சந்தேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,194 
 

அதிரா மேசை மீது கிடந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்,வாசிக்க மனம் வரவில்லை,மூடி வைத்துவிட்டுப் மணியைப் பார்த்தாள்,பத்து என்று காட்டியது,இன்னும் என்ன செய்கிறான் கௌசிக்,கம்பனி நடத்துவதும் போதும்,என்னைப் படுத்தும் பாடும் போதும்,போன் எடுத்தாலும் லைன் கிடைப்பது இல்லை,அப்படியே எடுத்தாலும் இம்போட்டன் மீட்டிங் ம்… சொல்லு எம்டி மாதிரியே பேசுவான், அதனால் அவள் போன் எடுப்பதுவும் குறைவு.கார் ஹோன் சத்தம் கேட்டது,கதவை திறந்தாள் அதிரா,கௌசிக் காரை நிறுத்திவிட்டு வந்தான்,முகத்தில் எந்த களைப்பும் இல்லை,அவனின் உடை, நடை பெரிய இடத்துப் பிள்ளை என்று காட்டியது,பார்க்க உயரமாகவும்,கவர்ச்சியாகவும் இருந்தான்,அவனின் கண்கள் ஆயிரம் கதைப்பேசும்,அதனால் தான் என்னவோ தெரியவில்லை பல பெண்களுக்குப் அவனைப் பிடிக்கும்.

நீ இன்னும் தூங்கவில்லையா?என்றான் கௌசிக்,நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?என்றாள் அவள்,நான் வெளியில் சாப்பிட்டேன் என்றான், நீ சாப்பிட்ட தானே?என்றான்,ஆமாம் நான் சாப்பிட்டேன்,தாமரை இன்னும் தூங்கவில்லை,ஐயா வந்தப் பிறகு,சாப்பாட்டை சூடுப் பன்னி கொடுத்துவிட்டுப் படுக்கிறேன் என்று உட்கார்ந்து இருக்காள்,நான் எவ்வளவோ சொன்னேன்,நீ போய் படு,நான் ஐயா வந்தப் பிறகு,சூடுப் பன்னி கொடுக்கிறேன் என்று,அவள் கேட்க்கவில்லை என்றாள் அதிரா,பாவம் அவளை போய் படுக்கச் சொல்லு என்றான் கௌசிக்.அதிரா குரல் கொடுத்தாள்,தாமரை வந்து நின்றாள்,நீ போய் படு என்றதும் சரி அம்மா என்று அவள் சென்றுவிட்டாள்.ஏன் நீங்கள் இவ்வளவு லேட்,ஒரு போன் பன்னி சொன்னால் என்னவாம்,சாப்பிட்டேன்,வீட்டுக்கு வருவதற்கு லேட் ஆகும் என்று, சோரி டாலிங் மறந்துட்டேன் என்றான் கௌசிக்.அடுத்த வாரம் வெளியில் போகும் வேலை இருக்கு,அதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்,மெயில் அனுப்ப வேண்டியிருந்தது என்றான் கௌசிக்.

போன மாதம் தானே போனீங்கள்?மறுப்படியுமா என்றாள் அதிரா,ஆமா என்னுடைய கம்பனி தயாரிக்கும் இரும்பு கம்பிகளின் மதிப்பு அப்படி,தரமாகப் இருப்பதால் பல இடங்களில் இருந்து ஓடர் வருது,பற்றாக்குறைக்கு வெளியூர் கம்பனி ஒன்று எங்களிடமிருந்து கம்பிகளை கேட்டு இருக்கு,அதற்காக தான் போன மாதம் பேனேன்,இந்த மாதம் அவர்களுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கார்கள்,அதனால் போகவேண்டும் என்றான்.நானும் வரவா?என்றாள் அதிரா,நான் டூர் போகவில்லை,கம்பனி விடயமாகப் போறேன்,கொஞ்சம் பொறுத்துக் கொள்,அடுத்த தடவை போகும் போது அழைத்துக் கொண்டுப் போகிறேன் என்றான் கௌசிக். ஆமா..நீங்கள் தானே? உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா!ஹனிமூனுக்கே இன்னும் போகவில்லை,ஆறு மாதமாக ஏமாத்திக்கிட்டு இருக்கீங்கள் என்றாள் அவள்,ஹனிமூன் போகாவிட்டால் என்ன,அது தான் வீட்டில்..என்று அவன் கூறும் போதே வெட்க்கத்தில் அவள் முகம் சிவந்துப் போனது,நான் போகிறேன்,என்று அவள் அறைக்கு ஓடியே சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்களில் கௌசிக் வெளியூர் கிழம்பினான்,தேவையானவற்றை அதிராவும்,தாமரையும் எடுத்து வைத்தார்கள்,அதிராவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு,தாமரையிடம் அம்மாவைப் பார்த்துக்கொள்,என்று கூறிவிட்டு கிழம்பிவிட்டான் அவன்.அவன் போய் சேர்ந்தப் பிறகு போன் பன்னி அதிராவிடம் பேசினான்.நான் இரண்டு நாட்கள் பிசியாக இருப்பேன்,போன் எடுக்காவிட்டால் பயந்து விடாதே என்றான்,சரி என்னை ஒரேயடியாக மறந்து விடாதீங்கள்,என்றாள் அதிரா,அது எப்படியும் இரவு தூங்கப் போகும்போது,உன் நினைவு வரும் என்று சிரித்தான். அதற்கு மட்டும் தான் நான் என்றாள் அவள்,அது தானே வேண்டும் டாலிங் என்றான் அவன்,சரி நான் போனை வைக்கிறேன் என்றாள் அவள்,ஏன் என்றான் அவன் ஒன்னும் இல்லை என்றாள் அதிரா,உனக்கு என்னை பிடித்திருக்கா?உனக்கு ஏற்ற மாதிரி இருக்கேனா?ஏதாவது குறையிருக்கா?என்றான் கௌசிக்,இது என்ன கேள்வி என்றாள் அதிரா.

இது எதையும் கேட்டு அறிந்துக் கொள்ளாத பல தம்பதியர்கள்,இன்று பிரிந்து நிற்கின்றார்கள்.ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொள்வதும் இல்லை,அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதும் இல்லை,எந்த விடயத்தையும் வாய்விட்டு கேட்ப்பதும் இல்லை,எதிலும் திருப்தி அடைந்தார்களா?இல்லையா? என்று கூட தெரியாமலே குடும்பம் நடத்துகிறார்கள்.இதற்கு காரணம் வெட்க்கம் அது உனக்கு நிறையவே இருக்கு,நானும் நீயும் இணைந்து ஆறு மாதம் ஆகிவிட்டது, இன்னும் என்ன வெட்க்கம் என்னிடம் உனக்கு என்றான் அவன்,அது எங்களுடன் கூடப் பிறந்தது என்றாள் அதிரா,அது உண்மை தான் அதற்காக கணவனிடம் வெட்க்கப்பட்டு ஓடி ஒலிந்தாய் என்றால் எப்போது தான் உனக்காக வாழப்போகிறாய் என்றான் அவன்,எனக்கு புரியவில்லை என்றாள் அவள்,எதுவும் தெரியாமல்,எதுவும் புரியாமல்,எதையும் பேசாமல் படுத்து எழும்புவது குடும்பம் இல்லை அதிரா,அதை முதலில் நன்றாகப் புரிந்திக் கொள்,இப்படி எந்த நாளும் வெட்க்கப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தால்,நீ எதையும் முழுமையாகப் அனுபவைக்கமாட்ட, உனக்கு எது பிடிக்குது என்று வாய்விட்டு கேட்டுப் பழகு,அப்ப தான் எனக்கு புரியும் நாங்கள் கடவுள் கிடையாது டாலிங், உங்களை முழுமையாகப் புரிந்துக்கொள்ள என்று அவன் சிரித்தான்.

அது எப்படி முடியும் என்றாள் அதிரா,இங்கு தான் நீங்கள் எல்லோரும் பிழை விடுறீங்கள்,இன்னொருத்தன் உங்கள் வாழ்க்கையில் என்டர் ஆக இது தான் காரணம் என்றான் அவன்,என்னங்க சொல்றீங்கள் என்றாள் பதட்டமாக, எதுவும் நீங்களாக கேட்க்க மாட்டீங்கள்,பிறகு எங்களை ஆயிரம் குறை சொல்லுவீங்கள்,எங்களை கண்டுக்க மாட்டேங்குறாங்கள், ஒழுங்காக கதைக்க மாட்டேங்குறாங்கள் என்று,எவனோ ஒருவன் காதுக்கு இது போக அவன் ஈஸியாக உங்களை ஏமாத்திவிட்டுப் போய்விடுகிறான்,நான் தான் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் என்று இது தேவையா? என்றான் கௌசிக்,நான் அப்படி பட்டவள் இல்லை என்றாள் அதிரா,நான் பொதுவாக சொன்னேன்,என் மீது ஏதும் கோபம் இல்லையே? என்றான் கௌசிக்,இல்லை என்றாள் அதிரா.நானும் நீயும் தொடர்ந்து சந்தோஷமாக இருக்கனும்,அது ஆரம்பிக்கும் இடமே நம்முடைய படுக்கை அறை தான்,அங்கு எல்லாம் சரியாக நடந்தால், மற்ற விடயங்களும் சரியாக நடக்கும் என்றான் கௌசிக்,புரியுது என்றாள் ஆதிரா,நான் வந்தப் பிறகு பார்க்கத்தானே போகிறேன்,என்றான் மெல்லிய குரலில் அவன். அவள் சிரித்து விட்டு போனை வைத்துவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவன் ரெடியாக இருந்தான்,அவனை அழைத்துப் போக கம்பனி வாகனத்தை அனுப்பியிருந்தார்கள்,சரியாக எட்டு மணிக்குப் போய் அவன் வட்டமாகப் போடப்பட்டிருந்த மேசையின் அருகில் இருந்த நாட்காளியில் உட்கார்ந்தான்,அவனுக்கு முன்பதாகவே வேறு இருவர் உட்கார்ந்து இருந்தார்கள்,இவனைப் பார்த்ததும் குட்மார்னிங் என்று சொன்னார்கள், இவனும் பதிலிக்கு குட்மார்னிங் கூறிவிட்டு,தனது கம்யூட்டரை எடுத்து மேசை மேல் வைத்தான்.அவனுக்கு அனுப்பியிருந்த மெயிலில்,அந்த கம்பனி முழு விபரங்களும் இருந்தது,

அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டி கொடுப்பவர்கள்,அதற்கு தேவையான கம்பிகளை இவனிடம் இருந்து கேட்க்கின்றார்கள்.அந்த கம்பனியின் ஓனர் வானதி என்று போட்டிருந்தது,அவளுக்காக தான் தற்போது காத்திருக்கிறார்கள் மூவரும்.

சற்று நேரத்தில் வானதி வந்தாள்,இருபத்தி ஐந்து வயது தான் இருக்கும், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கௌசிக்,வயதுப் போன பெண்மணியாக இருக்கும் என்று அவன் மனதில் கற்பனை பன்னியிருந்தான்,அதற்கு மாறாக வந்து நின்றவளை மேல் இருந்து கீழ் மட்டும் ஒரு முறை பார்த்தான் கௌசிக்.வானத்தி பார்க்க அழகாகவே இருந்தாள்,சற்று உயரம், மெலிதான உடம்பு,கம்பீரமாக இருந்தாள்,மிடுக்கான நடை,தலை முடியை கழுத்து மட்டும் வெட்டியிருந்தாள்,பேன்ட்,சட்டை போட்டிருந்தாள்,அணல் தெறிக்கும் பார்வை,அளவான மேக்கப்,சிரிய பொட்டு என்று கம்பனியை எடுத்து நடத்தும் தகுதி அவளிடம் தெரியவே செய்தது.நுனி நாக்கில் அவள் பேசும் ஆங்கிலம்,அவளைப் பார்க்க கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது மூவருக்கும்.வந்து குட்மார்னிங் கூறியப்படியே கைகுழுக்கினாள் வானதி,அவளின் கரங்கள் கௌசிக் கரங்களை தொடும் போது ரோஜா இதழ்களின் மென்மையை உணர்ந்தான் அவன்.

வானதி காலுக்கு மேல் கால் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்,அவளின் பேச்சி,வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருந்தது எனக்கு சொன்ன திகதியில் உங்களிடமிருந்து பொருட்கள் வந்து சேரனும், இல்லை என்றால் எங்களின் வேலைகள் பாதியில் நிற்கும்,எனக்கு பல கோடி நஷ்டங்கள் ஏற்படும்.என் அபார்மென்ட் தரமாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருக்கவேண்டும்,அதனால் தான் உங்கள் மூவரையும் தேர்ந்து எடுத்தேன் நான், உங்களின் தரமான இரும்பு கம்பிகள்,சீமெந்து,வர்ணங்கள் எல்லா இடங்களிலும் வரவேற்பு இருக்கிறது,எனக்கும் அப்படியான நிறுவனங்கள் தான் வேண்டும் என்றாள் அதிகாரமாக.இவளிடம் யாரும் மறுவார்த்தை கூறமுடியாத அளவிற்கு இருந்தது அவளுடைய பேச்சி.சுருக்கமாக முடித்துக்கொண்டு,நாளை என்னுடைய கெஸ்ட்ஹவுஸில் ஒரு பார்ட்டி இருக்கு வந்துகலந்து கொள்ளுங்கள் என்று அதையும் ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவள். திடீரென்று புயல்,காற்று வந்துப் போனதுப் போல் இருந்தது மூவருக்கும்.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கௌசிக் பார்ட்டிக்கு போனான்.அங்கு வானதி மற்ற இருவர்களிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்,இவனைப் கண்டதும் ஹலோ கௌசிக் என்றாள்,இவனும் பதிலிக்கு ஹலோ என்றான்,அவள் ஏன் லேட் ஆகிவிட்டீங்கள்? பயந்து விட்டீங்களா? இவளுடன் எப்படி பிஸ்னஸ் பன்னுவது என்று சிரித்தாள் அவள்,குரல் இனிமையாக இருந்தது,உங்களுக்கு தமிழ் தெரியுமா?என்று ஆச்சிரியமாக கேட்டான் கௌசிக்,ஆமா நான் தமிழ் பொண்ணு தான்,இதில் என்ன சந்தேகம் என்றாள் வானதி,இல்லை நேற்று வாயில் தமிழ் வறவே இல்லையே!என்றான் அவன்,அது கம்பனி,இது வீடு இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க முடியாதே என்றாள் அவள்,அந்த வாழ்க்கை வேறு,எனக்கு கீழ் ஆயிரம் பேர் வேலை செய்றாங்கள்,நான் கொஞ்சம் தடுமாறினாலும்,முழுவதும் தடுமாறிப் போகும்,இடத்திற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கூறி சிரித்தாள் அவள்,இந்த சின்ன வயதில் இவ்வளவு அனுபவமா,என்று மனதில் நினைத்துக் கொண்டான் கொசிக்.

இது என் அப்பா குகஅமுதன் நடத்தி வந்த கம்பனி,அவர் படித்தது சிவில் இன்ஜினியரிங்,அவர் வசதிக்குப் ஏற்ப்ப சிரிய இடங்களை வாங்கி தரை வீடுகள் கட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தவர், தற்போது அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்து இருக்கு,தற்போது அவ்வளவாக உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது அவருக்கு,ஆகவே நான் ஒரே பிள்ளை என்பதால்,நான் கவனிக்க ஆரம்பித்தேன் கம்பனியை,அம்மா அந்தளவிற்குப் படிக்கவில்லை,வீட்டோடு இருப்பவர்கள் தான், ஆனால் அவர்களின் தூண்டுதல் தான் இந்த கம்பனி இவ்வளவு வளர்ச்சியடைய,அப்பாவிற்கு வலது கையே,அம்மா பத்மமாலினி எதையும் அவர்களிடம் கேட்க்காமல் அப்பா செய்ய மாட்டார், எனக்கு இந்தளவிற்கு தைரியத்தைக் கொடுத்து வளர்த்தவர்களும் அம்மா தான் என்றாள் வானதி,எனக்கு எதுவும் டைம்குக்கு நடக்கனும்,அதில் நான் கொஞ்சம் கரார் என்றாள் வானதி,அது தான் நான் நேற்று பார்த்தேனே என்றான் கௌசிக் சிரித்துக்கொண்டே,அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.எல்லோருக்கும் தேங்ஸ் பன்னினாள் வானதி,எதுவென்றாலும் போன் பன்னுங்கள்,நானும் அடிக்கடி போன் பன்னி கேட்டுக் கொள்கிறேன் என்றாள் அவள்,அனைவரும் விடைப்பெற்றுக் கொண்டார்கள்.

கௌசிக் அறைக்குச் சென்றப் பிறகு அதிராவிற்குப் போன் பன்னினான்,நீண்ட நேரத்திற்குப் பிறகு போனை எடுத்தாள் அதிரா,தூக்க கலக்கத்தோடு கதைத்தாள் அவள்,இவ்வளவு லேட் ஆகி போன் பன்னுறீங்கள்,இப்ப எங்கு இருக்கீங்கள்?என்றாள் அவள்,இப்ப தான் பார்ட்டி முடிந்து வந்தேன் என்றான் கௌசிக்,யாருடன்? என்றாள் அவள்,வானதியோடு என்றான்,யாரு அந்த வானதி என்றாள் அதிரா,என்னிடம் கம்பிக்கு ஓடர் கொடுத்த முதலாளியம்மா என்றான்,வயதானவர்களோ என்றாள்,ஆமாம் இருபத்திஐந்து வயது தான் ஆகிறது,என்று சிரித்தான் கௌசிக்,அவளுக்கு சுருக்கென்றது.உங்களுக்கு தனியாகவா என்றாள் அதிரா,இல்லை இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள் என்றான் அவன்.சரி நீ தூங்கு நாளை நான் வந்துவிடுவேன் என்று போனை வைத்து விட்டான்.அதிராவுக்கு தூக்கம் போய்விட்டது முதல் தடவையாக,கௌசிக் மீது சந்தேகம் ஏற்பட்டது.

கௌசிக் வந்து,ஆபிஸ் போய் ஒரு தடவைப் பார்த்தப் பிறகே வீட்டுக்கு வந்தான்.எப்படி டாலிங் இருக்க?என்று அதிராவை கட்டிப் பிடித்தான் கௌசிக்,விடுங்கள் என்னை,தாமரை உள்ளே இருக்காள் என்றாள் அவள்,அதற்கு என்றான் அவன்,பார்த்தால் என்ன நினைப்பாள்,என்றாள் அதிரா,பார்த்தால் பார்க்கட்டும்,நீ என் மனைவி, வீட்டில் இருக்கும் போது கூட சுதந்திரமாக கட்டிப்பிடிக்க முடியாது என்றால்,ஏன் வேலைக்கு ஆள் வைக்கிறீங்கள்,நாளை பிள்ளை பிறந்தாலும்,இப்படி தான் ஏதாவது காரணம் கூறி என்னை நீ ஒதுக்குவ,நீங்கள் சரியாக இருந்தால் நாங்கள் ஏன் வெளியில் போகிறோம்,என்றான் கௌசிக்.அதற்குப் பிறகு அவள் வாய் திறக்கவில்லை.சரி நீ சாப்பாடு எடுத்து வை,நான் பிரஷப் ஆகிவிட்டு வருகிறேன்,என்று கூறியப் படி மாடிக்கு சென்று விட்டான் கௌசிக்.வந்து சாப்பிட உட்கார்ந்தவன்,வானதியைப் பற்றி அதிராவிடம் சொன்னான்,இந்த வயதில் ஒரு கம்பனியை நடத்துவது பெரிய விடயம், வானதி எவ்வளவு ஸ்மார்ட் தெரியுமா?என்றான் அவன்,அவளுக்கு கோபம் வந்தது,அமைதியாக சாப்பிட்டாள்,நுனி நாக்கில் ஆங்கிலத்தில் வெளுத்து கட்டுகிறாள் என்றான்.

பின்ன இருக்காதா?வெளியூரில் இருக்காள் என்றாள் அதிரா,இருக்கார்கள் தான்,எத்தனைப் பேர் அவர்களின் திறமைகளை வெளியில் கொண்டு வருகிறார்கள்,ஒரு சிலர் மட்டும் தானே என்றான் கௌசிக்.அவளுக்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கு என்றாள் அதிரா,நாங்கள் தான் வாய்ப்புகளை தேடி போகனும் என்றான் கௌசிக்,இதற்கு மேல் இவனிடம் வாதாடக்கூடாது என்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள்.அதிராவிற்கு முதல் தடவையாக கௌசிக்கு ஏற்ற மனைவி நானில்லை,என்று தோன்றியது,இவன் அளவிற்கு நான் படிக்கவில்லை,வானதி போல் ஆங்கிலம் பேசமுடியாது,பேசி முடித்த திருமணம் என்றாலும்,அப்போது எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டியவன்,தற்போது யோசிக்கின்றானா?என்னை கட்டியது அநியாயம் என்று,எங்கு இருந்து வந்தாள் இந்த வானதி,அதிராவிற்கு வானதி மீது பொறாமை ஏற்பட்டது.

கௌசிக் வானதியைப் பற்றி அடிக்கடி அதிராவிடம் பேச ஆரம்பித்தான்,அவளுக்குப் பிடிக்கவில்லையென்றாலும்,கடமைக்காக மேலோட்டமாக கேட்ப்பாள்,இவ்வளவு புத்திமதி மட்டும் கூற தெரியுது,மனைவியின் மனதை புரிந்துக்க தெரியவில்லையே,போதும் நிறுத்துங்கள் உங்கள் வானதி புகழை என்று கத்தனும் போல் தோன்றும் அதிராவுக்கு அமைதியாக இருப்பாள்.அன்று கௌசிக் போனை மேசை மீது வைத்துவிட்டுப் பாத்ரூம் போய்விட்டான்,உடனே போனை எடுத்துப் பார்த்தாள் வானதி இரண்டு,மூன்று முறை போன் பன்னியிருந்தாள்,சில மெசேஜ் அனுப்பியிருந்தாள்,அனைத்தும் கம்பனி சம்பந்தமானது,கொஞ்சம் ஆறுதலாக இருந்தது மனதிற்கு, சனிகிழமை என்றாலே கௌசிக்,அதிரா மாலை வெளியில் போவார்கள்,அவர்களின் கம்பனி ஞாயிறு லீவு என்பதால்,அன்று சனிகிழமை என்பதால்,அதிராவை வெளியில் அழைத்துப் போக கௌசிக் சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருந்தான்,இருவரும் ரெடியாகி முடிக்கும் போது,சரியாக வானதி போன் பன்னினாள்.

கௌசிக் கையில் போனை எடுத்தது தான்,அதிராவின் முகம் மாறியது,அவன் அதை கவனிக்கவில்லை.சிறிது நேரம் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தார்கள்,ஏதோ அவள் கூற,இவன் சத்தமாக சிரித்துவிட்டான்,இதைப் பார்த்த அதிராவுக்கு பொறுக்கவில்லை,அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்,அவன் பேசி முடித்தப் பிறகு,அதிரா வா போகலாம் என்றான் கௌசிக்,இன்னைக்கு வேண்டாம்,எனக்கு தலைவலி,அடுத்த வாரம் போவோம் என்று கூறிக்கொண்டே,அறைக்கு சென்றுவிட்டாள் அவள்.இவனும் பின்னாடியே சென்றான்,ஏன் திடீரென்று தலைவலி, டாக்டரிடம் போவோமா? என்றான் கௌசிக்,இல்லை வேண்டாம் என்றாள்,தலைக்கு தைலம் ஏதும் பூசிவிடவா?என்றான் கௌசிக் வேண்டாம் என்றாள்,நான் படுக்கிறேன் என்று படுத்துவிட்டாள் அதிரா.சரி நீ தூங்கு,எதுவும் தேவையென்றால் கூப்பிடு என்று கூறிவிட்டு,ரூம் லைட்டை அணைத்து விட்டு அவன் சென்றுவிட்டான்.அவளுக்கு தூக்கம் வரவில்லை,அதற்குப் பதிலா கௌசிக் மீது ஆத்திரமாக வந்தது,அழுகையும் சேர்ந்து கொள்ள தற்போது உண்மையாகவே அவளுக்கு தலை வலித்தது.

எட்டு மணியாகியும் அவள் எழும்பவில்லை, கௌசிக் வந்து அதிராவை எழுப்பினான்,சாப்பிடுவோம் என்று,எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாள் அவள்,வந்து சாப்பிடு என்று அதட்டினான், அவள் மௌனமாக எழுந்து வந்தாள்,என்னம்மா இப்போது தலைவலி சரியாகிவிட்டதா?என்றாள் தாமரை,ஐயா உங்களை எழுப்ப வேண்டாம் என்று சொன்னார்,அது தான் நான் வரவில்லை என்றாள் பாவமாக தாமரை,இப்ப கொஞ்சம் பரவாயில்லை,என்றாள் அதிரா,சரி அம்மா வாங்க சாப்பிட என்றாள் தாமரை,அப்போது தான் கவனித்தான் கௌசிக்,அதிராவின் கண்கள் சிவந்து இருந்தது,அழுதிருக்காள் என்பது புரிந்தது,எதுவும் கேட்ப்போம் என்று நினைத்தான்,தாமரை இருப்பதால் அமைதியாக இருந்தான் கௌசிக்.

இருவரும் சாப்பிட்டார்கள்,அதிரா முகத்தில் சிரிப்பு இல்லை,எதையோ பரிகொடுத்தவள் போல் இருந்தாள்.அதிரா தாமரையிடம் நீ சாப்பிட்டு,பால் காய்சி ஐயாவிற்கு கொடுத்து விடு எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள் அதிரா.கௌசிக் அறைக்குச் சென்றான்,கதவை மூடிவிட்டு அதிரா பக்கத்தில் போய் உட்கார்ந்தான்,அவள் கையைப் பிடித்து கேட்டான்,ஏன் அழுத என்று,இல்லையே என்றாள் அதிரா,பொய் சொல்லாதே,என்றான் கௌசிக்,உங்களுக்கு நான் ஏற்ற மனைவி இல்லையென்று நினைக்கிறேன்,அவசரப் பட்டு என்னை திருமணம் செய்திருக்காவிட்டால் வானதி போல் ஒருத்தி உங்களுக்கு அமைந்திருப்பாள் என்றதும், தற்போது தான்அவனுக்குப் புரிந்தது அதிராவின் அழுகைக்கு காரணம்.

நீ என் மனைவி,உன்னைப் போல் ஒரு பெண் தான் என் வாழ்க்கைக்கு துணையாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.என் பெற்றோர்கள் எனக்கு பல பெண்கள் பார்த்தார்கள் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை,என் தொழில்,அழகு,பணத்திற்காக பல பெண்கள் போட்டிப் போட்டார்கள்.நான் கேட்டது எல்லாம் ஒரு சாதாரணப் பெண்,அதிகமாக படித்திருக்க தேவையில்லை,வசதி குறைந்த குடும்ப பெண்ணாக இருந்தால் போதும் என்று,அதற்கு ஏற்ற வகையில், நீ எனக்கு அமைந்தாய்,ஒரு நாளும் எனக்கு அதில் எந்த குறையும் இல்லை,வானதிப் போல் பல பெண்களை நான் சந்திக்க வேண்டி ஏற்படும்,என்னுடைய தொழில் அப்படி,அநியாயம் நான் அவளை கட்டியிருக்கலாம்,இவளை கட்டியிருக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தேன் என்றால் என் நிம்மதி போய்விடும்,அப்படி பட்ட ஆளும் நான் இல்லை,நீ அனாவசியமாக சந்தேகப் பட்டு உன் வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதே என்றான் கௌசிக்.அதிரா அமைதியாக இருந்தாள்,உனக்கு பயமா நான் வேறு யாரிடமாவது தொடர்பு வைத்துக்கொள்வேன் என்று கேட்டான் கௌசிக்,அப்படி இல்லை,நீங்கள் வானதியைப் பற்றி பேசும் போது எனக்கு இது மாதிரி தகுதி எதுவும் இல்லையே என்று நினைக்கத் தோன்றியது அது தான் என்று இழுத்தாள்..அவள்.

முதல் இப்படி நினைப்பதை விடு,ஒரு போதும் மற்றவர்களிடம் உன்னை ஒப்பிடாதே,அது பொறாமையையும்,வெறுப்பையும் உண்டு பன்னும்,கடவுள் அனைவரையும் ஒரே மாதிரி படைக்கவில்லை,அதை நினைவில் வைத்துக்கொள்,உன்னிடமும் ஏதாவது திறமை இருக்கும்,வேலை செய்யும் பெண்கள் மட்டுமே புத்திசாலிகள் இல்லை,குடும்பத்தை சரிவர நிர்வாகம் செய்யும் அனைத்துப் பெண்களும் புத்திசாலிகள் தான்,யாரும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை அதை முதலில் புரிந்துக்கொள் என்றான் கௌசிக்.அழுகை உன் ஆயுதம் கிடையாது அதிரா என்றான்,நான் அழவில்லையே!என்றாள் அதிரா, அது தான் முகத்தில் அப்பட்டமாக தெரியுதே!என்றான் கௌசிக், அவள் மெதுவாக சிரித்தாள்,நல்லா இருக்கவர்களை சந்தேகப் பட்டு, சந்தேகப் பட்டு உண்மையாக பன்னவைத்து விடாதீங்கள் என்றான் சிரித்துக்கொண்டே,ஐயா பால் என்று கதவை தட்டினாள் தாமரை,கதவை திறந்து பாலை வாங்கிய அதிரா கௌசிக்கிடம் கொடுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *