ததாஸ்துக் களிம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 6,533 
 
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் சித்தே எசகுபிசகா இருக்கலாம், இருந்தா, பால்யரெல்லாம் வாசிக்கப்படாதுன்னு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேன்னா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.

சரி, இன்னிக்குச் சபைல குளித்தலை ஆசாமி ஒருத்தரோட கதையைச் சொல்றதுனால இப்பவே குளித்தலை மகாஜனங்களுக்கு அசுவத்தாமனோட நமஸ்காரத்தைச் சொல்லிடறேன். வாகனாஸ்த்ரமா ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்கோ.

ராமலிங்கம் ராமலிங்கம்னு ஒரு புண்யவான். மகாதானபுரத்துல அவர் அம்மாவாத்துல பொறந்தாலும், புண்யாசன நாள்லேந்து குளித்தலைலயே வளந்தவர். அங்கயே படிச்சுட்டு, அங்கயும் பக்கத்துல முசிறிலயும், ஸ்கூல் வாத்தியாரா இருந்தார். அஞ்சு வருஷம் கரூர், திருச்சினு வேலை பாத்தாலும் ஜாகை குளித்தலை தான். திருச்சியைத் தாண்டிப் போனதில்லை மனுஷர். லக்ஷ்மணன் கோடாட்டம். திருச்சிதான் பட்டணம். காவேரிக்கு வடக்கே தொட்டியத்துல விக்ரகமாப் பொண் பாத்துக் கல்யாணம் பண்ணிண்டு, ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுனு ரெண்டு பொறந்தாலும், ஆசையும் வேண்டாம் ஆஸ்தியும் வேண்டாம் ஆளவிடுரா ராமானுட்டு, ரெண்டும் அமெரிக்காவைப் பாக்க ஓடிடுத்து. போன வருஷம் பார்யாளைப் பறி கொடுத்தார். ஒண்டியா இருந்தாலும் கவலைப்படலை. ரிடையராகி ரெண்டு வருஷமாச்சு. தன் கையே தனக்குதவிடா தசரதபுத்ரானு இருந்தார். ரொம்பத் தேவைன்னா அவசரத்துக்குக் களிம்பு வேறே இருக்கேனுட்டு திருப்தியா இருந்தார்.

கை, களிம்புனா ஒடனே கற்பனாஸ்வத்தை மனோவேகத்துல விடாதீங்கோ, களிம்பைப் பத்தி சாவகாசமா விஸ்தாரம் பண்றேன்.

ஸ்ரீமான் ராமலிங்கத்தோட டெய்லி ருடீன் என்னன்னு கேட்டேள்னா, ஒரு போது யோகினு சொல்லணும். கார்த்தால அம்பீஸ்ல டிகிரிக் காப்பி ஒரு லோட்டா, மாத்யான்னிகம், ரெண்டு கறி ரெண்டு கூட்டு, உப்பொறப்பு கம்மியா சாம்பார் ரசம், சுட்டப்பளாம் தயிர் ஆவக்கானு, அம்பீஸ்லந்தே எடுப்புச் சாப்பாடு. ராத்திரி லங்கணம். சாயரட்சை, பக்கத்துல முருகன் கோவிலுக்கு வாக்கிங் போய் ஆறுமுகன் சன்னிதானத்துலயும், ஈஸ்வரன் கடம்பவனேசர், அம்பாள் முற்றிலாமுலையாம்பிகை சன்னிதானத்துலயும் ரெண்டு காலம் பூஜை முடியற வரைக்கும், சில நாள் அர்த்தஜாம பூஜை முடிய ராத்திரி ஒம்பது ஒம்பதரை ஆனாலும், உக்காந்திருப்பார். பொதுவா ஊர்வம்பு அரட்டையடிச்சாலும் பாடல் பெற்ற ஸ்தலமாச்சே, ரெண்டு மூணு திருப்புகழும் சொல்லிட்டு ராத்திரி வந்து அக்கடானு படுத்தார்னா, மறுபடியும் கார்த்தால அம்பீஸ்ல டிகிரிக் காப்பினு ஆரம்பிச்சு நடக்கும் நித்ய காலட்சேபம்.

இப்பேற்பட்ட ராமலிங்கத்துக்கு, சதாசிவம் சதாசிவம்னு ஒரு ஆப்தர். ஆத்ம சினேகிதர். ரெண்டு பேரும் குளித்தலைல ஆறாவது வரைக்கும் ஒண்ணா படிச்சு வளந்தவா. பம்பரம், கிட்டிப்புல், கோலி, எப்பவாவது கிரிகெட்னு ஒண்ணா விளையாடி வளந்தவா. ஏழாவது படிக்கறச்சே சதாசிவத்தோட தோப்பனாருக்கு திருச்சிக்கு மாத்தலாய் போனதுலேந்து சதாசிவத்தைப் பிரிஞ்சவர்… ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி… எத்தனையோ வருஷம் கழிச்சு முதல் தடவையாப் பாத்தார். கோவில்லேந்து வரச்சே ஆத்து வாசல் திண்ணைல ரெண்டு பெட்டியோட உக்காந்துண்டு யாரோ காத்துண்டிருக்காளே, யாரதுனு பாத்தா, அடையாளமே தெரியாம நின்னுண்டிருந்தார் சதாசிவம்.

நேத்திக்கு பாத்தவாளையே நாம இன்னிக்கு மறந்து போய்டறோம், நாப்பது வருஷத்துக்கு மேல ஆச்சோன்னோ, ராமலிங்கம் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.
“யாரு வேணும் உங்களுக்கு?”

“ராமா, நான்தாண்டா சதாசிவம். என்னைத் தெரியலையா?”

பொடார்னு பொட்டுல அறஞ்சா மாதிரி ஞாபகம் வந்துது ராமலிங்கத்துக்கு. “டேய், சதா, நீயாடா? என்னை ஞாபகம் வச்சுக் கண்டுபிடிச்சுட்டியே, எனக்குத்தான் நீ யாருனே புரியலை”

“இல்லடா, எனக்கும் உன் முகம் மறந்து போச்சு. சாயந்த்ரமே வந்துட்டேன். பக்கத்தாத்துக்காரர் கிட்டே உன்னைப் பத்திக் கேட்டேன். அவர் பொண்ணு கல்யாணத்துல நீதான் ரொம்ப ஒத்தாசையா இருந்தியாம், பாருங்கோனு போட்டோல்லாம் காமிச்சார். அதனாலதான் உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சுது”. சிரிச்சார் சதாசிவம்.

“வாடா வாடா”னுட்டு வாஞ்சையா உள்ளே கூட்டிண்டு போனார் ராமலிங்கம்.

“என்னடா, ரொம்ப நேரம் ஆச்சா வந்து? ஏதாவது சாப்பிடறியா? நான் ராத்திரி சாப்பிடறதில்ல. அம்பீஸ்ல இன்னும் தொறந்திருப்பான், சாப்பிடறியா?”

“வேண்டாம், ராமா. பேசிண்டிருப்போமே?”

“திருச்சி போனப்புறம் உன்னைப் பார்க்கவே இல்லையேடா சதா?”

“திருச்சிலேந்து, மெட்ராஸ் போனமா, அங்கதான் காலேஜ். அப்புறம், வடக்கே பூனால வேல கிடைச்சு அங்கியே செட்டில் ஆயிட்டேன். போன மாசம் ரிடையர்மென்ட் வாங்கிண்டு நேத்திக்கு மெட்ராஸ். இன்னிக்கு இங்க வந்துட்டேன். இனிமே இங்கதான். ரெண்டு நாள் உங்கூட தங்கிட்டு வேறே வீடு தேடிண்டு போயிடறேன்”

“சேசே! எதுக்குடா? நான் ஒண்டிக்கட்டை. உனக்கு ஆக்ஷேபணை இல்லேன்னா இங்கயே என்னோட தங்குடா”னார் ராமலிங்கம். பொட்டியை எடுத்துண்டு போய் ரேழிக்கடுத்த ரூம்ல வச்சார். “நாளைக்கு வேறே தோச்சுப் போடறேண்டா. இன்னிக்கு இதைக் கட்டிக்கோ”னுட்டு ஒரு நாலுமுழ வேஷ்டியும், தலகாணிப் போர்வையும் எடுத்துண்டு வந்து கொடுத்தார். ரெண்டு பேரும் பால்ய ஞாபகத்துலந்து ஆரம்பிச்சு நாப்பது வருஷ காலமா நடந்ததைப் பேச ஆரம்பிச்சா. நடுப்பற சதாசிவம், பையிலேந்து ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க ஆரம்பிச்சார்.

“என்னடா சதா அது?”

“தேர்த்தம்டா ராமா. சிவாஸ் ரீகல். ரெண்டு பெக் போடலாம் வா”

ராமலிங்கம் நடுங்கினார், “வேணாம்டா”.

“ஏண்டா, இதெல்லாம் சாப்டதில்லையா நீ?”

“சாப்டிருக்கேன். திருச்சில வேலை பாத்தப்போ எங்க ஸ்கூல் சூப்ரென்ட் வந்தார்னா, சாயங்காலம் அவரோட சில சமயம் சாப்டிருக்கேன்”

“அப்புறம் என்ன ராமா? எவ்வளவு நாள் கழிச்சுப் பாக்கறோம், சேந்து கம்பெனி குடு ராமா”

“சரி, உனக்காக ரெண்டு உத்துருணி, அதுக்கு மேல வேண்டாம்”

உத்துருணில ஆரம்பிச்சு ரெண்டு பேருமா சேந்துண்டு அந்த பாட்டிலைச் சொட்டு விடாம குடிச்சா. அப்புறம் அம்பீஸ்லந்து வந்த ஸ்பெஷல் ரோஸ்ட், பூரி மசாலா, தயிர்சாதம் ஊறுகாவையும் சாப்டுண்டே பேசினா பேசினா, கதை கதையா பேசினா. காலேஜ் படிப்பு, உத்யோகம், கல்யாணம், கொழந்தை, குடும்பவம்பு, ஊர்வம்புனு கார்த்தால மணி மூணுக்கு மேல ஆகி, வாசல்ல ரோந்து போற கூர்க்கா வந்து லாத்தியால திண்ணைல ரெண்டு தட்டு தட்டிட்டுப் போற வரைக்கும் பேசினா.

“டேய் சதா, படுத்துக்கலாம்டா, கண்ணைச் சுத்த ஆரம்பிச்சாச்சு”

“படுத்துக்கோ. நல்லா போட்டிருக்கே. தூங்கு. சொப்பனத்துல த்ரிஷா தமன்னானு வந்தா என் சொப்பனத்துல வரச்சொல்லு, நானும் தொட்டுப் பாக்கறேன்”னு சிரிச்சார் சதாசிவம்.

“கண்ணை மூடினா நித்ராதேவையைத் தவிர யாரையும் தொட்டது கிடையாதுடா. சொப்பனமே வந்ததா ஞாபகமில்லை. உன் சொப்பனத்துல யாராவது வந்தான்னா அங்கேயே பூட்டி வச்சுக்கோ”. ராமலிங்கம் நன்னா வாயைத் தெறந்து கொட்டாவி விட்டு அப்படியே படுத்தார். மித்தத்துல லேசா நெலா வெளிச்சம் வந்துட்டு வந்துட்டுப் போச்சு. வெளில காத்தடிக்கறது கேட்டு, “மழை வரும் போலருக்கேடா? படுத்துண்டு தூங்கு. காலைல பேசிப்போம்”னார் ராமலிங்கம்.

“தூக்கம் வந்தாத்தானேடா சொப்பனம் கிப்பனமெல்லாம்”னார் சதாசிவம், திடீர்னு ஸ்வரம் போன ஸ்ருதிப்பெட்டி மாதிரி.

“ஏண்டா சதா, தூக்கம் வராம என்னடா? உன மனசுல என்ன உளச்சல்?”

“அது.. ராமா”னு முழிச்சார் சதாசிவம். அப்புறம் சொன்னார். “யார் கிட்டயாவது சொன்னாத்தாண்டா மனசு ஆறும்”

“சொல்லுடா”

“டேய், மூணு வருஷம் முன்னால என் பொண்டாட்டியக் கொன்னுட்டேண்டா”னார் சதாசிவம்.

தேள் கொட்ன மாதிரி எழுந்து உக்காந்தார் ராமலிங்கம். “என்னடா சொல்றே?”

“நச்சு நச்சு நச்சு நச்சுனு முப்பது வருஷமா என்னைப் போட்டுப் படுத்தி எடுத்துட்டா. அவ கொஞ்சம் முடியாம படுத்துண்டப்போ இதான் சான்சுனு, அவளைக் கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டேண்டா. வேலை விஷயமா பாம்பே போறதா அவகிட்டே கார்த்தால சொல்லிட்டு, பக்கத்தாத்துக்காரனை வீட்டைப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனேன். ராத்திரி பின்பக்கமா உள்ள வந்து அவளைக் கொன்னுட்டு, வீட்டுல திருடன் வந்தமாதிரி அங்க இங்க உடைச்சுப் போட்டு வச்சுட்டு, பழையபடி பாம்பே ஹோட்டலுக்குப் போயிட்டேன். பக்கத்தாத்துக்காரன் சாட்சினால என் மேல சந்தேகமே வரலை. ரெண்டு வருஷம் போலீஸ் அப்படி இப்படினு நாற்காலியத் தேச்சுட்டு, ‘மாப் கீஜியே’னு கேசை மூடிக் கைல குடுத்துட்டா. ஒரு வருஷம் தாக்குப் பிடிச்சுட்டு, ரிடையர்மென்ட் வாங்கிண்டு போறும்னு ஓடி வந்துட்டேன்”

ராமலிங்கம் சிற்பமா உக்காந்துண்டிருந்தார்.

“என்னால பொறுக்க முடியலடா ராமா. கல்யாணமே வேண்டாம்னு இருந்த எனக்கு, ‘பொண்டாட்டினா புருஷனுக்கு அனுசரணையா நடந்துப்பா, பண்ணிக்கோடா’னுப் பண்ணி வச்சுட்டா. அவாளை சொல்லிக் குத்தமில்லை. இவ ராட்சசினா ராட்சசிடா. புருஷாளை இம்சைப் படுத்தணுங்கறதுக்கே ஜன்மம் எடுப்பா சில பொம்னாட்டிகள். இவ அந்த வம்சம். என்னைச் சித்திரவதை பண்ணனும்னே பிரம்மராட்சசி பொம்பளை அவதாரம் எடுத்திருக்காடா. அவளோட சித்ரவதை தாங்கமுடியாம கொன்னுட்டேனே தவிர, அன்னைலேந்து தூக்கமில்லேடா ராமா. கண்ணை மூடினா போதும், இவ வந்துடறா. கைலயும் கழுத்துலயும் ரத்தம் சொட்றது, நாக்க நாக்க நீட்டிண்டு பாம்பு மாதிரி எங்கிட்ட வரா. பயத்துல எழுந்துண்டுறுவேன். மூணு வருஷமா தூக்கமே கிடையாதுடா”னு அழ ஆரம்பிச்சார். கோனு அழுதார். கேவிக் கேவி அழுதார்.

அழுகை ஓஞ்சதும், “ராமா, நீ தூங்குடா, என்னோட கதையை கேட்டதே போறும்டா. நா இப்படியே இருந்துடறேன்”னார்.

ராமலிங்கம் தன்னோட சினேகிதர் தோளத் தட்டினார். “சதா, இதோ வந்துடறேன், இருடா”னு சொல்லிட்டு உள்ளே ரேழிக்குப் போனார். ஒரமா இருந்த மரபீரோவைத் திறந்து, பட்டுத்துணியால கட்டின ஒரு சின்ன வஸ்துவை எடுத்துண்டு வந்தார். சதாசிவத்துகிட்டே உக்காந்துண்டார். பட்டுத்துணியைப் பிரிச்சார். உள்ளே குங்குமச்சிமிழ் மாதிரி இருந்தக் குப்பியை எடுத்துத் திறந்தார்.

“என்னடா ராமா, இது?”னார் சதாசிவம்.

“ததாஸ்துக் களிம்பு”னார் ராமலிங்கம்.

“அப்படீன்னா?”

“நெனச்சாப்ல நடக்கும்னு ஆசீர்வாதம் பண்றக் களிம்பு”னார் ராமலிங்கம்.

ராமலிங்கத்துக்கு இந்தக் களிம்பு எப்படிக் கெடச்சது? சொல்றேன். சிட்டிகை பொடி இழுத்துக்கறேன்..

ஸ்ரீமான் ராமலிங்கம் முருகன் கோவிலுக்கு தினம் போய் திருப்புகழ் படிப்பார்னு சொன்னேனே? பார்யாள் போனப்புறம் அப்படித்தான் ஆத்துல ரொம்பக் கஷ்டம்னு ஒரு நாள் கோவிலுக்கு போனார். சந்தனக்காப்பு சாத்தியிருக்கா ஷண்முகனுக்கு. ‘யாமிருக்க பயமேன்? ஒன்னோட கஷ்டத்தையெல்லாம் பஸ்பமாக்கிட மாட்டேனா?’னு சுப்ரமண்யர் அப்படியே வேலோட ஓடி வரமாதிரி இவருக்கு. மனசு விட்டு முருகன் கிட்டே கஷ்டத்தையெல்லாம் சொல்லி அழுதார். திருப்புகழ்லந்து பாட ஆரமிச்சார். பொருளங்கா உருண்டை மாதிரி இருந்தாலும், திருப்புகழ் தேன்ல மொதக்குற குல்கந்துல்லியோ? உருகி உருகிப் பாடறார் ராமலிங்கம்.
“குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ருவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
குறுகும் வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்த..”

பாடிண்டிருக்கச்சயே யாரோ அவரைத் தொட்டாப்ல இருக்கு. கண் தெறந்து பாத்தார். எதிர்ல ஒரு சித்தர் நிக்கறார். எப்படி எங்கேந்து வந்தார்னே தெரியலை. பாடிண்டிருந்த ராமலிங்கத்தை நெத்தில, இப்படி, தொட்டார். ‘இவன் கண்ணெதிரே நீயிருக்க, இவண் கண்மூடிப் பாடலாமோ கந்தா?’னார், முருகன்ட்டே ராமலிங்கத்தைக் காமிச்சு.

ராமலிங்கமோ, “நான் எப்பவுமே பகவான் சன்னதில கண்ணை மூடிண்டு பிரார்த்தனை பண்றது வழக்கம். ஐயா, என்னைப் பாட விடுங்கோ, என் கஷ்டம் கந்தனுக்குத்தான் தெரியும்”னார்.

சித்தர் சிரிச்சார். சிரிப்பா அது? நூத்தம்பது மைல் வேகத்துல போறப்போ சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி ஹ்ருதயத்தையே வெளிலே கொண்டு வந்து கொட்ற சிரிப்பு. காத்துல இப்படிக் கையைக் காமிச்சு இழுத்தார். அவர் கைல ஏதோ ஒண்ணு பளபளனு மினுக்கறது. குங்குமச்சிமிழ் மாதிரி இருக்கு. ராமலிங்கத்துக்கிட்டே சிமிழைக் கொடுத்தார். “ராமலிங்கம், இது ததாஸ்துக் களிம்பு”னார்.

“எதுக்கு இது?”னார் ராமலிங்கம் பயந்துண்டே.

சித்தர் சாந்தஸ்வரூபியா, “எடுத்துன் நெற்றியில் நீறுபோல் இடும், படுத்துந் துன்பம் ஆறுபோல் விடும்”னு சொல்லிட்டு, புஸ்ஸுன்னு காணாமப் போய்ட்டார்.

“என் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?”னு கொஞ்சம் லேட்டா கேக்க நெனச்ச ராமலிங்கத்துக்கு ஒண்ணும் புரியல. அப்பத்தான் தன் மனசுல இருந்த சோகம்… காஷ்மல்யம்…டெஸ்பேர்ம்பாளே… அந்த வலியெல்லாம் வல்லிசாக் காணாமப் போனதைக் கவனிச்சார். அவருக்கு உடம்பெல்லாம் குறுகுறுன்னுத்து. சித்தர் நின்னுண்டிருந்த எடத்துல ஒரு பட்டுத்துணி கிடக்கு. எதுர்க்க சிவகுமாரன் எப்பவும் போலச் சிரிச்சுண்டே இருக்கார். பட்டுத்துணியை எடுத்து சிமிழை மூடிக் கட்டிண்டு வந்து ரேழி பீரோல வச்சார் ராமலிங்கம்.

ஆபத்காலத்துக்கு இருக்கட்டும்னு உள்ளே வச்சதை இப்போ ஆப்தனுக்கு உதவட்டுமேனு எடுத்துண்டு வந்து கொடுத்தார். களிம்பு கெடச்ச விவரமெல்லாம் சொன்னார்.

“இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றியா ராமா? இதைத் தடவினா என் மனக்கிலேசம் தீரும்னு சொல்றியா? நான் பண்ண பாவம், கர்மா, ப்ராரப்தம், என்னைச் சுத்தி வர்றதுடா”

“எனக்குத் தெரியாது சதா. நீ பாவம் பண்ணினியா இல்லையானு நான் ஜட்ஜ்மென்ட் குடுக்க முடியாது”னார் ராமலிங்கம். சிமிழை சதாசிவங்கிட்டே நீட்டி, “துளியூண்டு எடுத்துக்கோ. காயேன வாசா மனசேந்த்ரியைர்வா.. சகலம் ஸ்ரீசுப்ரமண்யாயேதி சமர்ப்பயாமினு ஒரு சரணாகதி மந்திரம் சொல்லி, என்ன வேணுமோ அதை நினைச்சு, நெத்தியில இட்டுக்கோ. என்ன கொறஞ்சுடப் போறது?”னார்.

சதாசிவமும் நெத்தியில இட்டுண்டுப் படுத்துண்டார்.

போது விடிஞ்சு பத்து பதினொரு மணிக்கு மேல ஆச்சு ரெண்டு பேரும் எழுந்துக்கச்சே. ராமலிங்கம் மொதல்ல எழுந்துண்டு பக்கத்துல இன்னும் நன்னா தூங்கிண்டிருந்த சதாசிவத்தை எழுப்பினார். “என்ன சதா, நல்ல தூக்கம் போலிருக்கே?”னார்.

சதாசிவம் ஒரு கொட்டாவி விட்டுண்டே, “இந்த மாதிரி தூங்கி வருஷக் கணக்குல ஆச்சு ராமா. சின்னப்போ கூட இப்படித் தூங்கலைடா!”னார் ஆச்சரியத்தோட.

“பொண்டாட்டி வந்து பயமுறுத்தலியே?”னு கேட்டார் ராமலிங்கம்.

“பொண்டாட்டியா பயமுறுத்தலா, என்னடா சொல்றே நீ?”னார் சதாசிவம்.

“அதாண்டா, ராத்திரி சொன்னியே, மூணு வருஷத்துக்கு முன்னால நடந்ததெல்லாம்… நீ கொலை பண்ண பொண்டாட்டி பாம்பு மாதிரி ரத்தம் கக்கிண்டு வந்து சொப்பனத்துல பயமுறுத்தறான்னியே?”

“என்னடா ராமா உளர்றே? திடீர்னு தண்ணி போட்டதனால நோக்கு புத்தி தடுமாறிப் போச்சா? யாரு பொண்டாட்டி, என்ன சொல்றே நீ? நான் கல்யாணமே பண்ணிக்கலையேடா?”னார் சதாசிவம்.

சாதாரணமா இந்த மாதிரி சமயத்துல எல்லாருக்கும் என்ன தோணும்? சரி, ஏதோ சுபமா முடிஞ்சுது, இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம்னு சந்தோஷமா இருக்கத்தோணும். இல்லேன்னா, ஏதோ மதுமயக்கதுல நடந்ததுனு விட்டுறத்தோணும். நமக்கு எல்லாம் தெரியும்னு அகங்காரத்துல கண்மண் தெரியாம இருக்கோங்கறது எப்படியெல்லாம் வெளில வர்றது பாருங்கோ. இப்பல்லாம் வெளையாட்டுன்னா ஐபிஎல்னு ஏதோ ஜிங்கு ஜிங்குனு ஆடறோம் கைதட்டறோம் குதிக்கறோம். நம்மளையே யாராவது ஐபிஎல்னு ஸ்தாபிச்சு ஆடினா? இங்க அதான் நடந்துது. இக பர த்ரிலோக மாயை விளையாடறான்னா நாம எல்லாரும் வெறும் சொப்பு தானே? ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரேனு பாடலியோ மகாபுலவர்? அதனால ராமலிங்கத்துக்கு அப்படியெல்லாம் எல்லாருக்கும் தோண்றாப்ல தோணலை. ஸ்ரீமான் ராமலிங்கத்துக்கு வேற மாதிரித் தோணித்து.

சதாசிவத்தைக் கையோட இழுத்தார் ராமலிங்கம். “டேய், வாடா”.

“எங்கடா?”

“மொதல்ல அம்பீஸ்ல ஒரு காபி. அப்புறம் உன்னோட ஒரு பெரிய விஷயம் பேசணும்”னு இழுத்துண்டு போனார். கொள்ளிடத்துக் காவேரி மாதிரி அவர் மனசுல ஐடியால்லாம் சுழிச்சுண்டு குதிச்சுண்டு பிச்சுண்டு ஓடித்து.

2

அம்பீஸ் காபி ஜகப்பிரசித்தம். அப்பசத்திக்கு அரைச்ச அரெபிகா காபிப்பொடி போட்டு, கொதிக்கக் கொதிக்க வென்னீர் ஜலத்துல இறங்கின டிகாக்ஷன்லந்து அரை டம்ளர் விட்டு, அதுல காச்சின பாலையும் சுண்டக் காச்சின பாலையும் அளவா கலந்து, ரெண்டு ஆத்து ஆத்தி, மேலாக ஒரு கரண்டிப் பால் நொரைய விட்டு, அதுக்கு மேலே வட்டமா டிகாக்ஷன் தெளிச்சுத் தருவான் பாருங்கோ… அதுன்னா காபி? மிச்சல்லாம் கோமியம்னா?
காபி சாப்டுண்டே ராமலிங்கம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

சதாசிவத்துக்கு ஒண்ணும் புரியலே. ரொம்ப யோசிச்சுட்டு, ‘சரி, வீட்டுக்குப் போலாம் வா. இதைத் ருசுப்படுத்திக்க ஒரு வழி இருக்கு’னு ராமலிங்கத்தைக் கூட்டிண்டு போனார். தான் கொண்டு வந்த பொட்டிலேந்து ஒரு பெரிய போட்டோ ஆல்பத்தை எடுத்துக் காட்டினார். சின்ன வயசுலந்து எடுத்த போட்டோல்லாம் வரிசையா இருந்துது அதுல. புரட்டிண்டிருக்கச்சே திடீர்னு சதாசிவத்தோட கல்யாண போட்டோ வந்துது. ரெண்டு பேரும் பாத்து அசந்து போனா. சதாசிவத்துக்கு என்ன சொல்றதுன்னே புரியலை. பொண்டாட்டி நினைவே இல்லை, ஆனா போட்டோ இருக்கு! என்ன பண்றது இப்போ? பொட்டிக்கடியில தேடினா, ஒரு ப்லாஸ்டிக் பைக்குள்ளே நெறய காகிதங்கள் இருந்துது. என்னனு எடுத்துப் பாத்தா.. போலீஸ் கேஸ்ல வந்த ரிபோர்ட். எல்லாத்தையும் ரெண்டு பேரும் படிச்சா.

களிம்புல ரெண்டு பேருக்கும் நம்பிக்கை வந்துது. பயமும் வந்துது.

“டேய், இது நிஜமாவே மாயக்களிம்பு தாண்டா ராமா”

“கண்டிப்பா சதா, பெண்டாட்டி நினைவே இருக்கக் கூடாதுனு நினைச்சு நீ தடவியிருக்கணும்”

“டேய் ராமா. அப்போ நான் கொலைகாரப் பாவியாடா? ஒரு குத்தமும் பண்ணாத மாதிரி தானேடா இருக்கு?”

“அதான் சொல்றேனே, இது ததாஸ்துக் களிம்பு. உன் பாவமெல்லாம் உன் நினைப்புக்குள்ள தானேடா? பாவ நினைப்பே இல்லேன்னா நீ பாவியில்லை. ததாஸ்து”

“ராமா, இது வம்புக்களிம்பு போல இருக்கேடா? ததாஸ்துக் களிம்பு இல்லேடா, தகராறுக் களிம்பு. எங்கேயாவது காவேரிலயோ இல்லை காட்டுலயோ புதைச்சு வச்சுடு”

ராமலிங்கம் சிரிச்சார். இல்லை, மாயை சிரிச்சா. “போடா, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்திக்கு வந்தவன் கூட்டிண்டுப் போன கதையில்ல பேசறே? நான் தெனம் கும்பிடற முருகன் எனக்கு வழி சொல்லி இருக்கான்டா. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்தக் களிம்பை வச்சு நான் நாலு காசு சேக்கப்போறேன்”

“நல்லா யோசிச்சுக்கோடா ராமா”னு சொன்னாலும், சதாசிவம் மனசுலயும் சஞ்சலங்கள் சமுத்ரமா பெருகித்து.

மாயை விளையாடறப்போ, மனுஷன் யோசிக்கறதாவது?

அடுத்த நாளே பிசினஸ் ரெடி. ராமலிங்கமும், அவருக்குச் சகாயமா சதாசிவமும், அம்பீஸ் பக்கத்துல ஒரு சின்னக் கடையை வாடகைக்கு எடுத்துண்டா. வெப் சைட்டுங்கறாளே, அதையும் வச்சுண்டா. ஆரம்பத்துல ஒண்ணு ரெண்டு பேர் வந்து ததாஸ்துக் களிம்பாவது தேங்கா மூடியாவதுனு விப்ரலபமா, கேலி பண்ணிட்டுப் போனா. ஆனா நாளாந்திரத்துல பாருங்கோ, அவாளுக்கு வாடிக்கை பிச்சிண்டு போயிடுத்து. நூறு, ஆயிரம், பத்தாயிரம்னு வசூல் பண்ணிண்டே இருந்தா. போன வருஷம் பாருங்கோ.. இந்திரன் குபேரன்னு ஏதோ பாடாவதி சினிமா படுத்துரும்னு பயந்து போய், பணம் போட்ட முதலாளிகளும் சினிமாக்காராளும் களிம்பை உபயோகிச்சு அமோகமா படத்தை ஓடவச்சு நாலு சந்ததிக்குச் சம்பாதிச்சுட்டானு சொல்றா. டாடா பிர்லா மாதிரி ஆட்கள், போலீஸ், மந்திரி, சாமியார், கடத்தல்காரன், கான்டிராக்டர், நடிகைனு பெரிய பெரிய மனுஷாள்ளாம் வந்து களிம்பு வாங்கிண்டுப் போனா. தப்பு செஞ்சுட்டோம்னு நெனக்கறவா எல்லாரும் காசு கொடுத்துக் களிம்பு வாங்கிண்டு போனா. ஒரு தடவை ஒரு பெரிய குரு ஆளனுப்பி களிம்பு வாங்கிண்டு போனதுனாலதான் இப்பக் கோர்ட் கேசெல்லாம் ஜெயமாறதுனு பொதுவா ப்ரஜல்பம் பண்ணிக்கறா. ராமலிங்கம் சதாசிவம்னா, ஜெகப் பிரசித்தமாயிட்டா. லக்ஷ்மி கடாட்சம் ஆகாசத்தப் பிச்சுண்டு கொட்டித்து. இவா ரெண்டு பேருக்கும் இந்தப்பக்கம் கரூர்லந்து அந்தப் பக்கம் த்ருச்னாப்பள்ளி தாண்டி மதுரை வரைக்கும் நெலமும் வீடும் சேந்துண்டே இருந்துது.

அந்தக் குப்பில களிம்பு என்னடான்னா, அட்சயபாத்திரம் மாதிரிக் குறையவே இல்லை.

மனுஷ ஜென்மம் இருக்கு பாருங்கோ, மகா விசித்ரமானதாக்கும். நமக்குள்ளே ரெண்டு கண்ணாடிகள் உண்டு. விவேகம்னு ஒண்ணு, விகாரம்னு ஒண்ணு. ரெண்டுமே அச்சு ஒரே மாதிரி கண்ணாடிகள்னாலும், விவேகக் கண்ணாடில விகாரம் தெரியும், விகாரக் கண்ணாடில விவேகம் தெரியாது. தெனம் தூங்கி எழுந்தோடனே இந்த ரெண்டுல ஏதாவது ஒரு உள்கண்ணாடில தான் நம்மள மொதல்ல பாத்துக்கறோம். அதுல என்ன தெரியறதோ அந்தப் பிம்பம் தான் வெளிலோகத்துக்குத் தெரியறது. விகாரக் கண்ணாடில பாத்துண்டோம்னா நம்மளோட கார்யங்கள்ளே விவேகம் மறைஞ்சு போயிடும்.

வெளில மரம் செடி கொடியெல்லாம் அழிஞ்சுண்டே இருக்கு. செல்போன் டவர் கட்டி சின்னக் குருவியெல்லாம் காணாமப் போயிண்டிருக்கு. கார் மேலே கார் வாங்கி எங்கப்பாத்தாலும் புகை, கமறல். கான்க்ரீட்டுல பாளம் பாளமாக் கட்டி இப்போ காத்துக்குக் கூட வழியில்லாமப் போயிடுத்து. இன்னும் பதினஞ்சு வருஷத்துல இயற்கையான தாவரம் காய்கறி பால் எதுவுமே கிடைக்காது, சப்ஜாடா பயோடெக்குனு பயமுறுத்துறா. லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் ஜனங்களுக்கு நிம்மதியில்லாம போயிண்டிருக்கு. பத்துப் பதினஞ்சு மணி நேரம் வேலைப்பாக்கறா, பொண்டாட்டி கொழந்தேளோட பத்து நிமிஷம் கொண்டாட முடியலை. ஆத்துக்குள்ளே அப்பாவும் பொண்ணும் செல்போன்ல பேசிக்கறா. வெளிக்காய்ச்சல் வந்து அவஸ்தைப் பட்டுண்டிருந்தது போறாதுனு, இப்போ ஆஸ்தி பூஸ்தி தேடிண்டு உள்காய்ச்சல் வந்துத் திண்டாடிண்டிருக்கோம். அரை வயிறு பருப்புஞ்சாத்துல சந்தோஷமா இருந்தவாள்ளாம் இப்போ தொப்பையும் தொந்தியுமா தெனம் நாலு தட்டு குப்பைல கொட்டறோம். சாக்ஷாத் பரப்ரம்ஹம்னு சொல்லகூடிய குருவெல்லாம் ரூட்டு மாறிப் போயிண்டிருக்கா. கொழந்தேள்ளாம் படிப்போ படிப்புனு மாஞ்சு போறா. ஆனா ஞானம் பெருகறதோ ஆசை பெருகறதோ தெரியலை. வளந்த பெரியவாள்ளாம் வெட்கக் கேடா நடந்துண்டு கொழந்தேள் கெட்டுப் போறானு கூசாம சொல்லிண்டிருக்கோம். டிவி சீரியல்ல யாரோ துக்கப்படறானு அழறோம், தெருவோரத்துல பச்சைக்கொழந்தையோட கஷ்டப்படுற ஜீவனைக் கண்டுக்காமப் போறோம். மாயைல விழுந்துட்டோம், விழுந்தது தெரியாம அடுத்தவாளையும் இழுத்துண்டு மூழ்கிண்டே இருக்கோம். ஆனா நீஞ்சிப் போற மாதிரித் தோணறது நமக்கு.

…ரொம்ப உபதேசமா போயிண்டிருக்கேனோ? எதுக்குச் சொல்றேன்னா விகாரத்துல விழுந்துட்டோம்னா எழுந்துக்கறது கஷ்டம். ராமலிங்கம் சதாசிவம் மாதிரி. நாமெள்ளாம் ப்ரக்ருதி கைல சொப்புனு சொன்னேன். இல்லியா பின்னே? ராமலிங்கத்தைப் பாருங்கோ. ஒரு போது யோகினு இருந்தவர், சாந்தம் ஷண்முகம் நித்யம்னு இருந்தவர் பணத்துக்கும் புகழுக்கும் ஆலாய்ப் பறந்தார். இத்தனை பரோபகாரம் பண்ணினாளே ரெண்டு பேரும், அதனால லோகத்துல ஒரு சுபகார்யம் நடந்துதோ? ஒரு அன்னதானமோ, பாடசாலையோ நடத்தினாளோ? அவாள சுத்தி நடக்குற அத்தனை விகாரங்களை அவா பாத்திருக்க வேண்டாமோ? பாக்கலியே? களிம்புனால அவாளுக்கு உண்டானதைச் சேத்துண்டாளே தவிர அகிலத்துக்கு ஏதாவது பண்ணுவோம்னு தோணித்தோ? விபரீத புத்தி ஜாஸ்தியானா வினாச காலம் அடுத்த பாயின்ட் டு பாயின்ட் பஸ் பிடிச்சு டாண்ணு வந்துடும். அதான் நடந்தது.

ஆஸ்தியும் ஆகாத ஸ்னேகமும் சேரச்சேர இவாளுக்குள்ள அவிஸ்வாசம் ஆரம்பிச்சுது.

மொதல்ல ராமலிங்கம் அபகாராத்தமா சில அல்ப கார்யங்கள் பண்ண ஆரம்பிச்சார். சதாசிவம் என்னடான்னா, களிம்பை உபயோகம் பண்ணித் தன் முகத்தையே மாத்திண்டுட்டார். பாக்கறதுக்கு இப்போ பழைய சதாசிவம் மாதிரியே இல்லை, செவப்பா ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டார். புது அடையாளத்தை வச்சுண்டு சதாசிவம், சட்டவிரோதமா… இலிசிட்ம்பாளே, அவ்யவஸ்தித கார்யங்கள்… எல்லாம் பண்ணிட்டு, ததாஸ்துக் களிம்பை உபயோகம் பண்ணித் தப்பிச்சுக்க ஆரம்பிச்சார்.

ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் பூடகமா ஆரம்பிச்சு பூதாகாரமாயிடுத்து. கலியுகத்துல கைமேல பலனில்லையோ? தெய்வ சம்பன்னமாச்சே? பிடிச்சுண்டுடுத்து.

ஒரு நாள் கார்த்தால அம்பீஸ்ல தனியா டிபன் காபி சாப்டுண்டு இருந்தார் ராமலிங்கம். இவாளுக்காகவே அம்பீஸ்ல குளுகுளுனு ஏசி ரூம் போட்டாச்சு. வெண்பொங்கலும் நீர்க்க மாங்கா இஞ்சித் தொகையலும் இலைல மணக்க மணக்க, எடுத்து ஒரு வாய் சாப்பிட்டார். பொசுக்குனு எதிரே சத்தம். யாருடானு பாத்தா, பழைய சித்தர். நடுங்கிப் போயிட்டார் ராமலிங்கம்.

“உமக்கு களிம்பு தந்தது துன்பம் தீரவா, சேரவா?”

“என்ன இப்படிக் கேக்கறேள் சித்தரே? களிம்பை வச்சு எத்தனையோ பேர் துன்பத்தைத் தீத்து வைக்கறேன்”. கூசாமப் பொய் சொன்னார் ராமலிங்கம்.

“கந்தனை நிந்தனை செய்தீரே களிம்பு கொண்டு! தண்டனை காத்திருக்கிறது உமக்கு”னு சித்தர் ஆவேசமா தமிழ் பேசறார்.

“ஐயா, அப்படி எல்லாம் சொல்லாதீங்கோ. சேத்த பணத்துல பாதிய முருகனுக்கே எழுதிடறேன். தண்டனை எல்லாம் கொடுத்துடாதேள்”

“தண்டனை தருபவன் தணிகைவேலன். சிங்காரன். முருகன். என் வேலை எளிது. குப்பியைப் பெறவே நான் வந்தேன்”

“குப்பி எங்கிட்ட இல்லையே? அவசரப்பட்டு முடிவு செஞ்சுடாதேள். இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்னையெல்லாம் நிறைய இருக்கு. காவேரி பாருங்கோ, வத்திண்டே போறது, தண்ணி விட மாட்டேங்கறா கன்னடக்காரா. உள்ளூர்க்காரா என்னடான்னா சமச்சீர் கல்வினு கொழந்தேள் படிப்பைக் குட்டிச்சுவர் பண்ணிடுவா போலிருக்கு. எங்கப் பாத்தாலும் கடவுள் பேரைச்சொல்லி பித்தலாட்டம், கண்மூடித்தனம். நாட்டுல ஜனங்கள் மூளையில்லாம கண்ட கண்ட கட்சிக்கெல்லாம் ஓட்டு போட்டு.. ஒரு யோக்யப் பரிபாலனமும் கிடையாது.. இதையெல்லாம் களிம்பை வச்சுத்தான்.. லோகக்க்ஷேமத்துக்காக நாழியானாலும் கொஞ்சம் கொஞமா தீக்கணும்னு இருக்கேன்”

கூசாம பொய் சொன்ன ராமலிங்கத்தப் பாத்து சித்தர் சிரிச்சார்.
‘மதியால்வித் தகனாகி மனதாலுத்தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற்பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற்பெருமாளே’னு பாடறார்.

ராமலிங்கத்தை நேராப் பாத்து, “குப்பி தானே என்னிடம் வரும். இன்னிரண்டு வாரம், என் வசம் சேரும். அதற்குள் உம் அத்தனை தீயவை தேய ஒரு செயல் செய்யும். இல்லையேல் பெருந்தீங்கு நேரும். முருகன் ஆணை”னு சொல்லிட்டு வந்த மாதிரியே பொசுக்குனு மறைஞ்சு போயிட்டார்.

ராமலிங்கம் சுத்திப் பாத்தார். ஏதாவது பட்டுத்துணி இருக்கானு பாத்தார். அப்புறம் இலைல பாத்தா, வெண்பொங்கல்ல கரப்பான்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு ராமலிங்கத்துக்கு. மனசுல சஞ்சலம். களிம்பை வச்சு வியாபாரம் பண்ணதுலேந்து முருகன் கோயிலுக்கே போகலைனு ஞாபகம் வந்துது அவருக்கு.

என்னவோ தீர்மானம் பண்ணிண்டு கடைக்கு போனார். அங்கே சதாசிவம் உக்காந்துண்டு இருந்தார். சதாசிவம் இப்பல்லாம் அம்பீஸ் பக்கம் வரதில்லே. அவர் சுலைமான் கடைலேந்து மாம்சமும், டீத்தண்ணியும், சீமைத்தண்ணியும் கொண்டு வரச்சொல்லி சாப்டுண்டு இருந்தார். ராமலிங்கம் உள்ளே வந்து, “சதா, உன்னண்ட ஒரு விஷயம் சொல்லணும்”னு ஆரம்பிச்சு, நடந்ததையெல்லாம் சொன்னார். “குப்பி ரெண்டு வாரத்துல போயிடும். அதுக்குள்ளே ஒரு நல்ல காரியம் செய்யலேன்னா பெரிய தண்டனை கிடைக்கப் போறது. சேத்த பணத்துல முருகனுக்கு பாதிய குடுத்துட்டு, நீயும் நானும் பழையபடி சினேகிதமா இருக்கலாம்டா”னார்.

அதுவரைக்கும் மறைச்சு வச்சிருந்த சந்தேகம் பொறாமை த்வேஷம் எல்லாம் ரெண்டு பக்கமும் விஸ்வரூபம் எடுத்துது.

அபசாரம். ஊருக்கு உபதேசம் பண்ணிண்டு அசுவத்தாமனே இப்படிப் பேசறேன் பாருங்கோ. விஸ்வரூபம் புண்யக்ருதம். நல்லது விஸ்வரூபம் எடுக்கும். பகவான் விஸ்வரூபம் எடுப்பார். த்வேஷமும் சந்தேகமும் மகாபாவம்னா? பாவம் பெரிசாச்சுன்னா பூதாகாரம்னு இல்லையா சொல்லணும்? பூதாகாரமாச்சுனு மாத்திப் படிங்கோ.

சதாசிவம் சிரிக்க ஆரம்பிச்சார். “என்ன ராமா, என் காதுல பூ சுத்தறியாடா? சித்தர் ஏண்டா உங்கிட்ட மட்டும் வந்தார்? இனிமே வந்தா எங்கிட்ட இருக்கு குப்பினு சொல்லு, எப்படி எடுத்துண்டு போறார்னு பாக்கறேன். நீ பொய் சொல்றே. எங்கிட்டயிருந்து குப்பியை வாங்கிட்டு, எங்கியாவது ஓடிப் போயிடலாம்னு திட்டம் போட்டிருக்கே. நீ ஏதாவது திப்பிசம் பண்ணினா தெரியும் சேதி”

“இல்லைடா, சதா. ஒரு திப்பிசமும் இல்லை. எனக்கு என்னமோ திடீர்னு மனசு மாறிடுத்து. நாம பண்றது பித்தலாட்டம்னு தோண்றது. ஜனங்களுக்கு நல்லது பண்றதுக்கு பதிலா கண்மூடித்தனத்தைனா வளக்கறோம்? அதுவும் காசு வாங்கிண்டு? இது பாவம்னு இப்பத் தோண்றதுடா”

“என்னடா இது? பாவ நெனைப்பே இல்லேன்னா பாவம் கிடையாதுனு சொன்னவனே நீதானே? இப்ப என்னமோ பாவம் லொட்டு லொசுக்குனு சொல்லிண்டிருக்கே?”

“தெரியலடா. சித்தர் வந்துட்டுப் போனதுலந்து இப்படித் தான் தோண்றது. நாம பண்ணியிருக்கறது எதுவும் சரியில்லடா. நமக்கு ரெண்டு வாரம் டயம் இருக்குடா. அதுக்குள்ள நம்ம வழியை மாத்திக்கணும்னு சூட்சுமமா சொல்லிட்டுப் போனதா நெனக்கறேன். இல்லேன்னா என்ன கஷ்டம் வரப்போறதோ? மாறிடுவோம்டா”

ராமலிங்கத்தோட விகாரக் கண்ணாடியை சித்தர் க்ஷணம் மழுங்கப் பண்ணிட்டுப் போனது அவருக்கு எப்படித் தெரியும்?

“ராமா, உன்னை நம்பமுடியலியேடா. ஒண்ணு செய்… நீ குப்பிய வச்சுக்கோ, திருப்பிக் குடுத்துரு, என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இது வரைக்கும் சம்பாதிச்சதையெல்லாம் என் பேர்ல எழுதிக் கொடுத்துடு, சரியா?”னார் சதாசிவம்.

“சதா, அதெல்லாம் எப்படி முடியும்? நீ தானேடா என்னைவிட அதிகமா சம்பாதிச்சிருக்கே? நான் சம்பாதிச்சதுல பாதி முருகனுக்குத்தான் கொடுக்கறதா இருக்கேன்”

“ராமா, இந்தச் சிவன்கிட்டே குடுத்தா என்ன, அந்த முருகன் கிட்டே குடுத்தா என்னடா? சரி, சரி. என்னப் பத்தி உனக்கு நல்லா தெரியும். கொலை செஞ்சிருக்கேன்னு நீயே சொல்லியிருக்கே. நீ சொத்தையெல்லாம் எங்கிட்ட தரலைனா உன்னை.. உன் குழந்தைகளைக் கூட.. உயிரோட விடமாட்டேன். அமெரிக்கால இருந்தாலும் சரி, அதல பாதாளத்துல இருந்தாலும் சரி”னு மகா அல்பமா சொன்னான்.

“சதா, இதுக்கு மேலே இன்னும் பணம் சேர்த்து என்னடா பண்ணப் போறே? அந்தக் குப்பி எங்கிட்ட வந்ததே, நான் ஏதாவது நல்லது செய்வேன்னு ஒரு நம்பிக்கைலதான். என்னோட தலையெழுத்து, தறிகெட்டு அலஞ்சேன். களிம்பை வச்சு மொதல்ல உன் பாவத்தைக் கழுவினதாலயோ என்னமோ, ஒரு நல்ல காரியம் கூட பண்ணத் தோணலியேடா? இப்ப நம்ம ரெண்டு பேரையும் பாரு, சினேகிதமும் போய் கொலை மிரட்டல்னா பண்ணிண்டு நிக்கறோம்?”னு கொஞ்சம் சமாதானமாப் பேசினார் ராமலிங்கம்.

“ராமா, போறுண்டா உன்னோட உபதேசம். பரோபகார வேஷமா போடறே? பொழைக்கணும்னா நான் சொல்றபடி நடந்துக்கோ. இல்லைன்னா என்னைப் பொல்லாதவனா மாத்தின பாவமும் நோக்குத்தான். நாலு நாள் மெட்ராஸ் போறேன், திரும்பி வந்தோடனே பேசிக்கலாம். அதுவரைக்கும் களிம்பு என்னோடயே இருக்கட்டும்”னு சொல்லிட்டு, எச்சக்கையாலயே சட்னு ராமலிங்கத்துட்டந்து களிம்பைப் பிடுங்கிப் பையில போட்டுண்டார். “என்னை ஏமாத்தினா, களிம்பை உனக்கெதிரா உபயோகிச்சுப் பாக்கவும் தயாரா இருக்கேன்”னு சொல்லி, சாபிட்டத் தட்லயே கையலம்பிட்டு எழுந்து போயிட்டார் சதாசிவம்.

வக்ரதுண்டரைப் பிடிக்கப் போய் இப்படி வானரமா வந்து சேந்துடுத்தேனு வருத்தப்பட்டார் ராமலிங்கம்.

3

– 2011/07/23

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *