சேற்றில் மலர்ந்த செந்தாமரை

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 7,089 
 

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

டாக்டர் கொடுத்த மாத்திரைகளை ராஜ் தவறாம சாப்பிட்டு வந்தாலும் அவர் உடம்பு தேறவே இல்லை.ரெண்டு வாரத் துக்கு அவர் உடம்பு சுமாராய் இருந்து வந்தாலும்,அடுத்த ரெண்டு வாரத் துக்கு ஜுரம் வந்து படுத்த படுக்கையாய் ஆகி வந்தார்.

சரஸ்வதிக்கு உடம்பு அதிகம் ஆகி விடவே சரவணன் அவள பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க்’ ஹோமில் சேர்த்தார். நான்கு நாள் வைத்தியத்திற்கு பிறகு சரஸ்வதிக்கு உடம்பு சா¢யாகமல் அவள் இறந்துப் போனாள்.சரவணன் அவள் ‘பாடியை’ ஒரு டாக்ஸியில் எடுத்து கிட்டு வீட்டுக்கு வந்தார் உடனே தேவிக்கும் மத்த உறவுக்காரர்களுக்கும் விஷ்யத்தை போன் பண்ணீ சொன்னார் சரவணன் தேவி விஷயம் கேள்விப் பட்டதும் செந்தாமரையையும் கமலாவை அழைத்துக் கொண்டு அவள் அப்பா வீட்டுக்குப் போனாள். செந்தாமரை தாத்தவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு,அவரை பார்த்து ”தாத்தா ஆயா ஈமக் காரியங்களுக்கு இந்த பத்தாயிரம் ரூபாயை வச்சுக்குங்க.அப்பாவுக்கு இப்ப எல்லாம் அடிக்கடி ஜுரம் வருது தாத்தா.அவர் உடம்பும் ரொம்ப மோசமா இருக்கு.அவரு படுத்த படுக் கையா இருந்து வறார் தாத்தா.அதானால்லே தான் அவரால் ஆயா சாவுக்கு வர முடியலே. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தாத்தா” என்று சொல்லி சரவணன் இடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தாள்.சரவ ணண் தன் கண்களில் கண்ணீட் முட்ட செந்தாமரையை பார்த்து “செந்தாமு உனக்கு நான் எப்படி நன்றி சொல்ற்துன்னே எனக்குத் தெரியலேம்மா.கையிலெ இருந்த பணத்தை எல்லாம் நான் ஆயா வைத்திய செலவுக்கு செலவு பண்ணி விட்டேம்மா.ஆயா காரியத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு நான் ரொம்ப கவலைப் பட்டு கிட்டு இருந்தேம்மா.மளிகைக் கடையிலும் இப்போ வியாபாரம் ரொம்ப மோசமா இருக்கும்மா.உனக்கு ரொம்ப ‘தாங்ஸ்ம்மா’ .இந்த பத்தாயிரம் ரூபாய் இப்போ எனக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும்ம்மா.என் பேத்தி கிட்டே பணம் வாங்கி நான் ஆயா காரியங்களை செய்யறதை நினச்சா எனக்கே ரொம்ப வெக்கமா இருக்கும்மா” என்று சொல்லி அவர் தன் எண் ஜான் உடம்பை ஒரு ஜான் உடம்பாகக் குறுக்கிக் கொண்டு,அழுது கொண்டே செந்தாமரை கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்.பணத்தை வாங்கிக் கொண்ட சரவணன் கொஞ்ச நேரம் குலுங்கி குலுங்கி அழு தார்.பிறகு சரவணன் மெல்ல எழுந்துப் போய் சரஸ்வதியை அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார். சரவணன் வீட்டுக்கு வந்ததும் அவர் கிட்டே சொல்லிக் கொண்டு தேவியும் செந்தாமரையும் வீட்டிற்கு வந்தார்கள்.
ராணி தட்டுத் தடுமாறி பத்தாவதில் ரொம்ப சுமா¡ராக மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருந்தாள். கணக்கு,இங்கிகிஷ்,இவற்றில் எல்லாம் முப்பத்தைஞ்சு மார்க் தான் வாங்கி இருந்தாள்.செந்தாமரைக்கு ராணியை மேலே பன்னாடவது சேர்த்து படிக்க வைக்க ஆசைப் பட்டாள்.அவள் ராணியைக் கூப்பிட்டு ”ராணி,நீ பத்தாவதிலே ரொம்ப சுமாரா மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்னு நினைச்சு கவலை படாதே.நான் உன்னை இன்னும் ஒரு நல்ல பள்ளி கூடத்திலே சேத்து படிக்க வைக்கிறேன்.கூடவே உனக்கு ‘டியுஷனும்’வைக்கிறேன்.நீ பன்னடாவது படிக்கிறாயா” என்று கேட்டாள்.ராணி அதற்கு ரொம்ப நேரம் வரை பதிலே சொல்லாமல் சும்மா இருந்தாள்.செந்தாமரைக்கு அவள் மௌனம் புரிய வில்லை.அவள் உடனே ராணீயைப் பார்த்து “ராணி,உன்னை நான் நல்ல பள்ளிக் கூடத்திலே சேர் த்தா அங்கே இருக்கிற வாத்தியாராருங்க உனக்கு எல்லா பாடமும் நல்ல புரியும்படி சொல்லிக் குடுப் பாங்க.கூடவே நான் உனக்கு ‘டியூஷனும்’ வக்கப் போறேன்.நீ படிச்சு ‘பாஸ்’ பண்ணுவது உனக்குக் கஷ்டமாவே இருக்காது ராணி” என்று மறுபடியும் சொன்னாள்.இனிமே நாம சும்மா இருந்தா இந்த சித்தி நம்மை பள்ளிக் கூடத்திலே சேர்த்து விடுவாங்கன்னு பயந்து ராணி “இல்லே சித்தி.எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு.என் கூட படிச்ச என் ‘பிரண்டுடன்’ அவள் வேலை செஞ்சு வரும் ஒரு பொ¢ய ‘சூப்பர் மார்கெட்டிலே வேலைக்குப் போய் வரலாம்ன்னு இருக்கேன்.நான் வேலைக்குப் போய் வரட்டுமா சித்தி” என்று செந்தாமரையின் கைகளைப் பிடித்து கெஞ்சினாள்.தூக்கி வாரி போட்டது செந்தாமரைக்க்கு.ராணி இப்படி வேலைக்கு போக ஆசைப் படுவாள் என்று அவள் நினைக்கவே இல்லை.உடனே செந்தாமரை ராணீயைப் பார்த்து ”ராணீ,நீ இன்னும் ரொம்ப சின்னப் பொண்ணும்மா.இந்த வயசிலே நல்லா படிச்சு ஒரு ‘டிகி¡£’ ‘வாங் கினா அப்புறமா நீ இன்னும் நல்ல வேலைக்கு போய் வரலாம்.உனக்கு சம்பளமும் அதிகமா கிடை க்கும்.இப்போ நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சு வரணும் என்கிற நிலைமை நமக்கு இல்லேம்மா. எனக்கு நிறைய சம்பளம் வருதும்மா.நீ இன்னும் மேலே படிம்மா” என்று கணிவாக சொன்னாள்.ராணி ஒன்னும் பேசாமல் சும்மா இருந்தாள்.கமலா தன் பெண் ராணியைப் பார்த்து ”ராணீ,அதான் சித்தி உன்னை ஒரு நல்ல பள்ளி கூடத் திலே சேர்த்து உனக்கு ‘டியூஷனும்’ வக்கப் போறேன்ன்னு சொல் றாங்க.நீ அந்தப் பள்ளிக் கூடத்தி லே சேந்து படிச்சு வாயேன்.இந்த சின்ன வயசிலேயே ஏன் வேலை க்கு போகணும்ன்னு ஆசைப் படறே ராணி” என்று கேட்டாள்.ராணி உடனே “அம்மா எனக்கு மேலே படிக்க ஆசை இல்லேம்மா.எனக்கு வேலைக்கு போய் சம்பாதிக்கணும்ன்னு தான் ஆசையா இருக்கு ம்மா” என்று தன் அம்மாவின் புடவை தலைப்பை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.ராணிக்கு மேலே படிக்க ஆசை இல்லை என்று சொன்னதைக் கேட்டவுடன் அவள் தன் எண்ணத்தை மாற்றிக் கொ ண்டு ராணியைப் பார்த்து ”ராணி சா¢.உனக்கு மேலே படிக்க ஆசை இல்லேன்னு நீ சொல்றதாலே, நான் உன்னை மேலே படின்னு வற்புறுத்தப் போவது இல்லே.நீ உன் ‘பிரண்டுடன்’ அவ வேலை செஞ்சு வரும் ‘சூப்பர் மார்கெட்டிலே’ வேலை க்கு சேந்து,உன் விருப்பப் படி வேலைக்குப் போய் வா” என்று சொல்லி விட்டு அவள் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

படிப்பது என்பது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாதே.செந்தாமரைக்கு அந்த ஆசை கொழுந்து விட்டு எறிந்ததால் தான், அவள் அந்த சின்ன வயசில் அவள் அப்பா, அம்மா, ஆயா,அக்கா எல்லோரையும் விட்டு விட்டு யாரோ முன் பின் தெரியாத ஒருவருடன் மதுரைக்குப் போய் படித்தாள்.கணக்கிலே ரெண்டு ‘டிகி¡£யும்’ வாங்கி சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவி யாக ‘பாஸ்’ பண்ணினாள்.கூடவே வாத்தியார் வேலைக்கும் ஒரு ‘டிகி¡£யும்’ வாங்கி வந்து இன்றை க்கு ஒரு நல்ல கணக்கு வாத்தியாராக வேலை செய்து வருகிறாள்.எல்லோரும் செந்தாமரை ஆகி விட முடியுமா!!!!.
அடுத்த வாரமே ராணி அவ ‘பிரண்டுடன்’ போய் அவர்கள் வீட்டுக்கு பக்கத்திலெ திறந்து இருக்கும் ஒரு ‘சூப்ப்ர் மார்கெட்டிலே’ ‘சேல்ஸ் கர்ளாக’ வேலைக்கு சேர்ந்து விட்டாள். செந்தாமரையும் தேவியும் முடிந்த போது சரவணனைப் பார்த்து விட்டு அவருக்கு கொஞ்ச பண உதவியைப் பண்ணி விட்டு அவர் உடல் நலத்தை விசாரித்துக் கொண்டு வந்தார்கள்.ஆறு மாசம் தான் ஆகி இருக்கும். ராணி தனக்கு வரும் சம்பளத்தில் தன்னுக்கு நிறைய வித விதமான ‘டிரஸ்களை’ எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டு நிறைய ‘சென்ட்டும்’ வாங்கிப் போட்டுக் கொண்டு சந்தோஷமாக தன் பொழுதை கழித்து வந்தாள்.ஒரு நிமிஷம் கூட ராணி அவ வாழ்ந்து வந்த குடும்ப சூழ் நிலையை யோஜனைப் பண்ணிப் பார்க்கவே இல்லை.இந்தக் கவனித்த கமலாவும் தேவியும் ரொம்ப வருத்தப் பட்டார்கள். செந்தாமரை வீட்டில் இல்லாத போது தேவி கமலாவைப் பார் த்து “என்ன கமலா,இந்த ராணி நம்ப குடும்ப சூழ் நிலையைப் புரிஞ்சுக்காம இப்படி அவ சம்பா திச்சு வர சம்பளத்திலே ஒரு ரூபாயைக் கூட செந்தாமு கிட்டே குடுக்காம,அவளுக்கு பிடிச்ச வித, வித மான,டிரஸ்களையும், செண்ட்டையும் ’ஹாண்ட் பாக்கையும்’ வாங்கிக் கிட்டு வந்து ஒரு சினிமாக்காரி மாதிரி வேலைக்குப் போய் வறா.நீ அவ கிட்டே கொஞ்சம் சொல்லி அவ போக்கை மாத்திக்க சொல்ல க் கூடாதா.எனக்கு என்னமோ ராணி செய்யறது கொஞ்சம் கூட சா¢ இல்லேன்னு படுது.நீ அவ அம்மா தானே.கொஞ்சம் சொல்லி அவளைத் திருத்தேன்” என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன் னாள்.”எனக்கும் ராணீ செய்வது கொஞ்சம் கூடப் பிடிக்கலேம்மா.நான் என்ன பண்ணட்டும் சொல்லு.அவ ஒரு வயசுப் பொண்ணு. நாம அவளை ஏதாவது மிரட்டிச் சொன்னா,அவ வேலை செஞ்சு பணம் சம்பாதிச்சு இருக்கிற திமிரி லே எங்காச்சும் எவனோடாவது ஓடிப் போயிட்டா என்னம்மா பண்றது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி அவ வேலை விட்டு வீட்டுக்கு வந்தப்புறமா நான் அவ கிட்டே சொல்லிப் பாக்கிறேம்மா” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னாள் கமலா.ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்த ராணி தன் செருப்பை ஒரு ஓரமாக அவிழ்த்து வைத்து விட்டு தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொ ண்டு சப்பிட உட்கார்ந்தாள்.கமலா தான் ராணிக்கு சாப்பாடு போட்டாள்.ராணி சாப்பிட்டு முடிந்ததும் கமலா அவளைத் தனியாக அழைத்துப் போய் “ராணி நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லே. நானும் ஆறு மாசமா பாத்துக் கிட்டு தான் வறேன்.நீ வேலைக்குப் போய் ஆறு மாசத்துக்கு மேலே ஆவுது.நீ உனக்கு வர சம்பளத்திலே காலாணா கூட இந்த வூட்டு செலவுக்குக் குடுக்கறது இல்லே. உன்னை இம்மாந்தூரம் படிக்க வச்ச சித்தக் கிட்டே கூட நீ காலாணா கூட குடுக்காம என்னமோ ஒரு சினிமாக்காரி மாதிரி வித விதமான ‘டிரஸ் களை’ எல்லாம் வாங்கிப் போட்டுக் கிட்டு.ஒரு ’ஹாண்ட் பாகை’ எடுத்து கிட்டு,சென்ட் எல்லாம் போட்டு கிட்டு வேலைக்குப் போய் வறே.இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லே.உன்னை நினைச்சு ஆயா கூட ரொம்ப வருத்தப்பட்டாங்க.நீ இந்த மாசம் சம்பளம் வந்தவுடனே மொத்த சம்பளத்தை யும் சித்தி கிட்டெ குடுக்கணும் தெரிதா.உனக்கு வர சம்பளத்தை இப்படி நீயே உனக்கு செலவு பன்ணி கிட்டு வரக் கூடாது என்ன” என்று கண்டிப்பாக சொன்னாள். கமலா சொல்லி முடிக்கவில்லை ராணீ உடனே “அம்மா,சித்திக்கு தான் கை நிறைய சம்பளம் வருதே ம்மா.நான் எனக்கு வர சம்பளத்தை ஏம்மா சித்திக்குத் தரணும்.சித்தி இதைப் பத்தி என் கிட்டே ஒன் னும் கேகக்கலையேம்மா.அவங்களே சும்மா இருக்கும் போது நீங்க ஏம்மா என் சம்பளத்தை அவங்க கிட்டே குடுக்கணும்ன்னு சொல்றீங்க.நான் எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கிட்டு வந்து,நான் சந்தோஷமா இருந்து வறேனேம்மா.இதிலெ என்ன தப்பும்மா” என்று ¨தா¢யமாகத் திருப்பி கேட்டாள். கமலாவுக்கு ராணீ சொன்ன பதிலைக் கேட்டதும் கோவம் கோவமாக வந்தது.செந்தாமரைக்கு இவர்கள் பேசி கொண்டு இருந்தது லேசாகக் கேட்டது.‘இந்த காலத்து வயசு பொண்ணுங்களுக்கு இப்படி இருந்து வரத் தானே பிடிக்குது. பாவம் நம்ம அம்மாவும்,அக்காவும் ராணீ கிட்டே இப்படி கெஞ்சறாங்களே.இவங்க இப்படி கெஞ்சிக் கேட்டா மட்டும் ராணி சம்மதிச்சு நடந்து வரப் போறாளா என்ன’ என்று தன் மனதுக்குள் நினைத்து சிரித்து கொண்டாள் செந்தாமரை.

ராஜ்ஜுக்கு டாக்டர் கொடுத்த மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யாமல் அவர் உடல் நிலை மோசம் ஆகிக் கொண்டு வந்தது.அப்பா உடல் நிலை மோசமாகி வருவதை பார்த்த செந்தாமரை அவரைப் அழைத்து கொண்டு டாக்டா¢டம் போனாள்.அவரை பா¢சோதித்த டாகடர் ¦சிந்தாமரையை தனியாக அழைத்து “இதோ பாருங்கம்மா நீங்க சொல்றதை எல்லாம் பாத்தா உங்க அப்பாவுக்கு நான் எழுதிக் கொடுக்கும் மாத்திரைங்க அவர் உடம்பிலே வேலையே செய்யலே போல இருக்குங்க.அவர் ‘லீவர்’ ரொம்ப மோசமா ஆகி விட்டு இருக்குங்க.இவர் உடம்பு இப்படி நான் கொடுக்கும் மருந்துக்கு வேலை பண்ணலேன்னா,என்னால் ஒன்னும் பண்ண முடியாதும்மா.கடவுள் மேலே பாரத்திலே போட்டு விட்டு நான் எழுதிக் கொடுக்கும் இன்னும் ‘பவர்புல்’ மாத்திரைங்களை கொடுத்து வாங்க.கூடவே அவர் ஆசைப்படுவதை எல்லாம் அவருக்கு செஞ்சு வாங்க.அவர் இன்னும் ரொம்ப வருஷம் உயிரோடு இருக்க மாட்டாரும்மா.நான் சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்கா தீங்கம்மா.’லீவர்’ மோசமானா இப்படித்தாம்மா ஆவும்” என்று சொல்லி விட்டு அவர் ‘லெட்டர் பாடில்’ இன்னும் அதிக ‘பவர்புல்’ மாத்திரைகளின் பேரை எழுதிக் கொடுத்தார்.செந்தாமரை டாக்டர் கொடு த்த சீட்டை வாங்கி கொண்டு அவருக்கு ‘பீஸை” கொடுத்து விட்டு,தன் தலையை தொங்க போட்டு க் கொண்டு டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தன்னை சுதாரித்துக் கொண்டு, மெல்ல எழுந்துப் போய் எதிரே இருந்த கான்டீனுக்குப் போய் தனக்கும், அப்பா வுக்கும் காபியை வாங்கி கொண்டு வந்து ஒரு சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு அப்பாவுக்கும் கொடு த்து, தானும் மெல்ல குடிக்க ஆரம்பித்தாள்.அந்த காபி யை செந்தாமரையும் ராஜ்ஜும் முழுக்க குடித்த பிறகு அவர்கள் உடம்பில் கொஞ்சம் தெம்பு வந்தது.பிறகு அந்த ‘ஹாஸ்பிடலை’ விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு அப்பா வை வீட்டுக்கு அழைத்து செர்ந்தாள் செந்தாமரை. செந்தாமரை கண்ணில் நீர் வழிய “அப்பா இன்னும் ரொம்ப வருஷம் உயிரோடு இருக்க மாட்டாரு.’லீவர்’ மோசமானா இப்படித்தாம்மா ஆகும்.என்று இருவா¢டமும் ரகசியமாக சொன்னாள்.

ராஜேஷ¤ம் செந்தாமரையும் போட்ட கணக்கு புஸ்தகம் மார்கெட் டிலே மிக வேகமாக வித்து போய் எல்லா புஸ்தகக் கடை காரங்க எல்லோரும் ‘பப்லிஷ் கம்பனியை’ இன்னும் அதிக புஸ்தங்கங்கள் வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.உடனே அந்த ‘பப்லிஷ் கம்பனி’ ஓனரும்இன்னும் ஐனூறு புஸ்தங்கள் ‘பிரிண்ட்’ பண்ணி அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர் ஒரு நாள் சாயங்காலம் ‘பிரின் ஸிபாலை’ பார்க்க வந்தார்.அவர் ‘பிரின்சிபாலை’ப் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு “சார்,நீங்க என்னை ‘பப்லிஷ்’ பண்ணச் சொன்ன புஸ்தகம் மார்கெட்டிலே வேகமாக வித்துப் போய் அவங்க என்னை இன்னும் ஐனூறு புஸ்தங்கம்’ பிரின்ட்’ பண்ண வேண்டும் என்று கேட்டாங்க.நானும் உடனே இன்னும் ஐனுறு காப்பி ‘பிரிண்ட்’ பண்ணி அவங்களுக்கு அனுப்பி இருக்கேன். முதல்லே ‘பிரிண்ட்’ பண்ணி வித்த கொடுத்த லாபத்திலே என் பங்கை எடுத்து கிட்டு மீதி பணத்தை உங்க கிட்டு கொடுத்து விட்டுப் போகலாம்ன்னு தான் நான் வந்தேன்” என்று சொல்லி அவர் கொண்டு வந்த பணத்தை தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தார்.உடனே ‘பிரின்சிபால்’ எழுந்து நின்றுக் கொண்டு அவர் கொடுத்த பணத்தை தன் கையில் வாங்கிக் கொண்டு “ரொம்ப தாங்ஸ் சார்.அந்த கணக்கு புஸ்தகம் மார்கேட்டிலே இவ்வளவு சீக்கிரமா வித்துப் போகும்ன்னு நான் நினைக்கலே. கேக்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்னார்.அந்த நண்பரும் கொஞ்ச நேரம் ‘பிரின்சிபால்’ கிட்டே பேசி கொண்டு இருந்து விட்டு “சார்,அந்த ஐனுறு காப்பியும் மார்கெட்டிலே வித்துப் போன பிறகு எனக்கு பணம் கிடைச்சவுடன்,நான் இங்கே வந்து உங்க ‘ஷேரை’ உங்க கிட்டே தறேன்.இப்போ நான் போய் வறேன் சார்”என்று சொல்லி விட்டு ‘பிரின்சிபால்’ ரூமை விட்டு வெளியே போனார் அந்த நண்பர்.

அந்த நண்பர் தன் ரூமை விட்டு வெளீயே போனதும்’ பிரின்ஸிபால்’ ராஜேஷையும் செந்தா மரையையும் தன் ரூமுக்கு வரச் சொன்னார்.அவர்கள் ரெண்டு பேரும் தன் ரூமுக்கு வந்தவுடன் ”உக்காருங்க.உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ‘க்லாட் நியூஸ்’.என் நண்பர் ‘பிரின்ட்’ பண்ணி அந்த கணக்கு புஸ்தகத் தை மார்கெட்டிலெ கொடுத்து விக்க சொன்னாராம்.அந்த கணக்கு புஸ்தகம் எல்லாம் மார்கெட்டிலே சீக்கிரமா வித்துப் போய் அந்த கடைக்கரங்க இன்னும் நிறைய ‘காப்பிகள்’ வேணும்ன்னு என் நண்பரை கேட்டு இருக்காங்க.அவரும் உடனே இன்னும் ஐனூறு காப்பிகள் ‘பிரின்ட்’ பண்ணி அனுப்பி இருக்காராம்.முதல்லே போட்ட நூறு புஸ்தகத்துக்கு வந்த லாபத்திலே தன் பங்கை எடுத்து கிட்டு நம்ப ‘ஷேரை’ என் கிட்டே குடுத்து விட்டுப் போனார்.இந்தாங்க அந்த ‘ஷேர்’ பணம்” என்று சொல்லி நண்பர் கொடுத்த பணத்தை நீட்டினார் ‘பிரின்ஸிபால்’.உடனே செந்தா மரை”சா¢ சார்,நீங்க எங்களுக்கு மேலதிகாரி.நீங்க சொன்னபடியே இப்போ நாங்க ரெண்டு பேரும் செய்யறோம். ஆனா அடுத்து ‘பிரிண்ட்’ பண்ண ஐனூறு காப்பியும் மார்கெட்டிலே வித்துப் போய் உங்க நண்பர், அவர் பங்கை எடுத்துக் கிட்டு மீதியை குடுக்க வந்தா,அப்போ நீங்க அந்த பணத்தை மூனு பங்கா பண்ணி,ஒரு பங்கை எடுத்துக்கிறேன்னு சொன்னா தான் நாங்க இப்போ இந்த பணத்தை வாங்கிப்போம் சார்.அப்போ நீங்க எந்த மறுப்பு சொல்லக் கூடாது சார்” என்று சொன்னதும் “இந்த செந்தாமரை, இப்படி ஏதாச்சும் ஒரு ‘கண்டிஷனை’ நிச்சியம் போடுவான்னு நான் எதிர் பார்த்தேன் .அவ இப்போ போட்டு விட்டா.எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியலை” என்று சொல்லிக் கொண்டு இருக் கும் போது ராஜேஷ¤ம் “ஆமாம் சார்,செந்தாமரை சொலறது ரொம்ப ‘கரெக்ட்’ “என்று சொன்னதும் உடனே ‘பிரின்சி பாலும்’ ”நீயும் அப்படியே சொல்றயே ராஜேஷ். எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே.சா¢ நான் நீங்க சொன்னபடி ஒத்துக்கறேன்” என்று சொல்லி சிரித்தார்.

வீட்டுக்கு வந்த செந்தாமரை “அம்மா நானும்,ராஜேஷ¤ம், சேர்ந்து ஆராய்ச்சி பண்ணிணோ ம்மா.அது ஒரு கணக்கு புஸ்தகமாக வெளி வந்து,அந்த புஸ்தங்ககள் மார்கெட்டிலே வித்து போய் இருக்கும்மா.அதுக்கு எனக்கு இந்த ‘ஷேர் ’ பணம் கிடைச்சுதும்மா இந்தாம்மா அந்த பணம்” என்று சொல்லி அந்த பணத்தை தேவி கையில் கொடுத்து விட்டு அவள் கால்களைத் தொட்டு தன் கண் களில் ஒத்திக் கொண்டாள்.உடனே தேவி “செந்தாமு,நீயும் அந்த ஐயர் பையணும் சேர்ந்து ஒரு கண க்கு புஸ்தகம் போட்டு இருக்கீங்களா.என்னால் நம்ப முடியலே செந்தாமு.நான் படிக்கிற நாள்ளே கணக்கு புஸ்தகத்திலே போட்டு இருக்கிற கணக்கையே என்னால் புரிஞ்சிக்க முடியோயாம நான் ரொம்ப கஷ்டப் படுவேன்.ஆனா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கணக்கு புஸ்தகமே போட்டு, அந்தப் புஸ்தகம் மார்கெட்டிலெ விலை போய் இருக்கா.அந்தப் புஸ்தகம் வித்த பணமா இது செந்தாமு” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டாள்.கமலாவும் ”ஆமாம் செந்தாமு,அம்மா சொல்றா மாதிரி எனக்கும் கணக்கு புஸ்தகத்திலெ போட்டு இருக்கிற கணக்கையே புரிஞ்சிக்காம ரொம்பக் கஷ்டப் படுவேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் சேந்து ஒரு கணக்கு புஸ்தகமே போட்டு இருக்கீங்களே” என்று சொல்லி ஆச்சா¢யப் பட்டாள்.
வீட்டுக்கு வந்த ராஜேஷ் அவன் அம்மா அப்பாவைப் பார்த்து “அப்பா அம்மா, நானும் செந்தா மரையும் பள்ளி கூடத்திலே எங்க ஓய்வு நேரங்களிலே ஆராய்ச்சி செஞ்சு பத்தாவது வகுப்பு மாணவர் களுக்கு பாட புஸ்தகத்திலே இருக்கிற கஷ்டமான பதினைஞ்சு கணக்குகளை எப்படி சுலபமாகப் போடுவதுன்னு வழிகள் கண்டு பிடிச்சு அதை ஒரு புஸ்தகமாகப் போட்டு அந்த புஸ்தகம் இப்போ மார் கெட்டிலே விலை போய் இருக்கும்மா.எங்க பிரின்ஸிபாலில் நண்பர் ஒருவர் தான் அந்த புஸ்தக த்தை ‘பிரிண்ட்’ பண்ணி புஸ்தகக் கடைகளுக்குப் போட்டு இருக்கார்.அந்த புஸ்தகம் வித்த பணத்தில் எங்களுக்கு வந்த ‘ஷேரை’ நானும் செந்தாமரையும் பாதி பாதியாக பிரிச்சு எடுத்துண்டோம் இந்தாங்க அந்த ‘ஷேர்’ பணம்” என்று சந்தோஷத்துடன் சொல்லி,அந்த ‘ஷேர்’ பணத்தை தன் அப்பா கையிலெ கொடுத்தான்.உடனே ராஜேஷின் அப்பா “வொ¢ குட் ராஜேஷ்.நீயும்,அந்த செந்தாமரையும் ஆராய்ச்சி பண்ணி ஒரு கணக்குப் புஸ்தகம் போட்டு,அது மார்கெட்டிலெ விலை போய் இந்த ஷேர் பணம் உன க்கு கிடைச்சு இருக்கா.எனக்கு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ராஜேஷ¤ன் முதுகில் செல்லமாக தட்டி அவனைப் பாராட்டினார். உடனே காயத்திரி ராஜேஷைப் பார்த்து” ராஜு, நீ பண்ற எல்லாம் காரியமும் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷத்தை குடுக்கிறதுடா.உன்னெ மாதிரி ஒரு நல்ல பையன் எங்களுக்குப் பொறந்ததை நினைச்சி நாங்க ரொம்ப பெருமைப் படறோம் ராஜு.ஆனா நீ இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்காம,இப்படி ஒரு பிரம்மசாரியா வாழ்ந்து வருவதை நினைச்சாத் தான் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ராஜு.நீ ஒரு நல்ல பொண்ணாப் பாத்து, காலா காலத்திலே ஒரு கல்யாணத்தை பண்ணிண்டு, எங்களுக்கு சீக்கிரமா ஒரு பேரனையோ, பேத்தி யையோ,பெத்து கொடேன்.நீ இப்படி கல்யாணம் பன்ணிக்கம இருந்து வந்தா,அப்புறமா நம்ம வம்சம் எப்படி ராஜு தழைக்கிறது சொல்லு.நீ ஆத்திலெ இல்லாதபோது இதை தான் நானும், அப்பாவும்,சதா இதை பத்தி தான் பேசி வறோம்” என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.காயத்திரி தன் புடவை தலைப் பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.உடனே கண்ணன் “ஆமாம் ராஜு, அம்மா சொல்றது ரொம்ப சா¢ப்பா.நீ எங்களுக்கு ஒரே பிள்ளைப்பா.உனக்கு அப்புறமா இந்த குடும்பம் வளர வேண்டாமா நாங்க இருக்கிற வரைக்கும் சா¢.நாங்க என்னப்பா உனக்கு சாஸ்வதம் சொல்லு. எங்க காலத்துக்கு அப்புறமா உனக்குன்னு ஒரு பெண்டாட்டி,குழந்தைங்கன்னு இருக்க வேணா¡மா. . நம்ப வம்சம் உன்னோடு முடிஞ்சு விடக் கூடாதுப்பா.அது மேலே, மேலே வளரணும்ப்பா.நீ ஒரு கல்யாணத்தை சீக்கிரமா பண்ணிகோப்பா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.அம்மா,அப்பா அசையை பூர்த்தி பண்ணாமல் இருப்பதும் அவனுக்கு சா¢ன்னு தோணவில்லை.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன ராஜேஷ் “சா¢ம்மா,நீங்க ரெண்டு பேருமே எனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாருங்க.நான் அவளைக் கல்யாணம் பண்ணீண்டு உங்க ரெண்டு பேருடைய ஆசை யைப் பூர்த்தி பண்றேன்” என்று சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போனான். ராஜேஷ் சொன்னதை கேட்டு கண்ணனும் காயத்திரியும் ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.

பள்ளிக் கூடம் வந்த ராஜேஷ் அவன் வகுப்பு கணக்கை எடுத்து விட்டு செந்தாமரை ‘ப்¡£யா’ இருந்த போது அவளைப் பார்க்கப் போனான்.அவன் முகம் சற்று வாட்டமாகத் தான் இருந்தது. செந்தாமரை அருகில் வந்து ராஜேஷ் உட்கார்ந்துக் கொண்டான்.ராஜேஷ் வந்து தன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டதும் செந்தாமரை அவனை பார்த்து “என்ன சார்,நாம எழுதின கணக்கு புஸ்தகம் ‘பப்ளிஷ்’ ஆகி அதுக்கு வந்த ‘ஷேர் ‘பணத்தை உங்க அம்மா அப்பா கிட்டே குடுதீங்களா.அவங்க சந்தோஷப்பட்டா ங்களா.எங்க வீட்டிலே அன் அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. ஏங்க உங்க முகம் வாட்டமா இருக்கு.உங்களுக்கு உடம்பு ஏதாச்சும் சா¢ இல்லையாங்க” என்று சொல்லி விட்டு ராஜேஷ் முகத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ராஜேஷ் கொஞ்ச நேரம் மௌனத்திற்க்குப் பிறகு “அவா ரெண்டு பேரும் ரொம்ப சதோஷப் பட்டா செந்தாமரை ஆனா கூடவே அவா….” என்று சொல்வதற்கு முன்னாலே செந்தாமரை “நான் நினைச்சேங்க.உங்க அம்மா வும் அப்பாவும் உங்களைப் பார்த்து ‘ஏண்டா ராஜேஷ் இன்னும் அந்த குடிசைப் பொண்ணு சகவாசம் உனக்குப் போகலையாடா.ஏண்டா அந்த பொண்ணோடு இன்னும் பழகி வறே.அவ தான் உனக்கு இல்லேன்னு ஆயிடுச்சே’ ன்னு சொல்லி ரொம்ப கோவிச்சுக் கிட்டாங்களாங்க” என்று கேட்டாள். ராஜேஷ் அதற்கு உடனே “இல்லே செந்தாமரை.அவங்க நீ சொன்னது போல சொல்லலே.முதலில் என் அப்பாவும்,அம்மாவும் என்னைப் பார்த்து ‘எங்களுக்கு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு’ ன்னு தான் சொன்னா.என் அம்மா தான் நீ இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்காம பிரம்மசாரியா வாழ்ந்து வருவதை நினைச்சாத் தான் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ராஜு.நீ வேறே ஒரு நல்ல பொண்ணாப் பாத்து காலாகாலத்திலே ஒரு கல்யாணத் தை பண்ணிண்டு எங்களுக்கு சீக்கிரமா ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடேன்’ என்று சொல்லி கண் கலங்கினா” என்று சொல்லி வருத்தப் பட்டான்.உடனே செந்தாமரை ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ”அவங்க சொல்றது ரொம்ப சா¢ங்க.அவங்க இஷ்டத்தை நீங்க பூர்த்தி பண்ணியே ஆகணுங்க.நான் உங்களுக்கு முன்னமெ இதை சொன்னேனுங்க.நீங்க உங்க அப்பா,அம்மா,ஆசைப் படுவது போல ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி கிட்டு,அவங்க சந்தோஷத்துக்கு ஒரு பேரனை யோ பேத்தியையோ பெத்து குடுங்க” என்று சொன்னதும் ராஜேஷ் ஆச்சா¢யப் பட்டான்.

ரெண்டு மூன்று நாட்கள் ஆனதும் ராஜேஷ் செந்தாமரையைப் பார்க்க வந்தான்.அவன் இப்போது மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த செந்தாமரை “என்ன சார்,நீங்க சந்தோஷமா இருக்கீங்க.உங்க அம்மா அப்பா உங்களுக்கு ஒரு நல்ல பெண்ணாப் பார்த்து இருக்காங்களா” என்று கேட்டதும் ராஜேஷ் ”நான் அவங்களை எனக்கு ஒரு நல்ல பெண்ணாப் பார்க்க சொல்லி இருக்கேன். அவங்க பார்த்த பிறகு தான் எல்லாம்.நான் இப்போ சந்தோஷமா இருக்கிறதுக்கு இன்னொரு காரணம் இருக்கு.அது என்னன்னா என் மனசிலே ஒரு ‘ஐடியா’ தோன்றி இருக்கு செந்தாமரை.அதன் படி நாம இருவரும் பனனாடவது வகுப்பு கணக்கிலே கஷ்டமான இருபது கணக்குகளை தேந்து எடுத்து அவைகளை எப்படி சுலபமாக போடுவது என்று புஸ்தகம் போடக் கூடாது” என்று கேட்டதும் செந்தா மரைக்கு ராஜேஷ் சொன்னது மிகவும் பிடித்து இருந்தது.உடனே செந்தாமரை ‘நீங்க சொல்றது ரொம்ப நல்ல ஐடியாங்க.எனக்கு இந்த ஐடியா ரொம்ப பிடி ச்சி இருக்குங்க.நான் ஒன்னு பண்றேன். என் புத்திக்கு பன்னாடாவது கணக்கிலே எந்த இருபது கணக்குகள் கஷ்டமாக இருக்குன்னு படுதோ அவைகளை நான் தேர்ந்து எடுத்து வக்கிறேன்.நீங்களும் அந்த மாதிரி ஒரு இருபது கஷ்டமான கணக்குகளை தேர்வு செய்யுங்க.பிறகு ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்த்து கிட்டு அந்த கணக்கு களை ‘டிஸ்கஸ்’ பண்ணி,அவைகளை ‘பைனலைஸ்’ பண்ணலாங்க. ‘பைனல்’ ஆன இருபது கணக்குகளை எப்படி சுலபமாகப் போடுவது என்று நாம் எழுதி முடிச்ச பிறகு அதை ‘பிரின்ஸி பால்’ கிட்டே காட்டலாங்க.நீங்க என்ன செல்றீங்க” என்று கேட்டதும் ராஜேஷ் “ஓ.கே.செந்தாமரை நான் நாளையில் இருந்து அதை செய்யறேன்.நீயும் செய்” என்று சொல்லி விட்டுப் போனான் ராஜேஷ்.

ராஜ்ஜுக்கு உடல் நிலை மோசமாகி வர ஆரம்பித்தது.அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை செந்தா மரை வீட்டில் இருந்த போது அவளை தன் அருகில் “செந்தாமு,நான் இன்னும் ரொம்ப நாள் உசி ரோடு இருக்க மாட்டேன்னு எனக்குப் படுது.அதனால் நான் என் கண்ணை மூடறுத்துகுள்ளாற ராணி கல்லாணத்தை பாக்க ரொம்ப ஆசையா இருக்குது. அவ கல்லாணத்தை நீ பண்ண முடியுமா” அவளைக் கூப்பிட்டு கேக்கலாமா” என்று கேட்டார்.அவர் கண்களில் கண்ணீர் சுரந்தது.உடனே செந்தாமரை அம்மாவுக்கும், அக்காவுக்கும் அப்பா ஆசைப் பட்டதை சொன்னாள்.ஆரம்பத்தில் தேவிக்கும் கமலாவுக்கும் ராஜ் ஆசைப் பட்டதை செய்து விடலாம் என்று தான் பட்டது.“அப்பா இப்படி ஆசைப் படுவதை பாத்தா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலேம்மா.இந்த நேரம் பாத்து ராணீ வூட்டிலே இல்லியேம்மா.அவளை ஒரு வார்த்தை கேக்க வேணாமா.அவ இந்த காலத்து பொண்ணு. ரெண்டு காசு வேறே சம்பாதிக்கிரா வேறே.அவ ‘சா¢’ன்னு சொன்னாதா தானே நாம அவளுக்குக் கல்லாணம் கட்டி வைக்க முடியும்ம்மா” என்று கவலையுடன் சொன்னாள்.செந்தாமரை அம்மாவையும் அக்காவையும் பார்த்து “அம்மா,அக்கா அப்பா ஆசைப்படுவதை நாம நிச்சியமா செஞ்சு முடிக்கணும். நாம ராணீ கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு,அப்பு றமா அதை அப்பா பாக்க முடியாம போயிட்டா, நாம் எல்லோரும் ரொம்ப வருத்தப்படுவோம்மா இல்லையா சொல்லுங்க” என்று தன் அபிபிராயத்தை சொன்னாள்.

இரவு படுத்துக் கொண்டு கமலா ராணியைப் பாத்து “ராணீ,உங்க தாத்தா உனக்கு கல்லாணத் தைப் பண்ணிப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் படறாரு.உன்னைக் கேக்கச் சொன்னாங்க.நீ என்ன சொல்றே ராணி”என்று கேட்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.உடனே ராணீ “அம்மா,நானே உங்க கிட்டே சொல் லலாம்ன்னு தான் இருந்தே ம்மா.எங்க’சூப்பர் மார்கெட்டிலே’ நான் வேலை செஞ்சு வர ‘செக்ஷன் சூப்பர்வைசரை’ நான் ரொம்ப காதலிக்கிரேம்மா.அவரும் என்னை ரொம்ப காதலிக்கிறார்ம்மா.நீங்க சித்திக் கிட்டே கொஞ்சம் எனக் காக சொல்லி, அவரை எனக்கு கல்யாணம் பன்ணி வைக்க முடியுமா ம்மா” என்று அம்மாவின் கை களைப் பிடித்துக் கொண்டு கொஞ்சலாகக் கேட்டாள்.“அடிபாவி,நீ எவரோ ஒருத்தனை காதல் வேறே பண்றாயா.நீ ரொம்ப ஆசைபட் டேன்னு தான் நாங்க உன்னை வேலைக்குப் போகவே சொன்னோம். இப்ப என்னடான்னா ‘காதல்’ ‘கத்திரிக்கான்னு’ சொல்லி கிட்டு வந்து நிக்கறே.நம்ப குடும்பத்திலே இந்த மாதிரி காதல் செஞ்சு எல்லாம் கல்லாணம் கட்டற வழக்கம் இல்லியே ராணி.அவங்க கிட்ட சொன்னா அவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியாதே ராணீ.நீ காதலிக்கிற பையன் யாரு.அவன் பேரு என்ன.அந்தப் பையன் உன்னை கல்லாணம் கட்டி கிட்டு,உன்னை காலம் பூராவும் கண் கலங் காம வச்சு கிட்டு உனக்கு சோறு போடுவானா.இல்லெ ரெண்டு புள்ளேங்க பொறந்தவுடனே உங்க அப்பன் போல உன்னையும் ரெண்டு பொட்டைப் புள்ளேங்களையும் வுட்டு ட்டு வேறே ஒரு சிறுக்கி கூட ஓடிப் போயிடுவானா ராணி” என்று கலவரப் பட்டுக் கேட்டாள் கமலா.

உடனே ராணி “அம்மா அவர் அப்படிப் பட்டவர் இல்லேம்மா.அவர் என் மேலே ரொம்ப ஆசை யா இருக்காரும்மா.அப்படி எல்லாம் என்னை வுட்டுட்டு எல்லாம் அவர் போக மாட்டாரும்மா.என்னை நம்பும்மா” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் ராணீ.“சா¢ ராணீ,அவர் பேரு என்ன.அவங்க வுடு எங்கே இருக்கு.அவருக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்காங்களா ராணீ” தயங்கிக் கொண்டே கமலா கேட்டாள்.” அம்மா அவர் பேர் டேவிட்மா.அவர் வூடு கே.கே. நகர்லே இருக்கும்மா.அவருக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இருக்காங்கம்மா” என்று சொன்னாள்.”என்ன சொல்றே ராணீ.நீ ஒரு கிருஸ்தவ பையனையா காதலிக்கிறே.அவங்க ஜாதி வேறேயே ராணி.இதை நான் உங்க ஆயா கிட்டேயும் சித்தி கிட்டேயும் சொன்னா அவங்க நிச்சியமா ஒத்துக்கவே மாட்டாங்க. ஏன் ராணி,உனக்கு நம்ப ஜாதி இந்து பையன் ஒருத்தன் கூட கிடைக்கலையா காதலிக்க.கிருஸ்தவ பையனை காதலிக்கறயே. எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு.ஆயாவும்,தாத்தாவும், சித்தியும்,இந்த கிருஸ்தவ பையனு க்கு உன்னை கல்லாணம் கட்டி கொடுக்க நிச்சியமா ஒத்துக்க மாட்டாங்க.இந்த கிருஸ்தவ பையன் வேணாம் ராணீ”என்று கெஞ்சினாள் கமலா.“நான் வேறே யாரையும் காதலிக்க மாட்டேம்மா. கல்யாணம் பண்ணிக் கிட்டா நான் டேவிடை தான் கல்யாணம் கட்டிப்பேன்.நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப காதலிக்கிரோம்மா.அவரைத் தவிர நான் வேறே யாரையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்ம்மா.அவர் என்னை காலம் பூராவும் கண் கலங்காம,சந்தோஷமா வச்சு வருவேன்னு சத்தியம் பண்ணி குடுத்து இருக்காரும்மா.எங்க காதலை கொஞ்சம் வாழவைம்மா.எங்க ரெண்டு பேரையும் தயவு செஞ்சி பிரிச்சி விடாதேம்மா.உன்னை நான் ரொம்ப கெஞ்சி கேட்டுக்க்கிறேன்ம்மா.’ப்லீஸ்ம்மா” ’என்று கமலாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் ராணீ.கமலாவின் கைகள் மேலே ராணீயின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் விழுந்தது.

“அம்மா நான் கல்யாணம் கட்டிக்கிட்டா அவரைத் தாம்மா கல்யாணம் கட்டிப்பேன்.நான் டேவிடைத் தவிர வேறே எந்த பையனையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேம்மா.இது நிச்சியம்மா. அப்புறம் உன் இஷ்டம்ம்மா” என்று சொல்லி பிடிவாதம் பிடித்தாள் ராணீ.“வேணாம் ராணீ இந்தப் பிடிவாதம்.நான் சொல்றதை கொஞ்சம் கேளு.வீணா பிடிவாதம் பிடிக்காதே.நான் சொல்றதை கொஞ்சம் யோஜனைப் பண்ணி உன் பிடிவாதத்தை வுட்டுட்டு,உன மனசை கொஞ்சம் மாத்திக்க” என்று தன் பங்குக்கு கெஞ்சினாள் கமலா.“முடியா தும்மா.நான் டேவிடைத் தான் கல்யாணம் கட்டிக்க போறேன்.அப்படி நீங்க எங்க கல்யாணத்தை நடத்தலேன்னா நான் அவர் கூட ஓடிப் போய் கல்யா ணம் கட்டிக்கப் போறேம்மா” என்று சொல்லி அம்மாவை பயமுறுத்தினாள் ராணீ.“அப்படி வீட்டை விட்டு ஓடிப் போய் எல்லாம் கல்லாணத்தை செஞ்சுக்கக் கூடாது ராணி.நான் சொல்றதை கொஞ்சம் கேளு ராணீ”என்று மறுபடியும் கெஞ்சி னாள் கமலா.“அம்மா,நான் தீர்மானமாத் தான் சொல்றேன். டேவிட் என் கிட்டே ‘ராணீ,உங்க வீட்லெ உன் கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டா,நீ உன் வீட்டை விட்டு ஓடி வந்து விடு.நாம தனியாப் போய் கல்யாணம் கட்டி கிட்டு சந்தோஷமா இருந்து வரலாம். அப்படி வருவியா ராணீ’ என்று என் கையைப் பிடிச்சி கெஞ்சி இருக்காரும்மா.நான் நிச்சியமா அவர் கூட ஓடிப் போய் கல்யாணம் கட்டிகிட்டு சந்தோஷமா இருந்து வருவேம்மா” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள் ராணீ.

– தொடரும்

Print Friendly, PDF & Email

1 thought on “சேற்றில் மலர்ந்த செந்தாமரை

  1. இந்தக் கதையில் அநியாயத்துக்கு எழுத்துப் பிழைகள் உள்ளன. உடனே பிழைகள் அனைத்தையும் சரி செய்து மறுபதிவேற்றம் செய்யுங்கள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *