந்தோம். என் போக்கு வரதுக்கு ஒரு ரலி சைக்கில் உதவியது எங்கள் இருவருக்கும் . உதவிக்கு பாலாவியைச் சேர்ந்த 12 வயது அனாதை சிறுவன் ஜோசப் வேலைக்காரனாக இருந்தான் . நான் சாப்பாட்டுப் பிரியன். ஜானகி வாயுக்கு சுவையாகச் சமைப்பாள். காலையும் மாலையும் என் இரத்தத்தில் உள்ள சுகரை செக் செய்து கொள்வேன். என் இரத்தத்தில் கொழுப்பு குறைவு

***

சனி வந்தால் உடலிலும், தலையிலும் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து ,முழுகி அதன் பின் என் மனைவி ஜானகியின் கையால் கொழுப்பும், ஈரலும் செர்ந்து வீட்டில் தயாரித்த மிளகாய் சரக்கு தூளில் தேங்காயை பாலில் இறச்சிப் பிரட்டல் பொறியல் கறியும் , உள்ளி போட்ட எழும்புச் சொதியும், ஆட்டுக் கால் முள்ளு போட்ட குழம்பும். பருப்பு கறியும் முத்துச் சம்பா அரிசியோடு நான் புத்தளத்தில் ரசித்து உண்ட காலம் அது

அன்று சனிக்கிழமை என் பழைய மாணவன் முகம்மது ரஷீத் பேருவளையில் இருந்து என் வீட்டுக்கு பகல் போசனத்துக்கு வரயிருந்தான் . அவன் பேருவளையில் பிரபல மாணிக்க கல் வியாபாரி. .புத்தளம் சஹிரா கலூரியில் நான் அறிவியல், கணிதம் படிப்பித்த காலத்தில் முகம்மது என் அபிமான மாணவன் . பத்தாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவனின் வாப்பா காசிமின் மாணிக்கக் கல் வியாபாரத்தைக் கவனிக்கப் பேருவளைக்குப் போய் விட்டான். அவன் பிறந்தது புத்தளத்தில். அடிக்கடி புத்தளத்தில் இருக்கும் அவனின் வாப்பாவின் பெற்றோரை சந்திக்க அவர்கள் வீட்டுக்கு வந்து போவான். அப்போது என்னையும் வந்து சந்தித்து போவது அவன் வழமை.

***

சனிக்கிழமை வந்தால் காதர் நானாவின் கசாப்புக் கடையில் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் முன் நின்ற கூட்டத்தில் காத்திருந்தவர்களில் சிலர் புத்தளம் கச்சேரியில் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்கள். அந்த மட்டன் வாங்க நிற்கும் கூட்டதில் நானும் ஒருவன் அதுவும் அன்று முகமதுவுக்கு என் வீட்டில் பகல் உணவு. அவனுக்கு யாழ்ப்பாணம் ஸ்டைல் இறைச்சிக் கறி என்றால் தனிப் பிரியம். நான் நான்கு இறாத்தல் கிடாய் இறைச்சி வாங்க காதர் நானாவின் கசாப்புக் கடைக்கு எட்டு மணிக்கே பையோடு என் சைக்கிளில் புறப்பட்டேன். எனக்குத் தெரியும் மருத்துவ பரிசோதனையின் பின் சீல் அடித்த ஆடு, மாடு இறைச்சிகள் எட்டு மணிக்கே கசாப்புக் கடைக்கு வந்து விடும் என்று . கூர் செய்த இறைச்சி வெட்டும் முன்று பெரிய கத்திகள் தம் கடமையைச் செய்யத் மேசையில் தயாராக காத்திருக்கும். இறைச்சியை வைத்து வெட்ட ஒரு மரக் குத்தி அக்கடையில் ஒரு கூட்டில் நாட்டுக் கோழிகளும் சேவல்களும் தங்களின் மரணதண்டனையை எதிர்பார்த்துக் கொண்டு கொக்கரித்த ஒப்பாரி வைத்தபடி இருக்கும். ஒரு பக்கத்தில் கண்ணாடி போட்ட பெட்டிக்குள் நாட்டுக் கோழி முட்டைகள் அடுக்கி இருக்கும் . பெட்டிக்கு அருகில் உள்ள சுவரில் : “இங்கு சுத்தமான ஹலால் இறைச்சி மட்டுமே விற்கப்படும். விலை கரார் ” என்ற பலகை தொங்கியது. இது தான் காதரின் கசாப்புக் கடையின் காட்சி. காதரின் கசாப்புக் கடை . வெள்ளிகிழமைகளிலும் போயா தினங்களிலும், சில அரச விடுமுறைகளிலும் பூட்டி. இருக்கும்

நான் இறைச்சி வாங்க கிளம்புதைக் கண்ட என் மனைவி,

“அத்தான் போன முறை நீங்கள் வாங்கி வந்த இறைச்சி எவ்வளவு நேரம் தான் வேக வைத்தேன் தெரியுமா ? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடாய் பார்த்து இந்த முறை கறி வாங்கி வராதீர்கள் ? என்று அவளிடம் இருந்து ஒரு நக்கல்!

காதரின் மகன் மூசீன் என் அபிமான மாணவனாக இருந்தவன் . அவனும் தகப்பனோடு இருந்ததால் எனக்குத் திறமான இறைச்சி தெரிந்து எடுத்து அவன் தருவாளன் “ நான் அவளுக்கு பதில் சொன்னேன்

“ நீங்களும் உங்கள் மாணவனும். கதை இருக்கிற இடம் கைலாயம் என்று இருப்பவர் நீங்கள் கடையில் உங்களுக்குப் பக்கத்தில் நிற்பவர்களோடு பேசும் சமயத்தில் வெறும் எலும்பும் சவ்வுமாக உங்கள் தலையில் கட்டிவிட பார்ப்பான் கவனம் என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனையை என் மனைவி சொன்னாள். .

என் மனைவியிடம் ஆட்டு இறைச்சி வாங்கி நல்ல பெயர் வாங்க கொஞ்சம் சிரம்மம் தான், உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ மூசின் ஒரு தடவை எனக்கு அவன் தந்த டிப்ஸ்கள்!

“சேர் நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஒரு வீஅளி சாப்பிட்டால் தாங்கள் வெள்ளை ஆகாலாம் என்ற எண்ணமோ தெரியதது. ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை!. எண்டை வாப்பாவின் கடையில் செம்மறி ஆட்டு இறைச்சி இல்லை

எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் சில கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி காட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ் இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும் இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன் இருக்கும் பரிசோதனை செய்தற்கான அடையாளம். இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை” மூசின் சொன்னான

இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா என்று கண்டு பிடிக்கும் சூட்சுமத்தையும் நான் கணக்கு சொல்லிக் கொடுத்த என் மாணவன் மூசின் எனக்கு சொல்லித் தந்தான் .

“சேர் தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்மப் படவேண்டும்: “

“அப்ப குட்டி ஆடா அல்லது வாளர்ந்த ஆடா என்று எப்படி காண்டுபிடிப்பது மூசின்”? நான் கேட்டேன்

“சேர், கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் சமையலுக்கு ருசிசேர்க்காது. மிதமான கழுத்து உள்ள இறைச்சி சமையலுக்கு உகந்தது. அது உங்களின் மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும். கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம் பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை சேர் . தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் எங்கடை கடைக்கு விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
எங்கு மூசீன் ஆட்டு இறச்சி பற்றி ஒரு லெட்சர் அடித்தான்

“ மூசீன் நீ பபடிபை தொடர்ந்து விலகியல் பட்டதாரியாக வந்திருக்க வேண்டும் அல்லது சத்திர் சிகிச்சை செய்யும் செர்ஜனாக வந்திருக்கவேண்டும். இந்த காசாப்புக் கடையில் உன் திறமையை காட்த் தேவை இல்லை”

“ என் சேர் செய்யும் தொழிலே தெய்வம் என்று நீங்கள் படிப்பிக்கும் போது சொன்னது நினியாவிருக்கே . இப்பொது நான் ஆடுகளுக்கு மாடுகளுக்கு சேவல் கோழிகளுக்கு சத்திரசிகிச்சை சிகைறேன் அவ்வளவு தான்” என்றான் சிரித்தபடி என் மாணவன் மூசின்

“மூசின் என்னக்கு நாலு இறாத்தல் நல்ல இளம் கிடாயி தொடை கறியும் ஈரலும். கொழுப்பும் சேர்த்து கொடு” என்று அவனிடம் கேட்டு வாங்கிகக் கொண்டு வீடு திரும்பினேன்

****

நான் காதரின் கசாப்புக் கடையில் வாங்கி வநது கொடுத்த இறச்சியை பார்த்து விட்டு: “அத்தான் இண்டைக்கு தான் நல்ல இறச்சி ஈரலோடும் கொழுப்போடும் சவ்வு இல்லமல் வாங்கி வந்திருக்கிறீரககள். உங்களுக்கும் முகமதுவுக்கும் நல்ல ருசியாக சமையல் செய்து தருகிறேன். அவனுக்கு விருப்பமான வட்டலப்பம் எற்கனவே செய்துசெய்து வைத்து விட்டேன்” என்று சொன்ன படியே நான் வாங்கி வந்த ஆட்டு இறச்சியோடு சமையல் அறைக்குள் சென்ன்னாள் என் மனைவி நான் அவளள் பின்னே சென்று தேங்காய் துருவிக் கொடுத்தேன் .

. சரியாக பகல் ஒரு மணிக்கு முகமது வருவதாக வதாக் சொல்லி இருந்தான்/ அவன் சொன்ன நேரத்துக்கு எதையும் செய்பவன் என்று என்க்கு அவன் மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே தெரியும் போசனத்துக்கு அவன் .வரமுன் இரண்டு கில்லஸ் பிராண்டி ஏகுது விட்டு பொய் சாயாமனக் கதிரையில் அன்றைய ஆங்கிலப் பத்திரிகையோடு போய் அமர்ந்தேன்.

**** .

ஜானகி தயாரித்த உணவை முகமதுவும் நானும் டென் மனைவியும் ரசித்து உண்டோம் . ஒரு மனை நேரம் ஓய்வு எடுத்தபின் திரும்பி பேருவலவுக்கு போகமுன் முகமது எங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு நீல இரத்தினக் கற்றைகளை பரிசாக் கொடுத்து விட்டு சென்றான். நானும் மனைவியும் அந்தப் பரிசை எதிர்பார்கவில்லை

அவன் புறப்படும் பொது நான் அவனிடம் “முகமது, நீ ஊருக்கு போனதும் எனக்கு நீ பிரச்சனை இல்லாமல் போய் செர்ந்ததாக் போன் செய்ய மறக்காதே” என்று அவனுக்கு சொலி அனுப்பி விட்டு நான் தூங்கப் போனேன். நான் தூங்கி எழும்போது மாலை மணி ஆறாகிஆகிவிட்டது.

எழு மணிக்கு முகமதுவிடம் இருந்து கோல் வந்தது

”சேர் போகும் வழியில் ஐந்து இடங்களில் காரை நிறுத்தி கக்கூசுகு போக வேண்டி இருந்தது, உணவவில் நச்சேற்றம் ஆகி என் குடலை பாதித்து விட்டதாக் என் டாக்டர் எனக்குச் சொன்னார்” என்றான் முகமது.

என்னால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை . காரணம் எனக்கு அவனைப் போல் வயிற்றோட்டம் ஒன்றும் நடக்கவில்லை .

மறு நாள் உள்ளூர் பத்திரிகையில் வந்த தலையங்கத்தைப் வாசித்து நான் அதிர்ந்து போனேன்.

“பழைய இறச்சியை விற்றதுக்கு புத்தளம் மார்க்கட்டில் உள்ள காதர் என்பவரின் கசாப்புக் கடைக்கு போலிசின் உதவியோடு புத்தளம் மாநகரசபை சீல் வைத்து விட்டது. மேலும்ம பொலீஸ் விசாரணை நடத்துகிறது

அந்த செய்தியை வாசித்த என்னால் அதை நமப் முடியவில்லை . உடனே முகமது போனில் சொன்ன வயிற்றோட்டம் தான் என் நினைவுக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *