குப்பைக்குள் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 3,824 
 

முன்னுரை

குபைக்குள் கழிவுப்பொருட்கள் மட்டும் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதற்குள் கோமேதகமும் இருக்கலாம். குண்டுமணியும் இருக்கலாம் அது நம் பார்வைக்கு சில நேரம் தெரியாமல் இருக்கலாம்.

மாரிமுத்து (மாரி) குப்பை அள்ளும் வேலையை அதிக வருடங்களாக சென்னை நகரசபைக்கு செய்து வருகிறான். அவன் திருணமாகி இரு குழந்தைகளை இழந்தவன். அவனின் மனைவி தங்கம் வீதி ஓரத்தில் தோசை சுட்டு பிழைப்பு நடத்துபவள். அதோடு சினிமா எடுப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் படத்தில் ஒரு காட்சியில் சில நிமிடங்கள் வர வாடகைக்கு குழந்தை ஒன்றை வாடகைக்கு ஒழுங்கு செய்து கொடுத்து சம்பாதிப்பவள். மாரிமுத்து தம்பதிகளுக்கு கூவம் நதி ஓரத்தில் ஓரு குடிசை.

அன்று தன் கடமையைச் செய்ய குப்பை அள்ளும் வண்டியின் டிரைவர் சுப்பையாவுடன் புறப்பட்டான் மாரிமுத்து . சில குப்பை தொட்டிகளை காலி செய்து வண்டியில் கொட்டிவிட்டு ஒதுக்குப்புரதில் உள்ள வீதியில் இருந்த குப்பைத்தொட்டிக்கு அவன் வந்த போது தொட்டியில் இருந்து தெரு நாயின் குரல்களுக்கு பதிலாக குழந்தையின் அழுகைக் குரல் அவனுக்கு கேட்டது . குழந்தையை அவன்பார்க்கவில்லை . குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழுகை குரல் கேட்கிறதே . ஆச்சரியமாக இருக்குதே. தொட்டிக்கு அருகே சென்று மாரி ஏட்டிப் பார்த்தான் ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டு எறிந்த மிகுதி உணவுகளோடும். கிழிந்த வாழை இலைகளோடும், பியர் போதல்களோடும், வீட்டுக் குப்பைகலோடும் . ஒரு துணியில் சுற்றியடி ஒரு அழகிய பெண் குழந்தை அழுதபடி இருந்ததை மாரி கண்டான் . அதன் வயிற்றில் இருந்து இரத்தம் கசிந்தது. ஒரு வேளை குப்பைத் தொட்டிலில் இருந்த மீன் முள்ளோ, உடைந்த கண்ணாடியோ குழந்தையின் பூ போன்ற உடலை பதம் பார்த்ததால் இரத்தம் வருகிறதோ என்னவோ என்று மாரி நினைத்தான் . அக் குழந்தையின் பார்வை மாரியை கவர்ந்தது.

“இந்த அழகிய குழந்தையை தொட்டிலில் போடாமல், நாறும் குப்பைத் தொட்டியில் அழ அழ போட்டுவிட்டு சென்ற தாயும் ஒரு தாயா. நல்ல நேரம் குழந்தை பெண் என்பதால். கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை அவள் கொல்லவில்லை” தன் வாயுக்குள் மாரிமுத்து முணுமுணுத்தான். மறு நிமிடம் தாமதிக்காமல் குழந்தையை தூக்கி பாசத்தோடு மார்போடு அணைத்தான். தன் இரு பிள்ளைகளை இழந்த மாரிமுத்துவுக்கும் தங்கத்துக்கும் குழந்தை என்றாலே போதும். அவ்வளவுக்கு ஆசை அவர்களுகு .

குழந்தையை மார்போடு அணைத்த படியே லொறரியை நோக்கி மாரி நடந்தான்

“என்ன மாரி குப்பபை இல்லாமல் ஒரு குழந்தையோடு வாராய்? யார் குழந்தை”? டிரைவர் சுப்பையா கேட்டான்

“யார் குழந்தையோ எனக்குத் தெரியாது குப்பைத் தொட்டிலில் அழுது கொண்டு கிடந்தது. கண்டு எடுத்தேன்”

“ஆண் குழந்தையா”?

“இல்லை பெண் குழந்தை. நான் நினைக்கிறேன் பிறந்து சில வாரங்கள் மட்டில் இருக்கும்”

“வழக்கம் போல் சினிமாவில் வருவது போல் குழந்தையோடு கடிதம் ஏதும் ஏதாவது இருந்ததா இருந்திருக்குமே” சுப்பையா நக்கலாக கேட்டான்

இருந்தது ஒரு சிறு கடிதம் குழந்தையோடு ”

”நான் நினைத்தது சரி. வாசி வாசி கேட்பம்”

மாரிமுத்து வாசித்தான்

“இந்தக் குழந்தையைக் கண்டு எடுப்பவர்களின் கவனத்துக்கு குழந்தையின் தந்தை என்னை திருமணம் செய்வது என்று ஏமாற்றி விட்டு போய் விட்டான். பாவி .இப்படி இவன் பல பெண்களை சீரழித்து விட்டு போய் விட்டான் என்று என் கற்பு பறிபோன பின் அறிந்தேன் அதனால் தகாத உறவால் பிறந்த இந்தக் குழந்தையை சமூகத்தின் விமர்சனத்தை சந்திக்க முடியாமல் குப்பைத் தொட்டியில் என் தாய் பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு போட்டு விட்டேன் , குழந்தையை கண்டு எடுப்பவர்கள் போலீசில் ஒப்படைக்கலாம் அல்லது தங்களோடு வளர்க்கலாம்:, அல்லது இருக்கவே இருக்கு அனாதை பிள்ளைகள் மடம்.

அதில் சேர்த்து விடலாம். இது உங்கள் விருப்பம்

இப்படிக்கு வாழ்க்கையில் ஏமாற்றப் பட்டவள்

“மாரி நீ என்ன செய்யப்போகிறாய் போலீசில் கொண்டு பொய் கொடுக்கப் போறயா அல்லது …”?

மாரி சற்று சிந்தித்துட்டு, “போலீசுக்கு போகத் தேவை இல்லை . இது எனக்கு கடவுள் தந்த குழந்தை. எனக்கு இருந்த இரு பிள்ளைகளும் என்னையும் என் மனவியையும் விட்டு மறுவுலகம் போய்விட்டார்கள். எங்களின் கடைசி காலத்தில் எங்கள் இருவரையும் கவனிக்க ஒரு பெண் குழந்தை வேண்டும், நான் இந்த குழந்தையை எங்கள் குழந்தை போல் பாசத்தோடு வளர்க்கப் போறன்” மாரி சொன்னான்.

“நீ சரியான ஆள் மாரி . யார் பெற்ற குழந்தையோ. பிறகு வந்து குழந்தயை திருப்பித் தா என்று தாய்கேட்டாள் என்ன செய்வாய் 😕

“கேட்கமாட்டாள் சுப்பையா. அப்படி இருந்தால் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போயிருக்கமாட்டாள் “

“சரி குழந்தை சற்று என்னிடம் தா பார்ப்போம்”:

மாரி குழந்தையை சுப்பையாவிடம் கொடுத்தான.

சுப்பையா குழந்தையை தூக்கி பார்த்து விட்டு

“மாரி குழந்தைக்கு வலது தோள்படையில் ஒரு மச்சம் இருக்கு. அதை நீ பார்த்தாயா”?

“இருந்தால் என்ன “?

“வலது தோள்படையில் ஒரு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பாரகள். இந்த குழந்தைக்கு அது உண்டு.”:

“இது ஒரு மூட நம்பிக்கை. இந்த குழந்தை அதிர்ஷ்டம் இருந்தால் கவனிப்பார் அற்று குப்பையில் கிடக்குமா”?

“மாரி உன்னோடு விவாதிக்க எனக்கு நேரமில்லை குழந்தை அழுகுது.அழுகையை முதலில் நிருத்தப்பார். இல்லாவிட்டால் எங்காளால் வேலை செய்ய முடியாது.” சுப்பையா சொன்னான் .

குழந்தையின் அழுகையை நிறுத்த போகும் வழியில் ஒரு போத்தலில் ஓரு புட்டி பால் வாங்கிக் கொண்டு மாரி போனான். பாலைக் குடித்தவுடன் குழந்தை சிரித்தது.

***

கணவன் மாரிமுத்து கொண்டு வந்த பெண் குழந்தையை கண்டவுடன் தங்கத்து மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை தூக்கிக் கொஞ்சினாள். குழந்தையை எல்லாப் பக்கமும் தூக்கி பார்த்து விட்டு இது அதிர்ஷ்டக்காரக் குழந்தை. இதுக்கு லட்சுமி என்று பெயர் வைப்போம் என்றாள் தங்கம். மாரிமுத்து மனைவி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான்,

“என் அப்படி தங்கம் சொல்லுறாய்”

“இங்கை பார் குழந்தையின் வலது தோள்பட்டையில் ஒரு மச்சம் இருப்பதை. அதனால் குழந்தை அதிர்ஷ்டகாரி லட்சுமி என்று பெயர் வைப்போம்” தங்கம் சொன்னாள்

***

இரு நாட்களுக்கு பின் யாரோ மாரி குடிசைக் கதவை தட்டியது கேட்டது.

தங்கம் குடிசைக் கதவை திறந்தாள். அவள் அறிந்த டைரக்டர் சுந்தரராஜின் உதவியாளன் சந்திரன் வாசலில் நின்றார் .

“என்ன சநதிரன் சார் இந்த நேரத்தில் இந்த பக்கம்”? தங்கம் கேட்டாள்.

“உன்னை உடனே டைரக்டர் சார் கூட்டி வரட்டாம் எதோ குழந்தை விசயமாய் புதுப் படத்துக்க மோட்டுப் பேச வேண்டுமாம். உடனே புறப்பட்டு வா”

தங்கம் டைரக்டரை காண சென்றாள் .

“என்னை கூப்பிட்டியலாமே சேர்:”

“ம்ம். எனனக்கு ஒரு அழகிய மாநிற பெண் குழந்தை தேவை ஒரு மாதத்துக்கு மேல் உள்ள குழந்தையாய் இருந்தால் நல்லது. எனது புதுப்படம் “குழந்தையும் செல்வமும்” படத்தில் நடிக்க குழந்தை தேவை. உனக்கு யாராவது குழந்தைகள் தெரிந்தால் சொல்லு. ஓன்று முக்கியம் குழந்தையின் வலது பக்கத்து தோளில் மச்சம் ஒருத்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாம் மேகப் செய்து சமாளித்து விடுவோம்”

தங்கம் டைரெக்டர் சொன்னதை எதிர்பார்க்கவில்லைல. அவர் சொல்வது உண்மையா? தங்கம் தனக்குள் நினைத்தாள் .

“படத்தின் கதையின் படி இடைவேளைக்குப் முன் குழந்தைதான் முக்கிய பாத்திரம். அதன் அதன் பின் குழந்தை வளர்ந்து பருவ மங்கையாகி விடுகிறாள். அவள் ஒரு செல்வந்தனின் மகள் என்பதை அவளின் உடலில் மச்சத்தில் இருந்து கனடுபிடிப்பதாக கதையின் முடிவு”.

தங்கம் படக் கதையைக் கேட்டு அதிர்ந்து போனாள். குப்பையில் கிடந்த அந்த குழந்தை ஒரு செல்வந்த்ரால் ஏமாற்றப்பட்ட ஒருத்யின் மகளா. அப்படி இருக்கவே இருக்காது.தங்கம் தங்களுள் சொல்லிக்கொண்டாள்

“சேர் எத்னை நாட்களுக்குள் குழந்தை உங்களுக்கு வேண்டும்”;

“ஒரு கிழமையில் படத்துக்கு பூஜை போடுகிறோம். அதற்கு முன் தேவை. நான் குழந்தையை முதலில் பார்க்க வேண்டும்”

“சரி சேர் நீங்கள் சொன்னபடி நான் பொருத்தமான குழந்தையை கொண்டு வருகிறேன் அதுக்கு நடிக்க கற்றுக்கு கொடுப்பது உங்கள் பொறுப்பு”

“நீ அதை பற்றிக் கவலை படாதே. குழந்தை நடிப்பதுக்கு ஒரு லட்சம ரூபாய் தரலாம், அதுவும் .குழந்தையை எனக்கு பிடித்துக் கொண்டால் மட்டுமே . அதன் பின் இரண்டு நாளில் ஒப்பந்தம் ரெடியாகும். பூஜைக்குப் பின் இருபதாயிரம் அட்வான்ஸ் கிடைகும் என்ன சொல்லுகிறாய் தங்கம்?”

“உங்கள் கடளைக்கு என்னிடம் இருந்து மறுப்பு இருக்குமா சார்”

“அதோடு வேறு படங்களில் குழந்தை நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கலாம்” டைரக்டர் சொன்னார்

தங்கத்துக்கும் மாரிக்கும் குப்பையில் கிடைத்த குழந்தை வடிவில் கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டதேவதை கொடுத்தது.

(யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *