துன்பம் கொஞ்ச காலம்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 7,104 
 

‘ஏய்” மூதேவி எங்கே போய் தொலைஞ்சே ! கர்ண கடூர குரல் அங்கு வா¢சையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது.

பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு காலையிலேயே ஆரம்பிச்சாச்சு இவரோட அட்டகாசத்தை, பாவம் அந்தக்கா என்னதான் பண்ணும் இவர் பண்ற தொல்லையை எப்படித்தான் சகிச்சுட்டு இருக்கோ! இதற்கு ஜெயாவின் கணவன் பாலாஜி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் பெரூமூச்சு விட்டான், அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன? இன்றைய நிலைமை எப்படி மனிதவாழ்க்கையை தலைகீழாய் புரட்டி போட்டுவிடுகிறது.

அந்த காலனியில் வா¢சையாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன, அனைத்தும் சிறு சிறு வீடுகளாய் இருக்கும், அனைத்து வீடுகளும் அதில் வசிப்பவர்கள்அனைவருக்கும் சொந்தமானதாக இருக்கும், ஏதோ அந்தக்காலத்தில் ஒரு பொ¢ய மனிதன் தன் தோட்டத்தில் வேலை செய்த அனைவருக்கும் இப்ப்டி ஏற்பாடு செய்து தனி தனியாகப் பதிவு பண்ணி கொடுத்துள்ளான், அதன் பயனாக இரு தலைமுறைகளாக தொடர்ந்து அந்த வீடுகளில் வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர்.

இன்று ‘மூதேவி” என்று அழைக்கப்பட்ட செல்வி,அப்படி அழைத்தவன் கணவன் ராமசாமி மூன்று மாதத்திற்கு முன்பு “அம்மா செல்வி” என்றுதான் அழைப்பான்,அப்படி அழைப்பதில்தான் அவனுக்கு ஆனந்தம். இவர்கள் திருமணம் முடித்து இங்கு வந்த பொழுது பாலாஜிக்கு பதினான்கு வயதிருக்கும், அந்த தெருவே அவர்களை கண் கொட்டாமல் பார்த்தது, அவர்கள் இருவரும் குடித்தனம் நடத்தியது கூட அந்த காலனி வாசிகள் குறை சொல்லாதவாறுதான் இருந்தது. பாலாஜியின் அப்பா அம்மா கூட அப்பொழுது இருந்தார்கள், இவனை தன் தம்பியைப்போல பார்த்தாள் செல்வி, பாலாஜி எப்பொழுதும் செல்வியையே அக்கா அக்கா என சுற்றி சுற்றி வருவான். ராமசாமி எப்பொழுதும் புன்சி¡¢ப்புடனேயே இருப்பான்,அவன் வேலை முடிந்து வரும்போது அவன் கையில் கட்டாயம் மனைவிக்கு பூவும் பாலாஜிக்கு திண்பண்டங்களும் இருக்கும்.

அந்த காலனியில் வசிப்பவர்கள் மிக சாதாரண வேலைக்கு செல்பவர்களாகவே இருந்தனர். ஒரு சிலர் சிறு சிறு கடைகள் கூட வைத்திருந்தனர், வா¢சை வீடுகளாய் இருந்ததால் ஒருவருக்கொருவர் அனுசரணையாகவே இருந்தனர், ஒரு சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் சண்டை பொ¢யதாகாமல் அங்குள்ள பொ¢யவர்கள் சமாதானப்படுத்திவிடுவர்.இந்த பதினைந்து வருடங்களில் பாலாஜியின் அப்பா அம்மா அவனை விட்டு தவறியபொழுது அவனை அனாதையாக நிற்க விடாமல் ஒரு ஆளாக்கி அவர்களே ஒரு ஜெயாவை பெண் பார்த்து ஒரு குடும்பதை உருவாக்கி கொடுத்தனர்அதில் முதலாவது நின்றவர்கள் இந்த ராமசாமி அண்ணனும் செல்வி அக்காவும் தான். செல்வி அக்கா கருப்பாக இருந்தாலும் நல்ல களையாகவே இருப்பாள், அவள் ‘கணவனை வைத்து பார்க்கும்பொழுது நான் அழகு கம்மி என்று அவளே சொல்வாள், ஆனால் அவள் கணவன் ராமசாமியோ செல்விதான் அழகு என்று அவளை விட்டு கொடுக்காமல் பேசுவான்.

அவர்கள் வருமானத்திற்கு தகுந்தவாறு வாழ்ந்த்தால் நிம்மதிக்கு எந்த குறையுமில்லை ஓன்றே ஒன்றைத்தவிர.! இந்த பதினைந்து வருடங்களில் அவர்களுக்கு வா¡¢சு என்று ஒன்று உருவாகாததால் அந்த கவலையே
அவர்கள் மனதை அ¡¢த்தது.ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள், இந்த இரு வருடங்களில் பாலஜியின் குழந்தையை தூக்குவதற்கு கூட அவர்கள் அஞ்சினர் ஜெயா ஏதேனும் சொல்லிவிடுவாளோ !.

ராமசாமி ஒரு நாள் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபொழுது பின்னால் வந்த மெட்டோடர் வேன் ஒன்று அவனை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.பின்னால் வந்தவர்கள் இவனை அவசர அவசரமாக மருத்தவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அதற்குப்பின் அவர்கள் படாதபாடுபட்டுவிட்டனர். வீட்டில் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய் காணாமல் போக ஆரம்பித்தது. கூலி வேலை என்பதால் வேலை செய்த முதலாளியும் கொஞ்சம் பணம்தான் கொடுத்தார்.அதுவும் மருத்துவ செலவில் கரைந்து போய்விட்டது. உடைந்து போன கை கால் எலும்புகள் ஒன்று சேர்ந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் ஆறு மாதம் பிடிக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.வேலைக்கு செல்வது தடைபட்டதால் வருமானம் நின்று போனது, செல்வி அக்கா பக்கத்து பங்களாக்களில் வீட்டு வேலை செய்ய போனாள்.அவர்கள் தரும் மிச்சம் எப்படியோ ஒரு வேளை பசிக்கு உதவியது.

தொடர் கவலைகளால் ராமசாமி அண்ணனின் முகம் இறுக ஆரம்பித்தது, செல்வி அக்காவின் முகம் தன் களையை இழந்தது.

“இயலாமை” “இல்லாமை”இவை இரண்டும் ராமசாமியின் குணத்தை மாற்றின, அதில் இந்த பதினைந்து வருடங்களில் குழந்தை இல்லாதது அவனை மேலும் உசுப்பேற்றியது, இதன் வடிகாலாக செல்வியை வசைபாட ஆரம்பித்தான்.

ஒரு ஆறுமாதம்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டால் சா¢ செய்துவிடலாம் என்று வைராக்கியமாக நம்பினாள் செல்வி, ஆனால் இவன் கேட்டால் தானே, தினமும் இவள் வேலைக்கு சென்று வரும் வரை காத்திருந்து அவளை வசைபாட ஆரம்பிப்பான். வேலைக்கு போய்வந்த களைப்பை விட இவனின் வசைபாடல்
செல்வியை சோர்வடைய வைத்த்து.வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களிடம் புன்னகைப்பாள். பாலாஜி கூட ஒரு நாள் கேட்டான் அக்கா உனக்கு கோபமே வரலயா? இன்னும் மூணுமாசம் அது முடிஞ்சு அவர் வேலைக்குன்னு வந்துட்டார்னா அவர் மனசு மாறுண்டா…நம்பிக்கை அவள் குரலில் ஒலித்தது.

ஒரு நாள் செல்வி களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள், காத்திருந்த ராமசாமி வழக்கமான வசைபாடலை ஆரம்பித்தான்,நின்றுகொண்டே இருந்த செல்வி தீடிரென அப்படியே மயங்கி சா¢ந்து விழப்போனாள், எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ ராமசாமிக்கு சட்டென பாய்ந்து அவளை தாங்கிக்கொண்டு மெதுவாக கட்டிலில் உட்காரவைத்து ஜெயா ஜெயா என சத்தம் போட்டான், அப்பொழுதுதான் வெளியே கிளம்பிக்கொண்டிருந்த பாலாஜியும், ஜெயாவும் ராமசாமியின் சத்தம் கேட்டு உள்ளே வந்தனர், செல்வியின் நிலையை பார்த்தவர்கள் உடனே அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அவசர அவசரமாக பக்கத்திலுள்ள
கிளினிக்குக்கு கொண்டு சென்றனர்.

கிளினிக் விட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி முகத்திலும்,ஜெயாவின் முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது, செல்வியின் முகத்திலோ வெட்கம், இவர்களை எதிர்பார்த்து பதைபதைப்புடன் காத்திருந்த ராமசாமி
இவர்கள் முகங்களை வியப்புடன் பார்த்தான், பாலாஜி ராமசாமியின் கைகளை பிடித்துக்கொண்டு அண்ணே நீங்க அப்பாவாகப்போறீங்க!ராமசாமி மகிழ்ச்சியுடன் செல்வியை பார்க்க அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்.
இவர்கள் இருவரும் சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என்று பாலாஜியும் ஜெயாவும் மெதுவாக நழுவினர்.”அம்மா செல்வி” நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த அவனின் குரலைக்கேட்ட செல்விக்கு டாக்டர் சொன்ன
ஆறுமாதத்தின் மிச்சம் இருக்கும் மூன்று மாதங்கள் மூன்றே நிமிடத்தில் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *