‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,234 
 

மும்பையில் ஓடும் ‘எலெக்டிரிக்’ வண்டியில் ‘பிக் பாக்கெட்’ அடித்து பிழைத்து வந்தான் ராஹூல்.அதில் வரும் பணத்தில் ‘ரோந்து’ வரும் போலீஸ்காரர்களுக்கு ‘மாமூல்’ கொடுத்து விட்டு வாழக்கை நடத்தி வந்தான்.இரவு நேரங்களில் எந்த ஸ்டேஷனில் தன் ‘தொழிலை’ முடிக்கிறானோ,அந்த ஸ்டேஷனிலேயே சாப்பிட என்ன கிடைக்கிறதோ, அதை வாங்கி சாப்பிட்டு விட்டு அந்த ஸ்டேஷனிலேயே தூங்கி விடுவான் ராஹூல்.அடுத்த நாள் ‘எலக்டிரிக்’ வண்டியில் கூடடம் வரும் வரைக் காத்து இருந்து விட்டு ,வண்டியில் கூட அதிகம் ஆனவுடன், அதில் ஏறி தன் ‘கை வரிசையை’க் காட்டி ‘பிக் பாக்கெட்’ அடித்து வாழ்ந்து வந்தான் ராஹூல்.

இருபத்தைந்து வயது வயதை எட்டிய ராஹூல் ‘நாம் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று ஆசை வந்தது.அதற்காக ஒரு நல்ல பெண்ணைத் தேடி வந்தான் ராஹூல். ஒரு நாள் ‘ரோந்து’ வந்துக் கொண்டு இருக்கும் ஒரு போலீஸ் பொம்பளை ஒரு இளம் பெண்ணிடம் மிரட்டி பணம் கேட்டுக் கொண்டு இருந்தாள். அந்தப் பொண்ணோ ”நான் பணம் தரமாட்டேன்.என் கிட்டே பணம் இல்லை” என்று சொல்லி தர்க்கம் பண்ணி வந்தாள்.ஆனால் அந்த போலீஸ் பொம்பளை விடுவதாய் இல்லை.”பணம் கொடு கழுதை” என்று சொல்லி தன்னிடம் இருந்த லட்டியால் ஓங்கி அந்தப் இளம் பெண்ணின் காலில் அடித்தாள்.லட்டி அடி வலி பொறுக்காமல் அந்த இளம் பெண் தன் சுருக்குப் பையை எடுத்து,அதில் இருந்து ஒரு நுறு ரூபாயை எடுத்து திட்டிக் கொண்டே அந்த ‘ரோந்து’ போலீஸ் பொம்பளையிடம் கொடுத்து விட்டு மெல்ல நடந்துக் கொண்டு இருந்தான்.அந்தப் பெண் பார்க்க அழகா இருந்தாள்.‘ராஹூல் மெல்ல அந்தப் பெண்ணிடம் போய் மராட்டியில் “ஏன் அந்த போலிஸ் பெண்ணுக்கு நீ பணம் கொடுத்தே.முடியாதுன்னு சொல்லக் கூடாது.நம்மை மாதிரி ஏழைங்க கிட்டே தான் இந்த போலீஸ் காரங்க பணம் பிடுங்குவாங்க.இவங்களுக்கு தான் ‘கவர்மெண்ட்’ கை நிறைய சம்பளம் தராங்க.இதில் நம்ப மாதிரி சாதாரண மனுஷங்கக் கிட்டே ‘மாமூல்’ வேறே வாங்குகிறாங்க.சுத்த அயோக்கிய பசங்க இவங்க”என்று அந்தப் பெண்ணுக்கு சாதகமாகப் பேசினான்.அந்தப் பெண் ராஹூலை ஏற இறங்கப் பார்த்தாள்.அவனை இவள் நிறைய தடவைப் பார்த்து இருக்காள். அவளுக்கு இந்த ஆள் ‘எலக்ட்ரிக் வண்டியில்’ பிக் பாக்கெட் அடித்து வருபவன் என்று நன்றாகத் தொ¢யும்.” நான் இந்த போலீஸ் பொம்பளைக்கு இந்த மாதிரி ‘மாமுல்’ கொடுப்பது வழக்கம் தான்.இன்னைக்கும் நான அவங்களைத் திட்டாம அவங்க கேட்ட பணத்தைக் கொடுத்து இருப்பேன்.ஆனா இன்னைக்குப் பாத்து எனக்கு ஒரு ‘போனியே’ ஆகலே” என்று சொல்லி விட்டு தன் சுருக்குப் பையில் இருந்து ஒரு பீடாவை தன் வாயில் போட்டுக் குதப்ப ஆரம்பித்தாள்.ராஹூலுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
உடனே ராஹூல் “எனக்குப் புரியவில்லை,உனக்கு இன்னைக்கு ‘போனியே’ ஆகலேன்னு சொல்றே.அதுக்கும் போலீஸ் பொம்பளைக்கு பணம் கொடுக்கிறதுக்கும் என்ன சம்பந்தம். நீ என்ன வியாபாரம் பண்றே.உன் கையிலே விக்க ஒன்னும் இல்லையே” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.அதுக்கு அந்த இளம் பெண்” இந்த ரெண்டு கை இருந்தாப் போதும்.இதோ வருதே இந்த எலக்டிரிக் வண்டியில் ‘பெண்கள் வண்டி’ இருந்தாப் போதும்” என்று சொல்லி சிரித்தாள்.அவள் சிரிப்பில் மயங்கினான் ராஹூல்.கொஞ்ச நேரம் கழித்து அந்த இளம் பெண் “நீ அந்த ஆண்கள் பெட்டியிலே உன் ‘கை வரிசையை’க் காட்டி வரே.நான் பெண்கள் பெட்டியிலே என் ‘கை வரிசையை’ காட்டி வரேன்.அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் வித்தியாசம்.நானும் நீ இந்த போலீஸ்காரங்களுக்கு ‘ மாமூல்’ கொடுத்து வருவதை பல தடவைப் பார்த்து இருக்கேன்” என்று சொல்லி விட்டு சிவந்து இருக்கும் தன் அரிசிப் பல்லைக் காட்டி சிரித்தாள் மோனிகா.அவ உடனே “என் பேர் மோனிகா” என்று சொல்லி விட்டு அவன் பேரைக் கேட்டாள்.ராஹூல் உடனே “என் பேர் ராஹூல்” என்று சொல்லி விட்டு அவளிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தான் பேசின பிறகு ஒருவரை ஒருவர் மணந்துக் கொண்டு இதே ‘தொழிலை’ப் பண்ணி வருவது என்று முடிவு பண்ணினார்கள்.அடுத்த மாசமே ராஹூலும் மோனிகாவும் கல்யாணம் பண்ணீக் கொண்டு தங்கள் ‘தொழிலை’ப் பண்ணி வந்தார்கள். கல்யாணம் ஆகி விட்டு இருந்ததால் இருவரும் தங்கள் தொழிலில் வரும் பணத்தை தங்கள் செலவுக்குப் போக மீதியை சேமித்துக் கொண்டு வர ஆரம்பித்தார்கள்.

ரெண்டு வருஷம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.ராஹூலுக்கும் மோனிகாவுக்கும் அளவில்லா சந்தோஷம். அவர்கள் இருவரும் குழந்தை பொ¢யவளா ஆனால்,மெல்ல அவர்கள் ‘தொழிலில்’ அவளுக்கு பழக்கி வந்து,அவர்கள் செய்து வரும் ‘தொழிலை’ப் பண்ணி வரச் செய்யலாம்’ என்று நினைத்தார்கள்.ஹாஸ்பிடலில் இருந்து குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த மோனிகா குழந்தையின் வலது கை மட்டும் திறக்காமல் எப்போதும் இறுக்க மூடி இருப்பதைப் பார்த்து வருத்தப் பட்டு ராஹூலிடம் காட்டினாள்.ராஹூலும் இதைப் பார்த்து குழந்தை கையை மெல்லத் திறக்க பார்த்தான்.குழந்தையின் விரல்கள் ரொம்ப பிஞ்சாக இருந்ததால்,ராஹூல் அதிக பலத்தைக் கொடுத்து திறக்க வைக்க விரும்பாமல் மோனிகாவைப் பார்த்து “மோனி, நாம குழந்தையை ஒரு டாக்டர் கிட்டே காட்டி சரி செய்துக் கொண்டு வரலாம்.இது குழந்தையின் வலது கையாச்சே.நம்ப தொழிலு க்கு இந்தக் கை ரொம்ப முக்கியமான கையாச்சே” என்று சொல்லி வருத்தப் பட்டான்.இருவரும் நிறைய குழந்தை டாக்டர்களிடம் தங்கள் குழந்தையைக் காட்டினார்கள்.பார்த்த எல்லா டாக்டர்களும்” எங்களுக்கு இந்தக் குழந்தை ஏன் இப்படி தன் வலது கையை இறுக்க மூடிக் கொண்டு இருக்கு என்று புரியவில்லை.நாளாக நாளாக சரியாகி விடும்”என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அவர்கள் விடாமல் பல டாக்டர்களிடம் காட்டி வந்தார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு டாக்டர் அவர்கள் இருவரையும் பார்த்து அவர்கள் இருவரும் என்ன வேலை செய்து வருகிறார்கள்,வயசு என்ன,ஜாதி என்ன,போன்ற பல கேல்விகள் கேட்டார். இருவருக் கும் டாக்டர் கேட்டது பிடிக்காவிட்டாலும் அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டு, “‘என்ன டாகடர். நீங்க ‘இந்தக் குழந்தை வலது கையை சரி பண்ணுவீங்களா”ங்க’ ன்னு கேட்டான் ராஹூல். உடனே அந்த டாக்டர் “நான் நிச்ச்சியமா உங்க குழந்தை கையை திறக்க வக்கிறேன்.ஆனா நீங்க எனக்கு பத்தாயிரம் ரூபாய் ‘·பீஸ்’ தரணும்,முடியுமா சொல்லுங்க”. கேட்டார்.உடனே இருவரும் சந்தோஷப் பட்டார்கள்.

ராஹூல் “மோனிகா டாக்டர் ‘பீஸ்’ ரொம்ப அதிகமாக இருக்கே” என்று சொன்னான்.ஆனால் மோனிகா ”பீஸ் போனாப் போவுதுங்க.நாம சம்பாதிக் கொள்ளலாங்க.பத்தாயிரம் ரூபாய் போனாப் போவட்டுங்க.குழந்தை கை சரியா ஆணா போதுங்க” என்று சொன்னாள்.“சரி வா மோனிகா.நாம டாக்டரிடம் குழந்தையைக் காட்டி குழந்தை கையை சரி பண்ணிக் கொண்டு வரலாம்”என்று சொல்லி விட்டு டாக்டர் ரூமுக்குள் குழந்தையை எடுத்துக் கொண்டு போனான் ராஹூல்.

ராஹூல் “டாக்டர்,நான் பத்தாயிரம் ரூபாய் தறேன்.நீங்க நிச்சியமா குழந்தை கையை சரி பண்ணி விடுவீங்களா” என்று சந்தேகத்துடன் கேட்டான்.டாக்டர் சிரித்துக் கொண்டே” ராஹூல்,நீங்க அந்த பத்தாயிரம் ரூபாயை இந்த ‘டேபிள்’ மேலே வையுங்க.நான் குழந்தை கையை சரிப் படுத்தி விடுகிறேன்.குழந்தைக்கு கை சரியாகி விட்டது என்று உங்களுக்கு திருப்தி இருந்தா நீங்க குழந்தையை எடுத்துக் கிட்டுப் போங்க.நான் பத்தாயிரம் ரூபாயை எடுத்துக்கிறேன்.உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டா.நீங்க குழந்தையையும்,’பத்தாயிரம் ரூபாயையும் எடுத்துக் கிட்டுப் போங்க.எனக்குப் பணமே வேண்டாம்” என்று அடித்து சொல்லவே ராஹூல் “சரி டாக்டர்” என்று சொல்லி விட்டு பத்தாயிரம் ரூபாயை ‘டேபிள்’ மேலே வைத்து விட்டு குழந்தையை அவர் சொன்ன இடத்தில் விட்டு விட்டு, ரெண்டு பேரும் சந்தேகத்துடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

டாக்டர் அந்தக் குழந்தை முன்னால் நின்றுக் கொண்டு தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த கனமான தங்க செயினை கழட்டி குழந்தை வலது கை கிட்டே ஆட்டினார். உடனே அந்தக் குழந்தை தன் வலது கையைத் திறந்துக் கொண்டு அந்த செயினைப் பிடிக்க எட்டியது.அப்போது அந்த குழந்தையின் திறந்த வலது கையில் ஒரு தங்க மோதிரம் கீழே விழுந்தது. ஆனால் அந்தக் குழந்தை தன் கையை முழுக்கத் திறந்துக் கொண்டு டாக்டர் காட்டிக் கொண்டு இருந்த செயினை எட்டி எட்டிப் பிடிக்க முயற்சி பண்ணிக் கொண்டு இருந்தது ராஹூலுக்கும் மோனிகாவுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.அவர்கள் ரெண்டு பேரும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ டாக்டர்,ரொம்ப ‘தாங்க்ஸ்’ டாக்டர்” என்று சொல்லி விட்டு குழந்தைக்கு மாறி மாறி முத்தம் கொடுத்தார்கள்.

டாக்டர் மெதுவாக “நான் இப்போ அந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாமா” என்று கேட்டதும் ராஹூல் டேபிள் மேலே இருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து நன்றி உணர்ச்சியோடு டாக்டர் கிட்டே கொடுத்து விட்டு “ டாக்டர்,நான் உங்களை ஒன்னு கேக்கட்டுமா” என்று தயங்கி தயங்கிக் கேட்டான்.

டாக்டர் “தாராளமாகக் கேள் ராஹூல்” என்று சொன்னதும் ராஹூல் “ டாக்டர்,எப்படி நீங்க என் குழந்தை கையை திறக்க வச்சீங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு டாக்டர்” என்று கேட்டான்.அதற்கு டாக்டர் சிரித்துக் கொண்டே”ராஹூல், நான் உங்களை பார்த்து ‘நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை செஞ்சுகிட்டு வரிங்க’ ன்னு கேட்டப்போ, நீங்க ரெண்டு பேரும் நீங்க செஞ்சு வர ‘தொழிலை’ சொன்னபோதே எனக்கு நல்லா புரிஞ்சி விட்டது.உங்க குழந்தைக்கும் நீங்க செஞ்சு வர ‘தொழில்’ நுணுக்கம் அவள் ரத்தத்திலே ஓடிக் கிட்டு இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் மூடின கையில் இருக்கும் மோதிரத்தை விட இன்னும் கொஞ்சம் விலை உயர்ந்த தங்க செயினைக் காட்டின போது,அவன் அந்த தங்க மோதிரத்தை கீழே போட்டு விட்டு, விலை உயர்ந்த என் தங்க செயினைப் பிடிக்க கையை எட்டினாள்” என்று சொன்னதும் இருவரும் ஆச்சரியப் பட்டார்கள்.

டாக்டர் தொடர்ந்து “உங்க குழந்தை பிறக்கும் போது,பிரசவம் பார்த்த நர்ஸ் விரலில் போட்டுக் கொண்டு இருந்த தங்க மோதிரத்தை அவளுக்குத் தெரியாம ‘அபேஸ்’ பண்ணி இருக்கா. உங்க தொழிலுக்கு இவள் ரொம்ப ஏத்தவ.பிறக்கும் போதே நீங்க சொல்லிக் கொடுக்காமலே உங்க குழந்தை உங்க ‘தொழிலை’ நல்லா கத்து கிட்டு இருக்கா. நீங்க அவனுக்கு உங்க ‘தொழிலை’ அவளுக்குக் கத்து கொடுக்கவே வேண்டாம்.அவள் பிறக்கும் போதே ‘தொழிலை’க் கத்துகிட்டா. அவ தொழிலில் ரொம்ப தேறி விட்டா.‘கங்கிராட்ஸ்’ “என்று சொல்லி ராஹூல் கையைப் பிடித்து குலுக்கினார் டாக்டர்.ராஹூல் மோனிகா ரெண்டும் டாகடர் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப் பட்டார்கள்.

கூடவே டாக்டர் தங்கள் குழந்தைகை சரியாகி,அந்தக் குழந்தை ‘உங்க தொழிலிலே ரொம்ப தேறி விட்டா’ என்று சொன்னதை நினைத்து சந்தோஷப் பட்டார்கள்.

Print Friendly, PDF & Email

4 thoughts on “‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…

  1. வேறே என்ன முடிவு வேணும் தலைவா !!
    முன்னாடி பாத்தா எல்லா மருத்துவர்களும் அவங்க மருத்துவ படிப்பை உபயோகப் படுத்தினாங்க
    முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
    ஆனா கடைசியாக பாத்தவர் மூளையே உபயோகப் படுத்தினார்.
    ஜெயிச்சார் 1௦௦௦௦ ரூபாய் ????? ஆஹா ஆஹா ஆஹா

  2. சரியாய் முடிக்க என்ன இருக்கு தலைவா .எல்லா டாக்டர்களும் கையை விரிசசி விட்ட பிறகு இந்த டாக்டர்
    தான் குழந்தையின் அப்பா அம்மா பண்ணி வந்த தொழிலைக் கேட்டு விட்டு அந்த குழந்தையின் கையை சரி படுத்தி இருக்கார்.
    இதே செய்ய அவர் டாக்டர் படிப்பு உதவ வில்லை.
    அவர் மூளையை உபயோகப் படுத்தி அநியாயத்துக்கு
    1௦௦௦௦௦ ரூபாயை தட்டிக் கிட்டுப் போய் இருக்கார்!!!!!!
    இல்லையா சொல்லுங்க தலைவா???

  3. Itha oru thiruttu family padicha enna pannuvanga. Malum thangalathu thozhilai thodarvanga. Pazhaya kathaiyanalum sariya mudichinga na nalla irukkum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *