கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,098 
 

“அம்மாவ்” குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து மனைவிக்கு குரல் கொடுத்தேன், சமையலறையில் இருந்த என் மனைவி என் குரல் கேட்டு வெளியே வந்தாள், இந்தப்பெண்ணை பார்த்தவுடன் முனியம்மா இன்னைக்கு காய் இருக்கே என்றவள் இவள் முகம் வாடுவதைப்பார்த்து சரி சரி இறக்கு என்று தலையிலிருந்த காய்கறிக்கூடையை இறக்க ஒரு கை கொடுத்தாள். ஸ்..அப்பாடி என தன்னுடைய புடவைத்தலைப்பை விசிறி போல் விசிறிக்க்கொண்டு அம்மா குடிக்கறதுக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா என்றாள், என் மனைவியும் உள்ளே வந்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு போய் கொடுக்க அதை மடக் மடக் என குடிப்பதை என் மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள். இனி கொஞ்ச நேரம் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள்,

அதன் பின்னரே காய் வாங்க பேரங்கள் நடக்கும், நான் அலுவலகம் கிளம்ப ஆயத்தமாகும்போது காய்கறிப்பெண் அம்மா இன்னையோட காய் விக்கறது கடைசி என சொல்வது என் காதில் கேட்டது, அதற்குள் நான் என் மனைவியிடம் கண் ஜாடை
காட்டிவிட்டு அலுவலகம் கிள்ம்பிவிட்டேன்.

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் நீண்ட காலமாக தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை பார்க்க வருமாறு வற்புறுத்திக்கொண்டிருந்தார்.

நான் என்னிடம் வண்டி இல்லை என் சொல்லி தப்பித்துக்கொண்டிருந்தேன்.

அவர் தொடர்ந்து வற்புறுத்தவே ஒரு நாள் அவர் வண்டியிலயே அவர் வீட்டிற்க்கு சென்றேன். வேலை அங்கு பரபரப்புடன் நடந்துகொண்டிருந்த்து, ஒரு பெண் கூடையில் மண் எடுத்து என்னை கடந்தபோது இந்த பெண்ணை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது, அந்த பெண் மிகுந்த சிரமப்பட்டு நடப்பது தொ¢ந்தது, மேஸ்திரி அந்த பெண்ணை விரட்டிக்கொண்டிருந்தார்,சீக்கிரம் போட்டுட்டு வாம்மா’ என்று. எனக்கு ஞாபகம் வந்துவிட்டது அட காய்கறி விற்பவளல்லவா’ காய்கறி விற்பதே கடினமான் வேலை, இவள் அந்த வேலையை விட்டு விட்டு அதைவிட கடினமான வேலைக்கு வந்திருக்கிறாளே, அதுவும் இந்த வெயிலிலே என் நினைத்தேன். எப்படி என்று தொ¢ந்துகொள்ள நினைத்து நேரமின்மையால் நண்பர் வண்டியிலேயே அலுவலகம் வந்துவிட்டேன்.

மாலை அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்து ஒரு கப் காபி சாப்பிட்டு ஆசுவாசப்படுத்திய பின் ஆமா இந்த காய்கறிக்காரி அன்னைக்கு காய் விக்க மாட்டேன் சொன்னாளே, இன்னைக்கு என்னடான்னா கட்டட வேலை செஞ்சுகிட்டிருக்கா? என்று கேட்டேன் ஏங்க உங்களுக்கு விசயம் தொ¢யாதா அந்தம்மாவோட பொண்ணு +2விலே 1100 மார்க் எடுத்திருக்கா, அதுக்கு டீச்சர் டிரெயினிங்க் சீட் கிடைச்சிருச்சாம், அதனால டியுசன் பீஸ் மாசம் மூணாயிரத்துக்கு மேல ஆகுமாம் அதனால காய்கறி விக்கிறதவிட கட்டட வேலைக்கு போனா தினமும் முன்னூறு ரூபாய்க்கு மேல கிடைக்குமாம் அதனால கட்டட வேலைக்கு போய் பீஸ் கட்ட பணம் சேர்ந்திருச்சின்னா மறுபடி காய் விக்க வருமாம்.

எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. என்ன ஒரு முடிவு, தன் மகளின் படிப்புத்தான் முக்கியம் என்று தன் உழைப்பை தர தயாராயிருக்கிறார்கள் பெண்கள். நிழலில் உட்கார்ந்து வேலை செய்வதையே பெரும் சுமையாக கருதும் எனக்கு இது ஒரு நல்ல பாடமாகத்தொ¢ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *