விடலைப் பருவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 7,657 
 

“சார் போஸ்ட்”

மூர்த்தி அந்த வெள்ளை நிற கவரை வாங்கி அட்ரஸ் பார்த்தான். அக்கா வனஜாவின் பெயர் இருந்தது. அனுப்புனர் முகவரியில் முரளி அத்திம்பேர் பெயர் இருந்தது. அத்திம்பேர்தான் தினமும் அக்காவிடம் மொபைலில் பேசுகிறாரே, இப்ப எதற்கு இந்தக் கடிதம் என்று நினைத்தான்.

அதற்குள் அக்கா ஓடி வந்து கடிதத்தை வாங்கிக் கொண்டாள். பரபரப்புடன் பெட்ரூம் சென்று கடிதத்தை பிரித்துப் படித்து முடித்தவுடன், தன் சூட்கேஸுக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள். மூர்த்திக்கு அக்காவின் இந்தச் செயல் புதிராக இருந்தது.

அந்த வீட்டில் யாருக்கு கடிதம் வந்தாலும் பொதுவாக அனைவரும் அந்தக் கடிதத்தை படிப்பது வழக்கம். இன்று அக்கா மட்டும் கடிதத்தை படித்துவிட்டு எதற்கு சூட்கேஸில் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்? என்று துணுக்குற்றான்.

மூர்த்திக்கு வயது பதினைந்து. +2 வில் முதல் வருடம் முடித்துவிட்டு சம்மர் ஹாலிடேஸில் இருக்கிறான். விடலைப் பருவம். இப்பதான் மீசை அரும்பு விட ஆரம்பித்திருந்தது.

வீட்டில் யாரும் இல்லாதபோது டெஸ்க் டாப்பில் கூகுள் டைப் செய்து, செக்ஸ் வீடியோக்களை ரகசியமாக பார்க்க ஆரம்பித்திருந்தான். செக்ஸ் பற்றி அனுபவ பூர்வமாக தெரிந்து கொள்ளும் தவிப்பில் இருந்தான்.

மூத்த அக்கா வனஜாவுக்கு ஆறு மாதங்கள் முன்புதான் திருமணமானது. அதன் பிறகு திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சென்று முரளியுடன் தனிக் குடித்தனம். கல்யாணத்திற்குப் பிறகு இப்பதான் திருநெல்வேலி வந்திருக்கிறாள். திரும்பிச் செல்லும்போது தன் கூட மூர்த்தியையும் அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் சென்னையில் வைத்துக்கொள்வதாக ஏற்பாடு.

அடுத்த அக்கா கிரிஜா மெடிகல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். இரண்டு அக்காக்களும் மூர்த்தியிடம் பாசமாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு பதினைந்து வயதாகி விட்டதே என்கிற எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இன்னமும் அம்மாவும், இரண்டு அக்காக்களும் அவனை குழந்தைபோல் பாவித்தார்கள். அவன் படித்துக் கொண்டிருக்கும்போது அவன் முதுகுக்குப் பின்னால் சுவாதீனமாக உடை மாற்றிக் கொள்வார்கள். சில சமயங்களில் அந்த மாற்றுதல்களை மூர்த்தி பார்த்துத் தொலைக்கவும் நேரிட்டது. அதனால் அவனுக்கு பெண்களின் மேல் குறிப்பாக அவர்களின் உடற்கூறு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமானது. பெண்களை உடல் ரீதியாகப் புரிந்து கொள்ளும் தேடல் அதிகரித்தது.

அன்று மாலை வீட்டில் அனைவரும் நெல்லையப்பர் கோவிலுக்கு கிளம்பிச் சென்றபோது, மூர்த்தி மட்டும் தனக்கு தலைவலி என்று சொல்லி வீட்டிலேயே தங்கி விட்டான். கடிதத்தை அக்கா எதற்கு மறைத்து வைக்க வேண்டும்? என்று நினைத்தவன், வனஜாவின் சூட்கேஸை குடைந்து அதனடியில் இருந்த அத்திம்பேரின் கடிதத்தை ஆவலுடன் எடுத்துப் படித்தான்.

மை டியர் வனஜ்,

தினமும் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும், உனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. இங்கு நீயில்லாமல் நான் காய்கிறேன். எப்போதும் உன் நினைவுதான். இரவு நேரங்களில் தூங்கும்போது என்னருகே நீ இல்லாது நான் தவிக்கும் தவிப்பு….நேற்று என்ன செய்தேன் தெரியுமா, பீரோவிலுள்ள உன் புடவைகளை எல்லாம் எடுத்து நம் கட்டிலின் மீது பரப்பி அதன் மீது படுத்துக்கொண்டு, மிச்சமிருந்த புடவைகளை போர்த்திக்கொண்டு உன் வாசனை தந்த மயக்கத்தில் தூங்காது முழித்துக் கொண்டிருந்தேன்.

நான் தினமும் ஆபீஸ் செல்லும்போது நீ தரும் ‘ஹமு’ இல்லாமல் எனக்கு வேலையே ஓடவில்லை.

உன்னுடைய ஹமுவுக்காகவாவது நீ இங்கு உடனே வர வேண்டும். ‘இல்லாள் இல்லாத இல்லம் சுடலை’ என்கிற சொலவடை என் விஷயத்தில் முற்றிலும் உண்மை. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல் உன் அருமை என் தனிமையில் தெரிகிறது.

ப்ளீஸ் சீக்கிரம் வந்துவிடு.

இப்படிக்கு,

ஹமுவுக்காக ஏங்கும் உன் முரளி.

படித்து முடித்ததும் ஹமு ரகசியம் புரியாது குழம்பினான் மூர்த்தி.

மறுநாள், தான் முரளிக்கு எழுதிய கடிதத்தை மூர்த்தியிடம் கொடுத்து போஸ்ட் பண்ணச் சொன்னாள் வனஜா. ஒட்டப்பட்ட பகுதியில் மூர்த்தி லேசாக தண்ணீர் தடவ அது விட்டுக்கொண்டது. படித்தான்.

மை டியர் முரள்,

உங்களுக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா? வீட்டில் இத்தனைபேர் இருக்கும்போது இப்படி ரொமான்டிக்காக எழுதணுமா? உங்களைப் பிரிந்து இருக்க என்னால் மட்டும் முடியுமா என்ன? மனசு சந்தோஷமாக இருந்தாலும் உடம்பு உங்க அணைப்பிற்காகத்தானே ஏங்குகிறது?

பெண்களின் கூந்தலுக்கு வாசனை உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களின் புடவைக்கும் உண்டு என்பது உங்கள் கடிதத்திலிருந்து தெரிகிறது.

நானும் மூர்த்தியும் வரும் சனிக்கிழமை அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கிளம்பி ஞாயிறு சென்னை வருகிறோம். ஸ்டேஷன் வரவும்.

ஹமு தர ஏங்கும் வனஜ்.

மூர்த்திக்கு சென்னை முதல் பயணம் என்பதால் ரொம்ப ஆர்வமாக இருந்தான், ரயிலில் வரும்போது தாம்பரம் தாண்டியதும் அடிக்கடி உடன் வந்த மின்சார ரயில்களை ஆச்சரியமாகப் பார்த்தான். ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சென்றன. அதில் இருந்த பயணிகள் இது எங்களுக்கு ரொம்ப சர்வ சாதாரணம் என்பதுபோல் எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு கொள்ளவே இல்லை.

அத்திம்பேர் ஸ்டேஷன் வந்திருந்தார். வீட்டுக்கு வந்ததும் அக்காவை சுற்றிச் சுற்றியே வந்தார். பகலில் மூர்த்தியை தூங்கச் சொன்னார். விவரம் புரியாது, “நான் பகலில் தூங்கவே மாட்டேன் அத்திம்பேர்” என்றான்.

இரவு மூர்த்தி கூடத்தில் படுத்துக் கொண்டான். பெட்ரூமிலிருந்து வளையல்கள் அலுங்கும் சப்தமும் கட்டிலின் கீச் கீச் சத்தமும், மெல்லிய பேச்சுக் குரலும் கேட்டுக் கொண்டேயிருந்தது. மூர்த்திக்கு அத்திம்பேர் மீது கோபம் வந்தது. ‘பாவம் ரயிலில் வந்த அலுப்பில் அக்காவை தூங்கக்கூட விடாமல் எதுக்கு தொண தொணன்னு…’ என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆபீஸ் கிளம்பும்போது அவரை வழியனுப்ப அக்கா அவருடன் இருந்தாள். “எனக்கு இப்ப ஹமு வேணும்” என்று அத்திம்பேர் சொல்ல, உடனே வனஜா கண்களை உருட்டி மூர்த்தி உடனிருப்பதை உணர்த்த அவர் அமைதியாக கிளம்பிச் சென்றார். மூர்த்திக்கு அது என்னவோபோல் தோன்ற, தான் அங்கு இருந்தது நாகரீகம் இல்லையோ என்று நினைத்தான்.

பத்து மணிக்கு வேலைக்காரி வந்தாள். “துலுக்காணம் …இவன் என் தம்பி மூர்த்தி, ரெண்டுவாரம் இங்கதான் இருப்பான்” என்றாள். அவள் மூர்த்தியை அதிசயமாகப் பார்த்தாள். பிறகு பாத்ரூமில் போடப் பட்டிருந்த பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தாள். பாத்திரம் தேய்த்து முடிந்து, பாத்ரூமை கழுவியதும், அக்கா பாத்ரூம் கதவைச் சாத்திக்கொண்டு குளிக்கச் சென்றாள்.

துலுக்காணம் வீடு பெருக்க ஆரம்பித்தாள். டீஸல் கறுப்பில் ஏராளமான மார்பகங்களுடன் குதிர் மாதிரி வளர்ந்து இருந்தாள். குளிக்காமல் அழுக்காக காணப் பட்டாள். அப்படி இருந்தும் மூர்த்திக்கு அவளிடம் பேச வேண்டும், அவளை கட்டியணைக்க வேண்டும் போல் ஆசை துளிர் விட்டது. அவளையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குனிந்து பெருக்கியபோது அவளது பிருஷ்டங்கள் திரட்சியாக வட்ட வடிவில் பெரியதாக இருந்தன. மூர்த்திக்கு உடம்பு உஷ்ணமானது.

மறுநாள் அத்திம்பேர் கிளம்பும்போது வேண்டுமென்றே பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான். கதவின் சாவித் துவாரத்தின் வழியாக கூடத்தில் இருந்த அக்கா-அத்திம்பேரைப் பார்த்தான்.

அத்திம்பேர், “எங்கே அந்த வானரம்…?” என்றார்.

“உள்ளே குளிக்கிறான் போல, பெட்ரூம் சாத்தியிருக்கு.”

“சரி சரி சீக்கிரம் எனக்கு ஹக்கி முத்தா குடு”

அக்கா அவரை கட்டியணைத்து வலது கன்னத்தில் ஒன்றும் இடது கன்னத்தில் ஒன்றும் பச் பச்சென்று முத்தம் கொடுத்தாள்.

ஓஹோ இறுக்க கட்டியணைத்து முத்தங்கள் கொடுத்தால் அது ஹக்கி முத்தாவா…? என்று மூர்த்தி நினைத்துக் கொண்டான்.

ஆண்-பெண் ஈர்ப்பு பற்றி மூர்த்தி நிறைய சிந்திக்க ஆரம்பித்தான். பெண்களை ஆண்களுக்காகவும்; ஆண்களை பெண்களுக்காகவும் பகவான் படைத்திருக்கிறார்…அவர்கள் திருமணம் செய்து கொண்டவுடன் இருவரும் சேர்ந்து தாச்சுக்கணும், அப்புறம் குழந்தைகள் பிறக்கின்றன. அவ்விதம் தாச்சுக்கும்போது அதீத கற்பனைகளுடன் எவ்வளவு நேரம் கலவியில் ஈடுபடுகிறார்களோ அதற்கேற்ற பலன் கிடைக்கும்….என்று நினைத்தான். பின்பு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

பத்தரை மணிக்கு துலுக்காணம் வேலைக்கு வந்தாள். இன்று குளித்திருந்தாள். பவுடர் பூசியிருந்தாள். புதிதாக மஞ்சள் நிறத்தில் புடவை கட்டியிருந்தாள். பாத்திரம் தேய்க்க அமர்ந்தாள்.

வனஜா மூர்த்தியிடம் ரகசியக் குரலில், “நீ வீட்ட பாத்துக்கோ….அவளுக்கு கை நீளம்..மெட்ராஸ்ல யாரையும் நம்ப முடியாது, நான் போய் காய்கறி வாங்கிண்டு வந்துடறேன்…” என்று கிளம்பினாள்.

அக்கா சென்றதும் மூர்த்தி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த துலுக்காணத்திடம் சென்றான். அவள் புடவையை மடித்து உடகார்ந்து இரண்டு தொடைகளும் தெரிய பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள். அவள் கறுப்பாக இருந்தாலும், தொடைகள் வெண்மையாக இருந்தன.

மூர்த்தியைப் பார்த்ததும் அவள் விருட்டென்று எழுந்துகொண்டு புடவையைத் தளர்த்தினாள்.

பதட்டத்துடன் “என்ன வேணும்?” என்றாள்.

“அக்கா வெளிய போயிருக்காங்க…. வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்…” என்று இழுத்தான்.

அவள் கைகளை குழாயில் கழுவிவிட்டு புடவையில் துடைத்துக் கொண்டாள்.

“துலுக்காணம் எனக்கு உன் மேல ரொம்ப ஆசையா இருக்கு… ப்ளீஸ் உன்ன கட்டிப் பிடிச்சு முத்தம் தரணும்.’

அவள் பதில் ஒன்றும் பேசாது பாத்ரூமிலிருந்து அவனைத் தாண்டி வெளியே வந்தாள். கூடத்தைக் கடந்து வெளியே வாசல் வராண்டாவில் கழட்டிப் போட்டிருந்த தன்னுடைய செருப்பை நிதானமாக அணிந்து கொண்டு வெளியேறினாள்.

காய்கறி வாங்கி வந்த வனஜா பத்திரங்கள் போட்டது போட்டபடி கிடந்ததைப் பார்த்து, “எரும மாடு…இந்த வேலைக்காரிங்களே இப்படித்தான். சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு போயிட்டாளே” என்று முனகிவிட்டு வடிவை மொபைலில் தொடர்பு கொண்டாள்.

“கழுத்து சுளுக்கிருச்சு… இன்னும் ரெண்டு வாரத்துக்கு வேலைக்கு வரமுடியாது” என்று சொன்னவளை வனஜா கரித்துக் கொட்டினாள்.

மாலை வீட்டுக்கு வந்த முரளியிடம், “திமிரப் பாருங்க கழுத்து சுளுக்குக்கு எதுக்கு ரெண்டு வாரம்? சீக்கிரம் வேறு வேலைக்காரியப் பாருங்க” என்றாள்.

திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல் இருந்தது மூர்த்திக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *