வழி தவறி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,733 
 

“”நம்ம வீட்டுக்கு, இந்தச் சந்துல திரும்பக் கூடாதே?”, நாலு எட்டு தள்ளி வேகமாக நடந்துகொண்டிருந்த கோபாலுக்கு கேட்குமாறு கூறினாள் ஆனந்தி.

“”உனக்கு கிழக்கு எது மேற்கு எதுன்னு தெரியாது. எனக்கு வழி சொல்ல வந்துட்டியா?” என்வாறு அவன் கால்களை இன்னும் வீசிப் போட்டான்.

மார்க்கெட் தெரு நெரிசலில் புழுங்கியது. இரவு பத்து மணியைத் தொட்டிருந்தாலும், திருவிழா காலமாதலால் பூக்கடை, பழக்கடை, துணிக்கடை, பொம்மை சில்லû சாமான் விற்கும் வண்டிக்கடை என அனைத்தும் நிரம்பி வழிந்தன.

ஆனந்தியின் கசகசக்கும் உள்ளங்கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக கூட வந்தான் நான்கு வயது பிரசாத். எதிரே முட்டிமுட்டி வரும் தொடைகளினூடே, கடைப் பொருட்களை, உருண்டை விழிகளால் ஆசை பொங்கப் பார்த்துக் கொண்டு நடந்தான். காண்பதையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் வயது.

ஒரு உவினரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். தாம்பரத்தில் அவர்கள் வீடு. இவர்களுக்கோ தங்கசாலை பக்கம். நேரமாகிவிட்டமையால், வீடு அருகாமைக்கு வரும் பஸ்ஸøக்காக காத்திராமல், கிடைத்த பஸ்ஸில் தொற்றிக்கொண்டார்கள்.

ஆனந்திக்குப் பசி வயிற்ûக் கிள்ளியது. “”அண்ணியே பெரிய மனசு பண்ணி ரொம்ப நேரத்துக்கப்பும் காபி பலகாரம் கொண்டு வெச்சாங்க. இந்த மனுஷன் சாப்பிட்டாதானே. வீம்பா உக்காந்திருந்தாரு. ஆம்பளை சாப்பிடாம, நான் மட்டும் கை நனைக்க முடியுமா?” அவள் புலம்பல் மார்க்கெட் தெரு இரைச்சலில் மூழ்கியது.

ஒரு வழியாக இடதுபும் ஒரு சந்தில் திரும்பினான் கோபால். மார்க்கெட் தெருவிற்கு நேர் எதிராக அமைதியாக, இருட்டாக இருந்தது ஒரு கள்ளுக்கடையைத் தவிர. மொத்தத் தெருவிலும், அங்கு மட்டுமே வெளிச்சமும், வெடிச் சிரிப்பும். பின்னால் வந்து கொண்டிருந்த ஆனந்தியைப் பார்த்து, போதையில் மூழ்கியிருந்த ஒரு கிழவன் கண்ணடித்தான். கூட்டமே ஏதோ சொல்லிப் பலத்தக் கேலிச் சிரிப்புக்கிடையில் அவரை கீழே தள்ளியது. அவர்கள் அனைவரையும் மானசீகமாகக் கட்டையில் ஏற்றிவிட்டு, சற்று வேகமாக நடந்து கோபாலைச் சேர்ந்தாள் ஆனந்தி.

“”நம்ம வீட்டு சுத்துலியே கள்ளுக்கடை ஏதும் கிடையாது. எந்த வழியில எங்களைக் கூட்டிட்டுப் போறீங்க?”

“”நீ இவ்வளவு நாளா கண்ணை மூடிட்டு நடந்தியா? எல்லாம் சரியான வழியிலதான் போúாம்.”

“”போன மாசம் உங்க தங்கை வீட்டுக்குப் போய் திரும்பப்ப கூட இதே பஸ் ஸ்டாப்பிங்குலதான் இங்கினோம். இந்த வழியாவே வரலியே. ராத்திரி பூரா நடக்கவேண்டியதுதானா?”

கோபால் காதில் வாங்காமல் நடந்தான். கடைக் கண்ணி எதுவும் பார்க்காததில், பிரசாத்துக்கு கால் வலி புரிந்தது. “”அம்மா கால் நோகுது தூக்கிக்கோ” என்று ஆனந்தியின் இடுப்பில் ஏறிக் கொண்டான்.

“”எல்லாம் உங்கப்பா சரியான தெருவில் திரும்பாததால் வந்த வினை”, வார்த்தைகள் ஏறி இங்கும் மார்பிலிருந்து தெறித்து விழுந்தன.

“”அப்பா எப்படீம்மா தப்பா சொல்லுவாரு”, என்ான் பிரசாத்.

அவனை தொப்பென கீழே இக்கிவிட்டாள் ஆனந்தி. “”வீடு சேர் வரைக்கும் நடந்துவா. உன் காலு சொல்லும் யாரு சரியான வழி சொன்னாங்கன்னு.”

“”ஏண்டி, குழந்தைட்ட கோவத்தை காட்டú”, என்வாறு திரும்பி வந்து பிரசாத்தை தூக்கிக்கொண்டான் கோபால். தெருவோர பெட்டிக் கடைகள் தடுப்புக்கட்டைப் போட்டு மூடிவிட்டிருந்தன. ப்ளாட்பாரத்தில் பாய்கள் விரித்து தெருவாசிகள் தூக்கத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எங்கேயோ ஒரு வீட்டுக்குள்ளிருந்து ஒலித்த ரேடியோ பி. சுசீலாவின் இனிமையான குரலை சன்னமாக காற்றில் கலந்தது.

ஒரு பக்கம் முழுவதும் கருங்கல் சுவரால் அடைக்கப்பட்ட சந்தை அடுத்துத் திரும்பினான் கோபால். வெளிச்சம் உள்ள இடத்தை அடைந்ததும் எட்டிச் சுவருக்கு அப்பால் பார்த்தாள் ஆனந்தி. “”இது நம்ம பக்கத்து வீட்டு பையன் சைக்கிள்ல படிக்க வர் மிஷன் ஸ்கூலின் பின்பக்கம். அந்தப் பக்கம் சர்ச். அதோட வாசலை நாம எப்பவோ தாண்டியிருக்கணும், சரியான வழியல வந்துருந்தா” என்ாள் ஆனந்தி.

“”வீட்டுக்குப் போ வழியைத் தவிர எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கே.”

பிரசாத்துக்குத் தூக்கம் கண்களைச் சுழற் ஆனந்தியிடம் தாவினான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனையும் தூக்கிக்கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள் ஆனந்தி. நல்லவேளை குழந்தைக்காவது கொஞ்சம் பலகாரம் ஊட்டினேன். பெரும் களைப்பின் இடையே, சின்ன நிம்மதியாய் இந்த நினைவு வந்தது.

வீட்டுக்குப் போனதும் சில்லுனு மோர்சாதம் சாப்பிடணும் என்று உலர்ந்த நாக்குக்குப் பதிலளித்தாள். கால்கள் சற்றுப் பின்னின. நான்தான் தப்பாகச் சொல்கினோ, அவர் சரியாகத்தான் கூட்டிட்டுப் போவார் என்று ஆண்மகனை நம்ப விரும்பியது களைத்த மனம்.

சுவரின் திருப்பத்துடனே திரும்பி, சற்று நேரத்தில் சர்ச் வாயிலைக் கடந்தார்கள். அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் கணபதி எதிரே வந்துகொண்டிருந்தார். இரவு சாப்பாடு முடிந்து நீண்ட நடைபோடும் பழக்கமுடையவர். “”எங்கே இவ்வளவு லேட்டாக, அதுவும் இந்தப் பக்கமா வர்றீங்க?” என்று கோபாலை விசாரித்தார்.

“”ஒண்ணுமில்லே சார். பிடாரியார் கோயில் தெருவுல திரும்பதுக்கு பதிலா நேரா வந்துட்டோம். அதான் ஆசாரப்பன் தெரு, ஜார்ஜ் ஸ்ட்ரீட்டு, வண்டிக்காரன் தெரு வழியா இப்படி வரோம்” என்ான் கோபால்.

“”அட, ரொம்ப தொலைவாச்சே. நீங்க மார்க்கெட் தெருவுலேயே திரும்பிப் போயிருந்தாக் கூட இந்நேரம் வீடு போய்ச் சேர்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாமே” என்வாறு நடையைக் கட்டினார் கணபதி.

பிரசாத்தின் மேலிருந்த ஆனந்தியின் கை இன்னும் சற்று இறுகியது. மேலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வீடு வரை குழந்தையை சுமந்து நடந்தாள்.

கை கால்களைக் கழுவித் தட்டை வைத்த பிகு கோபாலைக் கேட்டாள் ஆனந்தி. “”நான் முதல்ல சொல்லாம இருந்திருந்தேன்னா, நீங்களாவே தப்பு வழின்னு உணர்ந்தப்பும் திரும்பியிருப்பீங்களா?”

குனிந்து மும்முரமாக சாதத்தை பிசைந்துக்கொண்டிருந்த கணவன் இன்னும் சற்று குனிந்து அழுத்த பிசையத் தொடங்கினான். ஆனந்தியை ஏறிட்டு பார்க்கவில்லை.

– செப்டம்பர் 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *