கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2014
பார்வையிட்டோர்: 6,194 
 

கனடாவில்,ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரஜைகளில் ஒருத்தன் பாபு.கொழும்பு வாசியாகவே சிறு வயதிலிருந்து வளர்ந்தபடியால் .. சிங்களமும், ஆங்கிலமும் அவனுக்கு சரளமாக வந்தன.சிறிலங்கா அரசு இனத்துவேசக் கொள்கைகளை நெடுகவே வைத்திருக்க வெளிக்கிட்டதால்..கொழும்பில் நிரந்தரமாக காலூன்றலில் அதிருப்தியுற்று,சிறுக சிறுக வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கிய குடும்பங்களில்,லண்டனுக்கு வந்தவன் பாபு.லண்டனில் அவன் அண்ணர் சந்துரு,படிக்க வந்த இடத்தில் ஒரு வெள்ளைப் பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து,அங்கேயே தங்கிவிட்டிருந்தவன்.அவன் தான் பாபுவை லண்டனுக்கு எடுப்பித்தவர்.ஒரளவு படித்து அவன் ..தன் காலிலே,சமரியாக நண்பர்களுடன் நிற்க வெளிக்கிட்டப் போது ..அண்ணர், சந்தோசத்துடன் விலக அனுமதித்தான்.வெளிநாடுகளில் அப்படியிருப்பது தான் பொதுவான வழக்கம்.நல்லதும் கூட.அங்கே நம் ஊர்ப் போல நிலவரங்கள் கிடையாது.நம் சிறு கிராமத்திலோ… பரந்த நிலப்பரப்பில் சாதிக்கொரு சனசமூக நிலையம், வாசிகசாலை, கோயில்..ஏன் பாடசாலைகள் கூட எழுப்பி 1008 அரசியல் பேசி வாழ்வோம். சாதிமாறி சாதியில் எந்த சடங்குகளும் நடத்த அனுமதியோம். மூர்க்கமாக- நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பைலோக்களுடன்..எதிர்ப்போம்.அல்லது வெட்டுக் கொத்து.. கொலை என எல்லாம் அரங்கேறும்.சிறிலங்கா அரசுக்கு தமிழன் சாகிறதில் விருப்பம் கூட.எனவே,சமூகநல மேம்பாட்டுத்திட்டங்கள் வகுக்காமல்..1000-1000 ஆண்டுகளாக.. அம்முறைகளே அழியாது செழித்துக் கிடக்கின்றன. பாபு,அடிக்கடி நண்பர்களுடன்”டேய், இங்கே ஒரு கைரைஸ் கட்டிடத்தில் 29-30 மாடிகளில்,எங்க கிராமத்து மக்களையே குடியமர்த்தி விடலாம்.அங்கே..இருக்கிற கிராமப் பரப்பிலே இங்கே,1008 கைரைஸ் கட்டிடங்களை கட்டி, வட பகுதி மக்களையே குடியேற்றி விடலாமடா”என்பான்.”இந்த விசயம் தெரியாமல் சிங்கள அரசு, தமிழன்ற இடங்களை எல்லாம் பிடிக்கிறாங்கடா. அவங்க பகுதியிலே இருக்கிற நிலப்பரப்பு அவயள்க்கு போதியளவுக்கு மேலே இருக்கிறது.” என்பான்.உண்மை தான்.நீர் வளம்,நிலவளம் கொட்டிக் கிடக்கிற நம் நாட்டில் மனிதர்கள் புத்திசாலித் தனமற்றவர்களாக இருக்கிறார்கள்.”அதன் பலனாக நாமெல்லாம்பஞ்சப் பாடையர்களாக வெளிநாடுகளில் அலைய வேண்டிக்கிடக்கிறது”. என்பான்.ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது..அரசியல் மட்டுமில்லை,அவ்விடத்து மக்களின் புத்திசாலித்தனமற்ற தன்மையும் தான்.லண்டனில்,பாபு கனகாலம் தரித்து நிற்க முடியவில்லை.சந்துரு,அவ்விடத்துப் பெண்ணைக் கட்டியதால்..கரைச்சல்கள் இருக்கவில்லை. ஆனால்,பாபுவுக்கு நிறைய அலுப்புகளைக் கொடுத்தது.”கனடா பராவாய்யில்லையடா” என்றனர் நண்பர்கள்.பயண முகவர்களின் சமார்த்தியத்தால்.. மொன்றியலூடாக..கனடா வந்து சேர்ந்தான்.அவனுடைய படிப்பின் தகமையை விட.. ஆங்கிலம் சரளமாக பேசுற ,எழுதுற தன்மையால்..வங்கி ஒன்றில்..நல்ல வேலையிலும் கொளுவி விட்டிருந்தான்.பணம் சேர்க்கணும்,நல்லபடி வாழணும்..என்ற அவா அவனுக்கிருந்தது.நம் நாட்டில்,குடும்பத்தில் பாதுகாப்பும்,மகிழ்ச்சியும் நிலவ.. கணிசமான உழைப்பு இருந்தாலே போதும்.ஆனால்,இங்கே அப்படி கிடையாது.நல்ல தண்ணீர்..கிடைக்க வேண்டும் என்றால்..பணத்தைக் கொட்ட வேணும்.எந்த சிறு செயலைச் செய்தாலும்..செலவில்லாமல்..செய்ய முடியாது.1008 சிறு சிறு சாமான்கள்.. ,கருவிகள் …வியாபாரத் தந்திரத்துடன் சிறுக மெருகூட்டப்பட்டு..புதிசாய் வருவது போல இங்குள்ள கடைகளில் விற்பனைக்கு நாளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே,பொதுவாக..எவருக்கும் நிறைய பணம் தேவையாய் இருக்கிறது போல ஒரு பதற்றம் மனசிலே படிந்து கிடக்கும்.எனவே,ஒரு வேலையோடு திருப்தியடைய அவர்கள் 2-3 வேலை..என்று அடிப்பார்கள்.குடும்ப சந்தோசங்கள் எல்லாம் நிறையத் தொலைக்கப்பட்டு..சிறுக மூச்சு விடுற போது..,சிறு வயதிலே கிழவராகி விட்ட ஆயாசம் பலர்க்கு தட்டும்.வெளிநாட்டுத் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்பவர்களில்லை.அக்கரைக்கு இக்கரைப் பச்சை.அங்கேயிருப்பவர்கள் இவர்களை குபேரர்களாக நினைக்கிறார்கள்.விதி யாரைத் தான் விடுகிறது.நிறைய மாயத் தோற்றங்களை நம்மவர்கள் மத்தியில் நிலவ வைத்து விட்டிருக்கின்றன.பொதுவாக, வெளிநாட்டுத் தமிழர்கள்சிறிலங்காவின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய வல்லமை புலிகள் இயக்கத்திடமே இருப்பதாக நம்புகிறார்கள்.அவ்வியக்கம்,நடைமுறையில் எப்படியான கொள்கைகளை வைத்திருந்தாலும் கூட..’அந்த நம்பிக்கையை ஏற்படுத்துதில் வெற்றி பெற்றிருக்கிறது.’ பாபுவும் கதைக்கிற போது..புலிக்காரன் தான்.அவனுக்கு, தனிப்பட்ட சிங்களவரோ..மக்களோ எதிரியாகத் தெரிவதில்லை. சரளமாக சிங்களம் பேசக் கூடியதால்..நிறைய சிங்கள நண்பர்களும் இருந்தார்கள்.சமரி லைவ்வாக..ஒரு சிங்களவருடன் தான் அவனே தங்கி இருக்கிறான்.அரசியல் பேச்சில்,புலியைப் பற்றி பேச்சு வந்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டான்.அவர்களுக்கு சிறிலங்கா அரசு, ‘தமிழர்கள் மீது பிழையானக் கொள்கைகளை வைத்திருக்கிறார்கள்..’என்பது தெரியும்.எனவே,அரசு சார்ப்பானவர்களாக நின்று வாதிடுவதில்லை.தவிர,பாபுவையும் அவர்களுக்கு நல்லாவே தெரியும்.பழக நல்லவன்,முஸ்பாத்திக்காரன்..’சிங்களவன் என்று ’யாரும் மிண்ட வெளிக்கிட்டால்,புலிப் பேச்சுக்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு..பிரச்சனை எழ விட மாட்டான்.”இங்கே வந்து நீ, சிங்களவன்,தமிழன் என்றில்லை..!எல்லாரும் ஒரே விதமானக் கஸ்டங்களை அனுபவிக்கிற மனிதர்கள்.அவ்வளவு தான்”என்பான்.

“ஒரு கொலை ..9.. கொலையை உருவாக்கும்.எனவே,சிங்களஅரசாங்கம் கலவரங்களில் செய்யிற கொலைகளுக்காக..மாற்றுக் கொலை நடவடிக்கைகளில் தமிழர்கள் இறங்கக் கூடாது.அது அப்படியே பெருகி பெருகியே புற்று நோய்யைப் போல சிறிலங்கா முழுதையுமே சுடுகாடாக மாற்றி விடும்.காந்தியைப் போல..தமிழர்கள் பொறுமை காக்க வேண்டும்”என்பார்கள்.”முதலில்,’சிறிலங்கா அரசு நடத்துற கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்’ அதை எப்படி??? செய்யிறது என்று எங்களுக்குத் தெரியாது..ஆனால் கொலைக்கு கொலையே மாற்றுத் தீர்வாகாது.”என்றே அவனுடன் வாதாடுவார்கள் .அவர்களுடைய வாதமும் சரி தான்.ஆனால்,சிறிலங்கா அரசை தட்டிக் கேட்கக் கூடிய வல்லமையுடைய ஒரு அமைப்பு எழ வேண்டுமே, ஏன்அந்த அமைப்பாக புலிகள் விளங்க கூடாது?,குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுப்படுத்தப் பட்ட வன்முறை தவிர்க்க முடியாதது.கலவரம் செய்யக் கூடியதான கதவுகள் எல்லாம் சிறிலங்காவிற்கும் அடைப்பட்டு விடவேண்டும்.அதற்கு பலமான சீர்திருத்தம் வேண்டும்.அதை புலிகளுடன் பேசி …செய்யப்பட்டு விட வேண்டும்.அந்த முயற்சி தான்..இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள்”என்று அவன் விட்டுக் கொடாமல் பேசுவான்.”மட்டுப்படுத்தப் பட்ட வன்முறைகள்..நல்ல வார்த்தை”என்று அவர்கள் சிரிப்பார்கள்.அவர்களும் ஒரு தீர்வு வர வேண்டுமென்றே விரும்பினார்கள்.

சிங்கள நண்பர்களுடன் போய் வந்து பழகின போது,காமினியின் தங்கச்சியான சுகுணாவை அவன் விரும்பத் தொடங்கியிருந்தான்.காமினிக்கு அது தெரியாது.சுமணாவிற்கும் அவனைப் பிடித்திருந்தது.அவன்¢டம் இருக்கிற முஸ்பாத்தித்தனம் யாருக்குத் தான் பிடிக்காது.காமினிக்கு தெரிய வந்த போது ..கட்டிக்கொடுக்க விருப்பமில்லாதிருந்தது.மனதுக்குள் ‘அவன் ஒரு கொட்டியா’என்ற நினைப்பே’அவனுள் படிந்திருந்தது.மற்றய அவளுடைய மச்சான்மார்களான சிங்கள நண்பர்களுக்கோ ..விருப்பமாகவேயிருந்தது.10-15 வருசமாக சேர்ந்து வாழ்ந்திருந்த அவர்கள் அவனையும் தங்களில் ஒருத்தனாவே ஏற்றிருந்தார்கள்.எதையும் எவரும் பேசலாம், ஆய்வுப்படுத்தலாம், பேச்சுத் சுதந்திரம் அது.அபிப்பிராயம் தெரிவிப்பதற்கெல்லாம் புலிச்சாயமோ,சிங்கள அரசின் சாயமோ பூசக் கூடாது.அவை வெறும் அபிப்பிராயங்கள் மட்டும் தான்.தெளிவான அரசியல் தீர்வுகள் இல்லாத பட்சத்தில் 1008 அபிப்பிராயங்கள் எழத் தான் செய்யும் என்பதை அறிவார்கள்.அவர்கள் காமினியை சம்மதிக்க வைக்க முயன்றார்கள். காமினி”கொட்டியா..கொட்டியா”என்று பிடிவாதமாகவே மறுத்து நின்றான்.”பேசி சரி வராது,2 பேரும் ஓடி பதிவுத் திருமணம் செய்யுங்கள்.சுமுணா தரப்பில் எங்களில் ஒருத்தன் சாட்சியாக இருப்பான்,உங்களில் ஒருத்தனும் கட்டாயம் வேணும் பாபு”என்று சொன்னார்கள்.பாபு “மச்சியின் புருசன் திவாகரை கூட்டி வர முடியும்”என்றான்.திவாகர் வீட்டில் பதிவுத் திருமணத்தை சிறிது கலலப்பாக செய்தார்கள்.சில சிங்கள நண்பர்கள் வரவில்லை தான்.ஆனால்,மற்றய சிங்கள நண்பர்கள் வந்து அந்த குறையை நிறைவு செய்தார்கள்.மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை தொடங்கியது.’மெணி¢க்கா’பிறந்த பிறகு,காமினியின் கோபம் கரைந்து..விட்டது.பாபுவின்..பிராயாசை..,வீடு வாங்கி நல்ல மாதிரி இருந்தது எல்லாம்..அவனுக்கு மனநிறைவைத் தந்தன.பழையபடி நட்பு துளிர் விடத் தொடங்கியது”இப்படி 2 வேலை ..என பணம் சம்பாதிப்பதிலே மூழ்கிப் போறது.. பிழை!”என்று சொல்லி,”பாபு,ஒரு தடவை யாழ்ப்பாணம் போய்..வா.உனக்கும் நல்லாய் இருக்கும்.உன் அம்மா,சகோதரங்களுக்கும் சந்தோசமாகவிருக்கும்”என்று காமினியே புத்தி கூறினான்.”மெனிக்காவிற்கு கொஞ்சம் பணத்தை சேர்த்து விட்டு போவோம்”என்ற போது காமினியின் மனதுக்குள் கண்ணீர் வடிந்தது.காமினியின் குடும்பம்..நாட்டில்,சிறிது தீவிர வாதக் குடும்பம்.எனவே,குடும்ப சகிதர்களாக போய் இறங்குவது நல்லதாகவிருக்காது.. எனப் பட்டது.சுகுணாவையும்,மெனிக்காவையும் காமினியோடு போய் வரச் செய்தான். சுகுணாவிற்கு அது பெரும் மன நிறைவைத் தந்தது.மெனிக்கா,பாபுவின் சாயலுடன் கூடய அழகானப் பெண்.குடும்பத்தாருக்கு அவளை நிறையப் பிடித்திருந்தது.சிறிலங்கா அரசு..தெளிவான..நியாயமான சமாதானத் தீர்வுகளை மேற்கொள்ளுமானால் எதிர்காலத்தில்,அவர்களில் ஒருத்தனாக அங்கே போய்..பிழங்கி வர முடியும்.இல்லாத் பட்சத்தில்..அயலிலோ..அல்லது உறவிலோ..”கொட்டியா”என்றே இனம் காட்டப்படுறதே நடக்கலாம். காலகாலமாக தமிழர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிற போது,பாவம்!, கனடிய அப்பாவிச் சிங்களவர்களின் கனவுகள் ..ஈடேறக் கூடியவையா?.காலம் தான் பதில் செல்ல வேண்டும். ரொராண்ரோ பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களை பெருமளவு விகிதத்தில் கொண்டுள்ள ஒரு நகரம்.அடிப்படை வாத அரசியல் கட்சிகளால் அங்கே ஆதரவைப் பெற முடிவதில்லை. வந்தவர்களிலும்,நல்லவை தீயவை..என்ற பிரிவுகள் காணப்பட்டன. தீயவையில்,பணம் பண்ணுவதில் பதற்றமுடையவர்களாக இருந்தார்கள்.கனடிய அரசியல் கட்சிகள் ..பிரித்தானியா,அமெரிக்காவிலிருந்து அனுபவங்களைப் பெறுகிறவர்கள்.அவர்களுக்கு..ஆடிற மாட்டை ஆடிக் கறக்கத் தெரியும்.எனவே,எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறார்களோ..அவ்வளவுக்கு அவர்களிடமிருந்து கறக்கிற வழிமுறைளை வைத்திருந்தார்கள்.ரொராண்ரா நகரத்தில் வாழ்க்கைச்செலவு..உழைக்கிறதை விட கூட! என்பதிலிருந்து..இதை..விளங்கிக் கொள்ள முடியும்.வாழ்க்கையின் இறுக்கத்தை தள்ர்த்துவதற்காக,வருசா வருசம் கோடைகாலங்களில் கடற்கரை(இங்கே கடற்கரை எங்கே இருக்கிறது?)- குளக்கரைகள்.. அங்கே..இங்கே என்று..ஒரிரு நாட்கள் நண்பர்கள்,அவர்கள் குடும்பமாக.. ஊர் உலாத்தி வருவார்கள்.வெள்ளையர் டூரிஸ்ட்டாக..கிளம்பி விடுவார்கள்.பாபுவுடன் சிங்களவர்களும் வருவார்கள். .தொக்கையும்,உருளையுமான அவனின் தோற்றம்..பொதுவாக வெளிநாடு வாரவர்கள் பெறுகிற உருவம் தான்.போதியளவு நேர்த்தியான உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லாதபடியால் சிறிது சளசளத்துப்போன உடம்பு. சிறுவர்களுக்கு அவன் உருவமே சிரிப்பை மூட்டும்;பெரியவர்களுக்கு முஸ்பாத்திக் காரன் என்ற நினைப்பையே ஏற்படுத்தும்.பாபு,கையில் தண்ணிக் கிளாசை வைத்துக் கொண்டு கலகலப்பை மூட்டுவான்.தண்ணிக் கிளாசைப் பறிப்பதற்காக பல தடவை சுகுணா அவனை விட்டு துரத்துவாள்.அவன் கிளித்தட்டு விளையாடுறது போல அந்த வெறியிலும் பிடி படாமல் ஓட்டம் காட்டுவான்.மேசையில் ஏறி டான்ஸ் ஆடுறளவுக்கு கலகலப்பை ஏற்படுத்தி விடுவான்.சந்திரா மச்சி சொல்லி விட்டார் என்பதற்காக.. திவாகரை குடிக்க விடாமல்..தடுத்து,அவ்னுடைய கிளாசை தான் பறித்துக் குடிப்பான்.சந்திராவும்,சுகுணாவும் இருவரையும் துரத்த வேண்டியிருக்கும்.மணலிலே புரள்வான்.தண்ணீரிலே இறங்கி விடுவான்.அவனுக்கு நீச்சல் சரி வராது. “எல்லோரும் நீந்திப் பழக வேண்டும்.பொம்பிள்ளைகள் எல்லாம் லேக்குக்குள்ளே இறங்கலாம்” கத்துவான்.”முதலிலே,நீ நீந்துவாயா?”சந்திரா கேட்க சிரிப்பான்.”நீந்திப் பழகிட்டு ..நீந்திக் காட்டு..அப்புறம் எங்களுக்கும் தண்ணீரிலே இறங்கினா..நீந்தலாம்..என்ற நம்பிக்கை வரும்”சுகுணா சொல்லுவாள்.இலங்கைக் கடற்கரையில்,பொம்பிள்ளைகள் ..இறங்காமல்..சிப்பி,கிழிஞ்சல்கள் பொறுக்கித் திரிவது போல..இங்கேயும் திரிகிறார்கள். ”அட எப்படியோ போங்கள்..என்ர மகள் நீந்துவாள்”மெணிக்காவிற்கு நீந்தப் பழக்குவான்.நீந்தத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.அவர்களிடமிருந்து டிப்ஸ்ஸை பெற்று..பழக்க..மெணிக்காவும்,திவாகரின் பிள்ளைகளும் சிறிதளவு நீந்தப் பிடித்தார்கள். திரும்பிற போது ‘வெறியில் கார் ஓடக்கூடாது’ என்று சட்டம் இருந்தாலும்..நன்கு ஓட வல்லவன்.அடிப்படையில் பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தவன் என்பதால் எல்லோராலும் விரும்பப்பட்டான்.வங்கியில் வேலைப் பார்க்கிறான் என்பதற்காக கெளரவம் பார்ப்பதில்லை.கோப்பை கழுவுற வேலை என்றாலும்..செய்வான்.2-3 வேலைகள் செய்த போது ..சில சமயம் திவாகரின் நண்பர்களுடன் கோப்பையடியும் செய்திருக்கிறான்.பெடியள்களின் கல்யாணவீடுகள் எல்லாவற்றிலும் அவன் ஓடியாடி வேலை செய்ததை எவராலும் மறக்க முடியாதவை.

கல்யாணவீடு அல்லது பிறந்த நாள் விருந்துபசாரங்களில் ,சிறுவர் சிறுமியர் பட்டாளத்தை கட்டி,சங்கீதக் கதிரை விளையாட்டை நடத்தி சந்தோசப் படுத்துவான். உரிமையோடு பிழங்குவான்.தன் சிறு மகளோடு,திவாகரின் பிள்ளைகளையும் ‘மக்டோனால்ட்க்கு’கூட்டிச் சென்று .. கத்தி உருட்டிப் பிழங்கிறதில் பாசம் இழையோடும்.திவாகரின் மனைவியான சந்திரா மச்சாள் மீது அவனுக்கு சகோதரப் பாசம் கூட.”சந்திரா மச்சி..”என்று அடிக்கடி கத்தி பிழங்குவான்.சந்திரா குடும்பத்தாருடன் மட்டுமில்லை,திவாகரின் சகோதரர்கள், உறவினர்கள்..எவரோடும் அவன் உரிமையோடேயே பிழங்குறவன்.உழைக்க வேண்டுமென்ற பிரயாசை,சந்தோசமாக வாழணும் என்ற விருப்பு..இப்படியே பாபு நெடுகவிருந்தான். வெளிநாட்டு வாழ்க்கையில் அமைதிக்கு தான் பஞ்சமே!திவாகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.வழமையாக ரொராண்ரொவில்,தமிழர்க்கு மாரடைப்புக்கள்,அதிகளவு மனவழுத்தங்கள்,அதிகமான வேலைப்பளுக்கள்(படிப்புத் தகமைக் குறைவால்).. நிலவின.மற்றய தமிழர்களுக்கு, ‘இளம் வயதிலே..சாவைத் தழுவுகிறவர்களைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாதிருந்தது.திவாகரின் நிலை மீளக் கூடிய நிலையாய் இருக்கவில்லை.உடல் என்ற மெசினுக்கு,ஒயில்..தண்ணி என்று ஒழுங்காய்க் கொடுத்து வந்தாலும் கூட ,திடீரென மக்கர் பண்ணி விடுகிறது. “3 ரத்தக் கட்டிகள்..இதய ரத்த ஓட்டத்தை தடுக்க,முக்கியப் பகுதியில் (இதயத்தில்) தசைக்கலங்கள் சில செத்து விட்டன”என்ற டாக்டரின் கையாலாகாதப் பேச்சு எல்லாரையும் உலுப்பி விட்டிருந்தன. பாபு அவர்களின் குடும்பத்தைப் பற்றி நிறையக் கவலைப்பட்டான்.”மச்சி அந்தரிச்சுப் போகக் கூடாது”என்பது பிராத்தனையாய் இருந்தது.ஆனால்”மனித வாழ்வு என்பது எவருக்கும்..எந்த நேரத்திலும் அறுபட்டு போய்விடக் கூடயதொன்று”என்பது எவருக்குமே அவ்வளவு லேசாய் புரிவதில்லையே.திவாகரைப் பார்ப்பதிற்காக ..உறைபனி மழையாக இருந்த போதிலும்..ஒரு நாள் குடும்பத்தோடு வெளிக்கிட்டு..கார் ஓடி வந்தான். ரொராண்ரோ வாசிகளின் கார் ஓட்டங்கள் எப்பவும் மோசமானவை.காலநிலை 4 விதமாக கொண்டிருந்த போதிலும்..அவர்கள் கோடை காலத்தில் ஓடுவது போலவே சதா ஓடுபவர்கள்.பள்ளம்,ஏற்றம்,சறுக்கல்,பனிக்குவியல்..இத்தகைய நேரங்களில் காரின் கியரை மாற்றி மாற்றி ஓடவேண்டும்.’ஓட்டமட்டிக் கார்’என்பதால் தானாக கியர் மாறிக்கொள்ளும்.. என்றுநினைப்பதால்..,அதையெல்லாம் கடைப்பிடிப்பதில்லை.காரில், தாழ் கியருக்கு நாம் தாம் மாற்றி விடவேண்டும்.அதை காரை செலுத்திக் கொண்டிருக்கும் போதே நம்மால் செய்ய முடியும் என்பது எல்லாம்.. 90 வீதமான ரொராண்ரோ வாசிகளுக்குத் தெரியாது.அதனால்,ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் போதும்…நிறைய விபத்துக்கள் நடக்கின்றன.வாலிப மட்டங்கள்-பள்ளி மாணவர்கள்- குடித்துப் போட்டு ஓடுறதாலும்.. சிறிது..நடக்கின்றன.டிக்கற்றுக்களை அள்ளிக் கொடுக்கிறதிலும், தண்டப்பணத்தை உயர்த்திக் கொண்டு போகிறதிலும் உள்ள வேகம்..,பொலிசாருக்கு ‘கவனமாக எப்படி ஓடலாம்’என்று தொலைகாட்சியில் வகுப்புக்களை வைப்பதில் இருப்பதில்லை.உறைப்பனிமழை நேரம் என்பதால் வீதிகளில் -குறிப்பாக ஏற்றம் இறக்கப் பகுதிகளில் எல்லாம் சறுக்கல்கள் அதிகமாக இருந்தன.வழக்கமாக போற அந்த மலையும் பள்ளமான பாதையிலே காரை செலுத்தி வந்தான்.குறைவான தூரம் என்பதால் ஏற்பட்ட பழக்கதோசம்.இரவு 2 வது வேலையையும் முடித்து வாரதால்,கண்களில் சிறிது அசதி இருந்தது.கைவேக்கு மேலாக சென்ற பாதையின் இறக்கப் பகுதியில் ..இருட்டுக்குள்..2-3 கார் வெளிச்சங்கள் குவிந்து அங்குமிங்குமாக லைட் தெரிப்புக்களுடன் இருந்தன. அவனுடையக் காரும் இறக்கப்பகுதியில் இறங்க..சறுக்கிக் கொண்டு சென்றது.’இது என்னடா கஸ்டம்’..கட்டுப்பாடில்லாமல் சறுக்கிறதே..என்று பதறிய போது..தூரத்திலே கார்களுக்குப் பக்கத்திலே 2-1 சிறுவர்கலும் ,ஆட்களும் நிற்பது தெரிந்தது.கோர்னை “பாம்.. பாம்” என்று அடித்துக் கொண்டு கதவைத் திறக்க..,அடிப்பட்ட காரோடு போய் அடிப்பட்டு நின்றது.இறங்கி நடக்க வெளிக்கிட சப்பாத்து சறுக்கியது.’வின்டர் சப்பாத்து’ என..விசேசமான சப்பாத்துக்கள் பாவிக்காதன் விளைவு ..சறுக்கி விழப் போனான்.காரின் பக்கப்பகுதியை பிடித்து நிற்க முயற்சித்தான்.அதே சமயம் அவனுடையக் கார் போல..இன்னொரு கார் இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி வந்தது.விலகி ஓட..நிலச் சறுக்கலால் நேரம் இல்லாதிருந்தது.அந்தக் கார் வந்து பாபுவை அவனுடைய காரோடு நசித்தது.உருளையான உடம்பு ரத்த விளாராக வெடிக்க ..அந்தக் கணத்திலே சிறு துடிப்போடு பாபு இறந்துப் போனான்.

திறந்த கதவுடன் அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சுகுணாவிற்கு கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது.அவள் அழ முதல் திறந்த கதவு நெற்றியில் அடித்து மூட, பெரியக் காயத்துடன் ..உள்ளே விழுந்து ..மயக்கமும்,நினைப்புமாகி கிடந்தாள். முதல்விபத்துக்காரர்கள் பொலிசிற்கு போன் செய்ததால்..பொலிஸ் விரைவாக வந்ததிருந்தது.அம்புலன்சை வரவழைத்து சுகுணாவை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வைத்தார்கள்.சுகுணா மூலமாக..போன் நம்பரை எடுத்து,திவாகர் வீட்டாருக்கு அறிவித்து..,காரிலே காயப்படாதிருந்த பிள்ளைகளை ..ஒப்புவித்தார்கள்.பாபு இறந்ததை அவர்கள் யாருக்கும் உடனே அறிவிக்கவில்லை.சுகுணா கூட ‘பாபு காயப்பட்டு விட்டான்’என்றே நினைத்தாள்.இறந்து விட்டான் என்று தெரியாது.சுகுணாவிற்கு காயத்திற்கு இழைகள் எல்லாம் போட்ட பிறகு,சிறிது ஆற விட்டே பாபு இறந்ததை அறிவித்தார்கள்.அவளுக்கு உலகமே காலுக்கு கீழே நழுறது போல இருந்தது.பாபு..இனி.. நிரந்திரமாகவே பிரிந்து விட்டான்.எதிர்காலம் இருளாகி விட்டதாக உணர்ந்தாள். இனி,மற்ற குடும்பங்களில் நிலவும் சந்தோசம், அவளை ஏக்கமுறச் செய்தே வாட்டப்போகிறது.ஆறாத்துயருடன் அழுதாள்.கடவுள் கொடியவன்.விதி என்னும் சுருக்குக் கயிறை அவளுக்கும் மாட்டி வேடிக்கைப் பார்க்கிறான்.சந்திரா வீடு,செத்த வீடாக.. அழுகையில் கிடந்தது.உறவினர்கள்2-3 பேர்களாக வரத் தொடங்கினார்கள்…துக்கம் விசாரிக்க..!எல்லார்ர கண்களிலும் பாபுவின் உரிமையுடன் கத்துற கத்தல்கள்..,பகிடியாக பேசுறதுகள்,பெருத்த உடம்பை அசைத்து டான்ஸ் ஆடுறது..போன்ற காட்சிகள் தான் இருக்கின்றன.ஆனால்,பாபு இறந்து விட்டான்.

– ஏப்ரல் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *