கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,914 
 

வித்யா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ. ஆனால், அவள் நிறத்தை வைத்து அவளை அழைப்பதைச் சிறு வயதிலிருந்தே வளர வளரத் தான் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வளரத் தொடங்கியது.

அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருப்பது போல் தனியாகவே இருப்பாள். அதனால், யாருடனும் பேசுவதைத் தவிர்த்து விடுவாள். வித்யா அப்படியிருந்தாலும் படிப்பில் அவள் சுட்டிதான் முதல் இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை.

கல்லூரிக்கு நேரமானதால் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். இவள் வருவதைக் கண்டச் சக வகுப்புத் தோழி மோனி இவளை அழைத்தாள். மோனிக்கு வர்ஷாவை மிகவும் பிடிக்கும்.
அதனால், அவளே வலிய சென்று பேசினால் கூட வர்ஷா ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. வர்ஷா ஏன்? அப்படி இருக்கிறாள் என்று அவளிடம் கேட்க வேண்டுமென்று பல நாள் நினைத்து இன்றுதான் பேச அழைத்தாள்.

“என்னை எதுக்குக் கூப்பிட்ட? மோனி.” வர்ஷா கேட்டாள்.

“நான், உன்கிட்டக் கொஞ்ச நேரம் பேசனும். மதியம் என் கூட வரியா? என்றாள் மோனி.

வர்ஷா அவளைச் சற்று நேரம் கூர்ந்துப் பார்த்துவிட்டு, “சரி” என்றாள். ‘இவ என் கூட என்ன பேசப் போறா?’ என்று சிந்தித்தவள் மோனியுடன் சேர்ந்தே வகுப்பிற்குச் சென்றாள்.

மதியம் சாப்பிட்டு முடித்த பின் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். “வர்ஷா, இந்த ரெண்டு கண்களும் எப்படி இருக்குன்னு சொல்லு.” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டி மோனிக் கேட்டாள்.

“மானின் கண்கள் போல் அழகா இருக்கு. பார்க்கிறவங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கச் சொல்றது போல் இருக்கு. எதுக்குக் கேட்கிற மோனி?” என்றாள் வர்ஷா.

“சொல்றேன். இது யாருடைய கண்கள்னு சொல்லுப் பார்க்கலாம்.” என்றாள் மோனி சிரித்துக் கொண்டே.

“உன் கண்கள் மாதிரி இல்லை. ஆனால், யாருடையதுன்னு சரியாத் தெரியலையே.” என்று வர்ஷாச் சொல்ல.

“உன் கண்கள்தான் வர்ஷா. உன்னோட கண்ணை உனக்கே தெரியலை. நீ தினமும் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கதானே?” என்று மோனி கேட்டாள்.

வர்ஷாவினால் நம்ப முடியவில்லை. தன் கண்களா என மோனியைச் சந்தேகமாகப் பார்த்தாள். ‘இவ எப்ப என்னைப் போட்டோ எடுத்தா?’ என்று யோசனையாகப் பார்க்க.

மோனி தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ரெண்டு நாளுக்கு முன்னாடி உன் பையிலிருந்து கணக்கு நோட் எடுத்துக்கச் சொன்னியா. அப்ப தவறுதலா உன் டைரியையும் எடுத்துப் போயிட்டேன். அதில் நீ எழுதியிருந்ததை எல்லாம் படிச்சேன். உன் டைரியை படிச்சது தப்புதான் மன்னிச்சிரு. உனக்கு ஏன் இப்படியொரு எண்ணம்? உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லாம போச்சா? வர்ஷா.” மோனி கேட்க.
“மோனி, நான் உண்மையைதானே எழுதியிருக்கேன். என்னைப் பார்க்கிற உனக்குத் தெரியலையா? நான் என்ன அழகுன்னு.” என்றாள் வர்ஷா சொல்ல.

அழகுன்னா நீ என்ன என்று நினைச்ச? இப்ப நீதான் உன் கண்ணைப் பற்றிச் சொன்ன. கடவுளால் படைக்கப்பட்ட நாம எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். நான் நல்ல நிறம்ன்னு அழகுனு நினைக்காத. நீ நிறம் கம்மியா இருப்பதால் அழகில்லைன்னும் நினைக்காத.” என்றாள் மோனி.

“என்ன? மோனி. உன் அழகுக்கு என்ன குறைச்சல். நீயே அழகு இல்லைன்னு சொன்னா அப்ப நான் என்ன சொல்றதில் என்ன தப்பிருக்கு?” என்று வர்ஷா கேட்க.

“நாம பிறந்தப்ப இருந்த அதே அழகா இப்ப இருக்கு. நமக்கு இருபது வயசு இன்னும் முப்பது வருஷம் கழிச்சு இதே அழகிலா இருக்கப் போறோம். கொஞ்சம் யோசிச்சுப் பார். நம்ம உயிர் போன பிறகு ஆறடி மண்ணுக்குள்ள எலும்புக் கூடாதான் இருப்போம். நமக்கு எதுவும் நிரந்தமில்லை எல்லாம் ஒரு நாள் நம்மைவிட்டு அழிஞ்சு போயிடும்.

அழிஞ்சி போற இந்த உடலுக்கு நாம இருக்கிற நாட்களை ஏன் வீணாக்கனும்? மகிழ்ச்சியா இருக்கலாமே. உன் கண்ணு எவ்வளவு அழகுனு நீயே சொன்ன. அந்தக் கண்ணில் மகிழ்ச்சி இருந்தா இன்னும் அழகா இருக்கும்.” என்று மோனி கனிவாக எடுத்துக் கூறினாள்.

“சரி, மோனி எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கு. நான் யோசிக்கனும் நான் நாளைக்குப் பேசவா? இப்ப நான் கிளம்பறேன்.” என்று மோனி சொன்னதைக் கேட்ட வர்ஷா மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மோனி கண்டிப்பாக நாளை ஒரு மாற்றத்துடன் வருவாள் என்று நினைத்து கொண்டாள். மறுநாள் வர்ஷாவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள் மோனி.
மோனி நினைத்தது போல அழகுச் சிலையாக மாறி வந்தாள். சிறிய அளவில் ஒப்பனை செய்திருந்தாலும் அவள் கண்களில் இருந்த மகிழ்ச்சி அவளை இன்னும் அழகாகக் காட்டியது. அவள் வகுப்பு மாணக்கர்கள் இவளின் மாற்றம் கண்டு இவளையே பார்த்தனர்.

“உன் மகிழ்ச்சியான மானின் கண்களால் இன்னைக்கு எல்லோரையும் திரும்பி பார்க்க வச்சிட்டியே வர்ஷா.”

“அந்தக் கலையைச் சொல்லிக் கொடுத்தது நீதானே. ரொம்ப நன்றி மோனி.” என்றாள் வர்ஷா புன்னகையோடு.

“உனக்குப் பேச கூடத் தெரியுமா?’ என்று மோனி கிண்டலாகக் கேட்டாள். இருவரும் சிரித்துக் கொண்டே கல்லூரிக்குள் சென்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *