மீசை தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 4,995 
 

கணேஷ் தாத்தா பெரிய முறுக்கு மீசையும், கம்பீரம் குறையாத குரலோடு, பார்ப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைத்திருப்பம் உடற்கட்டமைப்பு கொண்டிருந்தார். ஊரில் கணேஷ் தாத்தாவை மில்ட்ரி மீசை என்றே எல்லோரும் அழைப்பார்கள்.

அவரின் இளம் வயதில் இருக்கும் போதுக்கூட மீசையை பெரியதாகவே வைத்திருந்தாராம். அவரின் மீசையை பார்த்தே ராணுவத்தில் வேலையே கொடுத்தார்கள் என ஊர் மக்கள் பேசிக் கொள்வார்கள்.

மீசை தாத்தாவின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு மகன்கள் சுரேஷ் மற்றும் மகேஷ், ஒரே மகள் திவ்யா.

தான் ராணுவத்தில் இருக்கும் போதே மீசை தாத்தா மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டு மாடிவீடும் கட்டினார். ஒரு வருடத்தில் இரண்டு மாத விடுமுறைக்கு ஊரில் வந்தால் மீசை தாத்தாவின் பேச்சுதான் அதிகமாகவே இருக்கும்..

தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தும், சுதந்திரமாகவும் வளர்த்தார்.

மீசை தாத்தா தனது இரண்டு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க நினைத்தார். ஆனால், சுரேஷ் ராணுவ வேலை எனக்கு வேண்டாம் என்று அரசு வேலையில் எழுத்தர் பணியை தேர்வு செய்துக் கொண்டான். சுரேஷ்க்கு நல்ல ராணுவ குடும்பத்தில் இருந்த பெண்ணை தனது மருமகளாக மீதை தாத்தா கொண்டு வந்தார்…

ராணுவ பணியில் இருந்தும் ஒய்வுப்பெற்று வீட்டிற்கு வந்தார் மீசை தாத்தா..

மகேஷ் தான் மீதை தாத்தாவின் ஆசையை பூர்த்தி செய்தான். ராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.

மீசை தாத்தா ராணுவத்தில் இருந்ததால் உலக நீதியை அவர் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. எல்லா வேலைக்குமே தனது மில்ட்ரி கம்பீரத்துடனே பேசுவார், சிறு பிள்ளைகள் எல்லாம் இவரைப் பார்த்தால் போதும் பயந்து ஒடுவார்கள்..

விளையாட வேண்டிய நேரத்தில் தான் விளையாட வேண்டும், நீ விளையாடும் விளையாட்டு மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்குமேன்றால் அங்கே மீசை தாத்தாவின் குரல் கேக்கும். எல்லா பிள்ளைகளையும் விரட்டிவிடுவார்.. அதனாலையே சிறு பிள்ளைகளுக்கு அவருக்கு பயப்படுவார்கள்

மகேஷ் ராணுவத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் சென்றதும் மகேஷ்க்கு திருமணம் செய்துவைத்தார் மீசை தாத்தா..

மகேஷ் திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே மனைவியை அவனுடனே அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

திடீ­ரென மனைவி லட்சுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, அது பக்கவாத நோயாக மாறிப்போனது..

மீசை தாத்தா வின் மனம் நெடிந்துப் போனார். எல்லா நிலையிலும் வலுவாக நின்று மீசை தாத்தாவிற்கு நம்பிகையின் பலமாக இருந்தவள் லட்சுமி.

வயலில் உழைத்த கரங்கள், சேறு சகதியில் நின்ற கால் அல்லவா?. வயதாக ஆக தனது உடலின் பலத்தை கவனிக்காமல் விட்டு விட்டாள் லட்சுமி..

மனைவி லட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையும் கொடுத்தார். ஆனாலும் பலன் இல்லை. மீசை தாத்தா வின் குழந்தையாகவே மாறினாள் லட்சுமி..

தங்களது மூன்றாவது மகள் திவ்யாவிற்கும் திருமணம் செய்துவிட நினைத்தார்கள், அதன்படியே ராணுவ மாப்பிள்ளையே பார்த்து கட்டிக் கொடுத்துவிட்டார்.

மனைவி லட்சுமிக்கு மருத்துவ செலவுகள் மற்றும் மகளின் திருமணச் செலவு என்று தான் வாங்கும் பென்ஷன் பணத்தைக் கொண்டும் வங்கியில் லோன் வாங்கியும் திருமணத்தை நடத்திவிட்டார் மீசை தாத்தா..

பென்ஷன் பணம் வங்கியில் வாங்கிய லோன் பிடித்த தொகை மற்றும் வெளியே வாங்கிய கடன் போக… ரூபாய் மூன்றாயிரம் தான் மீசை தாத்தாவின் கைகளுக்கே வரும்.

அதிலும் லட்சுமி மருந்துச் செலவுக்கு தனியே ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு மீத பணத்தை மகன் சுரேஷிடம் கொடுத்துவிடுவார்.

மனைவி லட்சுமி படுத்தப் படுக்கையாக ஆன பின்னே, மீசை தாத்தாவும் நெலிவுற்றார். மனதில் சந்தோஷம் இல்லை, மனைவியின் கவலை அவரை வாட்டியது.

லட்சுமி வீட்டியியே மலம் சீறுநீர் கழிப்பதால் நாற்றம் அந்த வீட்டிலியே இருந்தது இதை சுரேஷால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவு நாள் தான் பொறுமையாக இருப்பான், அதிலும் மனைவி ஒரு பெண்குழந்தை வேறு. அம்மா இப்படி இருக்கிறாளே என்று மகன் அம்மாவின் நாற்றத்தை தாங்கிக் கொள்வான்… ஆனால் மனைவி குழந்தை, இந்த நாற்றத்தில் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் என்று தனியாக வாடகை வீட்டிற்கு சென்றான் சுரேஷ்.

மீசை தாத்தா மகன் மகள் இருந்து என்ன பயன் என்று, யாரையுமே நம்பாமல் தானே சாப்பாடு செய்து மனைவிக்கு ஊட்டி விடுவார். லட்சுமியை குளிக்க வைத்து மாற்றுத் துணிகளையும் போட்டுவிடுவது என்று குழந்தைப் போல் கவனித்தார்.

கம்பீரமாக இருந்த மீசை தாத்தா மிகவும் சோர்வாக போய்விட்டார். திடீ­ரென மனைவி லட்சுமியும் இறந்துவிடுகிறாள்…

மீசை தாத்தா என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கினார். எதற்கும் அஞ்சா மனம், பயப்படாத நெஞ்சம் என்று கம்பீரமாக இருந்த மீசை தாத்தா, மனைவியின் இறப்பை ஏற்க முடியாமல் கூனிக்குறுகித் தவித்துவிட்டார்.

எப்போதும் எந்த சுழ்நிலையிலும் எடுக்காத தனது மீசையைக் கூட மனைவியின் இறப்பில் எடுத்துவிட்டார்..

வான் மழையில் விளைந்த சோலக் கதிரடி, என் நெஞ்சில் புதைந்த கருப்பு சாறு நீயடி..
நாற்று நடவும் ஆளிருக்கு களைப்பிடுங்கவும் ஆளிருக்கு, இந்த மீசை மாமாவை பாத்துக் கொள்ள இனி யார் தான் இருக்கா…

உன் பாசத்தை எனக்கு அடகு வைத்து உன் தேகத்தை மண்ணிற்கு கொடுக்க சென்றாயோ, என் அன்பை மீட்டு தராமல் நீ எங்கே சென்றாயோ.

சிறிது காலம் பொறு லட்சுமி நானும் அறுவடையாவேன் என்று கதறி அழுதார் மீசை தாத்தா.

பின் மகள் மகன் பேரப் பிள்ளைகளோடு லட்சுமிக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார்கள்.

திவ்யா மற்றும் மகேஷ் இருவருமாக மீசை தாத்தாவிடம் ஐம்பதாயிரம் கொடுத்துவிட்டு சென்றார்கள் அதை பெரிய மகன் சுரேஷ்யிடம் கொடுத்துவிட்டார் மீசை தாத்தா..

லட்சுமியின் இறுதிச் செலவுகள் செய்தற்கான தொகையவை.பென்ஷன் வாங்கும் எடிஎம் கார்டையும் சுரேஷ்யிடம் கொடுத்துவிட்டார்..

ஒரு வேலை சாப்பாடுக்கு, அவரது மகன் கைகளையே எதிர் பார்த்தார்த்துக் கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டு போனார்.

திடீ­ரென சுரேஷ் வெளியுருக்கு குடும்பத்தாடு செல்ல முடிவெடுக்கிறான், மீசை தாத்தாவிடம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சொன்னான்:

நாங்க ஊருக்கு போய் விட்டு இரண்டு வாரத்தில் வந்துவிடுவோம், நீங்க அது வரை இந்த பணத்தை வைத்து செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள்..

உங்களுக்கு சாப்பாடு எல்லாத்தையும் ஒட்டலில் சொல்லிவிட்டேன். தினமும் நீங்கள் அங்கேயே போய் சாப்பிடுங்க, பணம் கேக்கமாட்டாங்க. நான் வந்ததும் ஒட்டலுக்கான பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..

மீசை தாத்தாவும் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவன் சொன்ன ஒட்டலில் சாப்பிட்டுவந்தார், இரண்டு வாரங்கள் சென்றது மகன் சுரேஷ் வரவில்லை..

மூன்றாவது வாரமும் சென்றது அப்போதும் வரவில்லை ஒட்டலில் சாப்பிட போனார் மீசை தாத்தா அங்கே ஒட்டல்காரன் மீசை தாத்தாவிற்கு சாப்பாடு தரவில்லை. ஏன் எனக்கு சாப்பாடு இல்லை என்று கேட்டார் மீசை தாத்தா.

அதற்கு ஒட்டல்காரன் உங்க புள்ள இந்த ஊருக்கே வரமாட்டான் மீசை.. அவனுக்கு வெளியுர்ல வேலைய மாத்திவிட்டாங்க. எங்கிடட இரண்டாயிரம் கொடுத்து உனக்கு மூனு வேலை சாப்பாடு போட சொன்னான்.. நானும் கொடுத்த பணத்தைவிட அதிகமாகவே உனக்கு சாப்பாடு போட்டேன், இப்போ நீ தான் எனக்கு ஆயிரம் ரூபா தரனும் என்றான்.

இதை எதிர்பார்க்காத மீசை தாத்தா அழுதுவிட்டார். அவரிடம் இருந்த பணத்தை அப்படியே அந்த ஒட்டல்காரனிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

சுரேஷ் மகேஷ்க்கு ஃபோன் செய்து, இனி என்னால் அப்பாவை பார்த்துக்கொள்ள முடியாது. என்னை வெளியூருக்கு மாற்றிவிட்டார்கள், எனக்கு அங்கு வேலை வீடு என செட்டான பின் அப்பாவை அழைத்துக் கொள்கிறேன். அதுவரையில் அவரை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

மகேஷ் அப்பாக்கு தான் பென்ஷன் வருகிறதே, அதை வைத்து அவர் கஷ்டம் இல்லாமல் வாழ போகிறார். நாமும் அவர் வங்கி கணக்கிற்கு பணம் போட்டுவிடலாம், அவர் அந்த பணத்தையும் வைத்து செலவு பார்த்துக்கிட்டும் என்று நினைத்துவிட்டான். ஊருக்கும் வராமல் பணத்தை மாதம் தவராமல் மீசை தாத்தாவின் வங்கி கணக்கிற்கு போட்டுக் கொண்டே இருந்தான்.

மீசை தாத்தாவின் வங்கி புத்தகம், எடிஎம் அட்டை எல்லாமே சுரேஷ் வைத்துக்கொண்டு மகேஷ் போடும் பணத்தையும் எடுத்து செலவு செய்தான்..

தாத்தாவை அனாதையாக தவிக்க விட்டார்கள்.

மீசை தாத்தா எதற்கும் கையெந்தாமல் நெஞ்சை நிமிர்த்தி நடத்த நாட்கள் சென்று மனக்கவலை வேதனையோடும் மனநிலை பாதிக்கப்பட்டு, உடலில் சிறிய கோமனத்தோடு ஒரு கிலாஸ் டீ க்கும் சாப்பாட்டுக்கும் கையெந்தி நின்றார்.

ஒரு கை ஓங்கிட ஒரு கை தாழ்ந்திடுவதே வாழ்க்கை..

மனம் மார் மனம் கேள் என அழுதாலும் கட்டினவன் தான் இறுதித் துணை, கட்டிக்கொண்டவன் தான் இறுதி காவலன்.

பெற்றது பிறவி குணம்..
கற்றது பிள்ளைகளின் மனம் ..
வென்றது காசு பணம் ..
விற்றது அப்பனையும் ஆத்தாலையும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *