தூரங்களின் விளிம்புகளில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 6,066 
 

தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே…

பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற கொரியர் ஆபீஸ்,என்கிற கை கோர்ப்பி லும் சங்கிலிப்பிணைப்பிலும்தான் அவனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன்.

அவன் எங்கிருந்து வந்தான் என்பது தெரியவில்லை.. பின்னாலிருந்து பார்த்த பொழுது அவன் போல் தெரியவே அமர்ந்திருந்த இரு சக்கர வாகனத்திலிரு ந்து சற்று சாய்ந்து இடது பக்கமாக கை ஆட்டுகிறேன். அவன் கவனித்த தாகத்தெரியவில்லை.

புது பஸ்டாண்டிற்கு எதிர்த்தாற் போலிருக்கிற டீக் கடையில்தான் டீ சாப்பி ட்டுக்கொண்டிருந்தான் வடையுடன் சேர்த்து/

நண்பர் பாண்டியன் அறிமுகம் செய்து வைத்த கடை. எப்பொழுதோ ஒரு மெல்லிய தூறலுடன் கூடிய மழை நாள் ஒன்றின் இளமாலை வேளையாக பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது காலியாகிப்போன பெட்ரோலை இட்டு நிரப்ப பாலத்தின் அருகிலிருந்த பெட்ரோல் பங்க் சென்ற பொழுது எனது இருசக்கர வாகனத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தது நண்பர் பாண்டி யனின் வண்டியாக இருந்தது.

பார்க்க பளிச்சென்றும், மெலிதான இசையுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை நகரில் வேறெங்கும் பார்த்து விட முடியாது.அவர் வைத்திருந்த இரு சக்கர வாகனம் இப்பொழுது தயாரிப்பே கிடையாது.ஆனாலும் பளிச்சென துடைத்து வைத்த குத்து விளக்கைப் போல வைத்திரு ப் பார், அதற்காக திரி சொருகி தீ பொருதி வைத்து தொட்டுக் கும்பிட்டு விட முடியாது.

அவர் அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.இசையென்றால் அவ்வளவு பிரியமா, இரு சக்கர வாகனத்தில் இசையை அடை கொண்டு செல்கிற அளவிற்கு என்றால் சிரிப்பார் பெரிதாக…

அந்த பெரிதான சிரிப்பிற்கு அடுத்த அவரது வார்த்தை ”வாருங்கள் டீ சாப்பிடலாம்” என்பதாகவே இருக்கும்.

மெல்லிய பூனை மயிர்களடர்ந்த அவரது கை கோடிடும் கடை பெட்ரோல் பங்கிற்கு எதிர்தாற் போலவே இருக்கும் பெரும்பாலான நேரங்களில்.

அது அல்லாது வேறு ஏதாவது கடைக்கு அவர் அடிக் கோடிடுகிறார் என்றால் அது புது பஸ்டாண்ட் கடந்து ரயில்வே லைனின் அருகிலிருக்கிற கடையாகத் தான் இருக்கும். ஓடுகிற ஓட்டத்தில் சாலையின் ஓரம் இடது புறமாய் கொஞ் சம் உள்வாங்கி புது வாசனையுடன் இருக்கிற ஊதாக்கூரை வேயப்பட்டக் கடை.

பார்க்க நன்றாக அச்சுப்பிசகாமல்,அதது அதனதன் இடத்தில் மிகச் சரியாக அளவெடுத்தது போலும் மிகச்சரியாக அடுக்கி வைத்து அளவெடுத்தது போலவுமாய் இருக்கிற கடைக்கு அவ்வள வாய் ஆட்கள் போக மாட்டார்கள்.

எதிர்த்தாற்போல் சுடுகாடு.இத்தனை நாளாய் எனக்குத் தெரியாது அது. ஒரு நாள் தற்செயலாய் அந்தக்கடையில் டீக்குடித்துக் கொண்டி ருக்கும் பொழுது தான் கவனிக் கிறேன்.”அட ஆமாம் இதுதான் விஷயமா என கடைக் காரரிடம் கேட்ட பொழுது ஆமா சார் விபரமில்லாம வந்து கடை போட்டுட்டேன்,இந்த கடைக்காக செலவழிச்ச காசுகூடபோகட்டும்.இந்த தகரசெட்டக்கூட பிரிச்சிக் கொண்டுபோயிறலாம்.குடுத்தஅட்வான்ஸக்கூடதிருப்பக்குடுத்துரேன்னுட்டாரு கட்டட ஓனரு.ஆனா எனக்குத்தான் வேற எங்க போயி கடை போடுறதுன்னு தெரியல.வேற எதத்தொட்டாலும் போட்டியாத் தான் இருக்கு. எனக்கு இந்த டீ ஆத்துறத விட்டா வேற தொழில் தெரியாது. ஒரு கடையில கேட்டு வச்சிருக்கேன் டீ மாஸ்டர் வேலைக்கு,கெடச்சா பேசாம கடைய மூடிக்கிட்டு போயிற வேண்டியதுதான், கடையக்கட்டிக் கிட்ட நட்டப்படுறத விட பேசாம சம்பளத்துக்கு இருந்துட்டுப்போயிரலாம்” என்றார்.

அரை வெள்ளைக்கலரில் பேண்ட்டும்,வெளிர் ஊதாக்கலர் சட்டையும் நண்பர் பாண்டியனுக்கு நன்றாக இருந்தது. அவர் இது போல் உடைகள் உடுத்தி நான் பார்த்ததில்லை. பார்க்கிற நேரங்களிலெல்லாம் அடர்க்கலர் சட்டையும் பேண்ட்டும்தான் அணிந்திருப்பார்.தவிர உடைகளின் நிறம் குறித்து அவ்வளவாய் சிரத்தை கொண்டவராய் தெரிய மாட்டார்.அவரது இசை,அவரது மென் நிற உடை அவர் டீக்கடைக்கு கேடிட்ட அவரது மயிரடர்ந்த கையின் அசைவு,,,, என எல்லாம் கவனித்தவாறு அவரது பின்னாலும் அவரது பக்க வாட்டிலு மாகச்செல்கிறேன் இரு சக்கர வாகனத்தை உருட்டியவாறே…

ஆளுக்கொருவடை டீ என சாப்பிடலாம் என நினைத்திருந்தேன் நான். ஆனால் நண்பர் அதைத்தடுத்து ஆளுக்கு இரண்டு வடைகள் சொன்னார், சமீபமாக டீக்கடைகளில் போய் இரண்டு வடைகள் வாங்கி சாப்பிட்டதாய் இப்போ தைக்கு ஞாபகம் ஏதும் இல்லை.

கடைக்காரர் வடைப்பெட்டியிலிருந்து இரண்டு இரண்டு உளுந்த வடைகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் தட்டில் வைத்து சட்டினியும் சாம்பாரும் கலந்து ஊற்றிக் கொடுத் தார்.

பிய்த்துப்போட்டுச்சாப்பிடவும் தொட்டுச்சாப்பிடவும் நன்றாகத் தான் இருந்தது.

நண்பர்தான்சொன்னார்,கிழமைக்குஒருசட்னியும்கிழமைக்கு ஒரு வடையு மாகப் போடுவார்கள் என…

தேங்காய்ச்சட்னியும் உளுந்த வடையும் எல்லாக் கிழமை களிலும் நிரந்தரம் என்றார்.

மல்லிச்சட்னி ஒரு நாள், தக்காளிச் சட்னி ஒரு நாள். புதினாச்சட்னி ஒரு நாள்,துவரம்பருப்புசட்னி ஒரு நாள்,சாம்பார் ஒரு நாள் ,,,எனவும் பருப்பு வடை உளுந்த வடை,,,தவிர்த்து வெங்காய வடை,கீரை வடை,காய்கறி வடை கேப்பை வடை,,,,எனவுமாய் தினசரி ஒரு டிஸ்ஸில் கலக்குவார் என்றார்.

அங்கு நின்று டீசாப்பிடும் போது எதிர்தாற் போல் இருக்கிற பஸ்டாண்டதான் காட்சிப்பொருளாய் இருக்கும். சென்ற மாதத்தின் மாலை கவியும் நேரமாக அங்கு டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பஸ் வாசல் தாண்டி கொஞ்சம் உள்ளீடாக சலசலப்புக் கேட்டது, மெலிதாக ஆரம்பித்த சலசப்பு நேரமாக நேரமாக கொஞ்சம் அடர்த்தி சுமந்தும் சற்று நாரசமாயும் காதில் குத்தியது.சரி போய்ப்பார்க்கலாம்,முடிந்தால் தேவையைப்பொறுத்து ஆபத்பாந்தவனாக மாறலாம் என்கிற நினைப்பில் நானும் நண்பருமாக ச்சென்றோம் பஸ்டாண் டிற்குள்ளாக,/

அங்கேதான் பஸ் டிக்கெட் புக் பண்ணுகிற கவுண்டருக்குப் பக்கத்தில் ஒருவ ருடன் ஒரு பெண் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்,அந்தப்பெண்.

சப்தம் போட்டவளுக்கு முப்பதுக்கு மேல் இருக்கலாம் வயது,சப்தத்திற்கு இலக்கானவருக்கு நாற்பத்தைந்திற்கு மேல் இருக்கலாம்.

அவர்களுக்குள் என்ன எனத்ஹ்டெரியவிலை,அவர் யார் எனவும் ஏன் அந்தப் பெண் அவரை பிடித்து இந்த வாங்கு வாங்குகிறாள் என்பது புரியவில்லை.

”என்ன மறந்து போச்சா எல்லாம்,,,,புதுசா கை நீட்டுறீங்க ,, ,, அடிச்சிட்டா வெல கிப் போயிறுவேன்னு நெனைப்பா, நாங்க இருக்கோம் மொத்தமா ஜனங்க ஒழுங்கா மரியாதையா நேத்து அனுப்பிச்சி வச்ச யெடத்துக்கான காசக் குடுத் துட்டு யெட்டத வுட்டு நகரு சொல்லிப் புட்டேன்,இதுக்கு மேல ஏன் மேல கைய வச்ச மானம் மரியாதை எல்லாம் கெட்டுப்போகும் பாத்துக்க, வேற வழியத்துதாய்யா இந்த பொழப்புக்கு வர்றோம், வேற தெரிஞ்ச ஆள் தொண இல்லாதப்ப ஒண்ணைய மட்டும் தானய்யா நம்பித்தான இந்த பொழப்புக்கு வந்தேன், ஒன்னைய ஏங் புருசனுக்கு மேல நம்புனேனேயா, நீயி போகச் சொன்ன யெடத்துக்குப் போனேன், வரச் சொன்ன யெடத்து வந்தேன் ,குதிக்கச் சொன்ன பள்ளத்துல கண்ண மூடிக் கிட்டுக்குதிச்சேன். ஏறச்சொன்ன மேட்டுல ஏறி நின்னேன்,இது வரைக்கும் நீயி ஏங் இப்பிடி சொல்ற எதுக்காக என்னைய இப்பிடி பாடாப்படுத்துறயின்னு ஒரு வார்த்த கேட்டுருப்பேனா,,,,,அது கூட போனாபோயிட்டுப் போகுது ஏதோ பொழப்புக்காக கை காட்டுற மனுசன் என்னத்தையோ கருப்பட்டி பானைக்குள்ள கைய விட்ட கதையா கொஞ்சம் சாப்டுட்டுப் போறைன்னு நினைச்சா நீயி ஏன் பொழப்ப முழுசுமா அழிக்க நினைச்சையின்னா சும்மா விட்ருவேனா ஒன்னைய,இனிம நான் இதுல இருந்து போனாலும் ஏங்கிட்டுப்போயி என்ன வேலை செஞ்சி பொழச்சி ஏங் குடும்பத்தக்காப்பாத்துவேன் சொல்லு,ஏங் வீட்டுல ஆள் கணக்குன்னுஒன்னு இருக்கு புருசன்ங்குற பேருல,அது சம்பாதிக்கிற சம்பாத்தியம் அதோட கூத்தியா வீடு,அதுக்கு ஆஸ்பத்திரிச் செலவுன் னு சரியாப்போகுது, வீட்ல ஆம்பள ஒழுங்கமா இருந்த நான் இப்பிடி பொழப்பத்து தொண்ணாந்துட்டுத் திரிறேன் சொல்லு,நீயி பெரிய இவனாட்டம் ஆட்டய களக்கப் பாத்தியின்னா எப்பிடி,,கொஞ்ச நாளா ஒருத்தி மினிக்கிட்கிட்டே சுத்திக்கிட்டுதிரியிறா அவள வளச்சிப் போட்டுறலாம்ன்னு பாத்துட்ட,,,என்னைய விட்டுட்டு,,,, ”என்றாள்,

”இல்லம்மா அப்பிடியெல்லாம் ,,,,,என அவர் எவ்வளவு தான் சமாதானம் சொல்ல முயன்ற போதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவள். இத்தனைக்கும் அவளது சொந்தக்காரன்தானாம் அவர்.அவர்தான் இவளை இவ்வழிக்கு பழக்கப் படுத்தியிருக்கிறார் என்றாள்.

எல்லாம் முடிந்து கடைக்கு வந்து இன்னொரு டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கை யில் அந்தப்பெரியவர் வந்தார்,நாந்தான் கேட்டேன் மெதுவாக,என்ன அண்ணே என்னாச்சி ஏங் இவ்வளவு தூரம் சப்தமாகிப்போச்சி,,, எனக் கேட்டதற்கு அவ சொன்ன விளக்கமாய் இதுதான் தெரிய வந்தது.

”இல்லப்பா பெரிசா ஒண்ணும் இப்ப துப்பாக்கி தூக்கி சண்ட போட்றல நாங்க என்ன ஆள்க கூட்டமா நிக்குறயெடத்துல நடந்தததால பெரிய விஷயமா தெரிஞ்சிருச்சி,

அவ வேற யாரும் இல்ல,ஏங் சொந்தக்காரப்புள்ளதான், எங்க ஊருதான், ரெண்டு பேரும் பக்கத்துப்பக்கத்து வீடு கூட,அவளுக்கு சின்ன வயசுல வேற ஒருத்தன் மேல பிரியம் இருந்துச்சி,அவன் இல்லாத வீட்டுப் பையன், என்ன செய்ய வீட்டுல இந்த பொண்ண அமட்டி சத்தம் போட்டு வசவா வஞ்சி பேச்சா பேசி இவுங்க அப்பன் ஆத்தா நாங்க சொல்ற பையனுக்கு வாக்கப்படலைன்னா தீய வச்சிக்கிட்டுசெத்துப் போவோம்ன்னு மெரட்டி காரியம் சாதிச்சிட்டாங்க, பெறகு என்ன செய்வா பாவம் மனசுக்குப் பிடிக்காதவனோட ரெண்டு பெத்துக் கிட்டுதான் குடும்பம் நடத்துனாதா,ஆனா இவ புருஷன் காரன் வேற ஒருத்தி கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தான்,

இது கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்துருக்கு, அப்பறம் என்ன யெழவு பேசாம இருந்துருக்க வேண்டியதுதானேன்னு கேட்டா இந்தப்புள்ளயோட அப்பன் ஆத்தா சொன்னாங்க கல்யாணம்முடிஞ்சா சரியாகிப்போகும்ன்னு நெனைச்சோம்ன்னு வம்படியா முடிச்சி வச்ச கல்யாணத்துல இதுதா ஆச்சி இவ இப்பிடியும் அவன் கூத்தியா வீடே தஞ்சம்ன்னு கெடக்கவும் சரியாப் போச்சி ,

அதுக்குபல காரணங்கள அடுக்குறாங்க,இவளோட வீட்டுக் காரந்தான் இவளை இந்தப்பழக்கத்துக்கு ஆளாக்கி விட்டான்னு வேற பேசிக்கிறாங்க,எது எப்பிடி யோ இப்பிடி ஆகிப் போச்சி பொழப்புன்னு ஏங்கிட்ட வந்து அழுதா,நாந்தான் அவள இப்ப கூட்டிகிட்டு வந்து போயிக்கிட்டு இருக்கேன்,,,,,,”என்றார்,

அந்தக்கடைக்குப்போகிற நாளன்றின் முடிவுகளில் அல்லது ஆரம்பத்தில் இது போலான நிகழ்வுகளை பார்ப்பதுண்டு.

அந்தக்கடையில் டீ சாப்பிட்டு விட்டு வந்து கொண்டிருக்கும் போது தான் பார்க் கிறேன் அவனை.

நான் ஆட்டிய கையை அவன் பார்த்தானா இல்லையா தெரியவில்லை.முன் சென்ற அவனதுஇரு சக்கர வாகனத்தை எவ்வளவுதான் வேகமாய் பின் தொட ர்ந்த போதும் அதை எட்ட முடியாமல் கிலோ மீட்டர்களின் முடிவில் எட்டித் தொட்டுவிடுகிறேன் கொரியர் ஆபீஸ் அது தாண்டி வந்து விடுகிற ட்ராபிக் சிக்னல்,பர்மாக் கடை,பஜார் முக்கு ,,,,என்கிற அடுக்கில் அவனுக்குச் சொன்ன வணக்கத்தின் விசையுடன்…

பாகம் 2

பூத்துக்காய்த்துத்தொங்குகிற கிளைகளின் அடர்வுகளிலும் அது காட்டுகிற இலைகளூடு மாய் கூடு கட்டி அடைகாத்து குஞ்சு பொரித்து உயிர் வாழ்கிற பறவைகள் யாவும் சொ ல்வதில் லை.தாங்கள் வசிக்கிறஇருப்பிடம் தூரம் என,,,/ தவிர அவை பறப்பதையும், தனது இறகுகளின் அசைவுகளை மட்டுமே நம்பியுள்ளன.

அப்படியாய் தோற்றம் கொண்ட பறவைகளின் வசிப்பிடமான மரங்கள் எதில் அழிகிற தோ இல்லையோ நகரங்களுக்குள்ளாகவும், கிராமச் சாலை ஓரங்களிலும் விரிவு படு த்தும் போது அகற்றி விடுகிறார்கள் முதல் காரியமாக

ஒரு ரூம் அட்டாச்ட் பாத்ரூமுடனாய், தவிர்த்து ஒரு பாத்ரூம் லெட்ரின் என கட்டி விடலாம், கையிலிருக்கிற கொஞ்ச நஞ்ச காசை வைத்தும் தேவைப்பட்டால் கடன் வாங்கியுமாய் என்கிற யோசனையுடன் இருந்த நாட்களில்தான் மாப்பிள்ளை மூணா ராணாவை பார்க்க நேர்ந்து விட்டது யதேச்சையாக,

”என்ன மச்சான் வீட்டு வேலைய பாக்கப் போறிங்களாம்ல,கேள்விப்பட்டேன்,என்றபோது ஆமா மாப்ள,புள்ளைங்க வளந்து நிக்குதுங்க,எங்களுக்காக இல்லைன்னாலும் புள்ளைங் களுக்காக பாக்க வேண்டியிருக்கு பெரியவ இப்பயே மூஞ்ச மூஞ்ச பாக்குறா தனியா இருக்க முடியல, வீட்லஒரு பிரவேஸி வேணுமில்ல,அது இல்லாதப்பா எப்பிடி ஒரு வயசுப்புள்ள,,,,,ன்னு சொல்றப்ப சங்கடமா இருக்கு, சின்ன மகனும் அவ கூட சேந்து க்கிறான்.அதான் பாத்தேன்,சரி யெடம்கெடக்குள்ள ஒரு ரூம் யெக்ஸ்ட்ரன் பண்ணீரு வோன்னு பாத்தா அது செப்டிக் டேங்கு, லெட்ரின் பாத்ரூம், எக்ஸ்ட்ரா, எக்ஸட்ரான்னு வளந்து நிக்குது, என்ற என் பேச்சைக்கேட்ட மாப்பிள்ளை அப்பன்னா கையில வச்சிருக்குறதுகாணாதபோது நகை நட்ட வச்சித்தான ஆகணும், ஏந்தக்கச்சி கழுத்துல காதுல கெடக்குறது அடகுக்குப் போயிரும். அப்பிடித் தான என்றவனை இடை மறித்து ஆமா பெரிய ரொக்கப் புள்ளியப்பா,போன வருசம் நீயி மசுராண்டி வீடு மராமத்து வேலை பாத்தப்ப ஏந்தக்கச்சி மூக்குத்தியக்கூடவுட்டு வைக்கலையே,,,,,,அந்த மூக்குத்தி தான் அவளுக்கு பொருத்தமாயிருக்கும். அதையும் புடுங்கிக்கொண்டோயி வச்சிறய லா நீயி,,,,,, இப்ப வந்துட்டு என்னமோ பெரிசா பேச வந்துட்ட என்ற என்னை இடை மறித்து அட போ மச்சான் அதை ஏன் கேக்குற கொடுமையிலும் கொடுமை,கையில இருக்க காசெல்லாம் போட்டு வீட்டு வேலை பாத்து பாத்துட்டு எந்திரிச்சி நின்னப்ப தான்அடுத்தபத்து நாள்ல பொங்கல் திருவிழா வந்துருச்சி,என்ன செய்யிறதுன்னு கைய ப்பெசஞ்சி நின்னப்ப ஓங்தங்கச்சி மூக்குத்திய கழட்டி கையில குடுத்தா, அதக்கொண்டோயி பேங்குல வச்சப்ப அவுங்க கல்லுக்குன்னு கழிவு போக மிச்சம்ன்னு சொற்பத்தொகை ஒண்ணக் குடுத் தாங்க,அதான் அந்த வருசம் தைப்பொங்கல கொண்டாட ஒதவுச்சி,ஓந்தங்கச்சி மூக்குத்தி தான் எங்க எல்லாரு மானத்தையும் காப்பாத்துச்சி மாப்ள,,,, இல்லைன்னா அந்த வருசம் பொங்கலுக்கு கரும்பு கூட வாங்கீ ருக்க முடியாது.”ஆமா என்றான்.

அங்க ஆரம்பிச்சவீடு நெல கொண்டு முடிஞ்சிருச்சி,இங்க இனிமேத்தான் எல்லாம்மு டிய ணும் மாப்ள,அப்பிடி ஆகுற அந்த நேரத்துல கம்மல் என்ன மூக்குத்தி என்ன, எல்லாம் கலந்து போறதுதான் என்ற என்னை ஏறிட்டவன் ஒனக்கு என்ன மாப்புள கவர்மெண்டு வேலைக் காரன். நான் என்னதான் ஏக்கரா கணக்குல வச்சிருந்தாலும் தெனக் கூலிக்காரந்தான” எனச் சொல்லிவிட்டுப்போனான்.

அன்று இருவரிலுமாய் காலூன்றிய அந்தப்பேச்சு துளிர்த்து நின்று வேர்விட்ட போது நல்ல கொத்தனாரை பார்க்க வேண்டுமே என்கிற எண்ணம் துளிர் விடாமல் இல்லை. நல்ல கொத்த னாரும் நல்ல தச்சாளும் அமைந்து விட்டால் வீடு கட்டுகிற நாட்களில் ரொம்ப பாக்கியவான் நீங்கள் என்பார் நண்பர்.

நான் பாக்கியவானா அபாக்கியவானா என்பது இன்னும் சிறிது நாட்களில்வேலை ஆரம்பிக்கிற போது தெரியும்,அதன் படியே நடந்து கொள்ள வேண்டியதுதான்.அதன் படியேசிறிதுநாட்கள்கழித்துக்கொத்தனாரைக்கூப்பிட்டுசாமிகும்பிட்டுவிட்டு அவருக்கு தட்சணை கொடுத்து முடித்த உடன் அவர் சொன்ன முதல் வார்த்தை வானம் வருகிறது இந்த இடத்தில் மரத்தை ஒட்டி,ஆகவே வெட்டி விடுங்கள் அதை முதல் வேளையாக என்றார்.கையோடு நாளை ஆள் அனுப்புகிறேன் இரண்டாவது சிந்தனைக் கெல்லாம் இடம் வைக்காமல் முடித்து விடுங்கள் என்றார்.

மரத்தை வெட்டி விட்டு வானம் தோண்ட வேண்டும் என கொத்தனார் சொன்ன இடத்தில் லெட்ரின்வருகிறது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மழை நாளின் மாலை வேளை யாக உசிலம்பட்டி கார்டனில் போய் வாங்கி வந்த வேப்ப க்கன்று பதினைந்து ஆண்டுகள் கழித்துமண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை பாவி நெடித்து ஓங்கி பூவும் பிஞ்சுமாய் காட்சிப் பட்டு நிற்கையில் பூப்பத்தெல்லாம் காய்ப்பதற்குத்தானானாலும் காய்த்துப்பழுத்து கனி கொடுத் தவை ஒரு நாளில் வீழ்ந்து விடுமோ இந்தமண்ணில்எனஅந்த மரத்தை வெட்டிய நாளில் இவனுக்கு கண்ணில்நீர் துளிர்த்து விட்டதுதான். சின்னவனானாள் இந்த மரத்தை விட்டு விட்டு வானத்தைத் தோண்டுங்கள் என்றான்.சரி பரவாயில்லை அப்படியே செய்து விடுவோம் என அவனை ஏமாற்றி பள்ளிக்கு அனுப்பி விட வேண்டியதாகிப்போகிறது.

வேர்களும்கிளைகளும்இலைகளும் பூக்களும் காய்களும் கனிகளும் ஊடு பாவி நெச வோடியிருந்த பந்தத்தை பிரித்த வருத்தம் ஒரு வாரம் வரை இருந்தது கழிவிரக்க ப் பேச்சுடனும் நடவடிக்கையுடனுமாய்,

இவனது கழிவிரக்கத்தில் அவன் மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து ஜனனம் எடுத்த பறவைகளும், மரத்தின் மீதாய் நெளிந்து திரிந்த புழுக்களும் இன்னபிற ஊடாடிய ஜீவன்களும் நீண்ட நாட்க ளாய் கனவில் வந்து போனது.

புழு வந்த கனவும் பூச்சி வந்த கனவும் ஒவ்வொரு நாட்களின் நகர்விலும் ஒவ்வொ ன்றும் இவனை உறங்க விடவில்லை.

பின் வீட்டுக்காரி கூட கேட்டாள் எதுக்கு இப்ப மரத்தப்போயி வெட்டுறீங்க என,

அவள்கயலூர்க்காரி,இங்கு வாக்கப்பட்டு வந்தவள். பிழைப்பற்ற சுடுகாடான தேசம். மண்ணைத் தவிர மற்றதெல்லாம் குற்றம் பூசி வைக்கப்பட்டிருந்த பழக்கம் கொண்ட ஊர் அது.

ஆண்கள்பக்கத்து ஊர் கடைகளுக்கு கூலியாய் போனபின் பெண்கள் வீட்டை பார்த்து க்கொள்ள வேண்டிய கட்டாயம் கொண்ட ஊராயும் பிழைக்கக்கதியற்ற பூமியில் பின் வீட்டுக் காரியின் அப்பாவும் இரண்டு அண்ணன்களும் வேலை பார்த்த மில்லில் அடி தடிக்கும் போலீஸ் கேஸீற் குமாய் ஆள்அனுப்பும் போது அவர்கள் வேலை பார்த்த கடையின் முதலாளி கொலைக் கேஸ் ஒன்றில் கோர்த்து விட்டு விட்டார் அண்ண ன்கள் இரண்டு பேரையும் வேறு ஒரு வீட்டிற்கு கூலியாய் போன வேலையாள் அந்த வீட்டில் தனியாக இருந்த பெண் போட்டிருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவளைத்தீர்த்து விடுகிறான்.தீர்த்தவன் தயவு காட்டும் பெரும் புள்ளியிடம் போய் தஞ்சம் அடைந்து விடுகிறான்.அந்த பெரும் புள்ளிக்கு அவன் தான் சகலமும் சப்ளை அண்ட் சர்வீஸ்.

அந்தசகலத்தையும் அனுபவித்த ஒருவராயும் அண்ணன் தம்பிகள் இரண்டு பேரையும் கொலை கேஸீற்கு கொடுத்தவராயும் அவர்கள் வேலை செய்த மில்லின் முதலாளி இருந்தார்.

சரி என ஒத்துக்கொண்டாலும் இது நாள்வரை சின்னச்சின்ன திருட்டு அடிதடி என போலீஸ் ஸ்டேசன்,கோர்ட் என போய் வந்தவர்கள் கொலைக்கேஸ் எனவும் யோசித்தபடி பின் வாங்கி விட்டார்கள். முதலாளியிடம் ஒத்துக்கொண்டு போனவர்கள் அவரது வக்கீலின் உதவியாளர் யோசனைப்படி கையில் சிக்கியதை அள்ளிக்கொண்டு ஊரை விட்டு காலி செய்து கொண்டு இங்கு வந்து விட்டார்கள்.இந்த யோசனையை ச்சொன்ன வக்கீலின் உதவியாளருக்கு கோயில் கட்டிக்கும்பிடத்தான் வேண்டும் இவ ர்கள்.

“டேய் இப்பிடியே இருந்தீங்கின்னா எப்பிடி,எத்தன காலம் இப்பிடி அலைவீங்க, ஒங்க ளுக்கும் கல்யாணம் காச்சி புள்ளகுட்டி குடும்பன்னு ஆக வேண்டாமா,ஏண்டா போயிக்கிட்டு வம்ப இழுத்து மடியில கட்டிக்கிட்டுத் திரியிறீங்க,,,,,,என உண்மையை உணர்த்தி அவர்களை இங்கு அனுப்பி வைத்தபின் இங்கேயே செட்டில் ஆகி திருமண மும் செய்து வைத்து விட்டார்கள் தங்கைக்கு,

அவர்களும் ஆளுக்கு ஒரு ஸ்பின்னிங்க் மில்லில் வேலையாக இருக்கிறார்கள், அவர்க ளது அம்மா சிவகாசி ரோட்டிலுள்ள பஞ்சுக்கிடங்கில் வேலைக்குப்போகிறார்,அவர்களது அப்பா ஏ.டி.மில் செக்யூரிட்டியாக இருக்கிறார்,

மகள் வீட்டிலேயே ஒரு சின்ன ரூமில் அவருக்கென தங்க தூங்க என ஒதுக்கியி ருந்தார்கள். அவரது மருமகனும் அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டார்,அவரது சின்ன வயதிலேயே அவரது அப்பா இறந்து விட்டதால் அந்த பாசம் என சொல்லவா வேண்டும்,,,,? பாசம் ஒரு பக்கமாய் இருந்த போதும் ஆயிரம் இருந்தாலும் மகள் வீடுதானே ஓசிக்கஞ்சி அல்லவா நாம் சாப்பிடுவது ஒட்டுமா உடலில்,முடிந்தவரை தனியாளாய் ஓடிக் கொண்டிருப்போம் முடியாத போது வந்து இங்கு படுத்துக்கொ ள்ளலாம் என முடிவெடுத்த நாட்களின் இரண்டு பகல் பொழுதுகளிலேயே வீடொன்றை ப் பார்த்து விட்டார்கள்,

அவர்கள்பார்த்தவீட்டில்பால் காய்ச்சி குடியேறிய நாளன்றுதான் இப்படிக்கேட்டாள் பின் வீட்டுக்காரி,இவனும் சொல்லி சமாளித்தான் முடிந்தவரை,ஆனால் அவள் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை.

பூத்துக்காய்த்துத்தொங்குகிற கிளைகளின் அடர்வுகளிலும் அது காட்டுகிற இலைக ளூ டுமாய் கூடுகட்டி அடைகாத்து குஞ்சு பொரித்து உயிர் வாழ்கிற பறவைகள் யாவும் சொல்வதில்லை. தாங்கள் வசிக்கிற இருப்பிடம் தூரம் என, தவிர அவை பறப்பதைத் தவிர்த்தும்,தனது இறகுகளின் அசைவுகளை மட்டுமே நம்பியுள்ளன. அப்படியாய் தோற்றம்கொண்ட பறவைகளின் வசிப்பிடமான மரங்கள் எதில் அழிகிற தோ இல்லை யோ நகரங்களுக்குள்ளாகவும், கிராமச் சாலை ஓரங்களிலும் விரிவு படுத்தும் போது அகற்றிவிடுகிறார்கள் முதல் காரியமாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *