கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2013
பார்வையிட்டோர்: 10,066 
 

இன்று பேராதனை பல்கலைகழக முடிவுநாள். அனைவரது முகங்களிலும் சோகம். நண்பிகளை பிரியபோகிறோம் என்பதுதான் அதற்கான காரணம்.

கியாசா மஹீசா சகீயா மூவருமே இணைபிரியாத நண்பர்கள்.மூவருமே தியாக மனம்பான்மையோடுதான் நடந்து கொள்வார்கள்.

இன்று முவரும் கைகளை கொறுத்தவாறு திரிந்தனர். தமக்கிடையே அன்பளிப்புக்களையும் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு துக்கமும் மகிழ்ச்சியும் ஒன்று கலந்த வேளையில் சகியா பேச ஆரம்பித்தாள்.

கியாசா மஹிசா நாம் மூனுபேரும் எப்பவோ எங்கேயோ ஒரு இடத்தில ஒரு நாளைக்கு சந்திக்கனும் அந்த நேரம் நாம நம்மட வாழ்க்கைய ஏதோ ஒரு வகையில தியாகம் செஞ்சி இருக்கனும் என்று கூறும்போதே அது எப்படி தியாகம் செய்றதுனு மஹிசா இடையில் கேட்டாள்.

இதைக்கேட்ட கியாசா நான்டா என்னட வாழ்க்கைய ஒரு கண்ணு தெரியாத ஒருவருக்கு மனைவியா ஆகி காலம் பூராக அவருக்கு பணிவிட செய்யனும் அதுதான் என்ட இலச்சியம் என்று கூரும்போதே மஹிசா என்னட தலைவிதி எப்படியோ அல்லாதான் அறிவான் ஏன்ட அளவு முயற்ச்சி செய்யிரம் என்ற சகியாவின் முகத்தை பார்த்தாள்.

சகியா பதிலுக்கு புன்னகைத்தவாறு இன்ஷா அல்லாஹ் நானும் முயற்ச்சி செய்யறேன் என்று கூறியவாறு ஒரு குறிப்பிட்ட நாளையும் இடத்தையும் கூறி, நான்குவருடங்களின் பின் சந்திப்பதாக சொல்லி பிரிந்து சென்றார்கள்.

நாட்கள் வேகமாக விரைந்தது.

மூவரும் ஒரே இடத்தில் கணவன்மாரோடு நான்கு வருடங்களின் பின் சந்தித்தனர்.

சகியாவின் கணவனுக்கு இரண்டு கண்களுமே குருடு. மஹிசாவின் கணவன் ஒரு ஊமை.கியாஷாவின் கணவனுக்கு ஒரு குறையும் இல்லை என்பதை உணர்ந்த இரு நண்பிகளும் கியாஷாவிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

மஹிசாவுக்கு இரண்டு ஆண் குந்தைகள். சகியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கியாசாவிடம் குழந்தை எதுவும் இல்லை என்றாலும் கோபத்தோடு கியாஷாவை ஏச ஆரம்பித்தார்கள்.

கியாஷாவால் தாங்க முடியவில்லை. என்றாலும் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

உங்கட கணவன்மார்ட குறையை பார்த்தாலே தெரியிரு. ஏன்ட கணவன்ட குறையை சொல்ரேன். எங்களுக்கு பிள்ளை பாக்கியமே இல்லை. இது தான் என்ட கணவன்ட குறை எனக் கூறி தாங்க முடியாமல் அழுதுவிட்டால்.

இரு நண்பிகளும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *