கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,217 
 

1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி எட்டு மாத கருவை சுமக்கிறாள்..
அவளது வயிற்றில் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து தானும் சிறுவயதில் என் அன்னையின் வயிற்றில் இப்படி தான் செய்தனோ என்று நினைத்து மகிழ்ச்சியோடு ஆனந்தப்பட்டாள்..

செவ்வழகியின் கணவன் குறை சொல்ல முடியாத அழகன் …. உலகை ஆளும் இயற்கையைப் போன்று தான் மகனும் இவ்வுலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனது பெற்றோர்கள் இயற்வளன் என்று பெயரையும் வைத்தார்கள்.

இயற்வளன் மிகுந்த ஆடம்பரமாக வளர்ந்தவன், ஆனாலும் பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவனும்கூட..

நிலவளத்திலும். பொருள் வளத்திலும் எங்கும் புரலும் பணத்திலும் வசதிபடைத்தவன்.

இயற்வளனிடம் உதவி கேட்டு வருவோர்களின் நிலையை தானே நேரில் சென்று முழுமையாக தெரிந்துக் கொண்ட பின்னரே அவன் அவர்களுக்கு உதவுவான்.

தன் தாராளக் குணத்தை அறிந்தவர்கள் யாரும் தன்னை ஏமாற்றிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கொஞ்சம் கண்டிப்போடு நடந்துக்கொள்வான்.

உதவிக் கேட்டு வருபவர்களை எப்படி அரவணைப்பு செய்கிறானோ அதைவிட தனது மனைவிக்கு ஒரு குறையும் வைக்காமல் பார்த்துக் கொண்டான். அவர்களின் ஒருமையான தாம்பத்திய வாழ்வை பார்த்து ஊரே வியந்தது

செவ்வழகிற்கும் ஆண் குழந்தை பிறந்தது, இயற்வளனும் மனைவி செவ்வழகியும் மிகுந்த மகிழ்ச்சியில் திலைத்துப் போனார்கள்.. மகனுக்கு மதியழகன் என்று பெயர் வைத்தனர்

மதியழகன் பிறந்து ஐயிந்து வருடங்களில் இரு தம்பிகளையும் ஒரு தங்கச்சியையும் அவனுக்கு செவ்வழகியும்.. பெற்றுக் கொடுத்தாள்

ஜயிந்து பிள்ளைகளையும் இயற்வளன் நன்றாக படிக்க வைத்தான். இயற்வளன் தனது முதல் பிள்ளையான மதியழகனுக்கு திருமணமும் செய்து அவனுக்கு தன காணியில் விவசாயம் வைத்தார் மதியழகன் சற்று வித்தியாமான போக்கு உள்ளவன் . யாருக்கும் உதவி செய்யமாட்டான் அப்படி செய்தாலும் அது கடனாகவே செய்தான் அதை அப்படியே வட்டித் தொழிலாக பார்த்துக் கொண்டான்.

இரண்டாவது மகன் அன்பழகனை இயற்வளன் லண்டனில் படிக்க வைத்தான் இய அவன் அன்பழகன் அங்கேயே தங்கிவிட்டான்.

மூன்றாவது மகன் செவவழகன் தன்னோடு படித்த தன சாதிப் பெண் வடிவழகி காதலித்து தன் புகுந்தான்.

செவ்வழகியும் இயற்வளனின் கடைசி பெண் மதிழொழிக்கும் திருமணத்தை செய்துவிட நினைத்தார்கள். அதன் படியே திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது தான் செவ்வழகி தனது கணவன் இயற்வளனிடம் சொன்னாலள்.

“இன்னும் அவள் கல்லூரி படிப்பையே முடிக்கவில்லையே அதற்குள் அவளுக்கு திருமணத்துக்கு என்ன அவசரம்? மதிமொழியிடம் இதைப் பற்றி பேசினால் , அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று செவ்வழகி கணவனுக்கு சொல்லும் போது மதிமொழியும் வீட்டிற்குள் வருவாள் என அவர்கள் எதிர்பர்க்கவிள்லை .

செவ்வழகி, மதிமொழியிடம் தான் கணவனுக்கு சொன்னதை சொன்னாள். இதை சற்றும் எதிர்ப்பாகாத மதிமொழி சிறிது நேரம் பேசாமல் இருந்து பின் செவ்வழகியிடம்
அம்மா எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் அப்படி நான் திருமணம் செய்துக்கொள்ள தான் ஆக வேண்டுமென்றால் நான் ஒருவனை காதலிக்கிறேன்..அவனையே திருமணம் செய்ய விரும்புகிறேன் நீங்கள் என்னை என் காதலனுடன் சேர்த்துவையுங்கள் இல்லையென்றால் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதிமொழி. அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்

இதைக் கேட்ட இயற்வளனின் முகம் மாறியது.

இதை பார்த்த செவ்வழகி கோபத்தோடும் கொஞ்ச அச்சத்தோடும் ஏய் மதிமொழி நில்லடி நீயும் உன் அண்ணணைப் போலவே தவறு செய்கிறாயா… என்பறபடி மதிமொழியின் பின்னாடியே சென்று படிக்கும் போதே உனக்கேன்ன காதல் வேண்டிக் கேடக்கு என்று திட்டி தீர்த்தாள்..

பின் சற்று சிந்தித்து விட்டு, செவ்வழகி இயற்வளனிடம் சென்று “ நீங்கள் நமது மூன்றாவது மகனுக்கு எப்படி செய்தீர்களோ அப்படியே இவளுக்கும் செய்து முடித்து விடுங்களேன்” என்றாள் செவ்வழகி

பின் இயற்வளன் ம்ம்ம்ம்ம்………!!!!!! சரி செவ்வழகி நீ போய் மதிழொழியை அழைத்துவா… அவள் யாரை விரும்புகிறாள் அவனது விவரங்களை நாம் தெரிந்துக் கொள்வோம் பின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடலாம் என்றான்.

செவ்வழகியும் மதிழொழியை அழைத்து வந்தாள்..

மதிமொழி இயற்வளனை பார்த்ததுமே அவனது காலில் விழுந்து “என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா”.. என்றாள்.
அதற்கு இயற்வளன் “ சரி விடு நீ விரும்பும் பையன் யார் எந்த ஊர் என்ற முழு விவரங்களை கேட்ககத் தொடாங்கினான்.

அதற்கு மதிமொழி “ நான் படித்த கல்லூரியில் தான் அவனும் படித்தான் இப்போது ஒரு நல்ல வேலையிலும் இருக்கிறான். அவனது குடும்பம் நிலை நடுத்தரமானது ஆனால் அவர்கள் நம் சமூகம் இல்லை அதுதான் இப்போது இருக்கும் ஒரே பிரச்சினைப்பா..
உங்கள் சம்மதம் எனக்கு தேவை அப்பா… நீங்கள் அண்ணாவின் காதலை சேர்த்து வைத்ததைப்போன்று என் காதலையும் சேர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது இதை பற்றி என் கல்லூரி படிப்பு முடித்த பின் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன் ஆனால் நீங்களே தற்போது கேட்டுவிட்டிற்கள் என்றாள் மதிமொழி.
..

இதை கேட்ட இயற்வளன் தனது மகள் என்று பாராது அவளது கண்ணத்தில் இரண்டு மூன்று அறை விட்டான்….. “ நீ காதல் செய்தது தவறில்லை…. ஆனால் நம் சமூகத்தில் இருக்கும் நபரையை நீ காதலித்திருந்தால் நானே உனக்கு முன்னிருந்து உன் திருமணத்தை நடத்தி வைத்திருப்பேன். ஆனால் நீ அதை செய்ய வில்லையே அவன் வேறு சமூகம் என்று தெரிந்தபின்னும் எதற்கு நீ அவனையே காதலித்தாய் நான் அவனுக்கு உன்னை தரமாட்டேன் நீ அவனை மறப்பது தான் நல்லது “ என்றான் இயற்வளன்.

ஆனாலும் இயற்வளன் தனது மகள் வாழ்க்கை மீது மிகுந்த அக்கறைக் கொண்டுயிருந்தான் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.. இது எல்லா தந்தைகளிடம் இருக்கும் இயல்பு.

பின் மதிமொழியின் காதலைனை பற்றி விசாரணை செய்தான்

நல்ல பையன் தான் ஆனால் அவனது குடும்பத்தில் நிலைமை அவ்வளவாக சரியில்லை அதுவுமில்லாமல் வேறு சமூகத்தினரும் கூட இப்படி இருக்கும் போது எப்படி நான் நமது மகளை அவனுக்கு தர முடியும். அதிலும் என் மகள் செல்வாக்குடன் வளர்ந்தவள் எதுவுமில்லாத வீட்டில் அவள் எப்படி இருப்பாள் என்ற எண்ணத்தில் குழப்பிக் கிடந்தான்.

அதே சமயம் சொந்தங்கள் ஊர்மக்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தில் இயற்வளன் மகளின் ஆசையை நிறைவேற்ற தயங்கினான்.

செவ்வழகிக்கும் தனது கணவன் மீது முழு நம்பிக்கையொடு இருந்தால் எப்படியும் மதிமொழி ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்துவிடும் என்று.

என் கணவன் எல்லாவற்றையும் நன்றாகவே செய்துவிடுவார் நமது மூன்றாவது மருமகள் கூட வேறு சமூக பெண் தானே அதைப்பற்றி எதுவும் நினைக்காமல் அவர்களை சேர்த்து வைத்தவர் தானே அதைப் போன்றே மதிமொழியையும் சேர்த்துவிடுவார் என்று நினைத்தால் செவ்வழகி.

இயற்வளன் மகளின் காதலனின் வீட்டை பற்றியும் அவனது சமூகத்தைப் பற்றியும் விசாரித்த தகவல்களை செவ்வழகி யிடம் சொல்லிய கையொடு
அவன் நம் குடும்பத்திற்கு வோண்டாம் செவ்வழகி இதான் என் இறுதி முடிவும் என்றான்.

அத்துடன் பேச்சை நிறுத்தாமல் நீ தான் நமது மகளின் மனதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத செவ்வழகி அழுதால் என்ன பேசுவது கேட்பது என்று தெரியாமல் அவளின் அறைக்கு சென்றுவிட்டால்…

இயற்வளன் நேராக மதிழொழியின் அறைக்கு சென்று.. பேசினான் நீ காதலிப்பது நம்மை தவிற வேறு யாருக்குமே தெரியாது இல்லையா.. நடந்தவற்றை நீ மறந்துவிடு நாங்கள் இப்பொழுதே வேறொரு மாப்பிள்ளையை பார்த்து உனக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைக்கிறோம் என்றான்..

மதிமொழியோ அதற்கு அப்பா நீங்கள் சொல்வது சரியா…?

அவன் சமூகம் வேறு என்பதால் என் மனதை மாற்ற நினைக்கிறீர்களா.. சமுக மாற்றத்திற்கு தடையாக இருக்கும் சொந்தமும் அவர்களது வாழ்க்கையின் நெறிமுறைகளை நினைத்து என் மனதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்
நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள் ஆனால் நீங்கள் வாழ்ந்த காலம் வேறு தற்பொழுது இருக்கும் எங்களின் காலம் வேறு என்றால்

மதிமொழி சொல்லிய வார்த்தையை கேட்ட இயற்வளன் கட்டளையாகவே சொல்லிவிட்டான் அவனுக்கு உன்னை தரமாட்டேன்.
நீ என்னை எப்படி நினைத்தாலும் பரவாயில்லை இதான் என் இறுதி முடிவு என்றான்.

மதிமொழி எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தால்.

2012 தை மாதத்தில் திருமண நாள் வருகிறது அதை வெகு விமர்சையாக நடத்த திட்டம் போட்டான் இயற்வளன்.

இந்த திருமணநாள் வந்தால் தனது திருமண் வாழ்வு நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் முடிவு பெறும் என்று மனதில் நினைத்துக்கொண்டே யிருந்தான்.

மறுநாள் காலை மதிமொழி இயற்வளனை பார்த்து அப்பா எனது வாழ்க்கையைவிட உங்களது கெளரவம் தான் முக்கியம் என்றால் நீங்கள் சொல்வதையே நான் கேட்கிறேன்பா இனி எல்லாம் உங்கள் விருப்பம் தான் என்றாள்.

மதிமொழி சொல்லிய மூன்றே வாரங்களிளே இயற்வளன் அவனின் சமூகத்திலே ஒரு பையனை பார்த்து திருமணத்தையும் நடத்திவைத்தார் .

திருமணம் நடந்து முடிந்து மறுநாள் காலையில் எப்பொழதும் வீட்டை சுறுசுறுப்பாகா அலங்கரித்து சுற்றும் செவ்வழகியை இன்னும் காணவில்லையே என்று இயற்வளன் செவ்வழகியின் அறைக்கு சென்று பார்த்தான் ஆனால் அறையில் மனைவி செவ்வழகி இல்லை.

அன்றைய நாள் முழுவதும் செவ்வழகியை தேடினான் ஆனால் செவ்வழகி கிடைக்கவில்லை என்றதும் மன வேதனைப்பட்டான் காவல் துறையிலும் புகார் கொடுத்து செவ்வழகியை தேட வைத்தான்

செவ்வழகியை திருமணம் செய்துக்கொண்ட நாள் முதல் இன்று வரையிலும் இயற்வளனை பிரிந்ததே இல்லை அப்படிப்பட்ட செவ்வழகி கணவனை விட்டு பிரிந்தால்.

இயற்வளன் செவ்வழகி அவர்களின் திருமணநாளும் வருகிறது அந்நாளில் தான் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டிய திருமணநாளை பெரிய அதிர்ச்சியில் கடக்க வேண்டிய நாளகவே மாறியமைத்தால் செவ்வழகி..

ஆம் அன்று தான் செவ்வழகியிடம் இருந்து விவாகரத்து கேட்டு இயற்வளனுக்கு வக்கீல் மூலம் மனுவும் அதனுடன் ஒர் கடிதமும் அனுப்பியிருந்தால்.

அதை பார்த்து படித்த பின் இயற்வளன்
அழுதான்

அந்த கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் யாதென்றால்…

இவ்வளவு நாட்கள் என் கணவர் எல்லா சமூகம் ஒன்றுதான் என்று நினைத்தார் போலும் என்றே நான் எண்ணிணேன் ஆனால் அது தவறு என்பதை எனக்கு தெரியவைத்து விட்டீர்கள்… இங்கு யாரும் சமமானவர்கள் இல்லை என்பதை உங்கள் மூலம் நான் உணர்ந்து கொண்டேன்.

இந்த சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் இந்த சமூகத்தையும் மக்களையும்
எதிர்பார்க்கக்கூடாது அதை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்தவே இந்த பிரிவு.

இவ்வளவு நாட்கள் நீங்கள் ஏற்றதாழ்வு சாதி மதம் பார்க்காமல் தான் உதவிகளை செய்தீர்கள் என்று எண்ணிணேன் ஆனால் உதவி என்று உங்களை கேட்டு வரும் மக்கள் நமது சமுகமாக இருக்க வேண்டும் அதன் பின் தான் அவர்களுக்கு உதவிகளை செய்தீர்கள் என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிந்தது.

நீங்கள் நமது சமூகத்தினர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும் வகையில் தான் அமைந்தது நமது மூன்றாவது மகனின் திருமணம்.

மகனின் காதலை நீங்கள் ஏதற்கு ஏற்றுக் கொண்டீர்கள்…?
மகன் நம் சமூகம் அவன் நினைத்த பெண்ணையே திருமணம் செய்தாலும் அவள் நமது சமூகத்திற்கு மாறிவிடுவாள் என்ற எண்ணத்தில் தான் அவனது திருமணத்தையே நடத்தினர்கள்.

அதுமட்டும் இல்லாமல் நமது மருமகளின் குடும்பதார்கள் யாருமே நம் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லியதாலே தான் நமது மூன்றாவது மகன் மருமகளின் வீட்டிற்கே மகனாகவே சென்றுவிட்டான் என்பதை நீங்கள் இன்றுவரையிலும் உணர வில்லையா அல்லது தெரியவில்லையா? என்றே எனக்கு புரியவில்லை₹

தற்பொழுது நமது மகள் மதிமொழி அவளின் காதலனையே திருமணம் செய்தால் அவள் நம் சமூகத்திலிருந்து அவளின் கணவன் சமூகத்திற்கு மாறிவிடுவாளே…? அப்படி அவள் மாறிவிட்டால் உங்களின் கெளரவம் ஊர் மக்கள் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சத்திலும் தான் நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.

நீங்கள் நினைக்கலாம் நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் கழித்து இவள் ஏன் இப்படி பேசுகிறாளோ என்று.

நீங்களாகவே உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று தான் இவ்வளவு நாள் காத்துக் கிடந்தேன் ஆனால் நீங்கள் என்னை இப்படி பேச வைத்துவிட்டிற்கள்

காலம் மாறிக் கொண்டே செல்கிறது அதை உணர்ந்துக் கொள்ளுங்கள் நமது நான்கு பிள்ளைகளும் எனக்கு நான்கு தலைமுறைகளை பார்த்த அனுபவங்களை தந்துவிட்டார்கள் காலமும் மக்களும் மாறியுள்ளார்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

என் சாதி என் மதம் என்று
பார்ப்பவர்களால் தான் இன்னமும் இந்த சமூகம் பிரித்துக் கொண்டே போகிறது.

நீங்கள் நம் சமூகத்தை மட்டுமே பார்த்தீர்களே தவிற மகளின் மனதையல்ல.. அவள் காண்பித்த பையன் நல்லவன் என்றீர்கள் ஆனாலும் அவனை வேண்டாம் என்று சொல்ல காரணம் என்ன.?

சாதி என்கின்ற மனமே அதற்கு காரணமாக உள்ளது இதை மாற்றவே இந்த முடிவு.

நம் ஊரில் நம்மை விட வசதியாக யாருமில்லை ஆகையால் தான் சமூக மாற்றத்தை உங்களிடமிருந்தே தொடங்க வேண்டுமென்ற எண்ணத்தில் நான் உங்களிடமிருந்து பிரிவை கேட்கிறேன்.

பாகுபாடுகள் வேண்டும் தான் ஆனால் சாதி மதம் என்பது வேண்டாம் நல்லவர்கள் கேட்டவர்கள் என்ற பாகுப்பாடு ஒன்றே போதுமானது..

நீங்கள் மனம் மாறினால் ஒரு பாதி சமுதாயம் மாற இது ஒரு பெரிய வாய்ப்பு இதை புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இனி என் பயணம் சமுதாய மாற்றத்திற்கான வழிகளாகவே இருக்கும். நீங்கள் மனம் மாறி இந்த சமுதாயத்தில் சமூகத்தின் நெறிமுறைகளில் மாற்றத்தை உருவாக்க பாடுப்படுங்கள்.

நீங்கள் மனம் மாறினாலும்
இனி நான் உங்களுடன் வாழ போவதாகயில்லை.

இவ்வளவு நாட்களாக நான் அமைதியாக இருந்துவிட்டேன் இனியும் அப்படி என்னால் இருக்க முடியாது.
நீங்கள் செய்த தவறுக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்கள் தவறென்ன என்பதை நான் சூட்டிக் காட்டாமல் விட்டதும் நீங்கள் செய்வது தான் சரி என்றும்.

மனைவி என்பவள் உங்களின் பேச்சுக்கு அடிமை என்ற மன வினையால் தான் தற்போது நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்துக் கொண்டடேன்.

காலம் எப்படி மாறியுள்ளது என்பதை காட்டவும் மனைவி என்பவள் ஒரு பாட புத்தகமாக இருக்கிறால் என்பதை என் பிரிவால் உங்களுக்கு உணர்த்தவே இந்த விவாகரத்து.

இதில் நிச்சயமாக நீங்கள் கையெழுத்து போட வேண்டும்.

இப்படிக்கு
உங்கள் மனைவி செவ்வழகி

என்று எழுதி வைத்திருந்தால் செவ்வழி.

நன்றி

திருமதி ஜெ லாவண்யா ஜெகன்நாதன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *