சிறந்த அன்னை…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 14,573 
 

என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க போகிறார்களாம்… அன்னையர் தினத்தை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். என்ன பேசலாம்… அன்னையர் தினத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

வேலைக்காரி கமலா வந்தாள்..” அம்மா துணி எல்லாம் எடுத்து வச்சாச்சா…? “ கேட்டுக் கொண்டே பக்கெட்டில் உள்ள துணிகளை பரக்க பரக்க துவைத்தாள். துணிகளை மொட்டை மாடியில் காய வைத்து விட்டு கிச்சனுக்குள் சென்று எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்தாள்.

“ அம்மா நான் கிளம்பட்டுமா..?

“ என்ன கமலா .. வழக்கமா லீவு நாள்னா லேட்டா வருவே நிதானமா செஞ்சுட்டு போவே…? இன்னிக்கு என்ன அரக்க.. பரக்க முடிச்சிட்டே… எங்கேயாவது வெளியில போறீயா..?

“இல்லம்மா.. லீவு நாள்ல மட்டும் வந்து வேலை செய்யேன்னு இரண்டு வீட்ல கேட்டுருக்காங்க… அதான் சீக்கிரமா முடிச்சிட்டு போறேன்..”

“ஏற்கனவே நாலு வீட்ல செய்றே.. இன்னும் வேறயா..…?”

“ என்னமா பண்றது எப்படியோ வாயை கட்டி வயித்த கட்டி படிக்க வைக்கிறேன். பொண்ணை அடுத்த வருஷம் காலேஜ் ல் சேர்த்து படிக்க வைக்கனும்… நாளைக்கு அதாவது கஷ்டபடாம இருக்கனும்… அதுக்குதான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது இன்னும் ரெண்டு வீடு பாக்கலாம்னு ஒத்துக்கிட்டேன். நாளைக்கு அதுங்க நல்லா இருந்தா போதும்.

“ சரி.. சரி.. நேத்து வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருந்தாங்க.. நிறைய ஸ்வீட், மிக்ஸர்னு இருக்கு நீயும் கொஞ்சம் சாப்பிடு…” தட்டில் போட்டு தந்தாள்.

“ அம்மா.. இத்த கொஞ்சம் காயித்தல மடிச்சி குடேன். சின்ன பையன் ஏதனா தின்றதுக்கு வேணூம்னு ரெண்டு நாளே கேட்டுகிட்டே இருந்துச்சி… அதுக்கு குடுத்தா ஆசையா திங்கும்..”

பொட்டலத்துடன் சென்றவளை பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. அன்னையர் தினம் பற்றி யோசித்து கொண்டிருந்த எனக்கு அவள் உணர்வு பூர்வமாக சொல்லி சென்று விட்டு போனதை நினைத்து. உண்மையில் இவளைத்தான் பாராட்ட வேண்டும் என்று மனசு சொல்லி கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *