கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,862 
 

புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்டமடித்து மீண்டும் அதே இருப்பைப் தேடி வந்தது. எப்போதும் எதுவுமே நடக்கலாம். நடக்கும் வரை எதிர்பார்ப்புகளோடு தொடரும் வாழ்வு.

“சாப்பாடு போடவே ?” இது சாரதாவின் குரல். இருக்கும் வரை வீடு நிறைய சிரித்துஇ கும்மாளித்துஇ அழுதுஇ அமைதியாகி.. இறுதியில் நிழலாய்இ காற்றாய்இ அசைவுகளில் மட்டும் என் உணர்வுக்குள் புகுந்து சு10ன்யமாய் போனவள். திரும்பிப் பார்க்கிறேன் வீடு வெறித்துக் கிடக்கிறது. சமையல் செய்த ஞாபகமில்லை.. பசியுமில்லை.. கிடைத்ததை விறைத்ததை கைகளின் நடுக்கம் போக்க மெண்டு விழுங்கி கழியும் பகல்கள்

“சாப்பிடுவமே ?” இது அவரின் குரல்.. உறைப்புஇ உப்புஇ இனிப்புஇ எண்ணெய் எல்லாமே குறைத்து ஒன்றாய்இ விதவிதமாய் சமைத்து சமைத்ததில் ருசிகண்டு திருப்தியாய் வாழ்ந்த காலம் அது. விறைத்து நின்று உரத்து அதட்டியதெல்லாம் அடங்கி.. சுருங்கிய கையை மெல்லத் தடவி நீவி விட்டு.. கண்கள் பனிக்க பழையதைக் கதைத்து.. நெருக்கமாய் இன்னும் நெருக்கமாய்..

“என்னம்மா அப்பாக்கு நீங்களாவது சொல்லலாமே.. இப்பிடி தனிய வந்து முதியோற்ற இடத்தில இருந்தால் பிள்ளைகள் கலைச்சுப் போட்டுதெண்டெல்லே ஆக்கள் சொல்லுவினம்..” ஆக்கள் நினைப்பினம்இ ஆக்கள் சொல்லுவினம்இ ஆக்கள் கதைப்பினம்.. ஆக்கள்இ ஆக்கள்.. உப்பு சுள்ளிட உறைப்பு தூக்கலாய் எண்ணெய்யில் பிரட்டி எடுத்ததை ரசித்துச் சாப்பிட்ட படியே மகன் சொல்ல மனைவியும் தலையசைத்தாள். வாய் நிரம்பிப் போயிருந்தது. நான் கதைப்பதை நிறுத்திப் பல நாட்களாயிற்று.

“அம்மா! அப்பா இருக்கமட்டும் ஏதோ வீம்புக்குத் தனிய வந்து இருந்தியள்.. இப்ப அப்பாவுமில்லை உங்களுக்கு ஏனிந்தப் பிடிவாதம் என்னோட வந்து இருங்கோ நான் உங்களைப் பாக்கிறன்.. வயது போன தாயைத் தனிய விட்டிட்டு இருக்கிறம் எண்டு சனம் கதைக்கிற கதை தாங்கேலாமல் இருக்கு..” மகள் குசுகுசுத்தாள். நான் கதைப்பதை நிறுத்திப் பல நாட்களாயிற்று.. இஞ்சி தட்டிப் போட்ட தேத்தண்ணியை நீட்ட வாங்கிக் குடித்தவள் “யோசிச்சுச் சொல்லுங்கோ” எண்ட படியே போய் விட்டாள்.

கட்டையும்இ நெட்டையுமாய்இ வெள்ளையும்இ கறுப்புமாய்இ ஆறைப் பெத்துப் போட்டாயிற்று.. காக்காய்க் கடிகடித்து மாங்காய் திண்டதும். கூட்டமாய் கோயிலுக்குப் போனதும்.. .கிட்டி அடித்ததும்.. கெந்தி விளையாடியதும் ஆடியதும் பாடியதும் ஒன்றாய் அழுததும் வாய்விட்டுச் சிரித்ததும்.. அடித்ததும் உதைத்ததும்.. மறக்காமல் ஞாபகமாய் மனதை வருட.. கண்கள் பஞ்சாகி கைகள் சுருங்க கால் நீட்டி ஆசுவாசம் கொள்ள நினைக்கையில் சுற்றிச் சுற்றி ஓடும் பேரக்குஞ்சுகளின் சிரிப்பையும் மீறி மூலைக்கு ஒன்றாய் முகம் தூக்கி நிண்டன. யாரோடு யார் சண்டை இன்று.. அப்பா நியாயம் சொல்லுங்கோ.. அம்மா நீங்கள் சொல்லுங்கோ.. தமது கட்சிக்காய் ஆள் தேடி..

நாங்கள் கதைப்பதை நிறுத்திக்கொண்டோம்..

“என்னப்பா நாங்கள் பெத்ததுகளே மூலைக்கு ஒண்டாய் வாழ்க்கையை போட்டியும் பொறாமையும் கொண்ட இருளாக்கி.. ஒண்டை ஒண்டு கேவலப்படுத்திக்கொண்டு..” அவர் மெளனமாக என்னைப் பார்த்துச் சிரித்தார்.. குடிக்க ஏதாவது தரச்சொன்னார்.. சாப்பாட்டில் உறைப்புக் குறைக்கலாம் என்றார்.. முதியோர் கூட்டத்திற்குப் போய் பாடலாம் என்றார்.. எனக்கும் புரிந்தது.. அவருக்கு அரசியலின் உடன் பாடில்லை.. ஒரு போதும் ஓட்டு போட்டதுமில்லை

“அம்மா எதுக்காக சாரதா ஆண்டான்ர படத்தை அப்பான்ர படத்துக்குப் பக்கத்தில கொழுவி இருக்கிறீங்கள் ? உங்களுக்கு விசர் பிடிச்சிட்டுதெண்டு இவர் சொல்லுறார்.. பாக்கிற ஆக்கள் என்ன நினைப்பினம் அம்மா..” சின்னவள் குரல் உயத்தினாள். எள்ளுரண்டையைப் பார்சலாகக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போகச் சொன்னேன். சின்னவளின் கணவன் ரசித்துச் சாப்பிடுவான்.

கால்கள் கணகணத்தன.. இவர் இருக்கும் வரை சுடுதண்ணி ஒத்தடம் பிடித்து நீவி விடுவார்.. அவர் போன பிறது நான் செய்த அதிஸ்டம் சாரதா வந்து ஒட்டிக்கொண்டாள். ஏன் கால் நோ போக்க என்னோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்வாள்.. முதியோர் ஒன்று கூடலில் அறிமுகமாகி நெருக்கமானவள். சின்ன வயதிலேயே குடும்பப் பாரத்திற்கு பயந்து கணவன் தற்கொலை செய்து கொள்ள குஞ்சு குறுமான்களாய் பத்தை தயங்காமல் சுமந்து வளர்த்தவள். கார் ஓட்டுவாள் நுனிநாக்கு ஆங்கிலம் சிகரெட் பிடிப்பதுஇ வைன் குடிப்பதென்று தமிழ் கலாச்சாரத்தில் தொங்குபவர்களை அசரவும்இ அலட்டவும் வைத்தவள். பத்துப் பிள்ளைகளும் நல்லா இருக்கேக்க எதுக்கு முதியோர் இல்லத்தில இருக்கிறீங்கள் என்போருக்கு புன்னகையில் பதில் சொன்னவள். இந்த வயதில இப்பிடி ஆட்டம் போட்டா பிள்ளைகள் கலைக்காமல் என்ன செய்யும் என்றதையும் கண்டு கொள்ளாதவள். இவருக்கு பிடித்த ஒரே தமிழ் மூதாட்டி.. அடிக்கடி வீட்டிற்கு வந்து எம்மைக் கலகலக்க வைத்தவள்.. இவர் இறந்த பிறகு அவளுக்கு நானும் எனக்கு அவளும் என்றாகி விட்டது. பெத்ததுகள் தராத சுகத்தையும் இன்பத்தையும் எனக்குக் காட்டியவள். வலியின் கீறல்கள் ஏதுமின்றி புன்னகையுடன் படுக்கைக்குப் போனவள் தன் பயணத்தை இலகுவாக முடித்துக்கொண்டாள்..

இவர் இறந்த போது ஏற்படாத அயர்ச்சி சாரதா இறந்த போது ஏற்பட்டது.. இவரின் படத்திற்குப் பக்கத்தில் சாரதா புன்னகையுடன் தொங்கிக்கொண்டிருந்தாள். கால்கள் கணகணத்தன.. தூக்கி நடக்கப் பயமாக இருந்தது.. எப்போதும் எதுவும் நடக்கலாம்.. எதுவாயினும் கொஞ்சம் கெதியாக நடந்துவிட்டால் நல்லது போல் பட்டது..

“எவ்வளவு நேரம் பசி கிடப்பீர் சாப்பிடுமன்..” கண்கள் பனித்தது.. தூரத்தே அசைவற்ற வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.. புறாக்களும் இனி கலைந்து விடும்.. இன்று சாப்பிடதாய் ஞாபகம் இல்லை.. பசியுமில்லை.. கைகளில் நடுக்கம் மட்டும் தெரிந்தது.. யாராவது ஒருத்தர் பக்கத்தில் வேண்டும்.. பெத்ததுகள் ஆறு அதுகள் பெத்ததுகள் எண்டு இரத்த உறவுகள் மூன்று மடங்காகிப் போயிருந்தது.. இருந்தும் வெறுமை..

தொலைபேசி அழைத்தது மூத்தவள்.. எடுக்க மனம் வெறுத்தது.. “அம்மா உங்களுக்கொண்டு தெரியுமே. அண்ணி ஆரோ ஒரு ஆம்பிளையோட காரில போறதை நான் என்ர கண்ணால கண்டனான்.. எனக்கு அண்ணான்ர குடும்பத்தில இருக்கிற அக்கறையில அண்ணாக்கு அடிச்சுச் சொன்னா பொத்தடி வாயை எண்டுறார்.. உன்ர கதைய நான் இப்ப அவிட்டு விட்டா வீடு நாறும் எண்டு கத்திறான்.. நான் அப்பிடி என்னம்மா செய்தனான்.. நான் என்ர குடும்பம் பிள்ளைகள் எண்டு சந்தோஷமாவும் கெளரவமாவும் இருக்கிறன் அவன் இப்பிடிக் கேவலமாக் கதைக்கிறான் அம்மாஇ நீங்கள் ஒருக்கா போன் பண்ணி என்ன ஏதெண்டு கேளுங்கோ” தொலைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்து.. கால்களின் கணகணத்தது..

சாரதாவின் கடைசி நாள் அடிக்கடி நினைவிற்கு வந்து போனது.. கண்கள் எப்போதுமே சிரித்தபடி இருக்க வாய் ஓயாமல் கதைத்துச் சிரிப்பவள்.. ஒரு நாள் ஓய்ந்து போனாள் அதிஸ்டம் செய்தவள்..

“அம்மா ஏனம்மா வீம்பு பிடிச்சு நிக்கிறியள்.. பேசாமல் என்னோட வந்து இருங்கோ.. அம்மா உங்களுக்கு ஒண்டு தெரியுமே நான் பெரிய வீடு வாங்கின உடன தங்கச்சிக்கு இருப்புக் கொள்ளேலை.. ஓடித்திரியிறாளாம்.. அம்மா ஏனம்மா அண்ணா இப்பிடி இருக்கிறார்.. நான் என்ர பிள்ளைய எந்த எந்த வகுப்புக்கெல்லாம் அனுப்பிறன் எண்டு பாத்து அடுத்த கிழமையே தாங்களும் தங்கட பிள்ளைய கொண்டு போய்ச் சேத்துப் போடுவீனம்.. நாங்கள் எங்கட பிள்ளைகளுக்கு ஆசையா ஒண்டும் செய்யேலாமல் இருக்கம்மா.. அம்மா சாரதா அன்ரியையும் அப்பாவையும் சேத்து இவற்ர வீட்டுக்காரர் ஒரு மாதிரிக் கதைக்கீனம் எனக்கு அவமானமா இருக்கு..”

தொலைபேசி அழைப்பு ஓயவில்லை.. கண்கள் இவரையும் சாரதாவையும் மாறி மாறிப் பார்த்தது.. படுக்கைக்குப் போக ஏனோ பயமாக இருந்தது.. பிள்ளைகள் பேரக்குஞ்சுகள் கண்களில் வந்து வந்து போனார்கள்.. கால்களை நீவி விட்டுக்கொண்டேன்.. தொண்டை வரண்டு போனது.. தூரத்தில் வாகனங்கள் அசைவற்று அசைவது தெரிந்தது.. அமைதி எங்கும் அமைதி தொலைபேசி மட்டும் ஓயவில்லை..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *