கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 6,969 
 

கடற்கரை மணலில் கை கோர்த்தப்படி அமர்ந்து இருந்தனர்.விஜியும்,சுந்தரும்.

இவர்களைப் போலவே அலைகளும் ஒன்றொடு ஒன்று தவழ்வதும்,விலகுவதும் போல காதல் புரிந்து கொண்டு இருந்தது.

ஆம், இருவரும் காதலர்கலாக இருந்து மணமானவர்கள்.ஒரே கட்டிடத்தில் இருக்கும் வெவ்வேறு கம்பெனியில் பணிபுரியும் போது அடிக்கடி லிப்டில் சந்தித்து, காதலர்களாக மூன்று வருடம் மேலும் ,கீழும் ஏறியும், இறங்கியும் கழித்து, தற்பொழுது திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. கை நிறைய வருமானம், இருவருக்கும்.

பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று ,அவர்களிடம் தனக்கு தாய் இல்லாத்தை கூறி,பெண் தந்தால் தாயைப்போல் பார்த்துக்கொள்வேன்
என கூறி தனது தந்தையிடமும் கேட்டு விளக்கம் கூறி அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார், சுந்தர்.

இருவர் வீட்டிலும் அவர்களின் சந்தோஷம்தான் முக்கியம் என்று அவர்களும் சம்மதித்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை அடிக்கடி வந்து பழைய நினைவுகளை அசைப்போடுவார்கள், அவர்கள் காதலித்து முதன்முதலில் சேர்ந்து வந்த இடம் இதுதான். இங்கு வந்து தான்
எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள்.

இப்பொழுது கூட அவர்கள் தங்கள் வேலை,வருமானம், குடும்பம், குழந்தை பேறு என பல விஷயங்கள் பேசிவிட்டு இரவு சாப்பாட்டை வெளியே முடித்துக்கொண்டு வீட்டில்
இருக்கும் சுந்தரின் அப்பாவிற்க்கு பிடித்த தோசையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

நமக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை இருவரும் வேலைக்குச் செல்வதென்றும்,ஒருவரின் சம்பளத்தை சேமிப்பாக சேர்த்து வீடு ஒன்று வாங்குவதாகவும்,அப்பாவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யனும், பிறக்கும் குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்கனும் என பல திட்டங்களைப் போட்டபடி இன்றைய மாலைப்பொழுது கழிந்தது.

சிறிது ஊடல்,கிண்டல்,அப்பாவிடம் அரட்டை, இருவரும் சிறிது நேரம் கேரம் ஆடுவார்கள், விஜி தோர்க்கும் தறுவாயில் ஆட்டத்தை நிறுத்த பார்ப்பாள். விஜிக்கு தோர்ப்பது பிடிக்காது.

அது அவனுக்கும் தெரியும் ஆகையால் அவளை தோர்கவிடமாட்டான், சுந்தர்.

இரவு பால் பருகி,இருவரும் படுக்கையில் படுக்க நேரம் 11.00 ஆகி விட்டது. விளக்கை அனைத்தனர், இருவரும் உடலும்,ஊடலால்,காம கடலில் முத்தெடுக்க , ஒருவர் மற்றவரிடம் தோற்றுப்போக தயாரானார்கள்.

தோற்பதில் இன்பம் தரும் ஒரே விளையாட்டு காமனின் கொடை.

விடிந்தது திங்கள்கிழமை ! சூரியன் தன் கடமையாற்ற , இருவரும் அலுவலகம் கிளம்பத் தயாராகி கொண்டிருந்தனர்.

விஜி ,நான் இன்றைக்கு சீக்கிரம் போகனும், அதனால நீ இன்றைக்கு மட்டும் பஸ்ல போயிடு, சாயந்திரம் நான் உன்னைப் பிக்அப் செய்கிறேன் என்றான்.

சரி, அப்போது டிபன் சாப்பிடுங்க! வாங்க,என்றாள்.

இல்லம்மா! நேரம் ஆயிடும்.

அப்போ! முன்னாடியே சொன்னா நான் சீக்கிரமா எழுந்திருப்பேன்ல, ஏன் சொல்லல என்றாள்.

ராத்திரி தான் நீங்க பிஸியா இருந்திங்க, அதான் கொஞ்சம் நேரம் தூங்கட்டும்னுதான் எழுப்பலை.என கண்னடித்தான்.

ஹெல்மெட் கையில் எடுத்துக் கொண்டான், விஜி,பை,பை …

பைபை சுந்தர்..

விஜி அலுவலகம் கிளம்ப ..

செல் ஒலித்தது, சுந்தர் லைனில்

ஹலோ! என்னங்க என்றாள்,

ஹலோ,நான் சுந்தர் இல்லைங்க,

அவருக்கு காந்தி தகர்கிட்ட ஆக்ஸிடன்ட் ஆயிட்டார்,108ல இப்பத்தான் ஆஸ்பிட்டால் அழைத்துக்கொண்டு போயிருக்காங்க! சீக்கிரம் வாங்க! என கூறி கட்டானது.

பதறினாள்..மாமா,நீங்க இருங்க, நான் போயி பார்த்து விட்டு வரேன், எனக்கூறி ஆட்டோ பிடித்து கிளம்பினாள்,

மருத்ருவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் படுத்திருந்தான், என்னாச்சு டாக்டர்,

நீங்க ,நான் இவரோட மனைவி.

அவருக்கு நினைவு இல்லை, தலையில அடி பட்டிருக்கு, உடனே ஸ்கேன் செய்யனும், இங்க பண்ண முடியாது .

நான் எழுதி் தர்ரேன், உடனே எடுத்தாகனும், சீக்கிரம் வெளியே எடுத்து கிட்டு வாங்க! என்றார்.

விஜியும் ஏற, ஆம்புலன்ஸில் சுந்தரை ஏற்றினர், விரைந்த்து,ஆம்புலன்ஸ், போகும் வழியில் உயிரும் பிரிந்தது. என அட்டென்டர் சொல்ல, விஜிக்கு அதிர்ச்சியில் காதடைத்தது.

மயக்கம் வரும்போல் விஜிக்கு இருந்தது, சுதாரித்த நர்ஸ்,வண்டியை மருத்துவ மனைக்கு திருப்பச் சொன்னாள்.விஜி கதற சுந்தர் உடல் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டது.

எத்தனை கனவுகள் ,நினைவலைகள், மனதில் மூன்று வருடத்திய நிகழ்வுகள் கண் முன்னே வந்து நிழலாடியது,பார்த்து கதறினாள்.

நண்பர்கள்,சுந்தரின் அப்பா,அனைவரும் வந்து சேர்ந்தனர். விஜியின்அப்பா, அம்மாவுக்கும் இதே ஊர்தான், தகவல் போய் கிளம்பி வந்துவிட்டனர்.

அனைத்து பார்மலிட்டியும் முடித்து உடலை வாங்கினா்.

மாடி வீடு என்பதாலும்,ஓனர் வீட்டில் பையனுக்கு் கல்யாணம் தேதி வைத்துவிட்டதாகவும் கூறி வீட்டிற்கு உடலை எடுத்துச் வர வீட்டு ஓனர் மறுத்துவிட்டார்.

அதையும் தாங்கிக்கொண்டு, நேரடியாக எடுத்து சென்று அப்பா கையால் தகனம் செய்ய பேசி சம்மதித்தார்கள்.

தகனம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.

விஜியின் அப்பா தான் இங்கே அங்கே அலைந்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார், வேளைக்கு ஆர்டரின் பேரில் சாப்பாடு வந்தது, சாப்பிடத்தான் யாருக்கும் மனமில்லை.

இதுக்குத்தான் அந்த காலத்திலே ஜாதகம் பார்த்து கட்டி வைப்பாங்க, இப்ப சொன்னா, இதெல்லாம் யார் கேட்கிறா! தான் சந்தோஷம்தான் முக்கியம்,அப்பா ,அம்மா பேச்சை கேட்கிறது இல்லை,என புலம்பித்தள்ளினார், விஜி அம்மா.

விஜியின் அப்பாவோ, சும்மா இரு,எப்போ எதைப் பேசுவ? அவளே மனசு உடைஞ்சு போயிருப்பா,இப்ப போய் இதை மாதிரி பேசி அவளை வாழ்க்கையை வெறுக்க வச்சிடாதே, என அடக்கினார்.

படத்திறப்பு எளிமையாக முடித்து, அதையே வெறித்துப்பார்த்து அழுகையும்,ஆறுதலுமாய் முப்பது நாட்கள் நகர்ந்தது.

அம்மா! அப்பாவோட நீயும், கொஞ்ச நாள்என் கூடவே இரும்மா! நான் வேலைக்குப் போகப்போறேன், என்றாள்.

சரி!நீ வேலைக்கு இப்ப போய்தான் ஆகனுமா? என்றாள் தாய்.

ஏம்மா? என் மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்னு நினைக்கிறேன்.

சரி, ஆட்டோவில் போய் ஆட்டோவிலே வந்துவிடு.

தெருவிலே ஏதாவது பேசுவாங்கம்மா!

என் வசதிக்காக நான் போறேன், அவங்க பேச்சுக்கு பயந்து நான் முடங்கி கிடக்க மாட்டேன், என கூறி கிளம்பினாள்.

விஜி குடும்பத்திற்கும், சுந்தர் அப்பாவிற்கும் இது இரண்டாவது சந்திப்பு, திருமணம் போது பார்த்தது.

இருவரும் என்ன பேசுவது,எதை பேசுவது என்று ஒன்றும் புரியாமல் ஒரே வீட்டில்,தர்ம சங்கடமாய் உணர்ந்தனர்,

விஜியின் அம்மா மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டாள். அவளுக்கும் ஒரே பெண் விஜி்,இங்கே இருந்தாக வேண்டிய கட்டாயம்.

விஜியின் அப்பா ஆசிரியர், பணியில் ஓய்வு பெற இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது.

விஜியின் அப்பாவும் பணிக்கு திரும்பினார்.பணி முடித்து அவர் வீட்டுக்கு போய் நாளை வருவதாக கூறிச்சென்றார்.

வீட்டில் சுந்தரின் அப்பா தனியாக இருக்க முடியாமல் ,வெளியே கிளம்பினார், எங்கு போவது தெரியாமல், அருகில் உள்ள பூங்காவில் சென்று அமர்ந்தார்.

மாலை வீட்டருகே கூட்டம் கண்டு ஆட்டோவில் இறங்கிய விஜி பதட்டமானாள்,உள்ளே சென்றாள், சுந்தர் அப்பா படுக்க வைக்கப்பட்டிருந்தார், பசியாலே மயக்கமாகி
பூங்காவிலே இருந்தார்மா! அதான் வீட்டிற்கு விட வந்தோம். எனக் கூறி சென்றனர், அக்கம் பக்கத்தினர்.

ஏன் மாமா? சாப்பிடலையா?

ஏன் அங்க போனிங்க? உங்களுக்கு கண் பார்வையிலையும் குறைபாடு இருக்குன்னு தெரியும்ல, அப்புறம் ஏன் மாமா? எனக் கடிந்தாள்.

இல்லம்மா, தனியா இருந்தேனா! அதான் என்ன செய்யறது தெரியலை.

ஏம்மா நீ இருந்தல்ல, சாப்பிடச் சொல்லல,

ஏய், இங்க வா! நான் எப்படி,? அவங்க்கிட்ட பேசினதில்ல, வெட்கமா இருந்துச்சு.

என்னம்மா பேசற? சாப்பாடு போடறதுக்கு தெரிஞ்சிருக்கனும் அவசியமில்லை, இதிலென்ன வெட்கமோ, போ, என்றாள்.

முகம் கழுவ சென்றாள்,

அவள் இன்னும் இந்த மாதம் வீட்டு விலக்கு ஆகவில்லை என்ற நினைப்பு இப்போதுதான் வந்தது.

படபடப்புடன்,வியர்வையுடன் வெளியே வந்தாள். அம்மாவிடம் சொன்னாள்,

ஐயோ! அப்படியெல்லாம் இருக்கக்கூடாது, எந்த தாய்க்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது,என ஒரு தாய் வேண்டும்படி ஆனது.

நாளை சனி கிழமை என்பதால்,நாளைக்கு லேப் போகலாம் என முடிவு செய்தாள்.

அப்பாவும் விடுமுறை என்பதால்,வீட்டிற்கு வந்திருந்தார்.

மறுநாள், லேப் சென்று திரும்பினாள், விழுந்த வித்து விதையாகிருந்த்து.

அதையும் சந்தோஷமாக சொல்ல முடியலையே என வருத்தம் அவளுக்கு.

வேண்டாம்மா! இது , உடனே கலைச்சுடுவோம், என அம்மா.

ஆமாம்மா ,சொன்னா கேளு, அம்மா சொல்றமாதிரி செய், நாம நம்ம வீட்டிற்கு போய்விடுவோம்,எல்லாம் சரியாகி நாம வேற பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்மா!

அப்பா, என்ன நீங்களும் அம்மா மாதிரியே பேசுறிங்க, இவ்வளவு சுயநலமா யோசிக்கறிங்க!

சுந்தரின் அப்பாவை பற்றி யோசிச்சிங்களா?

என் பொண்ணு நல்லா இருக்கனும் என்று நினைக்கிறது சுயநலம்னா அது அப்படியே இருக்கட்டும்.

அவர்களை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்திடலாம். என தீர்வு சொன்னார்.

நல்ல வேளை,அவர் அங்கில்லை. வாசலில் அமர்ந்து இருந்தார்.

அப்பா,அம்மா, உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன்!

காதல் வாழ்க்கை எவ்வளவு நாள் வாழ்ந்தோம்ங்கறதிலே இல்ல, எப்படி வாழ்ந்தோம்ங்கிறதிலே தான் இருக்கு.

பறவையின் எச்சம் பட்டுப்போன மரத்தின் வேரின் இடுக்கில் விழுந்தாலும்,பட்ட மரம் அதனை வளர்த்தெடுக்க மறுப்பதில்லை. ஆணிவேர்க்கும் அதனால் எந்த பாதிப்பும் வருவதும் இல்லை.

நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாய் இந்த விதையை போட்டுவிட்டு பறவை பறந்திடுச்சு! அதை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு.

அவரின் வாழ்க்கையில் மிச்சாமாய் ஆணிவேராகிய அப்பாவை காப்பதும் என் பொறுப்பு என்று தீர்க்கமாக கூறி, இது நாள் வரை எனக்காக இங்கு வந்து தங்கி ஆறுதல் கூறியதற்க்கு உங்கள் இருவருக்கும் நன்றி.

நீங்கள் எனக்கு இந்த ஆசை நிறைவேற ஒத்துழைக்கனும் என்றாள்.

இருவரும் வருத்தத்துடன் சம்மதித்து அவர்கள் வீட்டிற்க்கு செல்ல விடை பெற்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *