கற்புடைய விபச்சாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 10,332 
 

“நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன், நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் எண்டெல்லாம் புழுகி, இப்படி என்ரை வாழ்க்கையை அநியாயமாக்கிப் போட்டினம், ஊரில் ஒரு ஏழையைச் செய்துபோட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்.”

டொக்டர் சாந்தி தன் முன்னால் உட்கார்ந்திருக்கும் புவனேஸ்வரியை எடைபோடுகிறாள்.

புவனேஸ், டொக்டர் சாந்தியின் சொந்தக்காரப்பெண் ஒருத்தியின் சிநேகிதி. சொந்தக்காரப்பெண், சாந்திக்கு போன் பண்ணி புவனேசுக்கு உதவி செய்யச் சொல்லியிருந்தாள்.

புவனேசின் முகம் வீங்கியிருக்கிறது, இரவெல்லாம் அழுதிருக்க வேண்டும். கண்கள் சிவந்து பார்வை தெளிவில்லாதமாதிரி வெறித்துப்போயிருக்கிறது.

“காப்பி எதுவும் குடிக்கப் போகின்றீர்களா?”

சாந்தி புவனேஸைக் கேட்டாள்.

புவனேஸ் “இல்லை எனக்கு வேண்டாம்” என்ற பாவனையில் தலையாட்டினாள்.

வெளியில் சரியான காற்று போலும். ஏற்கனவே இலையுதிர் காலத்தால் இலையிழந்த மரங்களிலிருந்த ஒன்றிரண்டு இலை தழைகளும் இப்போது அடித்துக்கொண்டிருக்கும் பெருங்காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. சரியான குளிர் என்று சாந்தியின் மகன் சொல்லிக் கொண்டதை சாந்தி காலையில் கேட்டாள்.

சாந்திக்கு எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரச்சினை இல்லை. ஆனால் புவனேசுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்றுதான் அவளால் மட்டுக்கட்ட முடியாமல் இருந்தது. அவள்படும் துயரத்தின் சாடை சோகமான முகபாவனையில் தெரிகிறது, ஆனால் சோகத்திற்கான காரணத்தை எப்படி இந்த டொக்டரால் நிவர்த்தி செய்யலாம் என்பதுதான் கேள்வி.

“ஆண்பிள்ளைகள் ஏன் கண்டதெற்கெல்லாம் பிழைபிடிக்கின்றார்கள?” புவனேஸ் திடீரென்று கேட்டாள்.

சுhந்தி காப்பிக் காப்பையை மேசையில் வைத்தபடி தனக்கு முன்னாலிருந்து கேள்வி கேட்கும் பெண்ணை ஊடுருவிப் பார்த்தாள். பாவம் மிகவும் கலங்கியிருக்கிறாள்.

“எனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடிக்கப் போகுதோ தெரியேல்ல” புவனேஸ் விம்மினாள்.

‘மனம் நிறைந்த துன்பம் வரும்போது, துன்பத்தை நீக்க வழி தெரியாமலே போய்விடுமோ என்று தோன்றும்போது அப்படிச் சில சிக்கலான கேள்விகள் வருவதுண்டு. அதற்காக துன்பம் வந்து பிரச்சினை கூடிவிட்டால் பைத்தியம் பிடிக்கப்போகின்றது என்று முடிவு கட்டக்கூடாது” டொக்;டர் ஆறுதாலாகச் சொல்கிறார்.

“வேண்டாத பெண்சாதி கை பட்டாலும் பிழை, கால் பட்டாலும் குறை என்றது சரிதான்” மூக்கைச் சீறிக் கொள்கிறாள் புவனேஸ்.

“அவர் விரும்பித்தானே உங்களைச் செய்தார்?”

“ஓம் ஒரே பிடியில நின்று கல்யாணம் செய்துகொண்டு வந்தவர், இப்ப இப்படிஇயல்லாம் கஷ்டப்படவேண்டிக்கிடக்கு.”

“உங்களின் சகோதரங்கள் என்ன சொல்லுகினம்?”

“அண்ணா, எப்படி உங்கடை தனிப்பட்ட பிரச்சினையிலை குறுக்கிடுகின்றது என்று கேட்கின்றார். அக்கா சொல்லுகிறா புருஷன் கையாலை அடிவாங்கிறது புண்ணியமாம். ஒரு பொம்புளை புருஷனாலை செத்துப்போனால் ஏழு பிறப்புக்கு நல்லதாம்.”

டொக்டருக்கு கோபம் வருகிறது, ஒரு பிறப்பில் இந்தப் பெண் அவனுடன் படும்பாடுபோதாது. ஏழு தரம் பிறக்கட்டாம்.

“நான் எத்தனை நாளைக்கு இப்படி வாழுறது” புவனேஸ் வாய்விட்டு அழத் தொடங்கிவிட்டாள். “புவனேஸ் இது உன்ரை வாழ்க்கை எப்படி வாழப்போகிறாய் என்பதை முடிவு கட்டுவது உன்ரை பொறுப்பு. இப்போது உனக்கு உடம்பு சுகமில்லை என்றால் நான் உதவி செய்யலாம்.”

“டொக்டர் எனக்கு என்ரை வயித்திலை வளரும் பிள்ளை உயிரோட பிறக்கவேணும், இதையும் அவன் அழிக்கப் பார்க்கிறான், தயவு செய்து உதவி செய்யுங்கோ” அவளது விம்மல் டொக்டரின் நெஞ்சைப் பிழிகிறது.

‘ இப்படி ஏன் என்ரை வாழ்க்கையை அநியாயமாக்கிப் போட்டினம், ஊரில் ஒரு ஏழையைச் செய்துபோட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்.”

அவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள். இப்படி எத்தனையோ தரம் தனக்குத்தானே அவள் சொல்லியிருக்கிறாள்.

டொக்டருக்குப் புவனேஸ் இரவு போன் பண்ணி தன்னைப்பற்றி எல்லாமே சொல்லியிருக்கிறாள். புவனேசுக்கு வயது இருபத்திநான்கு. ஓரளவான மத்தியதர குடும்பம். தமையன் டொக்டர். தமக்கையின் கணவனும் லண்டனில வாழ்கிறார்கள்;.

இலங்கையில் ஓயாத பிரச்சினை மாப்பிள்ளை தட்டுப்பாடு புவனேசுக்கு தான் யூனிவேர்சிட்டி போகவேண்டுமென்ற ஆசை.

“லண்டன் மாப்பிள்ளை, அவனைக் கலியாணம் செய்து கொண்டு லண்டன் போனால் படிக்கலாம். வசதியாக வாழலாம்.”

அப்பா, அம்மா, ஊரார் எல்லோரினதும் பரவலான கருத்து அது, நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாகத் தெரிந்தான். லண்டனில் மாணவனாக இருக்கிறானாம். அவள் வந்து ஒரு மாதத்தில் தெரிந்தது அவன் படித்துக் கொண்டிருக்கும் பட்டதாரியல்ல. குடித்துக் கொண்டிருக்கும் ஊதாரி என்று.

அவள் தாத்தா கள்ளுக் குடித்ததற்காக பாட்டி திட்டிக்; கொண்டேயிருந்தது ஞாபகம் வந்தது. நடராஜன் பியர் குடிக்கிறான். பியர் விஸ்கி மாதிரி ஒன்றும் பொல்லாத சாமான் இல்லை. என்று புவனேசுக்கு சொன்னான். அவளுக்கு அவனை நம்புவதைத்தவிர வேறு வழியில்லை.

“நீர் உடனே படிக்கத் தொடங்க முடியாது, இங்கிலீஷ் பழகவேணும். வேலைக்கு அங்கை இங்கை எண்டு போனால் இங்கிலிஷ் பிடிச்சுப் போடலாம்.” அவன் சொல்லை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை.

“நீங்கள் படிக்கப்போகவில்லையா?” அவள் தயக்கத்துடன் கேட்டாள்.

“கொலிஜ்; பீஸ் கட்டாம போன வருசம் போக முடியல்ல. இனி என்ன இரண்டு பேரும் பார்த்துச் சமாளிப்பம்.” அவன் சிரித்தான். அவள் உழைக்க அவன் கொலிஜ் அட்மிஷன் எடுத்தான்

இரண்டு கிழமை அவளுக்குச் சந்தோஷம் இந்தியக் கடையில் வேலைகிடைத்தது.அந்த இந்திய முதலாளி நாயாய் வேலைவாங்கி அவளின் உடம்பை முறிப்பதைப்பற்றி அவளுக்கு கவலையில்லை. கணவன் படிக்கவேண்டும். எனது கணவன் பட்டதாரி என்று ஆட்களுக்குச் சொல்ல வேண்டும். அவள் உழைத்தாள்.

“கனகாலம் கல்லூரிக்குப் போகாததால் படிக்கிற மூட்வருதில்லை”

அவன் பியர் குடித்தபடி வீடியோவில் குப்பை ஆபாசப் படம் பார்த்தபடி அவளைப்பார்த்துச் சிரித்தான். அவன் என்ன “மூட்” டில் இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். வேலை செய்து களைத்த உடம்பு. கணவன் தேவைக்கு இல்லை சொல்ல முடியாது.

கல் கன்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன!;.

அவளுக்கு ஊர் புதிது. குளிர் கொடுமை. சொந்தம் என்று அவள் அடிக்கடி ஆதரவு தேடிப்போகும் அண்ணாவும், அக்காவும் இப்போதெல்லாம் தங்கள்பாடு.இவளை லண்டன் மாம்பிள்ளைக்கு மணம் முடித்துக் கொடுத்ததுடன் தங்கள் கடமை முடிந்தது என்ற நிம்மதி அவர்களுக்கு. வருடப் பிறப்புக்கும் குழந்தைகளின் பிறந்த தின விழாக்களிலம் ஒன்று கூடி மகிழ்வார்கள். புவனாவின் குடும்பச் சிக்கலை யாரும் பெரிதாக எடுக்கவில்லை.

புவனேசின் கணவன் கணவன் பெரும்பாலும் பின்னேரங்களில் அரைவெறியில் இவளுக்காகக் காத்திருப்பான். கடையில் இந்திய முதலாளி, வீட்டில் கட்டிய கணவன். அவள் உடம்பு பொருள் முதல்வாதத்திற்கும், கற்பு முதல்வாதத்திற்கும் பயன்பட்டது.

குடும்பம்.,கணவன்,கலவி, குழந்தை எல்லாம் அவளைக் கற்பவதியாக்கியபோது அவள் மகிழ்ந்தாள்.

அவளுக்கு வயிற்றில் குழந்தை.

‘ஏன் குழந்தை வராமல் பாhர்த்துக் கொள்ளவில்லை.?” அவன் கோபத்தில் முணுமுணுத்தான். குழந்தைப் பொறுப்பு வந்தால் அவனால் படிக்க முடியாதாம்.

“நான் இப்ப என்ன செய்ய?”

அவள்தான் குற்றம் செய்த தொனியில் தயங்குகிறாள்.

“அபோஷன் செய்யுறது.” அவன் சாதாரணமாகச் சொன்னான்.

நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்ற உணர்ச்சி அவள் சிநேகிதிக்கு குழந்தை இல்லையென்று புண்ணிய தல யாத்திரை செய்கிறாள்.

“கணவர் ஒரு மாணவர். எங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அவர் படிப்பு தடைப்படும்”

அவள் வெள்ளைக்கார டொக்டரிடம் முறையிட்டாள். இவள் ஒரு கறுத்தப்பெண் இவளுக்குப் பிள்ளை பெறவேண்டுமென்று அக்கறையில்லையென்றால் டொக்டருக்கு என்ன?

கருக்கலைப்பு செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். அண்ணா, அக்கா அயலார் யாருக்கும் தெரியாது.

அடிவயிறு நொந்தபோது அவள் அழிந்துபோன குழந்தையை நினைத்து அழுதாள். இப்போது அவளுக்கு அவள் குடும்ப வாழ்க்கையில் தன் நிலைமை சரியாகப் புரிந்தது,

அவள் இன்னொரு தரம் பிள்ளை வராமல் இருக்க எடுத்த கற்பத் தடைக் குளிசையால் அவளுக்கு வாந்தியும், தலைச்சுற்றும்.

“சில பெண்களுக்குக் கற்பத் தடைக் குளிசைகள் ஒத்து வராது உங்கள் கணவகை; “கொண்டம்” பாவிக்கச் சொன்னால் என்ன ?” டொக்டர் அவளைக் கேட்டார்.

“றப்பர் உறை பாவிக்கிறவன் தேவடியாள்கிட்டப் போறவன்” அவன் அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

நடராஜன் தன் ஆண்மைக்கு உறை போடத் தயாரில்லை. அவளுக்கு அடுத்த தடைவை பிள்ளை வயிற்றில்.

“பிள்ளை வந்து வாழ்க்கையை குழப்பப் போகுது.”

அவள் ஏமாற்றத்தில் முணுமுணுத்தாள். அவன் இன்னும் பரிட்சை பாஸ் பண்ணவில்லை.

”அப்படியென்றால் படுக்காமல் இருந்திருக்கலாம் தானே?” கோபத்த்pல் அவள் வார்த்தைகள் வெடித்தன. பெரிய தாக்கம்.

“ஆண்மை” பேச மறுத்தால் அடுத்த நடவடிக்கை ‘அடி” இந்தத் தடைவை அவள் டொக்கடரிடம் அபோஷனுக்குப் போகவில்லை.

அவன் உதைத்த தாக்கத்தில் அவள் மயங்கி விழுந்து எழும்பிய போது அவள் கால்களுக்கிடையில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது, ரொய்லட்டில் “தொப்” என்று விழுந்தது, வெறும் இரத்தக் கட்டியல்ல, தான் சுமந்த குழந்தை என்றதும் அவள் துடித்துப் போய்விட்டாள்.

இவள் அழுவதும் அவனுக்குப் பிடிக்காது, அவள் இரண்டொரு நாள் ஆஸ்பத்திரியில் இருக்கக வேண்டிய நிலை. அப்போதுதான் தன் வாழ்க்கை என்ன திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது, இருபத்திநான்கு வயது, அவள் இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாள்.

அவனுக்குப் படிப்புச் சரிவரவில்லை.

“என்ன படித்தாலும் என்ன? இந்த வெள்ளைக்காரன் படித்த படிப்புக்கு வேலை தரப்Nபுhகிறானா?

நடராஜன் வியாபாரம் ஒன்று தொடங்கப் போகிறானாம். புவனேஸ் உழைத்துக் கொண்டேயிருந்தாள்.

சொந்தக்காரர் கண்களுக்கு அவர்கள் ஒரு சந்தோசமான தம்பதிகள். ஏதும் அவள் கேட்டால் அல்லது எதிர்த்துப் பேசினால் அவன் அடிப்பதில் கெட்டிக்காரன். அவன் தொடுவது ஒன்றில் அடியில் முடியும் அல்லது கட்டிலில் முடியும்.

வாழ்க்கை ஓட்டத்தில் பல நெழிவு சுழிவுகளையும் குடும்பம் என்ற போர்வைக்குள் பல பெண்கள் அனுபவிக்கம் பல இன்னல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் உணரத் தொடங்கியாள்.அவன் தொடுவதையே அவள் அருவருப்பாக நினைத்தாள்.

“என்னடி நான் தொடாட்டா வேறையாரையடி தொடவிடுகிறாய்” அவனின் ஆபாசக் கேள்வி அவளுக்கு வாந்தியை வரவழைத்தது.

“கற்புள்ள தமிழ் பெண்பிள்ளை கணவன் விருப்பத்துக்கு நடக்கவேண்டும்.” அவன் கற்பையும் கலாச்சாரத்தையும்பற்றி பிரசங்கம் செய்தான்.

கற்பைப்பற்றிக் கதைத்தால் அவள் குழம்பிப் போய்விடுவாள். கந்தன் முருகனைக் Nகுhயிலில் வைத்திருக்கிறார்கள். பயப்பிடலாம், கும்பிடலாம். கற்பு எங்கே இருக்கிறது? அவளுக்குத் தெரியாது, ஆனால் பயப்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

“கற்பெண்டா என்ன? என்னைப் படுக்கத்தானே பாவிக்கிறியள்” அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.

“உன்ர பல்ல உடைப்பன் நாயே” அவன் சீறினான். அடிக்குப் பயம். அவள் வாய்திறக்கவில்லை. அடுத்த தடைவை குழந்தை வயிற்றில்.

அவள் அவனுக்குச் சொல்லவில்லை. பயம். அவள் கற்புள்ள மனைவி. கணவன் சொல் தட்டக் கூடாது, ஆனாலும் அவள் சொல்லவில்லை. அவள் காலையில் சத்தியெடுக்க அவன் கண்டுபிடித்துவிட்டான்.

“ஒரு வியாபாரம் தொடங்க இருக்கிறன். அதுக்கிடையில பிள்ளை வேணுமா?” அவன் கேள்வி. சுhதாரண தொனி.

“ஏதோ பார்த்துச் சமாளிப்பம்” அவள் கோபத்ததை அடக்கிக் கொண்டு கூறினாள்.

“நீர் வேலை செய்யாட்ட சமாளிக்க முடியாது,”

“எனக்கொரு பிள்ளை தேவை” அவளுக்கு கோபமில்லை. ஆனால் வேதனையில் கண்ணீர் வந்தது. அவளுக்கு அழுகை வந்தது. யாரிடம் சொல்வாள் அவள் துயரை?

இன்னொரு தரம் அபோஷன் செய்ய அவள் விடப்போவதில்லை. “என்னடி மாய்மாலக் கண்ணீர்” அவன் சிரித்தான் கேவலமான சிரிப்பு.

அன்றிரவெல்லாம் சண்டை அடிபிடி, அவள் தன் அடிவயிற்றில் உதை விழாமல் இருக்க எத்தனையோ பாடுபடNவுண்டியிரு;தது, அன்றிரவு அவள் தன் சிநேகிதியிடம் உதவி கேட்டுப் போய்விட்டாள்.

சிநேகிதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் சொந்தக்காரியான சாந்தியிடம் அவளை அனுப்பியிருக்கிறாள்.

“இப்ப என்ன செய்யப்போகிறாய் புவனேஸ்”

“அந்த மனிசனிட்டப் போனா என்ரை பிள்ளைக்கு ஏதும் நடந்திடும். எங்கே எண்டாலும் நான் போயிருக்க ஒரு இடம் எடுக்க உதவி செய்யுங்கோ.”

“உங்கடை சகோதரங்களிட்டைப் போனா என்ன?”

“இதெல்லாம் என்ரை தனிப்பட்ட குடும்ப விஷயம் என்று சொல்லிப்போட்டினம். ஆவர்களிட்ட போனா கற்புள்ள பெண்பிள்ளை புருஷனோட இருக்க வேண்டும் என்று என்னைப் பாசல் பண்ணி என்ரை மனுசனிட்ட அனுப்பிப்போடுவினம்.” அவள் அழுகிறாள்.

சரி என்னாலை ஆனதைச் செய்கிறன்”. டொக்டர் சாந்திக்கு வேலைக்கு அவசரம். புவனேஸ்வரி போய்விட்டாள்.

வேலையிடத்தில் நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். முதலாவது நோயாளி டொக்டர் சாந்தி முன் வந்திருக்கிறாள்.

“பெயர் என்ன?”

“….”

டொக்டர் சாந்தி தனக்கு முன்னால் மறுமொழி சொல்லாமலிருக்கும் நோயாளியைப் பார்க்கிறாள். அவளைப் பார்த்ததும் புவனேசின் ஞாபகம் வருகிறது, சோகமான முகம் கிட்டத்தட்ட அதே வயதாக இருக்கலாம். கண்கள் பேதலித்து முகம் சோர்வாக, முன்னால் அந்த இளம் பெண் உட்கார்ந்திருக்கிறாள். நோயாளியின் குறிப்பை அவதானமாகப் படிக்கிறார் டொக்டர் சாந்தி.

இந்தப் பெண் போதைவஸ்து பாவிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவள். இப்போது நெஞ்சில் ஏதோ சுகமில்லை என்று வந்திருக்கிறாள். இவள் வாழும் வாழ்க்கையில என்ன வருத்தமும் வரலாம்.

“உனது பெயர் என்ன? டொக்டர் சாந்தி குரலை உயர்த்திக் கேட்கிறார்.

“யூடித் சிம்ஸன்.”

“வயது”

“இருபத்தைந்து”

“என்ன மருந்துக்கு அடிமையாய் இருக்கிறாய்?”

“ஹெரோயின்” குரலில் தயக்கம்.

“ஹெரோயின் வாங்க எப்படிக் காசு கிடைக்கிறது?”

“விபச்சாரம் செய்வதன் மூலம்”

“விபச்சாரம் செய்யும்போது வரும் அபாயங்கள் தெரியும்தானே.” டாக்டரின் கேள்விக்கு அவளுக்கு முன்னாலிருக்கம் யுதெ; சிம்ஸன்; மறுமொழி சொல்லவில்லை.

“எயிட்சிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறாயா?”

“நான் எயிட்ஸ்பற்றிக் கவலைப்படவில்லை.”

ஏனோதானோ என்ற மறுமொழி.

“நீ ஒரு விபச்சாரி” டொக்கர் கோபத்துடன் சொல்கிறாள்.

“அதற்கென்ன ?”

“பலபேருடன் படுப்பவள்”

“நான் பலருடன் படுத்தெழும்புவதாக நீ என் முடிவு கட்டுகிறாய் டொக்டர்”

யூடித் சிம்ஸன் என்ற விபச்சாரி அதிகம் படித்த டாக்டரைக் கேள்விகேட்கிறாள்.

“ஒரு விபச்சாரி உடம்பை விற்றுப் பிழைப்பவள். பல ஆண்களுடன் உடலுறுவு வைத்துக் கொள்ளாமல் என்னவென்று தொழில் செய்கிறாய் ?

“உங்களுக்கு எங்கள் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள் எப்படி வாழ்கிறோம்? எப்படி முடிவுகள் எடுக்கிறோம் என்று தெரியாது போலிருக்கிறது.”

டொக்டரின் அறைக்குள் வந்தபோது சோர்ந்து போயிருந்தவள். இப்போது டொக்டர் கேட்ட கேள்வியால் கோபம் வந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. உசாராகப் பேசிக் கொண்டிருந்தாள்.

டொக்டர் மௌனமாக அவள் சொல்வதை மிக அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“விபச்சாரிகள் என்றாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வைத்திருக்கிறோம்.”

டொக்டர் அவளைப் பேச விடுகிறாள்.

“எனக்கு எயிட்ஸ் வராது ஏனென்றால் நான் எந்த ஆண்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான எனது வாடிக்கைக்காரர் பேசிக் கொண்டிருக்க அல்லத உடலறவு வைத்துக்கொள்ளாத பாலியல் சந்தோசத்தைத் தேடி வருவார்கள்.”

“உடலுக்கு உன்னை வற்புறுத்தினால் என்ன செய்வாய்”

“அதற்கென்றே வேலை செய்கின்ற விபச்சாரிகளை காட்டிவிடுவேன். இதுவரைக்கும் என்னை எந்த ஆணும் வற்புறுத்தவில்லை.”

“உனக்கு உனது வாடிக்கைக் காரர்களில் ஆசை வருவதில்லையா?”

“செய்யுற தொழிலில் ஆசை வருவது போல நடிக்கிறது உண்டு. இது என்ர தொழில்” அவள் சிரிக்கிறாள்.

டொக்டர் ஆச்சரியத்துடன் யூடித் சிம்ஸனைப் பார்க்கிறார்.

“எனக்கு என்னை முழுமையாக விரும்புகிற ஒருத்தனிடம்தான் ஆசைவரும். அதுவரைக்கும் காத்திருக்கிறன்.”

“அப்படியென்றால்?’

டொக்டருக்கு குழப்பம். தன் உடம்பை கணவனிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளமுடியாத புவனேசின் ஞாபகம் வருகிறது.

“என்ன டொக்டர் இன்னும் விளங்கவில்லையா? நான் இன்னும் யாருடனும் உடலுறவு கொள்ளாதவள். கன்னித்தன்மை கலையாதவள் என்றோ ஒரு நாள் நான் விரும்பும் ஆணுக்கு என்னை ஒட்டுமொத்தமாகக்; கொடுக்க காத்திருக்கிறேன்.” அவள் சிரிக்கிறாள்.

இந்த விபச்சாரிக்கு கூட தனது விருப்பு வெறுப்பை நிர்ணயிக்க வழியும் உரிமையும் இருக்கிறது. புவனேஸ{க்கு இல்லையே!.

பாவம் புவனேஸ் போன்ற பெண்கள்!

– ‘சக்தி’ நோர்வே பிரசுரம் 92

(யாவம் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *