தடுக்கி விழுந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 4,420 
 

குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக் காணப்படுவான்.

அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யூனிபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு அரை டிராயரில் வருவார்கள். ஆனால் இவன் அதே யூனிபார்மில் முழு டிரவுசர் அணிந்து கொள்வான். முற்றிய விடலைப் பருவம் என்பதால் அவனின் முகத்தில் ஏராளமான பருக்களும், மீசையும் தாடியும் காணப்படும். வீட்டிற்கு தெரியாமல் புகை பிடிப்பான். டீன் ஏஜ் துடிப்புகள் அவனிடம் அதிகம்.

வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு ஊட்டமாக இருந்தான். அவனுடைய அப்பா மாநில அரசின் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில், அதிக கிம்பளத்தில் சொகுசாக வாடகை வீட்டை நிர்வகித்தார்.

தற்போது ஊருக்கு சற்றுத் தள்ளி 120 x 100 சைட்டில் ஒரு பெரிய பங்களா டைப்பில் சொந்தவீடு கட்டிக் கொண்டிருகிறார். அதை மேற்பார்வையிட அடிக்கடி குணசீலன் அங்கு செல்வான்.

அப்போதுதான் தன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு அழகான ஆங்கிலோ இந்தியப் பெண் இருப்பதை அவன் பார்க்க நேரிட்டது. ஒருநாள் ஜன்னல் வழியாக அவள் இவனைப் பார்த்து இயல்பாகப் புன்னகைத்தாள்.

குணசீலனுக்கு உடனே மனசும் உடம்பு படபடத்தது. எனினும் இவனும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணும் அவனைப் பார்த்து இதுவரை புன்னகை செய்ததில்லை, அவன் அம்மாவைத் தவிர. ஒரு ஆணுக்கு அவனுடைய அம்மாதான் முதன் முதலாக மிக அருகில் பரிச்சயமாகிற; உறவாகிற; பாதுகாப்பாகிற முதல் பெண்.

அம்மா என்ற முதல் பெண்ணிலிருந்துதான் வேறு வேறு உறவின் முறை சார்ந்த பெண்களை நோக்கி விபத்து இல்லாமல் ஒரு ஆண் பெயர்ந்து செல்கிறான். ஒரு இரண்டுங்கெட்டான் பருவத்தில், வேறு முறைகளைச் சார்ந்த பெண்களிடம் மனம் பரிவர்த்தனை அடையும் போது இயற்கையாக ஒரு படபடப்பும் அதையும் தாண்டி பெண்களை உடல் ரீதியாக அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டுவிடுகிறது.

மேற்பார்வையிட அந்த பங்களாவிற்கு செல்லும் போதெல்லாம் அவன் கண்கள் அவனையும் அறியாமல் அடிக்கடி அந்த ஜன்னலைப் பார்த்தது.

ஒருநாள் இவன் கட்டிடத்தின் பின் பகுதியில் நின்றிருந்த போது அந்த ஆங்கிலோ இந்தியப் பெண், அவள் வீட்டுப் பின்புறத் தோட்டத்தை விளக்குமாற்றால் குனிந்து பெருக்கிக் கொண்டிருந்தாள். தொள தொளவென மேக்ஸி அணிந்திருந்தாள். ப்ரா அணியாததால் அவளது மார்பகம் நன்றாகத் தெரிந்தது. அவள் குணசீலனை விட பத்து வயதுகள் அதிகமாக இருப்பினும் பார்ப்பதற்கு கோதுமை நிறத்தில் வளப்பமாக இருந்தாள்.

குணசீலன் அவளை ஆர்வத்துடன் பார்த்தான். நாளடைவில் அவள் ரொம்ப அக்கறையுடன் தினமும் தோட்டத்தை பெருக்கலானாள். இவனும் மிகுந்த அக்கறையுடன் அங்கு நின்றபடி கட்டிடத்தை மேற்பார்வையிடலானான். அவர்களுக்குள் ஒரு மெளனப் புரிதல் ஆரம்பமானது. பின் அதுவே பேச்சில் தொடர்ந்தது.

ஆனால் அந்தப் புரிதல் வேறு வழியின்றி அப்போதைக்கு பேச்சுடன்தான் நின்றது. அவள் பெயர் ஷெர்லி என்றாள்.

வீடு நல்ல படியாகக் கட்டி முடிந்ததும், நல்ல நாள் பார்த்து கிரஹப்பிரவேசமும் நடந்தது. அப்போது பக்கத்து வீடு என்கிற முறையில் ஷெர்லியும் அழைக்கப் பட்டிருந்தாள். அவள் தன் கணவருடன் வந்திருந்தாள். கணவர் பெரிய தொப்பையுடன் மிகுந்த வயதானவராக இருந்தார். ஷெர்லி தன் குடும்பத்துடன் அறிமுகமானது குறித்து இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

புதுமனை புகுந்ததும் ஷெர்லி அம்மாவுக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டாள். இவன் பள்ளிக்கு சென்றிருக்கும் போது அம்மாவைப் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வருவாள். அம்மாவுக்கு விதம் விதமான கேக்குகள்; ஐஸ்க்ரீம்கள் செய்யக் கற்றுக் கொடுத்தாள்.

இவன் பள்ளியிலிருந்து திரும்பியதும் அம்மா இவனுக்கு அன்று செய்த கேக்குகள் தின்பதற்கு கொடுப்பாள். “நல்லா இருக்கே… யாரும்மா பண்ணியது?” என்று கேட்டால், “பக்கத்து வீட்டு ஷெர்லி ஆன்டி” என்று பதில் வரும்போது குணசீலன் கேக்கை மிகவும் விரும்பிச் சாப்பிடுவான்.

முதல் மூன்று மாதங்களிலேயே ஷெர்லி அம்மாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டுவிட்டாள். ஒருநாள் வீட்டில் அம்மா சர்க்கரைப் பொங்கல் செய்தாள். அதை பக்கத்து வீட்டு ஷெர்லி ஆன்டியிடம் கொடுத்துவிட்டு வரும்படி குணசீலனிடம் சொன்னாள்.

இவன் சென்றபோது ஷெர்லியின் கணவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். குணசீலன் பொங்கலை அவளிடம் கொடுத்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில், “குணா, கொஞ்சம் நில்லு” என்று கிசு கிசுத்தாள். இவன் திரும்பிப் பார்த்தபோது, “இன்னிக்கி இந்த வீட்ல நீதான் எனக்கு துணையா இருக்கணும். நான் உன்னோட அம்மாகிட்ட சாயங்காலம் வந்து பேசிக்கிறேன். இப்போதைக்கு இதுபற்றி உனக்கு ஒன்றும் தெரியாது… என்ன சரியா?” என்றாள். “சரி” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

சொன்ன மாதிரியே சாயங்காலம் இவர்கள் பொங்கல் கொடுத்த அதே பாத்திரத்தில் பாஸந்தி எடுத்து வந்து கொடுத்தாள். குணசீலன் அடுத்த அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாலும், கவனமெல்லாம் ஷெர்லி ஆன்ட்டி, அம்மாவிடம் என்ன சொல்லப் போகிறாள் என்பதில்தான் இருந்தது. “குணாம்மா, இன்னிக்கி ராத்திரி என்னோட ஹஸ்பெண்டு ஒரு கல்யாணத்திற்காக பாம்பே போறாரு… எனக்கு வீட்ல தனியா இருக்க பயமா இருக்கு. நம்ம குணா நான்கு நாட்களுக்கு எங்க வீட்லதான் தங்கணும். படிக்கிற புஸ்தகத்தை எல்லாம் எடுத்திட்டு எங்க வீட்டுக்கு வரச் சொல்லுங்க…” என்று கெஞ்சும் குரலில் வேண்டினாள்.

அம்மா உடனே “நான் அவனைக் கேட்டுப் பாக்கிறேன், அவன் வந்தா தாராளமா நீ கூட்டிட்டுப் போ” என்று சொல்லிவிட்டு, “எலே குணா, பக்கத்து வீட்டு அங்கிள் பாம்பே போறாராம். ராத்திரி சாப்பிட்டதும் நீ அவங்க வீட்டுக்கு போயி ஆன்டிக்கு துணையா படுத்துக்க… மூணு நாலு நாளைக்கி நீ ஆன்டிக்கு துணையா இருக்கணும்… என்ன போறியா?” என்றாள்.

“என்னது மூணு நாலு நாளைக்கா…?” என்று குணசீலன் சற்று பிகு பண்ணிவிட்டு “சரிம்மா, போகிறேன்” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னான். ‘நல்லாத்தான் நடிக்கிறான்’ என்று ஷெர்லி நினைத்துக் கொண்டாள். .

அன்று இரவு சாப்பாடு முடிந்ததும் புத்தக மூட்டையை எடுத்துக்கொண்டு ஷெர்லியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.

“வா… வா குணா, அங்கிள் இப்பதான் பாம்பே கிளம்பிப் போறாரு…” வாசல் கதவைச் சாத்தினாள்.

ஷெர்லியுடன் தனிமையில் இருக்கிறோம் என்று உணர்ந்தபோது இவனுக்கு உடம்பெல்லாம் சூடான ரத்தம் பரவியது.

“படுக்கப் போறியா…இல்ல படிக்கப் போறியா குணா?”

“நான் படுக்கிறேன் ஆன்டி…”

“ஹால்ல ஏஸி இல்ல… அதுனால நீ பெட்ரூம்ல என்கூடவே படுத்துக்க” என்று சொல்லி ஏஸியை இயங்கச் செய்தாள். நைட் லேம்ப் போட்டுவிட்டு, மெயின் லைட்டை அணைத்தாள்.

இருவரும் அடுத்தடுத்து படுத்துக் கொண்டனர். ஆனால் இருவருக்குமே தூக்கம் வரவில்லை. மெளனம் காத்தனர்.

“குணா ரொம்பக் குளிருதா?”

“இல்லையே…”

“அப்ப தூங்கு…”

“தூக்கம் வரலை ஆன்ட்டி. எனக்கு உங்களைத் தொட்டுப் பார்க்க ஆசை.”

“அப்ப தொடு. இதுக்கு ஏன் தயங்கறே?” என்று சொல்லி அவன் வலது கையை எடுத்து தன் இடது மார்பில் வைத்தாள். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனினும் மார்பிற்கும் அவன் விரல்களுக்கும் இடையில் மேக்ஸி தடையாக இருந்ததால், “எனக்கு அதை முழுசா தொட்டுப் பாக்கணும்” என்றான். அவள் எழுந்து நின்று மேக்ஸியைக் கழட்டித் தூக்கி எறிந்துவிட்டு அவனருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டாள். இருவரும் சந்தோஷமாக உருண்டனர். பிறகு குணசீலன் அசதியில் தூங்கிப் போனான்.

குணசீலன் தன் கற்பை இழந்தான். அவனுக்கு அவளுடைய உடம்பின் நெளிவு, சுளிவுகளும் அவளின் அருகாமையும் மிகவும் பிடித்துப் போயிற்று. அவளுக்கு அவனின் ‘வேகம்’ பிடித்துவிட்டது. இதே நடைமுறைகள் விதவிதமாக அங்கிள் திரும்பி வரும்வரை அலுக்க அலுக்க மூன்று நாட்கள் தொடர்ந்தன.

குணசீலன் தனக்குள் வியந்தபடி ஒரு பெண் கெட்டால் ‘வழுக்கி விழுந்தவள்’ என்பார்கள்; அதேமாதிரி ஒரு ஆண் கெட்டால் அதை என்னவென்று சொல்ல என்று யோசித்தான். பிறகு ‘தடுக்கி விழுந்தவன்’ என்று சொல்லி தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அங்கிள் வந்த பிறகு குணசீலனுக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

அடுத்த இரண்டு வருடங்களில் அவனுடைய அப்பா, குணசீலனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து கலியாணத்திற்கும் நாள் குறித்துவிட்டார். பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவள்.

அவனுடைய கல்யாணத்திற்கு ஷெர்லியும் தன் கணவனுடன் சென்றிருந்தாள். திருமணத்திற்குப் பிறகு குணசீலன் அமைதியாகச் செட்டிலாகி விட்டான்.

ஒருவேளை இனிமேல் குணசீலன் ஏதாவது தப்புத் தண்டாவுக்குப் போனாலும், அவன் தலையை அவன் பெண்டாட்டி சீவி விடுவாள் சீவி. தூத்துக்குடியாச்சே!!

சிலரது வாழ்க்கை ஆரம்பத்தில் தடம் புரண்டாலும், பிறகு அது நல்லவிதமாக நேர்கோட்டில் செல்ல ஆரம்பித்து வடுகிறது.

குணசீலனின் வாழ்க்கையும் அப்படியே….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *