ஒற்றைச்சாளர இருப்பில்,,,

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 4,939 
 

அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும் நின்றது இல்லை,

ஆற்றிக்கொடுக்கிற அரைக்கிளாஸ் டீக்கு அடகு போய்விட்ட நாவின் சுவை யறும்புகள் என்ன சொல்லியும் கேட்காமல் அந்தக்கடையில் போய்தான் நிலை கொள்கிறது மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும்/

அதற்கு ஒரு காரணம் இருந்தது,அந்தக்கடை டீ மாஸ்டரின் மென் புன்னை கையும் தன் பரிமாறலும் மனம் நினைத்த நேரத்தில் அரைக்கிளாஸ் டீயை சப்தமில்லாமல் ஆற்றிக்கொண்டுவந்து இவன் முன்னால் நீட்டுவார்,வேறு ஏதாவது யோசனை தாங்கியிருந்த போதும் கூட/

வடை பிஸ்கட் பன் மற்றும் ரொட்டிகள் இருந்த வேளையிலும் இவனுக்கு டீ மட்டுமே போதும் எனச்சொல்லிவிடுவான்,

அன்ராட நகர்தலில் என்றாவது ஒரு நாளில் ஆசையாகவும் எச்சில் ஊறிய நாக்கு நமைச்சல் எடுத்துவிட்டாலும் வலது கையில் உள்ள ஆள்க்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை சேர்த்து இடுக்கி போல் வைத்துக் கொண்டு கடைக்காரரின் முன்னால் இருக்கிற வடைத் தட்டிலிருந்து ஒரு வடையை லாவகமாகவும் எட்டியும் எடுத்துச் சாப்பிடுவதுண்டு.

இவனைப்பொறுத்தளவில் டீ என்பது டீயாக இருக்க வேண்டும்,அது விடுத்து இஞ்சி டீ.லெமன் டீ அந்த டீ இந்த டீ என டீக்குடிப்பதில் ஆர்வம் இருந்ததில் லை.

அது போலாய்க்கிடைக்கிற டீயை தேடி கண்டைடைந்து டீக்குடிப்பதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடலாம் என்பது இவன் எண்ணம்,அந்த மெனக்கெடல் இந்தடீக் கடையில் நிறைவேறியதாய் சின்ன திருப்தி/

முத்தண்ணன்தான் அந்தக்கடைக்கு அம்பு குறியிட்டார்,சின்னதும் இல்லை பெரியதும் இல்லை,நடுவாந்திரமாய் இருந்தது, கூரை செட்டோ, ஓட்டு கட்டிடமோ இல்லை.பக்காவான காங்க்ரீட் கட்டிடம்தான்.

மேலேஐந்து கீழே ஐந்து என இருந்த காம்ப்ளெக்ஸ் கடைகளில் கீழே இருந்த வரிசையில் இரண்டாவது கடையாக இருந்த கட்டிடத்தில்தான் அந்தடீக் கடை இருந்தது,

டீ காபி, வடை என்பது டீக்கடைக்குண்டான அடையாளமாய் இருந்த போதும் கூட கடைக்குள்ளாய் பெரியதாய் கனம் காட்டி போடப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள்ளாய்தான் பிஸ்கட் மற்றும் பன் கேக் வகைகள் அடை கொண்டு இருந்தது,

பன் பிஸ்கட் சரி ,கேக் எதற்கு என்றால்,,,,”விக்குது சார்,வாங்கி வச்சிருக்கோம், இது இன்னைக்கி வந்த கேக் சார்,தினசரி மதுரையிலிருந்து வந்து ஒரு யேவாரி வந்து போட்டுட்டுப் போறாரு,

“அவரு யேவாரிதான், பொருள் தயாரிக்கிறவரில்லை.வாங்கி விக்கிறவரு தான், எங்க கடையப்போல கிட்டத்தட்ட ஒரு இருபது கடைகளுக்கு மேல சரக்குப் போடுறாரு சார்,அளவாத்தான் கொண்டு வருவாரு அளவாத்தான் விப்பாரு,

“கேக்கு போக மிக்சர் பாக்கெட் ,சேவு சிப்ஸீன்னு வண்டி நெறைய கொண்டு வருவாரு,கொண்டுவந்ததப்பூராம் சாய்ங்காலத்துக்குள்ள மதியத்துக்குள்ள கடைகளுக்கு போடுட்டு இங்க நம்ம கடையிலதான் வந்து சாப்புடுவாரு/

நம்ம கடைக்கி வரும் போதுதான் அவரு வண்டியிலயிருந்து கேக்குற பாட்ட நிறுத்துவாரு,சாப்புட்டு முஞ்சதும் திரும்ப பாட்டப் போட்டு விட ஆரம்பிச்சிரு வாரு,

”ஏண்ணே இப்பிடி காது கீது வழிக்காதான்னு கேட்டா வலிக்கும்தான் தம்பி, காது வலியப்பாத்தமுன்னா மனசு வலி நிக்காதே/

”காலையில மதுரையில இருந்து கெளம்பும் போது போடுற பாட்டுத்தான் சாய்ங்காலம் ஊர் திரும்பித்தான் போயி நிக்கும்,

காலையில சரக்குகள அள்ளிக்கட்டும் போது என்னையறியாம கூடவே கை எப் எம் ரேடியோவ எடுத்து வண்டியில வைக்க வேண்டிய எடத்துல வச்சிரு வேன், வச்சிட்டுவண்டியஸ்டார்ட்ப்பண்ணும் போது தட்டி விடுற பாட்டு காது வழியா நொழைஞ்சி மனசத்தொட்டு இதம் காண்பிக்கும் போது விட்ட விட்டு கெளம்புற வரைக்கும் வீட்டுல பட்ட துன்பமெல்லாம் மறந்து போகும்,தவுர கேக்குற பாட்டு அதுக்கு மருந்தும் போட்டுரும்,

”எண்ணூத்திச்சொச்சம்பாட்டு இருக்கு மொத்தம் இதுல,அத வரிசையா கேக்க வே நாள்கணக்குல ஆகிப்போகும்,

“பெண்டிரைவ்ல இருக்குற பாட்டுகதானன்னு இல்லாம அடிக்கடி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருப்பேன்,

“இன்னார் பாட்டுதான்னு இல்ல,நல்லா இருக்குற எல்லாம் கேப்பேன், இளைய ராஜா மியூசிக்கின்னா கொஞ்சம் உசுரு/சமயத்துல வண்டிய எங்கிட்டாவது ஒரு ஓரத்துல நிறுத்திக்கூட கேட்டுக்கிட்டு வந்துருவேன் என்பார்.

”நான் வர்ற வழியில மறிச்சி போலீஸ் கூட கேட்டாங்க,ஏன் இப்பிடி போட்டுக் கிட்டு போறீங்க யெடஞ்சலா இல்லையான்னு,இல்ல சார் இதப்போட்டு கேட் டாத்தான் இருக்குற யெடைஞ்சல் போகுதுன்னு சொல்லி முடிச்சிருவேன்,

“அவுங்களும் சிரிச்சிக்கிட்டே சரிதான் நீ சொல்றது,நாங்க சொன்ன மரியாதை க்காகவாவது எங்கள கடந்து போகும் போது பாட்டகொஞ்சம் நிறுத்தீட்டுப் போங்கன்னாங்க,

“நானும் சிரிச்சிக்கிட்டே சரி சார் இனிம அப்பிடியே செஞ்சிர்றேன்னு வந்துரு வேன்,இப்ப வரைக்கும் அதுல பழுதில்லாம ஒடிக்கிட்டு இருக்கு என்னைக்கி அதுல பழுது உண்டாகி நிக்குதோ தெரியல,பாப்போம் என்பார்,

அந்த பாப்போம்ங்குற வார்த்தையும் அவரோட வேலையும் சாய்ங்காலம் முடி யும் போது ரிட்டர்ன்ல சரக்குப் போட்ட கடைகள்ல பூராம் காசு வசூல் பண்ணீ ட்டு போயிருவாரு,

”அளவாத்தான் சரக்குக்கொண்டு வருவாரு,அளவாத்தான் போடுவாரு, அவரு கிட்ட சரக்கு ரிட்டன் எடுக்குற சமாச்சாரமே இருக்காது சார்,

“கேட்டா சொல்லுவாரு, நீங்ககேக்குறதுக்காக சரக்க கூடக்கொறைய போட்டு ட்டு போயிட்டேன் வையிங்க ,அது அன்னைக்கி தேதிக்கு விக்காம போயி மறு நாளைக்கி நீங்க வச்சி விக்கும் போது எப்பிடியும் கொஞ்சம் வாடை யடிச்சிப்போகும்,அப்பிடி வாடையடிக்கும்போது இது யாருபோட்ட சரக்குன்னு கேட்டா இன்னாரு போட்டதுன்னு பேரு வரும்,அப்ப ஏங் பேருல்ல கெட்டுப் போகும், அதுனாலத்தான் அளவா சரக்குளப்போட்டு அதுக்குண்டான காசுகள் மட்டும் வாங்கிக்கிறத வழக்கமா வச்சிருக்கேன்,கடைக்காரங்க பல பேரு கேட்டிருக்காங்க கொஞ்சம் கூடுதலா சரக்குப்போடுங்க,அன்னைக்கி தேதிக்கு விக்கலைன்னா மறுநாளைக்கி வச்சி வித்துட்டுப் போறோம்ன்னு நானும் சளைக்காம அவுங்களுக்கெல்லாம் இதத்தான் பதிலா சொல்லீருக்கேனே தவிர வேற ஒண்ணும் சொன்னதில்ல,

“இன்னும் சில பேருன்னா நீங்க இப்பிடி சொல்லீட்டு மழை தண்ணி நேரத்துல இல்ல ஏதாவது ஒரு காரணத்தால சரக்கு வரல எனக்குன்னு அன்னைக்கித் தேதிக்கு சரக்கு போடலைன்னு வச்சுக்கங்க,எங்களுக்கு யேவாரம் என்னாகுற துன்னு கேக்குறவுங்களுக்கு ஏங்கிட்ட இருக்குற ஒரே பதிலு இதுதான், நானும் ஒங்களப்போல கடை வச்சி யேவாரம் பண்ணுனவந்தான்,எனக்கும்ஒங்க கஷ்ட நஷ்டங்க என்னன்னு தெரியும்,அதுனால நான் அந்தளவுக்கு போக விட மாட்டேன்,இது நாள் வரைக்கும் அது போல ஏதாவது நடந்துருக்கா சொல்லுங்க,இல்லையில்ல,அப்பிடி ஏதாவது ஒண்ணு நடக்குற போது நான் ஏங் யேவாரத்த விட்டுட்டேன்னு வைச்சிங்கன்னுவேன்,

நான் மதுரையிலயிருந்து சரக்குக வாங்கீட்டு வந்தாலும் ஏங் வீடு இந்த ஊர்லதான இருக்கு,எனக்கு சொந்த ஊரே இதுதான,ஏங் வீட்டம்மாவுக்கும் சொந்த ஊரு இதுதான்,அதுனால எனக்கு ஒரு லாபம் என்னான்னா நான் யேவாரம்ன்னு போயிற போது ஏங்பொண்டாட்டி புள்ளைங்க சொந்தக்காரங்க வீடு இருக்குங்குற தைரியத்துல இருந்துக்குருவாங்க.தவுர வீட்டுல கொஞ்சம் சரக்குக ரெடியா இருக்கும்,அதுனால ஒங்களுக்கு சரக்கு கெடைக்காம யேவா ரம் போருமோன்னு பயம் வேணாம்

அப்படிப் பேசுகிறவரிடம் என்ன பேசிவிட முடியும் கடைக்காரர்கள்,சரி என்று மனம் ஒத்து போய் விடுவார்கள்,

அவரும் அதை மிகவும் கறாராகவும் சப்தமிட்டுமாய் சொல்லமாட்டார்,மனம் தொடுகிற மிருதுவான குரலில்தான் இதைச் சொல்லுவார்/

அவரும்தான் சொன்ன சொல்லையும் தன்னை நம்பி இருக்கிற கடைக்கார ர்களையும் எந்த சூழலிலும் இது நாள் வரை கை விட்டதில்லை,

இப்படித் தான் ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு தடவை உடல் நலமில்லாமல் படுத்து விட படுக்கப்போட்ட உடல் ஒரு வாரம் வரை சரியாகாமல் கண்ணா மூச்சி காட்டி விட்டது,

கடைக்காரர்களுக்கானால் வயிற்றி ல் புளி கரைத்து ஓடுகிறது.ஒருவர் வந்து கேட்டே விட்டார்,எண்ணன்னே எப்பிடி நீங்க இந்தநெலைமையில போயி சரக்கு வாக்கீட்டு வந்து எங்களுக்கு குடுக்கபோறீங்க.

”நீங்க வேணுமுன்னா சரக்கு வாங்கீட்டு வர்ற யெடத்த சொல்லுங்க,நாங்களே போயி வாங்கீட்டு வந்துர்றோம்,நீங்கஒடம்புச்சரியில்லாம படுத்தத கேள்விப் பட்டதுலயிருந்து மத்த யேவாரிங்க எங்க கடைய சுத்திச்சுத்தி வர்றாங்க. ஒருத்தரு நான் வந்து வேணுமுன்னா ஒங்களுக்கு சரக்கு போடட்டுமான்னு கேக்குறாருண்ணே, நாங்க என்ன செய்யட்டும் சொல்லுங்க இப்பன்னு வந்து நின்னப்ப, கவலப் படாம போயி கடை யேவாரத்தப்பாருங்க,ஒங்க எல்லாருக் கும் வழக்கம் போல பத்துலயிருந்து பண்ணெண்டு மணிக்குள்ள சரக்கு வந்துரும்/

“சரக்குகள எடுக்க ஏங் வீட்டுக்காரியும் பையணும் ஆட்டோவுல போயிருக்கா ங்க, இப்ப நடு வழியில வந்துக்கிட்டிருக்காங்க, இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவாங்க, அவுங்க வந்ததும் வழக்கம் போல எல்லாருக்கும் சரக்கு டெலிவரியாயிரும்.அதுல எந்த கோணலும் இருக்காது,

”நீங்க எல்லாரும் எனக்கு ஒரு பெரிய உதவி செய்யணும்.ஏங்கிட்ட குடுத்தது போல ஏங்பையன் சாய்ங்காலம்கலெக்‌ஷனுக்கு வரும் போது காச குடுத்த னுப்பி ஒதவணும்ன்னு கைகூப்புனாரு ,

“அப்பிடி கை கூப்புனவர இதுநா வரைக்கும் நாங்க யாரும் எந்த சங்கடமும் படுத்தல, அவரும் எங்கள எந்த சங்கடத்துக்கும் ஆளாக்குனதில்ல,அதுனால ஓடிக்கிட்டு இருக்கு.

”இந்தாங்க சார் இன்னைக்கி ஒரு நா வடைக்கி பதிலு கேக்கு சாப்புட்டுப் பாரு ங்க எனக்கொடுத்தார் கடைக்கார்.

நன்றாக இருந்தது கேக்.கிரீம் இல்லாமல் அதிக இனிப்பு இல்லாமலும் சாப் பிட ருசியாகவும் திகட்டாமலுமாய்/

பரவாயில்லை,இது போலானதை இத்தனை நாளாய் சாப்பிட மறந்து போனோ மே என்கிற லேசான வருத்தம் இருந்தது அந்த நேரம்,

மனதுள் நினைத்ததை கடைக்காரர் எப்பிடி கண்டு கொண்டார் எனத் தெரிய வில்லை.”சார் அப்பிடித்தான் தோணும்,கொஞ்ச நாள் கழிச்சி கேக்குல இருந்து பழைய படிக்கும் வடைக்கு மனசும் நாக்கும் தாவும்,அப்ப எல்லாம் சரியாப் போகும் சார்,மாறி மாறி விருப்பட்டத சாப்புட்டுக்குற வேண்டியதுதான் எல்லாம் நம்ம வச்சிக்கிறதுதான்,,” என்பார் கடைக்காரர்,

பரந்து விரிந்து பஸ் போகும் சாலையின் இடது பக்கமாய் இருந்த ஹோ ட்டலின் அருகாமையாய் அமைந்திருந்த டீக்கடையின் எதிர்த்தாற்ப் போல் இருந்த பஸ்டாப்பை ஒட்டி பெரிதாக இருந்த ஆலமரம் விழுது விட்டு தரை தட்டி நின்று காட்சிப்பட்டது,

இலைகளும் கிளைகளும் காய்களும் கனிகளுமாய் காட்சிப்பட்ட மரத்தின் ஊடு பாவாய் அங்கங்கே இருந்த பறவையின் கூடுகள் இலைகளின் அடர்த் தியை விட கொஞ்சம் கூடுதல் பட்டுத்தெரிந்ததாய்/

கரும் பச்சையும் வெளிர் பச்சை நிறமும் கொண்ட இலைகள் பாசம் பிடித்துப் போயிருந்த தடித்த கிளைகளின் மீது உரசியும் மஞ்சள் பாரித்து உதிர்ந்து ஒட்டுக்கொண்டுமாய் இருந்தன,

ஒட்டிக்கொண்டிருந்ததும் கீழே விழுந்ததுமான இலைகளின் நடுவாயும் பக்க வாட்டயும் கோட்டிழுத்து ஓடிய நரம்புகளில் சில இலைகளுடன் சேர்ந்து புழுவறித்துக்காணப்பட்டதாய் வெளிர்த்தும் தூசி படர்ந்துமாய்/

தூசி படர்ந்து காணப்பட்ட இலைகளில் சிலவற்றில் இருந்து வெளியேறிய புழுக்களை கூடுகளில் இருந்து வெளியேறிய பறவைகள் பிடித்துத் தின்றன, அவை தின்றது போக மிச்சப்பட்ட புழுக்கள் மரத்திலிருந்து மென் பச்சை காட்டி இறங்கிக்கொண்டிருந்த விழுதுகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

ஏற்கனவே தரை தொட்டும் மண் வாசனை முகர்ந்தும் அதனுடன் உறவாடி யும்நிலை கொண்ட பருத்த விழுதுகளின் கரம் பற்றி அதை நலம் விசாரித்துச் சென்று கொண்டே தரை தொடும் முயற்சியில் இளம் விழுதுகள்/

இவையாவையும் வேடிக்கை பார்த்தவாறே கூடுதல் பட்ட கூடுகளில் இருந்து விடுபட்டுப்பறக்கும் பறவைகள் பஸ் வருகிற நேரங்களில் கொஞ்சம் கூடுதல் அவசரம் காட்டிப் பறப்பதாய் /

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *