கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 4,033 
 

ஜீவித்தா மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்,பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது,திரும்பி பார்த்தாள் அவள்,மாலினி ஓடி வந்து ஜீவித்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்,எப்படி இருக்க,கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது,ஏன் இவ்வளவு மெலிந்து போய்விட்ட என்றாள் மாலினி,உனக்கும் தான் தலையெல்லாம் நரை விழுந்து விட்டது என்றாள் ஜீவித்தா,ஆமாம் பதினாறு வயது எல்லாம் தாண்டி,ஐம்பதில் வந்து நிற்கிறோம் என்று சிரித்தாள் மாலினி,இன்னும் கோயில் பக்தியை விடவில்லை நீ,ஜீவித்தா கையில் இருந்த பூஜை பொருட்களைப் பார்த்து விட்டு கேட்டாள் மாலினி,அதை எப்படி விட முடியும்,இப்போதும் கோயில் போய் வரும் போது தான்,உன்னை கண்டு இருக்கேன் அந்த கடவுள் செயல் என்றாள் ஜீவித்தா,நீ இன்னும் மாறவேயில்லை சரி இப்போது எங்கு போவோம் என்றாள் மாலினி,நீயும் தான் இன்னும் ஊர்சுற்றுவதை விடவில்லை என்று சிரித்தாள் ஜீவித்தா,அது என் கூடவே பிறந்தது,சரி வா பக்கத்தில் ஒரு பூங்காவும்,காப்பி கடையும் இருக்கு முதலில் போய் சூடாக ஒரு காப்பியை குடித்தால் தான் உன்னிடம் கதைக்க தெம்பாக இருக்கும் என்றாள் மாலினி

இருவரும் நடந்து சென்று காப்பி கடையின் முன் உட்கார்ந்தார்கள்,உனக்கு பசிக்குதா வடை வாங்கவா என்றாள் மாலினி,சரி வாங்கு வேண்டாம் என்றால் விடவா போற,எனக்கு ஒன்னு போதும் என்றாள் ஜீவித்தா,அண்ணன் மூன்று வடையும் இரண்டு காப்பியும் தாங்கள் என்று வாங்கி கொண்டு வந்து உடகார்ந்தாள் மாலினி,இருவரும் வடையை சாப்பிட்டு காப்பியை குடித்து முடித்தார்கள்,வா பூங்காவிற்கு போய்விடுவோம் என்றாள் மாலினி,இருவரும் எழுந்து போய் பூங்காவின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்,எப்படி இருகின்றார்கள் உன் பிள்ளைகள் என்றாள் மாலினி,மூத்தவன் அபினேஷ் வேலைக்கு போறான்,மகள் அஷித்தா காலேஜ் போறாள்,அவங்க அப்பா கோகுலன் அதே ஆபிஸ் தான் என்றாள் ஜீவித்தா,நீ எப்படி இருக்க என்றாள் ஜீவித்தா,உனக்கு தான் தெரியுமே,ஒரு பிள்ளைக்காக தவமாக தவம் இருந்து கடைசி மட்டும் கடவுள் எனக்கு ஒரு வாரிசை கூட கொடுக்கவில்லை என்று பெருமூச்சி விட்டாள் மாலினி,உனக்கு நான் அப்போதே சொன்னேன் தானே,பெத்துக்க முடியவில்லை என்றாள் ஒரு பிள்ளையை எடுத்து வளர்த்துக்க என்று,ஏன் நீங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்றாள் ஜீவித்தா,உனக்கு தான் ராகவனை தெரியுமே,சரியான பிடிவாதம்,நான் எது சொன்னாலும் காதில் வாங்குவதும் இல்லை,அவருக்கு ஏற்ற அம்மா தங்கேஷ் உன் மூலமாக தான் எனக்கு பேரக் குழந்தை வேண்டும்,யாரோ பெற்றெடுத்த குழந்தை எல்லாம் எனக்கு வேண்டாம் என்று முடிவாக கூறிவிட்டார்.

எந்த நாளும் அவரின் பேச்சிகள் என்னை குத்தி காயப்படுத்தியது,என்னை ஏமாத்தி கட்டி வைத்து விட்டதாக குறை,இதில் எப்படி ஏமாத்துவது யோசித்து கதைக்க மாட்டார்களா என்றாள் ஜீவித்தா,அது தான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை,எதற்கும் என்னை கூப்பிட மாட்டார்கள்,ஒதுக்கி வைத்து விட்டார்கள்,யாரும் வீட்டுக்கு வந்தால் அவள் மலடி என்று என் காதுப்படவே சொல்வார்கள்,அவர்களும் அதற்கு ஏற்ற மாதிரி ஏத்தி விடுவார்கள்,அப்ப ஏன் இன்னும் வீட்டில் வைத்துக் கொண்டு இருக்க அனுப்பிவிட்டு வேறு பெண்ணை பார்த்து ராகவனுக்கு கட்டி வை,பிற்காலத்தில் உன்னை பாட்டி என்று அழைக்க பேரக் குழந்தைகள் வேண்டாமா என்பார்கள்,என்னை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பி விட்டு,ராகவனுக்கு வேறு யாரையும் கட்டி வைப்பதற்கு முழு முயற்சி செய்தார் தங்கேஷ்,ஆனால் ராகவன் முடியாது என்று மறுத்து விட்டதால் அந்த கோபம்,எங்கள் இருவர் மீதும் எரிந்து விழ ஆரம்பித்தார்கள்,நானும் பொறுத்து பார்த்தேன்,முடியாத சமயத்தில் ராகவனை கட்டாயப் படுத்தி வெளியூர் அழைத்துக் கொண்டு போய்விட்டேன் என்றாள் மாலதி,போகும் போது எனக்கு தெரியப் படுத்தினாய் அதன் பிறகு உன்னிடம் இருந்து எனக்கு எந்த தொடர்பும் இல்லாமல் போய் விட்டதே,அப்படி என்ன தான் நடந்தது என்றாள் ஜீவித்தா

இங்கு இருக்கு மட்டும்,என்னிடம் எந்த குறையும் இல்லை,உன்னிடம் தான் ஏதோ குறை உள்ளது என்று ஒரு நாள் கூட மருத்துவரை பார்க்க அவர் வந்தது இல்லை,இங்கு நான் போய் பார்க்காத டாக்டர் இல்லை,வெளியூர் சென்றதும் அங்கும் அதை தான் செய்தேன்,ஆனால் அங்கு உள்ள டாக்டர்கள் கட்டாயம் வீட்டுகாரரை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று கூறியதால் ராகவன் என்னுடன் வந்தார்,அது நல்லது தான் மாலினி,நம்ம ஊரில் தான் கணவனை அழைத்துக் கொண்டு வரசொல்வதும் இல்லை,அவர்கள் வர விரும்புவதும் இல்லை என்றாள் ஜீவித்தா,ஆமாடி பயம் எங்கடா நம்மீது குறை ஏதும் இருந்து விடுமோ என்று,அவர்கள் யார் முன்னாடியும் அவமானப் பட தயாராக இல்லை,எங்களிடம் எந்த குறையும் இல்லை என்றாலும்,ஏதோ எங்களுக்கு மட்டும் பிள்ளை பெக்க முடியாத மாதிரி ஒவ்வொருவரும் பேசும் பேச்சி காது கொடுத்து கேட்க்க முடியாது என்றாள் மாலினி,அங்கு டாக்டரிடம் போய் செக்கப் பன்னியப் பிறகு தெரிய வந்தது ராகவனுக்கு பிரச்சினை என்று,அதை ஆரம்பத்தில் அவர் நம்பவே இல்லை,பொய் சொல்வதாக நினைத்துக் கொண்டு பல டாக்டர்களை போய் பார்த்தோம் இருவரும்,ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே பதில் தான்,ராகவனுக்கு பிள்ளை பெக்கும் தகுதி இல்லை என்று,அதை அவரால் தாங்கவே முடியவில்லை,கொஞ்ச நாட்கள் மன உளைச்சலில் இருந்தார்,நான்அவரை தெரியாத ஊரில் தனியாக வைத்துக் கொண்டு கொஞ்சம் திண்டாடி தான் போனேன்.

நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன்,அவரை வீட்டில் தனியாக விட்டு போகவும் பயமாக தான் இருக்கும்,அதனால் தான் யாரிடமும் தொடர்ப்பு இல்லாமல் போய் விட்டது என்றால் மாலினி,ஏன்டி அப்போதே இங்கு கூட்டிக்கிட்டு வந்து இருக்கலாமே என்றாள் ஜீவித்தா,இங்கு வந்து கேட்ப்பவர்களுக்கு எப்படி பதில் சொல்வது,அவருக்கு தெரிந்தவர்களை பார்க்கும் போது இன்னும் மனம் பாதிக்கும்,அது தெரியாத ஊர்,எங்களை யாருக்கும் தெரியாது,அதனால் தான் அப்படி ஒரு சூலழ்நிலையிலும் நான் இங்கு வருவதற்கு யோசிக்கவில்லை என்றாள் மாலினி,தற்போது எப்படி இருக்கார் ராகவன் என்றாள் ஜீவித்தா தற்போது நன்றாக தான் இருக்கார்,டாக்டர் கொடுத்த மாத்திரைகள்,கௌன்சிலிங்,நான் அவருடன் ஆதரவாக இருந்தப் படியால் இப்போது குணமடைந்து விட்டார் என்றாள் மாலினி,அவரின் அம்மா ஒரு தரம் ஊருக்கு வந்து விட்டு போகும் படி தொல்லை படுத்தினார்கள்,வயது போய் விட்டது,ராகவன் தம்பி பிள்ளைகளுடன் எந்த நேரமும் சண்டை,வயது போன காலத்தில் அமைதியாக இருக்கனும் என்று நினைக்கின்றார்கள்,அதற்கு அந்த வீட்டில் வழியில்லை,பேரக் குழந்தை வேண்டும் என்று உன்னை அவ்வளவு பாடு படித்தினார்கள் இப்ப என்னவாம்,சந்தோஷமாக இருக்க வேண்டியது தானே பேரக் குழந்தைகளுடன் என்றாள் ஜீவித்தா

மாலினி விரக்தியாக சிரித்தாள்,எதையும் யோசிக்காமல் நடந்துக் கொண்டார்கள்,தற்போது தள்ளாடும் வயது,எங்களுக்கும் அவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போக முடியாது,ராகவனுக்கு இனி இங்கு இருக்கும் எண்ணமும் இல்லை,வாழ் நாள் முழுவதும் அவரின் குறையை மறைத்து வாழ்ந்து விடனும் என்று நினைக்கின்றார் என்றதும் ஜீவித்தாவிற்கு கோபம் வந்து விட்டது,அப்ப வாழ் நாள் முழுதும் நீ மலடி என்ற பட்டத்தை சுமக்கனும்,இது என்னடி நியாயம் என்றாள் ஜீவித்தா,வேறு வழியில்லை ஜீவித்தா வாழவேண்டிய காலத்தில் ஏற்பட்ட அவமானங்களும்,வலிகளும் என் வாழ்க்கையே வீணாகிவிட்டது,இனி யார் என்னைப் பற்றி எது சொன்னாலும் மறுப்படி எதுவும் திரும்பி வந்து விடப் போவதும் இல்லை,வயதும் போய்விட்டது,அம்மா என்ற தகுதியை அடைய முடியவில்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என்றாள் மாலினி.உண்மை தான்,உனக்கு எல்லா தகுதிகளும் இருந்தும் பலி உன் மீது மட்டும்,இது தான் உலகம் என்றாள் ஜீவித்தா,எனக்கு உன் வீட்டுக்கு வருவதற்கு நேரம் இருக்காது,இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் போய் விடுவோம்,உனக்கு வசதிப் பட்டால் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து விட்டு போ என்றாள் மாலனி,கட்டாயம் வருகிறோம் என்றாள் ஜீவித்தா,நீண்ட நாட்களுக்குப் பிறகு என் மனதிற்கு நிம்மதியாக இருக்கு,உன்னிடம் மனம்விட்டு உண்மையையெல்லாம் கொட்டி தீர்த்து விட்டேன் என்றாள் மாலதி,கவலைப் படாதே எங்கள் இருவரை தவிர இந்த உண்மை வேறு யாருக்கும் எப்போதும் தெரியப் போவது இல்லை என்றாள் ஜீவித்தா,இருவரும் கட்டி அணைத்து விட்டு சென்றார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *