கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 2,596 
 

டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல் விம்மிக்கொண்டுந்தாள்.

அந்த அறைக்குள் வந்த கம்பவுண்டர் ஜேம்ஸ் “டாக்டர் அருணா உங்களை பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி விட்டுப் போனான்.

உடனடியாக எழுந்த அருணா முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். திருப்தி வராமல் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து பெரிய டாக்டரை பார்க்கக் கிளம்பினாள்.

“என்ன அப்பா கூப்பிட்டீங்களாமே?” என்று பெரிய டாக்டர் பாலசேகரன் அறையினுள் நுழைந்தாள் அருணா.

“அருணா உனக்கு எத்தனை முறை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது என்னை அப்பா என்று கூப்பிடாதே, என்று சொல்லியிருக்கிறேன். சரி, போகட்டும் வா, வந்து உட்கார்.நீ இன்று மதியம் போக வேண்டிய ரவுண்ட்ஸ் போக வில்லையாமே? தலைமை நர்ஸ் விஜயா வந்து சொல்லி விட்டுப் போனாள்” என்று சொல்லி விட்டு மேஜை மேல் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார் பால சேகரன்.

“டாக்டர் அது வந்து” என்று சொல்ல முடியாமல் தத்தளித்தவாறு அவருக்கு எதிர் நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

“என்ன.. வந்து.. போய்ய்.. டியுட்டி இஸ் பர்ஸ்ட் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.உடம்புக்கு சரியில்லை என்றால் சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப வேண்டியதுதானே. வேறு டாக்டரையாவது நோயாளியைப் பார்க்க கிளம்பியிருபார். . ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள் விஜயா நாம் நன்றாக கவனிப்போம் என்ற நம்பிக்கையில்தான் நம்முடைய இந்த ‘ராஜேஸ்வரி ரெஜினா மருத்துவ மனைக்குநோயாளிகள் வருகிறார்கள். அவர்களை நீ நன்றாக கவனிக்காத போது மறுமுறை சுகமில்லாமலிருந்தால் நம்மைத் தேடி வருவார்களா?”

“ஸாரி டாக்டர் நான் உடனடியாக நோயாளிகளைப் பார்க்க கிளம்புகிறேன்.” என்று எழுந்தாள் அருணா.

“வெரிகுட் தட் இஸ் த ஸ்பிரிட் அது சரி, என்னவோ ஒரு மாதிரி இருக்கிறாய் எதாவது பிரச்சினையா?’’

“ஒன்றுமில்லை டாக்டர்”

“சரி, அப்புறம் அந்தக் கிரிகெட் வீரர் ஸ்ரீராம் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிறாரில்லை. அவருக்கு மைனஸ் டெஸ்ட் பாடி டெஸ்ட் எல்லாம் னுடிந்து விட்டதா? நான் பில்லிங் டிப்பார்ட்மெண்டிலே சொல்லி அவருடைய அவருடைய பில்லை தயார் செய்யச் சொல்ல வேண்டும்”

“அப்பா..” என்று அருணா திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் “டாக்டர் என்று சொல். எதாவது சொந்த விஷயம் என்றால் வீட்டிலே வைத்துப் பேசிக் கொள்ளலாம். இங்கு இந்த மருத்துவமனையை சார்ந்த விஷயங்களை மட்டும்தான் நாம் பேசிக் கொள்ள வேண்டும்.

“இது சொந்த விஷயம் என்றாலும் கொஞ்சம் அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய விஷய்ம் அப்பா. அதனால்தான் ஆஸ்பத்திரியிலேயே உங்களோடு பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிட்டது.”

“என்ன.. என்ன விஷயம். எனக்கு ஆபரேசனுக்கு வேற நேரமாகி விட்டது.” என்று டாக்டர் பாலசேகரன் சொல்வதற்குள் போன் ஒலிக்க, எடுத்து “ஹலோ பால்சேகர் ஹியர்” என்றார்.

“டாக்டர் ஆப்ரேஷனுக்கு எல்லாம் தயாராகி விட்டது. நோயாளியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு வந்து விட்டோம். நீங்கள் வந்து விட்டால் ஆப்ரேஷனை ஆரம்பிக்கலாம்” என்றது எதிர் முனை பெண் குரல்.

“சரி நான் உடனே வருகிறேன்” என்று போனை வைத்த டாக்டர் அருணா எனக்கு ஆப்ரேஷனுக்கு போக வேண்டியதிருக்கிறது. என்ன பண்றே நீ முதலிலே ஒரு ரவுண்ட் போய் நோயாளிகளை பார்த்து விட்டு வந்து விடு. நானும் ஆப்ரேஷனை முடித்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் நிதானமாக பேசலாம்.” என்று எழுந்தார் டாக்டர் பாலசேகரன்.

“ஓகே டாக்டர்” என்றவாறு எழுந்த அருணா நோயாளிகளைப் பார்க்கப் புறப்பட்டாள்.

இரண்டு ஹெட் நர்ஸ்கள் ஒரு கம்பவுண்டர் இரண்டு நர்ஸ்கள், ஒரு புது டிரெய்னி டாக்டர் என்ற பட்டாளத்துடன் நோயாளிகளை ஒவ்வொரு அறையாக சந்தித்து விட்டு வந்த போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் அறைக்கு வந்து அவனுக்கு நாடி பார்த்தாள்.

“இப்போது உடம்புக்கு எப்படி இருக்கிறது மிஸ்டர் ஸ்ரீராம்”.

“ஐ யாம் கெய்ட்… ஆல் ரைட் டாக்டர்” என்றான் ஸ்ரீராம் சிரித்துக்கொண்டே.

“வெரி குட் இன்னும் திட உணவு உண்ண ஆரம்பிக்காததால் உடல் பலம் ஏறவில்லை. இன்றைக்கு சாயங்கலம் எளிதில் செமிக்கக் கூடிய இட்லி, வாழைப்பாழம் சாப்பிட ஆரம்பிய்யுங்கள். என்று சொல்லி விட்டு நர்ஸிடம் இவருக்கு இன்னொரு குளுக்கோச் பாட்டில் ஏற்றுங்கள் என்று சொன்னாள். கூட வந்த புது ட்ரெயினிங் டாக்டர் தேவியிடம் ஸ்ரீராமுக்கு என்னென்ன மருந்து கொடுக்கணும் என்று சிரித்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஒரு நிமிடம் டாக்டர்” என்று எழுந்து அருகில் வந்தான் ஸ்ரீராம். மற்றவர்களெல்லாம் முன்னால் கிளம்பிப் போய் விட தனித்து நின்ற அருணா “என்ன?” என்று திரும்பிப் பார்த்து” நான் சொன்ன விஷயத்தை… நீங்கள் இன்னும் முடிவு சொல்ல வில்லை”

“கொஞ்சம் பொறுங்கள் அப்பாவிடம் நேற்று விஷயத்தை ஆரம்பித்த போது கோபத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். இன்று அவரோடு பேசி முடிவெடுக்கப் போகிறேன்.”

“நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று சிரித்தான் ஸ்ரீராம்.

“எனக்கு விருப்பம் எனும் போது நல்ல முடிவாகத் தானே இருக்க வேண்டும்.” என்று சொல்லி விட்டு மற்ற நோயாள்களைப் பார்க்க கிளம்பினார்.

“உள்ளே வரலாமா டாக்டர்” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்து டாக்டர் பாலசேகரனின் முன்னால் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள் அருணா.

“வா என்ன விஷயம்” சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துப் புகையை ஊதினார்.

“நாம் நேற்று வீட்டில் பேசிக் கொண்ட விஷயம் அப்பா… “

“ஓ! திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா? அது சரி…. இப்போது என்ன கேட்க வந்தாய்?”

“அப்பா ஸ்ரீராம் நாளை எப்படியும் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். நானும் அவரை ஏற்கனெவே விரும்ப ஆரம்பித்து விட்டதால் தான் நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் விருபினால் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன்”

“அருணா, ஸ்ரீராம் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் நீயும் அவனோடு திருச்சிக்குப் போக வேண்டியது இருக்கும்.”

“ஆமாம் அப்பா”

“அப்படியானால் இந்த ஆஸ்பத்திரியை எனக்குப் பிறகு யார் கவனித்துக் கொள்வது….?

“அது… வந்து..?”

“நான் நேற்று சொன்னதைத்தான் இன்றும் குறிப்பெடுக்கிறேன்.” அருணா இந்த ஆஸ்பத்திரி, ஒரு நதி மாதிரி டிக்கன்ஸ் குறிப்பிட்ட மாதிரி மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் நான் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று நதி குறிப்பிடுவது போல சொல்வார்.

இது சஞ்சலப்படக் கூடிய நம் காதலும் வயதுதான் நான் மறுக்க வில்லை. நீயாக முடிவெடுத்துக் கொள். நான் ஒரேயடியாக தடுத்து நிறுத்தினால் நாளையே நீ அவனோடு புறப்பட்டு போக முடியும். நான் அப்படி உன்னை அணை கட்டி நிறுத்த விரும்ப விருன்ப வில்லை. நதியில் மனிதர்கள் வருவார்கள் குளிப்பார்கள் போவார்கள். அதற்காக நதியே அவர்களோடு போவதில்லை. அது அதன் வழியே ஓடிக் கொண்டு இருக்கும், மற்றவை உன் விருப்பம் என்று எழுந்தார். மறுநாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் டிஸ்சார்ஜ ஆகிக் கிளம்பும்போது டாக்டர் அருணாவை தனியாக அழைத்துக் கேட்டான் “என்ன முடிவு செய்தீர்கள்?”

“ஐயாம் ஸாரி ஸ்ரீராம், என்னா உங்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.” என்று தீர்க்கமாய் சொல்லி விட்டுக் கிளம்பினாள் அருணா.

அப்படியே திகைத்துப்போய் நின்றான் ஸ்ரீராம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *